கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Wednesday, August 21, 2013

அமானுஷ்ய வெளியும் அதித சுவையும்-1


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-1 
கனவில் சென்று கட்டளையிட்ட பெருமான்

ஒரு சமயம் தருமச்சாலையில், மறுநாள் அன்னதானத் துக்குத் தேவையான அரிசி இல்லை என்ற நிலை.செய்தியைப் பணியாளர்கள், வள்ளலாரிடம் தயக்கத்துடன் கூறினர்.வள்ளலார் தனியாக ஓரிடத்தில் அமர்ந்து சற்று நேரம் தியானம் செய்தார்.தியானம் முடிந்தபின், அரிசி யும் மற்றவையும் நாளைக்கு வரும் என்று கூறினார்.மறுநாள் பொழுது புலர்ந்து கொண்டிருக்கும்போதே திருத்துறையூரில் இருந்து மூன்று வண்டிகளில்அரிசியும் பிற உணவுப் பொருட்களும் தருமச்சாலைக்கு வந்து சேர்ந்தன.அவற்றைக் கொண்டு வந்தவர் வள்ளலாரிடம் அன்பு பூண்ட அன்பர் ஒருவர்.முதல் நாளிரவு கனவில், வள்ளலார் வந்து அரிசியையும் மற்றவற்றையும் கொண்டு வந்து தருமாறு கூறியதாகவும்,அதை உத்தரவாக எண்ணி உடனே வண்டி கட்டிக்கொண்டு கிளம்பி வந்ததாகவும் அந்த அன்பர் தெரிவித்தார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-2 அங்கம் சிதறிய தவம்

வள்ளலார் தருமச்சாலையின் வெளியே உச்சிப்பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத் தில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது போல் தோன்றும்.இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது. இதைவிட இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில் இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், கவலைப்பட்ட சண்முகம் பிள்ளை என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ்வேறாகிக் கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர்.உடனே வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் ஒன்றாகி, சண்முகம் பிள்ளையை எழுப்பி, "இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!" என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-3 கேமராவில் சிக்காதஒளியுடல்

ஒருமுறை சில பக்தர்கள் ஒரு  புகைப்படக்காரரை சென்னையிலிருந்து  அழைத்துவந்தனர். அவர்களின் நோக்கம் எப்படியாவது வள்ளலாரைப் புகைப்படம் பிடித்து, அதனைத் தாங்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதே. வள்ளலார் இதற்கு உடன்படாத பொழுதும் அவர்கள் தங்கள் முயற்சியில் தளராது,  அவரைப் பல முறை படம் பிடித்தனர். ஆனால் அந்தப் புகைப்படத்தில் வள்ளலாரின் வெண்மையான ஆடை மட்டுமே விழுந்திருந்தது. வள்ளலாரின் உருவம் விழவில்லை. பல முறை முயற்சி செய்தும் இதே நிலை தான். இறுதியில் அன்பர்கள் வள்ளலாரைப் புகைப்படம் எடுக்கும் முயற்சியைக் கைவிட்டனர்.  அந்த அளவிற்கு ஒளியுடல் பெற்றவராக வள்ளலார் திகழ்ந்தார்

வள்ளலார் நிகழ்த்தியஅற்புதங்கள்-4 
கோடையிலும் வற்றாத தீஞ்சுவை நீரோடை

சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காணவருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது.அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’ என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன.வள்ளலார் கரம்பட்ட தும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஆகிவிட்டது.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-5 நீரில் எரிந்த விளக்கு

ராமலிங்கம் தங்கியிருந்த அறையில் விளக்குக்கு எண்ணெய் வைக்கும் மண்கலயம் ஒரு நாள் உடைந்துவிட, மணியக்காரரின் மனைவி புதுக்கலயம் ஒன்றை வைத்தார். அந்தக் கலயம் பழக்கப்பட வேண்டுமென்று அதில் நீர் நிரப்பிவைத்த மணியக்காரரின் மனைவி, பின்னர் அதைச் சுத்தப்படுத்தி எண்ணெய் நிரப்பிவைக்க மறந்துபோனார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-6
 பெய்யெனப் பெய்த மழை

கோடைகாலத்தில் தருமச்சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாத காரணத்தால் பயிர்கள் எல்லாம் வாடுகின்றன என்றும் கால்நடைகளும், மக்களும் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் வள்ளலாரிடம் முறையிட்டனர்.இந்தக் கதவு வழியே சென்று உள்ளே ஸித்தியடைந்தார்...ஒரு செம்பு நீரைத் தனது காலில் ஊற்றும்படி கூறினார் வள்ளலார். அன்பர்களும் அவ்வாறே செய்தனர்.என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டு நான்கு அங்குல அளவுக்கு மழை பெய்தது.அது கேட்டு புதுப்பேட்டை என்னும் ஊரில் உள்ள அன்பர்கள் வடலூருக்கு வந்து தங்கள் ஊரிலும் மழை இல்லாதது சொல்லி வள்ளலாரை அழைத்தார்கள்.வள்ளலார் அங்கு சென்று ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றுமாறு கட்டளையிட்டார். ஊர் மக்களும் அவர் சொல்படி செய்தனர். அவ்வளவுதான்!புதுப்பேட்டை கிராமத்தில் தண்ணீர் பொங்கியது. ஆறு, கிணறுகளில் நீர் நன்கு ஊறிப் பெருகியது. நீரின் சுவையும் கூடியது. ஊரில் நல்ல மழையும் பொழிந்து செழித்தது.

வள்ளலார் நிகழ்த்தியஅற்புதங்கள்-7 ஓடிய பேய்கள்

ஒருவரை நோயும் இன்னொருவரைப் பேயும் பிடித்துத் துயரப்படுத்தி வந்தன. பல்வேறு மருந்து, மந்திர பூஜைகளுக்குப் பிறகு கடைசியாக வள்ளலார் வேண்டி அழைக்கப்பட்டார்.வேட்டவலம் ஜமீன்தார் இல்லத்தில் வள்ளலார் அடி வைத்ததும் பேய் விலகியது. அவர் தம் திருக்கரத்தால் மருந்து அளித்ததும் நோய் இறங்கியது. இதன்பிறகு, வேட்டவலம் அம்மன் கோயிலில், வள்ளலார் சொல்படி உயிர்ப்பலி நிறுத்தப்பட்டு, பால் பொங்கலிட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-8 
தீண்டி இறந்த பாம்பு

