கவியரசு
வைரமுத்து>>அதிர்ச்சி
வைத்தியம்’ என்றால் என்ன?சொன்னாச் சிரிப்பீக; சொல்லித்தான் ஆகணும்.
பரண் மேல ஒசரத்துல ஒரு பொருள் இருந்திருக்கு.
ஒரு பானையைத் தலகீழாக் கவுத்து அதுல ஏறி நின்னு எடுக்கப் பாத்திருக்கா
வீட்டுக்காரி.
எட்டல; ஒரு எக்கு எக்கிருக்கா. உருண்டு ஓடிப்போச்சு பானை..
‘‘யாத்தே... யப்பே...ன்னு அலறி விழுந்தவள ஓடிவந்து தூக்குனாக ஊரெல்லாம்,
எந்திருச்சுட்டா. ஆனா, தூக்குன கையி தூக்குன மேனிக்கே இருக்கு; மடங்கமாட்டேங்குது.
ஊர்ப்பட்ட பண்டுதம் பாத்தாக; ஒண்ணும் வேலைக்காகல; நின்னாலும் ஒக்காந்தாலும் படுத்தாலும் ஒண்ணுக்கு ரெண்டுக்குப் போனாலும் கையத் தூக்குன மேனிக்கே இருக்கா பாவம்.
இதுக்கு ஒரு வைத்தியமுமில்லயான்னு குடும்பமே மருகி நிக்க, ‘ஒரு வழிதான் இருக்கு’ன்னு வந்தாரு உள்ளூரு வைத்தியரு.
‘தூக்குன கைஇடுக்குல தலைமேல ஒரு கூடைய வச்சு வீதி வழியா நடக்கவிடுங்க இவள’ன்னாரு.
அவ கூடை சொமந்து வீதி வழியாப் போறா. ஊரே வேடிக்கை பாத்து நிக்கிது.
குறுக்குச்சந்து வழியா குபீர்ன்னு ஓடிவந்த வைத்தியரு படீர்ன்னு உருவுறாரு அவ சேலையை.
அம்புட்டுத்தான். ‘ஏண்டா தூமச்சீலை! எவன்டா ஏஞ்சேலைய உருவுறவன்’னு போட்டா பாரு நாலு போடு... சப்பு சப்பு சப்புன்னு சாத்திப்புட்டா. அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு... அவளுக்கு மடங்காத கையி வசத்துக்கு வந்திருச்சுன்னு.
ஊரே சிரிக்குது அவளப்பாத்து. அவ பாவம் அழுகிறா. அவமானப்பட்ட துக்கத்துலயும் கையி வெளங்கிடுச்சுங்கற சந்தோஷத்துலயும்.
இதானம்மா அதிர்ச்சி வைத்தியம்.
(ஆதாரம்: கழனியூரன் எழுதிய கட்டுரை ஒன்று.)
NANDRI : VAIRAMUTHUVIN BATHILKAL

No comments:
Post a Comment