ஒரு நாள் அடிகளைக் காணவந்தவர்கள் செட்டியார் வீட்டு வாழைத்தோட்டத்துக்கு தற்செயலாய் வந்தனர்.  கூடவே அடிகளும் வந்தார்.  தோட்டத்தைப் பார்த்துவிட்டு வாழைமரங்களில் கண்ணாடி இலைகள் விட்டிருப்பதையும் பூவிடும் நேரம் வந்துவிட்டதாயும் ஒருவருக்கொருவர் சிலாகித்துப் பேசிக்கொண்டனர்.  தோட்டம் நன்றாய்ப் பராமரிக்கப் பட்டிருந்ததைப் பற்றி அனைவரும் பேசிக்கொள்ள அடிகள் குறிப்பிட்ட ஒரு வாழைமரத்தடிக்கு வந்ததும் நின்றார்.  அங்கே இருந்த ஒரு நல்லபாம்பு சீறியது. அடிகளை அது தீண்டிவிடப் போகிறதெனப் பயந்த செட்டியார் அடிகளைத் தூரப் போகச் சொல்ல பாம்போ சத்தம் கேட்டதும் பயத்தில் அடிகளைத் தீண்டியது. செட்டியார் பதறிவிட்டார். அனைவரையும் கூக்குரலிட்டு அழைத்தார்.  அடிகளைப் பாம்பு தீண்டியதையும் தலையில் ரத்தம் வருவதையும் சொல்லி உடனே வைத்தியரையும் அழைக்கச் சொன்னார்.
 ஆனால் அடிகளோ அமைதியாகவே இருந்தார்.  அவர் செட்டியாரிடம் புன்முறுவலோடு வைத்தியரை அழைக்கவேண்டாம் எனவும், தன்னிடம் இருக்கும் திருநீற்றைவிடச் சிறந்த மருந்து வேறெதுவுமில்லை என்றும் கூறிவிட்டு இடுப்பிலிருந்து விபூதிப்பையில் இருந்த விபூதியை எடுத்துத் தலையில் பாம்பு தீண்டிய இடத்தில் தடவிக்கொண்டார்.  அதற்குள் ஓடி வந்த மற்றவர்கள் இன்னும் கோபம் அடங்காமல் படம் எடுத்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கும் பாம்பை அடிக்கப் போனார்கள்.  அப்போது அடிகள் அவர்களைத் தடுத்து, அந்தப் பாம்பு தான் சாகவே தன்னைத் தீண்டியதாய்க் கூறி பாம்பை அடிக்கவேண்டாம் எனத் தடுத்தார்.  அனைவருக்கும் குழப்பம் மீதூற அந்தப் பாம்போ இறந்து போய் வாழைமரத்திலிருந்து கீழே விழுந்தது.  மீண்டும் அனைவரும் திகைக்க ராமலிங்க அடிகள் நான் சொன்னது சத்தியம் எனப் புரிந்ததா எனக் கேட்டார்.  தங்கள் அறியாமையை மன்னிக்கும்படி அனைவரும் வேண்ட,  காலம் வரும்போது அனைவருக்கும் ஞாநம் பிறக்கும் என்றும் அறியாமைக்காக வருந்தவேண்டாம் எனவும் பாம்பை எரிக்காமல் புதைக்குமாறும் சொல்லிச் சென்றார்.  அனைவரும் இவர் அந்த நஞ்சுண்டகண்டனின் பிள்ளை என்பதை நிரூபித்துவிட்டார்

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-9 கஞ்சன் கற்ற பாடம்

கூடலூரில் பெரிய செல்வந்தர் ஒருவர் இருந்தார்.  செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் என்னும் முதுமொழிக்கு இணங்க ஈந்து இசைப்பட வாழாது கருமி என்ற பட்டத்தோடு அவர் வாழ்ந்து வந்தார்.அவர் வள்ளற்பெருமானைக் காண அவ்வப்போது வடலூர் வந்து செல்வதுண்டு.  ஒரு நாள் வள்ளற்பெருமானைக் காண வந்த போது, கூட்டத்தின் இடையே எழுந்து தன்னை பிறர் மதிக்கவேண்டும் என்று நினைத்து ஐயா அவர்களைப் பார்த்து ’சுவாமி, தாங்கள் ஒரு முறை எனது இல்லத்திற்க்கு எழுந்தருள வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். இதைப் போன்று அவர் பலமுறை கேட்டதுண்டு. அன்றைய தினம் வள்ளற்பெருமான் அவரை உற்றுப் பார்த்துவிட்டு “பல நாட்களாக நீங்களும் அழைக்கிறீர்கள், சரி, நாளை வருகிறேன்” என்றார்.  செல்வந்தருக்கோ உதறல் ஏற்பட்டது.  ஐயா இப்படிச் சொல்வார் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  ஐயா அவர்கள் வந்தால் வீண்செலவு ஆகுமே என்ற அச்சம் வேறு ஏற்பட்டது.
அடுத்த நாள், வள்ளற்பெருமான் செல்வந்தருடைய வீட்டிற்க்கு சென்றார். அவர் வருவதை தூரத்தில் இருந்தே பார்த்த அவர், அவரது மனைவியிடம், ’வடலூர் சாமி வருகிறார், அவர் வந்தால் என் கணவர் வீட்டில் இல்லை வெளியூர் சென்றுவிட்டார் என்று சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு வீட்டின் உள்ளே சென்று மறைந்துகொண்டார். வள்ளற்பெருமான் வீட்டில் அடியெடுத்து வைத்ததும் அவரது மனைவி பெருமானிடம் தனது கணவர் சொன்னபடியே நடந்து கொண்டார். முக்காலமும் உணர்ந்தவர் அல்லவா! நம் பெருமான், இதை அறியாதவரா, என்ன?, நல்லது நான் வருகிறேன் என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
   வள்ளற்பெருமான் சென்றபின் கணவனும் மனைவியும் நிம்மதிப் பெருமூச்சுடன் கூடத்திற்க்கு வந்தனர். அப்போது ஓர் அதிசயக் காட்சியினை கண்டனர்.  ஐயா அவர்கள் நடந்து வந்த பாதையில் அவர் காலடி பதித்த தடங்களில் எல்லாம் பொன் துகள்கள் பரவிக்கிடந்தன.
தூக்கம் கெடுத்துச் சுகம் கொடுத்தான் எந்தனக்கேஆக்கமென ஓங்கும்பொன் அம்பலத்தான் ஏக்கமெலாம்நீங்கினேன் எண்ணம் நிரம்பினேன் பொன் வடிவம்தாங்கினேன் சத்தியமாகத்தான்.வள்ளற்பெருமான் பொன் வடிவம் தாங்கிய செய்தியினை இப்பாடலே மெய்பிக்கும்.  பொன் வடிவம் பெற்ற ஐயா அவர்களின் பொன்னடிகளில் பொன் துகள்கள் தானே பரவிக்கிடக்கும்! பொன் துகள்களை கண்ட செல்வந்தரின் மனைவி வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்து ஒரு பெரிய தாம்பாளத்தினை எடுத்து வந்து அந்த பொன் துகள்களை திரட்ட முற்பட்டார். என்ன ஆச்சரியம்! அனைத்தும் மாயமாய் மறைந்து விட்டன.  கணவனும் மனைவியும் மெய்விதிர்க்க தங்களது தவறான செயலை நினைத்து வருந்தினர்.  ஒரு மகானிடம் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டோ, அறிவிழந்துவிட்டோமே, அளவற்ற செல்வம் இருந்தும் என்ன பயன்? எஞ்ஞான்றும் அழியாத பொன்வடிவம் பெற்ற பேரருளாளர் என்பதை உணராமல் எப்படிப்பட்ட பாவச்செயலினை செய்துவிட்டோம் என்று நினைத்து வருந்தினர்.


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-10 தீயை அணைத்த ஆடை

புதுப்பேட்டை கிராமத்திலேயே ஒரு வீடு தீப்பற்றிக் கொண்டு எவராலும் அணைக்க முடியாதபடி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. அடிகள் தாம் இருந்த இடத்திலிருந்தே தம்முடைய மேலாடையை வீசி எரிய தீ அணைந்தது. பெரும் தீவிபத்து தடுக்கப்பட்டது

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-11 
திரையில் தெரிந்த தில்லை தரிசனம்

ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருமஞ்சனத்திருவிழாவிற்கும், திருவாதிரைத் திருவிழாவிற்கும் அன்பர்கள் வந்து நம் அடிகளாரை அழைத்துக் கொண்டு சிதம்பரத்திற்குச் செல்வது வழக்கம். ஓராண்டு அவ்வாறு புறப்பட்டுச் செல்ல முடியாமல் போனது. அடியார்களின் வருத்தத்தை உணர்ந்த அடிகள், தருமச்சாலையின் ஒரு பகுதியில் திரையிடச் செய்து அத்திரையினுள் சென்று பார்க்கக் கூறினார். உள்ளே சென்ற அன்பர்கள், சிதம்பரத்தில் அம்பலவாணரின் திருவிழாக் காட்சி எப்படியிருக்குமோ அவ்வாறே அங்கு தோன்றவே, அடி பணிந்து வணங்கி, திரைப் புறத்திலிருக்கும் அடிகளின் திருவடிகளிலும் விழுந்து வணங்கி அருள்பெற்றுச் சென்றனர்

வள்ளலார் நிகழ்த்தியஅற்புதங்கள்-12
கள்வர்களிடமும் கருணை காட்டுதல்

ஒருநாள் மஞ்சகுப்பம் நீதிமன்ற அலுவலர் ஒருவரும் அடிகளாரும் வண்டியில் மஞ்சகுப்பம் நோக்கி வந்து கொண்டிருந்தபொழுது வழியில் திருடர்கள் இருவர் வண்டியை மறித்து நிறுத்தினர். முதலில் இறங்கிய நீதிமன்ற அலுவலரைக் கையிலிருந்த வைர மோதிரத்தைக் கழற்றித் தரும்படி அத்திருடர்கள் அதட்டினர். அதைக் கேட்ட அடிகளார் அவசரமோ என்று கேட்க, அக்கள்வர்கள் அடிகளாரை அடிப்பதற்காகத் தடியை உயர்த்தினார்கள் உயர்த்திய கைகள் உயர்த்தியபடியே நின்றன. கண் பார்வையும் செயலிழந்தது. கள்வர்கள் இருவரும் தங்கள் செயலுக்கு வருந்தினர். அடிகள் அருளால் கைகளும், கண்களும் செயற்பட்டன. அக்கள்வர்கள் இருவரும் வண்டியைச் சுற்றி வணங்கி இனி இத்தொழிலை விட்டுவிட்டு உழைத்து உண்பதாக உறுதி கூறிச் சென்றனர்.இராமலிங்க அடிகள் சென்னையில் வாழ்ந்த காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. திருவொற்றியூரில் அடிகள் ஒரு சத்திரத்தில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது ஒரு கள்வன் அவர் காதில் அணிந்திருந்த கடுக்கண் ஒன்றை கழற்றினான். உறங்குவது போலிருந்த அடிகளார் மற்றொரு கடுக்கணைக் கழற்றுவதற்கும் இடம் கொடுத்தார். கடுக்கண்களைத் திருடு கொடுத்த அடிகளார் அதற்குப் பின் காதணி அணிவதைத் தவிர்த்துவிட்டார்

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-13 (ரசவாதம்)

இராமலிங்க அடிகள் தருமச்சாலையில் இருந்த காலத்தில் அன்பர்களின் வேண்டுகோளுக்கிரங்கி, செம்பு, ஈயம், இரும்பு முதலிய உலோகங்களை பொன்னாக மாற்றிக் காட்டி (ரசவாதம்) அவற்றைப் பின் எவருக்கும் கிட்டாதபடி குளங்களிலும் கேணிகளிலும் எறிந்துவிடுவார். அம்பாள்புரம் வேம்பையர் தருமச்சாலையில் பாடகராகவும் இருந்தார். அவர் நம்பெருமானின் ரசவாதத்தைப் பார்த்தவர். அவர் நம்பெருமானைப் போல ரசவாதம் செய்ய முயன்று அப்பொருட்களை எடுத்துச் சென்று அவ்வாறே செய்யத் தொடங்கினார். துருத்தியில் வைத்து ஊதும் பொழுது எழுந்த புகை அவரது கண்களைக் குருடாக்கியது. அவர் எவ்வளவோ சிகிச்சை செய்து பார்த்தும் பயனில்லை. இறுதியில் அடிகளாரிடமே வந்து நடந்தவற்றைக் கூறி தம்மை மன்னித்தருள வேண்டினார். அடிகளார் எல்லாம் அறிந்தவராதலால் ஒரு புன்னகை புரிந்து தண்ணீரைக் கொண்டுவந்து அவருடைய கண்களைத் துடைக்க, சிறிது நேரத்தில் அவருடைய கண்களில் பார்வை மீண்டும் வந்தது

வள்ளலார் அற்புதங்கள்-14 ஆணவம் அடங்கியது

ஆணவத்தின் மற்றொரு வடிவம்தான் அகங்காரம். அத்தகைய அகந்தை கொண்ட ஒரு மனிதர். புதுச்சேரி தந்தி நிலைய மேலாளர். அவர் பல மொழிகளில் பயிற்சி உடையவர். ஒரு சமயம் அவர் அடிகளாரைக் காண வடலூர் வந்தார். அவர் வருவதற்கு முன்னரே நம் அடிகள் ஒருவர் புத்தி சொல்ல வருகிறார் என்றார். வந்தவர் பல மொழிகள் அறிந்தவர். அப்போது அங்கே தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனை அழைத்து அவர் முன் நிறுத்தி, எந்த மொழியில் எப்பொருளை வேண்டுமானாலும் இப்பிள்ளையைக் கேளுங்கள் என்று அடிகள் கூற, வந்தவருக்கு பேச நாவெழாமல் அரைமணி நேரம் தவித்தார். அவருடைய செருக்கு அடங்கியது. நம் பெருமானிடம் வணங்கி மனதுக்குள் மன்னிப்புக் கேட்க பின் பேச்சுவரப் பெற்றார்.


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-15 
அங்கும் இருப்பார் இங்கும் இருப்பார்

அ)இராமலிங்க அடிகளால் ஆட்கொள்ளப் பெற்ற கூடலூர் தேவநாயகம்பிள்ளையின் புதல்வர் நோய்வாய்ப்பட்டு மருத்துவர்களால் கைவிடப்பட்ட நேரத்தில் அவ்வன்பரின் பிரார்த்தனையை ஏற்று அன்றிரவு 11 மணியளவில் அடிகளார் கூடலூர் சென்று தேவநாயகம் பிள்ளைக்கும். அவரது புதல்வருக்கும் திருநீறு வழங்கி, குணமடைய அருளாசி வழங்கிவந்தார்கள். ஆனால் அதே நேரத்தில் வடலூர் தருமச்சாலையிலும் அன்பர்களுக்கு உபந்நியாசம் செய்திருக்கிறார்கள். சாலையில் இருந்த அன்பர்களுக்கு தேவநாயகம்பிள்ளை மூலம் தகவல் தெரியவே பெரிதும் வியப்படைந்துள்ளனர்.
ஆ)வள்ளல் பெருமான் ஒருமுறை திருவதிகைக்கு வழிபடச் சென்றபோது கூட்டம் அதிகமாகி நெரிச்சல் ஏற்பட்டது. அப்போது பெருமான் பல இடங்களில் தோன்றி காட்சியளித்தார்கள்

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-16 பேராசையால் வந்த வினை

சென்னையில் பெருமான் இருந்த காலத்தில் ஏழை கிறிஸ்தவர் ஒருவர் பெருமானிடம் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் குடும்பம் மிகவும் வறுமையில் இருக்க இதை அறிந்த பெருமானார் தினமும் இரண்டு ரூபாயை வெள்ளியாக்கும் திறனை அவருக்கு கொடுத்திருந்தார். அதனைக் கொண்டு வறுமையைப் போக்கி வாழ்ந்து வந்தார்ஆனால், ஆசைமேலிட வெள்ளிக்குப் பதிலாக பொன்செய்யும் ஆற்றல் தெரிந்தால் ஆடம்பரமாய் வாழலாம் என்ற எண்ணம் அவருக்கு வந்தது. அவர் எண்ணத்தைப் பெருமானிடம் கூற பெருமான் அவர் கையில் உள்ள வெள்ளி பூண் கட்டிய தடியை வாங்கி பூணை மட்டும் தட்டி எடுத்து கையில் சில நிமிடங்கள் வைத்து தங்கமாக்கி அவர் மனதை குளிரச் செய்தார். அவ்வாறு ஆக்கிய பூணை தருமச் சாலைக் கிணற்றில் எறிந்து “போய் வாரும், எல்லாம் சித்தியாகும்” என்று அனுப்பி வைத்தார். இதை உண்மை என்று நம்பி சென்னை திரும்பிய கிறிஸ்தவர் முன்போலவே வெள்ளியைச் செய்யத் தொடங்கிய போது வெள்ளியாகவில்லை. உள்ளதும்போய் அன்றாடப் பிழைப்புக்கு வழி இல்லாது தனது பேராசையால் வந்த வினையை நினைத்து மனம் வருந்தினார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-17 கேன்ஸ்சருக்கு மருந்தான திருநீறு

அப்பாசாமி செட்டியாரின் தமையனார் இராமசாமி செட்டியாருக்கு நாக்கில் புற்றுநோய் வந்து மிகவும் அவதிப்பட்டார். எத்தனையோ வைத்தியம் பார்த்தும் பலனில்லை. தன் தமையனாரை அழைத்துப் போய் சுவாமிகளைப் பார்த்து விவரத்தைச் சொனனார் அப்பாசாமி செட்டியார். சுவாமிகள் இராமசாமி செட்டியாரிடம் திருநீறு கொடுத்து மூன்று வேளை பூசி உட்கொள்ளுமாறும் கூறினார். அவ்வாறே தமையனார் செய்ய, அவர் நாக்கில் உண்டான புற்றுநோய் பூரணமாகக் குணமாகிவிட்டது!.


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-18 கண்ணீரால் கரைந்த ஊனம்

ஒருவர் சாது என்ற போர்வையில் கையில் தடியுடன் கோட்டு சட்டை அணிந்தவராய் திரிந்தார். அவரது வார்த்தையை எதிர்த்தோ மறுத்தோ பேச முடியாமல் அனைவரும் அவரின் முரட்டுத்தனத்துக்கு அஞ்சி, அவரை முரட்டு சாது என்று கூறினர். ஒரு சமயம் முரட்டு சாது தங்கியிருந்த ஊருக்குச் சென்ற பெருமானார், அன்பர் ஒருவரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தபோது ஆடு ஒன்று ஒரு கால் இல்லாத குட்டியை ஈன்றது. அக்குட்டியால் பால் அருந்த இயலாது எழுவதும் விழுவதுமாக இருந்தது. இதைக் கண்டு கண்களில் கண்ணீர் ததும்ப அமர்ந்திருந்த பெருமானிடம் அங்கு வந்த முரட்டு சாது “கண்ணீர் வடித்தால் ஆட்டுக் குட்டிக்கு கால் வந்துவிடுமா?” என்று கேட்க பெருமானாரோ “இறைவன் திருவருள் கிட்டுமாயின் ஏற்படலாம்” என்றார். “அதையும் பார்ப்போம்” என்று அமர்ந்திருந்தார் முரட்டு சாது. பெருமான் மனமுருகி இறைவன்மீது பத்து பாடல்கள் இயற்றிப் பாட ஆரம்பித்தார். பாடி முடிவதற்குள் ஆட்டுக்குட்டிக்குக் கால் வந்து எழுந்து சென்று பால் அருந்தியது. ஆணவம், அகங்காரம், அலட்சியம் அனைத்தையும், கோட்டு சட்டைகளுடன் கழற்றி எறிந்துவிட்டு முரட்டு சாது பெருமானின் காலில் விழுந்து வணங்கி உண்மை சாதுவாய் மாறினார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-19 பசிப்பிணி மருத்துவர்

ஒருநாள் செஞ்சி மலைமீது வள்ளலாரும்அவரது சீடரான தேவநாயகம் பிள்ளையும் நடந்து சென்றுகொண்டிருந்தார்கள். மலையுச்சி, எங்கும் பசுமையான இயற்கைக் காட்சி. உணர்வெழுச்சி பெற்ற வள்ளலார் திடீரென இறையுணர்வில் தோய்ந்தார். செஞ்சி மலையின் உச்சியில் சம்மணமிட்டு அமர்ந்து அப்படியே தியானத்தில் மூழ்கிவிட்டார்.மூழ்கியவர் மூழ்கியவர்தான். தன்னை மறந் தார். சுற்றுப்புறச் சூழ்நிலைகளை மறந்தார். தாம் செஞ்சி மலைக்கு வந்திருக்கிறோம் என்பதை மறந் தார். தன்னுடன் ஓர் அன்பர் வந்திருக்கிறார் என்பதையும்கூட மறந்துவிட்டார். அவரது ஆழ்ந்த தியானம் நீண்டநேரம் நீடித்தது. நீடித்துக் கொண்டே இருந்தது!

உடன் வந்த தேவநாயகம் பிள்ளைக்குப் பசியெடுத்தது. வள்ளலார் யோகி. அவர் பசி, தாகம் போன்ற உணர்வுகளையெல்லாம் வென்றவர். ஆனால் தேவநாயகம் பிள்ளை அப்படிப்பட்ட வர் அல்லவே? அவருக்குப் பசி உயிரே போய் விடும்போல் இருந்தது. இந்த மலையுச்சியில் சாப்பிடுவதற்கு என்ன கிடைக்கும்? மலைமேலிலிருந்து கீழிறங்கிப் போகும் வரை பசியை எப்படிப் பொறுத்துக் கொள்வது?பிள்ளை கடும்பசியால் தவித்துக் கொண்டிருக் கும்போது வள்ளலார் மெல்லக் கண் மலர்ந்தார். தன் அருகே அமர்ந்திருக்கும் பிள்ளையை ஒரு பார்வை பார்த்தார். அவர்தான் ஒரே பார்வையி லேயே அனைத்தையும் கிரகிப்பவர் ஆயிற்றே? தேவநாயகம் பிள்ளைக்கு கடும் பசி என்பதைப் பார்த்த கணமே புரிந்துகொண்டார்.வள்ளலார் தம் பசி பொறுப்பாரே தவிர அடுத்தவர் பசியைப் பொறுத்துக்கொள்ள மாட் டார். அவரின் தாய்மனம் பிள்ளையின் பசியை நீக்க எண்ணியது. காற்றில் கை நீட்டினார். அடுத்த கணம் அவர் வலக்கரத்தில் ஒரு பெரிய லட்டு வந்து விழுந்தது. அதைப் பிள்ளையிடம் கொடுத்தார்.பிள்ளை ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியோடு அதை உண்டார். உண்டு முடித்த மறுகணம்அவருக்கு விக்கல் எடுத்தது. “இந்தா தண்ணீர்’ என மறுபடியும் காற்றிலிலிருந்து ஒரு குவளை நீரெடுத்துத் தந்தார் வள்ளலார்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-20 இதோ ஓர் மனிதர் போகிறார்

ஒரு மகான் வீட்டின் திண்ணையில் அமர்ந்தவாறு தெருவில் போவோர் வருவோர் பற்றிய தம் அபிப்ராயத்தை உரக்கத் தெரிவித்துக் கொண்டிருந்தார். அவரவர் மன விகாரத்திற்கு ஏற்ப தம் கருத்தைக் கணித்து அவர் சொல்லிலிக் கொண்டிருந்தார். இந்த விளையாட்டை அங்கிருந்தவர்கள் எல்லாரும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள்.ஒரு நபர் போகும்போது, “”இதோ ஒரு நரி போகிறது!” என்றார் அவர். இன்னொரு நபர் போகும்போது உற்றுப் பார்த்துவிட்டு, “”ஒரு நாய் போகிறது!” என்றார்.இப்படிச் சொல்லிலிக்கொண்டே வந்த அவர் வள்ளலார் செல்வதைப் பார்த்ததும் எழுந்து நின்று, “”இதோ ஓர் உயர்ந்த மனிதர் போகிறார்!” என்று சொல்லிலி அவரைக் கைகூப்பித் தொழுதார். இதைக் கண்ட பொதுமக்கள் வள்ளலார்மேல் உயர்ந்த மதிப்பைக் கொண்டார்கள்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-21கல்லாக மாறிய நாகம்

குறிஞ்சிப்பாடியில் ஓர் அன்பரைக் கருநாகம் ஒன்று தீண்டிவிட்டது. கருநாகம் தீண்டிப் பிழைத்தவர்கள் மிகவும் குறைவு. அச்சமடைந்த அவர் வள்ளலார்மேல் மிகுந்த நம்பிக்கை வைத்து “”ராமலிலிங்கத்தின் மேல் ஆணை!” என்று உரத்துக் குரல் கொடுத்தார். அவரைத் தீண்டிய அந்தக் கருநாகம் வாயைப் பிளந்தது பிளந்தவாறே இருக்க, செதுக்கி வைத்த சிலைபோல் அப்படியே அசையாமல் நின்று கொண்டிருந்தது. விஷக்கடி அந்த அன்பரை ஒன்றும் செய்யவில்லை.
சில நாட்கள் கழித்து இந்த சம்பவத்தை அறிந்த வள்ளலார் சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று, அந்தப் பாம்பைப் பார்த்தார். பாவம் அந்தப் பாம்பு. அன்ன ஆகாரமில்லாமல் அதே இடத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தது.  குறிப்பிட்ட அன்பரை அழைத்த வள்ளலார், ஆணையை விடுவித்து பாம்பை விடுதலை செய்யச் சொன்னார். அந்த அன்பரும், “”ராமலிலிங் கத்தின் மேல் ஆணை. இனி நீ முன்போலவே இருக்கலாம்!” என்றதும் பாம்பு மீண்டும் உணர்வு பெற்று வள்ளலாரின் பாதங்களை விழுந்து வணங்கி புதருக்குள் ஊர்ந்து சென்றது!

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-22 நாகம் விளையாடிய பாதம்

சென்னை வியாசர்பாடியில் ஓர் இரவு சொற்பொழிவு முடித்துவிட்டு வள்ளலார் தம் நண்பர்களோடு இருளில் நடந்து வந்துகொண்டிருந்தார். வழியில் திடீரென ஒரு கருநாகம் படமெடுத்து வள்ளலார் முன் வந்து நின்றது. மிகப் பெரிதாக இருந்த ஒரு ராஜநாகம் அது.பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்களே? நண்பர் படை நடுங்காமல் இருக்குமா? எல்லாரும் என்ன செய்வது என அறியாமல்  திகைத்து நின்றார்கள்.ஆனால் வள்ளலார் பதற்றமே இல்லாமல் அமைதி காத்தார். “என்ன வேண்டும்?’ என்று கேட்பதுபோல் அந்த நாகப்பாம்பைப் பரிவோடு பார்த்தார். அது ஊர்ந்துவந்து மிகுந்த உரிமையோடு வள்ளலாரின் காலைச் சுற்றிக் கொண்டது.வள்ளலார் சிவபெருமானின் அவதாரமே தானோ? பாம்பு தானே வந்து அவர் காலைச் சுற்றிக் கொள்கிறதே? பார்த்தவர்கள் திகைத்தார்கள்; பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொண்டார்கள். “”சரி சரி, போதும் போய்வா” என்றார் வள்ளலார். அந்தப் பாம்பு மெல்ல அவரை விட்டு இறங்கிப் புதருக்குள் சென்று மறைந்துவிட்டது.கூடலூரிள்ள அப்பாசாமி செட்டியார் வீட்டில் சுவாமிகள் தியானத்தில் இருந்தார். அன்பர்கள் புறத்தில் அமர்ந்து விவாதித்துக்கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒருவர் இவர்களைத் தாண்டி உள்ளே சென்றார். வந்தவர் யார் என்று அறிந்து கொள்ள அன்பர்கள் உள்ளே சென்றனர். அங்கே ஒருவரும் இல்லை. ஒரு லட்டுதான் இருந்தது. சுவாமிகளிடம் விசாரிக்க அவர், வந்தவர் ஒரு சித்தர் என்றும், அவர் இப்பொழுது காசியில் இருப்பார் என்றார். அவர் கொடுத்த லட்டுதான் இது என்றார். அதைக் கேட்ட அன்பர்கள் சித்தரின் ஆற்றலையும் அத்தகையைவர் தம் குருவை காண வந்ததால் தம் குருவின் பெருமையையும் எண்ணி மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-23 மரணத்தை அறிவித்த மகான்

சுந்தர சுவாமிகள் என்ற பெருமகனார் அவரைக் காணவந்தார்.வள்ளலாரின் அருள் பொங்கும் முகத்தைப் பார்த்துப் பார்த்துப் பரவசப்பட்டார் அவர். வள்ளலாரைச் சுற்றிப் பெருகிய ஆன்மிக அலை, இரும்பை காந்தம் இழுப்பதுபோல் அவரை இழுத்தது. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்றபடி, ஆன்மிகப் பெரியாரான அவர் இன்னொரு ஆன்மிக வள்ளலான வள்ளலாரால் ஈர்க்கப்பட்டார்.வள்ளலாரால் பெரிதும் கவரப்பட்ட அவர் வள்ளலாருடனேயே சிறிதுகாலம் தங்கியிருந்தார்.அவருடன் ஏராளமான ஆன்மிக உரையாடல்களை நிகழ்த்தினார். கேள்விகள் கேட்டுப் பற்பல சந்தேகங்களிலிலிருந்து தெளிவு பெற்றார்.வள்ளலாரின் எதிரே நின்று பேசாமல், பக்கவாட்டில் நின்றே அவர் எப்போதும் உரையாடுவது வழக்கம். தொடர்ந்து அதைக் கவனித்துவந்த ஓர் அன்பர் வியப்புடன் அது ஏன் என்று அவரை விசாரித்தார். “”தம் எதிரே நிற்பவரின் ஆன்மிக ஆற்றலை அப்படியே இழுத்துக்கொள்ளும் பேராற்றல் உடையவர் வள்ளலார் என்பதால்தான் நான் பக்கவாட்டில் நின்று பேசுகிறேன்” என்று பயபக்தியுடன் சொன்னார் சுந்தர சுவாமிகள். இந்த பதிலைக் கேட்ட வள்ளலார் அன்பர் கள் திகைப்படைந்தார்கள். வள்ளலார்மேல் அவர்கள் ஏற்கெனவே கொண்டிருந்த மதிப்பு இந்த பதிலால் மேலும் பெருகியது.வள்ளலாரும் சுந்தர சுவாமிகளும் பேசும் ஆன்மிகப் பேச்சுகளை மற்றவர்களும் கேட்டுப் பயன்பெற்றார்கள். ஆன்மிக வளர்ச் சிப் படிநிலையில் அடுத்தடுத்து நிகழ்த்த வேண்டிய நுணுக்கமான பல சாதனைகளைப் பற்றி வள்ளலார் அவருக்கு அறிவுறுத் தினார். அற்புதமான அந்தக் கூட்டுறவு சிறிது காலம்தான் நீடித்தது. பின்னர் ஒருநாள் சுந்தர சுவாமிகள் வள்ளலாரைப் பிரிய மனமின்றிப் பிரிந்து விடைபெற்றுச் சென்றார். அப்போது வள்ளலாரின் விழிகளில் கண்ணீர் குளம் கட்டியது.வள்ளலார் கண்ணில் நீர் வரும் வகையில் தழுதழுத்து உருக என்ன காரணம் என்று சீடர்கள் வினவினார்கள். பெருமூச்செறிந்த வள்ளலார், “”இந்த அன்பர் இன்னும் ஆறே மாதங்களில் உலகைத் துறப்பார். அதை எண்ணித்தான் வருந்தினேன். இனி இந்த அற்புதமான மனிதரைப் பார்க்கும் சந்தர்ப்பம் நமக்கெல்லாம் கிட்டாது!” என்று குறிப்பிட்டார்.வள்ளலார் சொன்னபடியேதான் நடந்தது.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-24 மழை நனைக்காத மகான்

ஒரு நாள் கன மழையில் விரைந்து சென்றுகொண்டிருந்த வள்ளலார்மேல் ஒரு சொட்டுத் தண்ணீர்த் துளிகூட விழவில்லை! அவர் உடை ஈரமாகவே இல்லை! மழை அவரைச் சுற்றிப் பெய்ததே தவிர, அவரை ஒருசிறிதும் தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டது!இந்த அதிசயமான நிகழ்வைப் பார்த்த அன்பர் கள் அவர்மேல் மட்டற்ற மரியாதை கொள்ளலா னார்கள். இயற்கையே அவரைப் பாதுகாக்கிறது என்பதையும், அவர் விரும்பினால் இயற்கைச் சக்திகளையும்கூட தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதையும் அவர்கள் அறிந்து கொண்டார்கள்.
சிவலிங்கமாக மாறிய மண்
ஒருநாள் திருவொற்றியூர்க் கோவிலிலில் அவரை வழிமறித்தாள் அன்பான ஒரு மூதாட்டி, “”நீ மகான் என்பது எனக்குத் தெரியும். ஏதேனும் ஓர் அற்புதத்தை நீ நிகழ்த்திக் காட்டத்தான் வேண்டும்!” என்று வற்புறுத்தினாள் அவள்.அந்த மூதாட்டியின் பாசத்திற்குக் கட்டுப் பட்ட வள்ளலார் கோவிலிலிலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை அள்ளி மூதாட்டியிடம் கொடுத்தார். “”சற்றுநேரம் கையை மூடி வைத்துக் கொண்டிருந்துவிட்டு, பிறகு கையைத் திறந்துபார்” என்று சொல்லி வள்ளலார் சென்றுவிட்டார்.

சற்றுநேரம் கழித்துத் தன் கையை ஆவலோடு திறந்து பார்த்தாள் அந்த மூதாட்டி. என்ன ஆச்சரியம். மணல் முழுவதும் சின்னச் சின்னச் சிவலிலிங்கங்களாக மாறியிருந்தது! ஓடிவந்து மூதாட்டியின் கையைப் பார்த்த எல்லாரும் “சிவ சிவ’ என வள்ளலாரை நினைத்து இருகரம் கூப்பித் தொழுதார்கள்.


வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-25பெருநோய் தீர்த்த் பெருமான்

ஒரு குஷ்ட நோயாளி வள்ளலாரைப் பணிந்து தன் நோயை
குணப்படுத்தலாகாதா என்று கண்ணீர் விட்டுக் கரைந்தான். கருணையே வடிவான வள்ளலார் அவனது தீராத பெருநோயைத் தன் கையால் திருநீறு கொடுத்துத் தீர்த்து வைத்தார். வள்ளலார் கைத் திருநீறு குஷ்ட ரோகத்தை நீக்கும் மருந்தாகச் செயல்பட்ட விந்தையைப் பார்த்து மக்கள் ஆச்சரியப் பட்டார்கள்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்-26 அருட்பாவும் மருட்பாவும்

அக்காலத்தில் இருந்த சில தமிழறிஞர்களுக்கு வள்ளலாரின் பாடல்களை அருட்பாக்கள் என்று அழைப்பது பிடிக்கவில்லை. “போலி’லி அருட்பா மறுப்பு’ என்ற தலைப்பில் அவர்கள் புத்தகங்கள் எழுதி வெளியிடலானார்கள்.
அப்போதுதான் ஆன்மிக வரலாற்றில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த விந்தையான வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. ஆறுமுக நாவலர் என்ற தமிழறிஞர் வள்ளலார்மேல் வழக்குத் தொடர்ந்திருந்தார். வள்ளலாரின் பாடல்களை அருட்பாக்கள் என அழைப்பது தவறு என்பதே அவர் தரப்பு வழக்கு. வள்ளலார் நீதிமன்றத்திற்கே வருகை தரவேண்டிய சூழல் நேர்ந்தது. அவ்விதம் வள்ளலார் நீதிமன்றத் திற்கு வந்தபோது நடந்தது அந்த அதிசயம்….இலங்கைத் தமிழறிஞரான ஆறுமுக நாவலர் செய்துள்ள தமிழ்த் தொண்டுகள் பலப்பல.
அவர் சைவ நெறியைப் பரப்புவதில் முதன்மை வகித்த பெருந்தகையாளர். தமிழ் உரைநடைக்கு அவர் ஆற்றியுள்ள பங்களிப்பு கணிசமானது.

வள்ளலாரின் பாடல்களை அருட்பா என்றழைப்பது அவர் மனதை உறுத்தியது. அறுபத்து மூன்று நாயன்மார்கள் பாடிய பாடல்கள் அருட்பாக்கள். சேக்கிழாரின் பெரிய புராணம் நாயன்மார்களின் உன்னத வரலாற்றை இனிய கவிதைகளால் எழுதிச் செல்கிறது. இறைவனை நேரில் கண்ட அடியவர்கள் அவர்கள். நாயன்மார்கள் நிகழ்த்திய அற்புதங்களும் சேக்கிழாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சைவ சமயத்தைக் காப்பதையே தம் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் ஆறுமுக நாவலர். சைவ சமயத்தைத் தழைக்கச் செய்த அடியவர்களான நாயன்மார்களின் பாடல்களை அழைக்கும் அதே அருட்பா என்ற சொல்லால் வள்ளலார் பாடல்களையும் அழைப்பது சரியா? வள்ளலார் பாடல்கள் அருட்பா அல்ல; மருட்பாக்களே என்று ஆறுமுக நாவலர் கருதினார். வள்ளலார் மேல் அவருக்கு மதிப்பு உண்டு என்பது மெய்தான். என்றாலும் அவரது பாடல்களை அருட்பாக்கள் என்று கூறுவது மிகையான கூற்று என்பதே நாவலர் கருத்து.

நாவலர் தமிழகத்திற்கு வருகை தந்தபோது, மஞ்சக்குப்பம் டிஸ்ட்ரிக்ட் முன்சீப் நீதிமன்றத்தில்”அருட்பா என்ற வார்த்தைப் பிரயோகத்தை வள்ளலார் பாடல்களுக்கு அனுமதிக்கலாகாது’ என்று வழக்குத் தொடுத்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது அவ்வழக்கு. வள்ளலார்அன்பர்கள் திகைத்தார்கள். வள்ளலாருக்கு எதிராக நூல் எழுதியவர்கள் மகிழ்ச்சிஅடைந்தார்கள்.

அப்போது மஞ்சக்குப்பத்தில் டிஸ்ட்ரிக்ட் முன்சீப்பாகப் பணியாற்றியவர் முத்துசாமி ஐயர் என்பவர். நேர்மைக்கும் நாணயத்திற்கும் புகழ்பெற்றவர். மக்களிடம் பெரும் செல்வாக்கு உடையவர். அவர் எந்த வழக்கைக் குறித்து எப்படித் தீர்ப்புச் சொன்னாலும் அது சரியாக இருக்கும் என்று மக்கள் கருதினார்கள்.

ஆறுமுக நாவலர்- வள்ளலார் தொடர்பான வழக்கு நடைபெற்றது. முத்துசாமி ஐயர் இருதரப்பு வாதங்களையும் மிக கவனமாகக் கேட்டார். அப்படிக் கேட்டது மட்டுமல்ல;

அப்போது வேறு ஒரு விஷயத்தையும் அவர் மிகக் கூர்மையாகக் கவனித்தார்.

அவர் கவனித்த விஷயம் அவரை சிந்தனையில் ஆழ்த்தியது.

வள்ளலார் நீதிமன்றங்களுக்கு வந்தவர் அல்ல. தம் பாடல்கள் தொகுக்கப்படுவதையே தொடக்கத்தில் அவர் அனுமதிக்கவில்லை.

அன்பர்கள் வற்புறுத்தியதால்தான் தம் பாடல்களைத் தொகுக்க அவர் அனுமதி அளித்தார். அருட்பா என்ற பெயரிட்டு அவற்றைத் தொகுத்ததால் அல்லவா அவர் இப்போது நீதிமன்றம் வரை வரவேண்டிய நிலைமை நேர்ந்துள்ளது?

இறைச்சிந்தனை அன்றி வேறு எந்தச் சிந்தனையும் இல்லாத வள்ளலார் ஒளிவீசும் முகத்துடன் நீதிமன்றத்தின் உள்ளே நுழைந்தார். அங்கே ஏற்கெனவே ஆறுமுக நாவலர் வந்து அமர்ந்திருந்தார்.

வள்ளலார் நீதிமன்றத்தில் நுழைந்ததும் அங்கு இன்னதென்றறியாத ஒரு தெய்வ சான்னித்தியம் உணரப்பட்டது. நீதிமன்றத்தில் இருந்த அனைத்து மக்களும் அவருக்கு மரியாதை தெரிவிக்கும் வண்ணம் எழுந்து நின்றார்கள். நீதி வழங்கும் பொறுப்பில் இருந்த முத்துசாமி ஐயரும் தன்னை மறந்து எழுந்து நின்றார்.

அதுமட்டுமல்ல; யாருடைய பாடல்கள் அருட்பாக்கள் அல்ல என்று வழக்குத் தொடுத்திருந்தாரோ, அந்த ஆறுமுக நாவலரும் வள்ளலார் வந்தபோது தம்மையறியாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியை வேறு யாரும் கவனித்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் நீதி வழங்கும் பொறுப்பில் இருந்த முத்துசாமி ஐயர் இதை கவனிக்கத் தவறவில்லை.

வழக்கு விசாரணை நடைபெற்றபோது, “வள்ளலார் நீதிமன்றத்தில் நுழைந்தபோது அனைவரும் எழுந்து நின்றது இருக்கட்டும்; ஏன் வழக்குத் தொடுத்த நாவலரே எழுந்து நின்றார்?’ என்று நாவலரிடமே கேட்டார் முத்துசாமி ஐயர்.

வள்ளலாரின் தவ சக்தியைத் தான் சந்தேகப்படவில்லை என்றும்; அவர் தூய துறவிதான் என்றும்; அவரது பாடல்களை அருட்பா என்று அழைப்பது குறித்து மட்டுமே தமக்கு மறுப்பு என்றும் நாவலர் தெரிவித்தார். அதையே சான்றாதாரமாகக் கொண்ட முத்துசாமி ஐயர், வழக்குத் தொடுத்தவராலும் மதிக்கப்படும் உயர்நிலையில் உள்ள வள்ளலார் எழுதியவற்றை அருட்பா என்று அழைப்பதில் தவறேதும் இல்லை என்று தீர்ப்பளித்தார். வள்ளலார் அன்பர்கள் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள்


Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்

குறுஞ்சாமிகளின் கதைகள்-1

குறுஞ்சாமிகளின் கதைகள்- 2

குறுஞ்சாமிகளின் கதைகள்-3

குறுஞ்சாமிகளின் கதைகள்-4

குறுஞ்சாமிகளின் கதைகள்-5

குறுஞ்சாமிகளின் கதைகள்-6

குறுஞ்சாமிகளின் கதைகள்-7

குறுஞ்சாமிகளின் கதைகள்-8

குறுஞ்சாமிகளின் கதைகள்-9

குறுஞ்சாமிகளின் கதைகள்-10

குறுஞ்சாமிகளின் கதைகள்-11

குறுஞ்சாமிகளின் கதைகள்-12

குறுஞ்சாமிகளின் கதைகள்-13

குறுஞ்சாமிகளின் கதைகள்-14

குறுஞ்சாமிகளின் கதைகள்-15

குறுஞ்சாமிகளின் கதைகள்-16

குறுஞ்சாமிகளின் கதைகள்-17

குறுஞ்சாமிகளின் கதைகள்-18

குறுஞ்சாமிகளின் கதைகள்-19

குறுஞ்சாமிகளின் கதைகள்-20

குறுஞ்சாமிகளின் கதைகள்-21







குறுஞ்சாமிகளின் கதைகள்- நூல் மதிப்புரை

குறுஞ்சாமிகளின் கதைகள்

என் பிறந்த நாளில் இந்நூலைப் பரிசாக வழங்கிச் சென்ற என் தோழிக்கு நன்றிகள்

-------------------------------------------
புத்தகம் : குறுஞ்சாமிகளின் கதைகள்
ஆசிரியர் : கழனியூரன்
வெளியிட்டோர் : உயிர்மை பதிப்பகம்
வெளியான ஆண்டு : 2007
விலை : ரூ 80

-------------------------------------------






















கழனியூரன்:

கழனியூரன் என்னும் எம்.எஸ்.அப்துல் காதர் திருநெல்வேலி மாவட்டத்தில் கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்தவர். துவக்கப் பள்ளி ஆசிரியராக பணி புரிந்து வரும் இவர், நாட்டுப்புறவியலில் இளம் முனைவர் பட்டம் பெற்று தற்போது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டுள்ளார். நாட்டுப்புறவியல் சார்ந்த 20க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணனோடு நெருங்கிய தொடர்பிலிருப்பவர். அவரோடு இணைந்து பல நாட்டுப்புறக் கதைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். நாட்டுப்புற இலக்கியங்கள் குறித்தான களப்பணியிலும், எழுத்துப்பணியிலும் இருபத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஈடுபட்டிருப்பவர்.

குறுஞ்சாமிகளின் கதை:

குல சாமிகள் என்றும், குறுஞ்சாமிகள் என்றும் நாம் அறிந்திருக்கிற சிறு தெய்வங்களின் வரலாற்றைத் தொகுத்துத் தந்திருக்கிற நூல் இது. கல்கி வார இதழில் இக்கதைகள் 'சனங்களின் சாமி' என்ற பெயரில் தொடராக வந்திருக்கின்றன. திருநெல்வேலியைச் சுற்றியிருக்கிற கிராமங்களில் வணங்கப்படுகிற குறுஞ்சாமிகளின் கதைகள் நம்மை மீண்டும் கிராமங்களை நோக்கிய பயணத்துக்கு இட்டுச் செல்கின்றன. இந்தச் சாமிகள் எல்லாம் மக்களோடு மக்களாக வாழ்ந்து, ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் மனதில் தெய்வ நிலை எய்தியவர்களாகவே இருக்கிறார்கள். சமுதாயத்தில் விளிம்பு நிலையில் வாழ்கிற மக்களுக்கான தெய்வங்களாக, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிற கடவுள்களாகவே இந்தக் குறுஞ்சாமிகள் இருக்கிறார்கள்.


















தன்னைப் போன்ற மக்களுக்காக வீரச்செயல் புரிந்து மாண்டு போன வீரன், அதர்மத்துக்குப் பலியான பெண், தவறுதலாக கொல்லப்பட்ட ஒரு மனிதன் இவர்களைப் போன்றோரே பின்னாளில் கடவுள்களாக மாறி, ஒரு பகுதி மக்களால் குல தெய்வமாக வரிக்கப்பட்டு வணங்கப்படுகிறார்கள். கழனியூரன் தொகுத்திருக்கும் இந்தக்கதைகள், ஆன்மீகம் குறித்தான பல சர்ச்சைகளை நம்முள் தூண்டிவிடுகின்றன. இன்று இது போன்ற குறுஞ்சாமிகளின் வழிபாடு என்பது வெகுவாகக் குறைந்து போய், ஒரு சாரார் மட்டுமே செய்கின்ற செயலாக மாறிவிட்டிருக்கிறது. அதுவும் நகரத்து மக்களுக்கு இது போன்ற ஒரு மரபோ, தங்கள் வேர்கள் குறித்த ஒரு ஞானமோ பெரும்பாலும் இருப்பதில்லை. வரலாற்றின் பின் பகுதியில் வந்து சேர்ந்துவிட்ட பெருங்கடவுள்களை வழிபடுவதே இப்போது எங்கும் காணக்கிடைக்கிறது.

மூதாதையரை வணங்கும் பண்பாடு, உலகின் மூத்த நாகரிகங்கள் எல்லாவற்றிலும் இருந்த ஒரு விஷயமாகவே இருக்கிறது. அது இன்று படிப்படியாக அழிந்து போய்விட்டது என்றே சொல்லலாம். தென் தமிழகத்தில் வழங்கப்படுவது போல இந்தக் குறுஞ்சாமிகளின் வழிபாடு மற்ற பகுதிகளில் அவ்வளவாக இல்லை என்பது என் கருத்து.

கதைளைச் சொல்வதோடு, அதில் பின்னிப்பிணைந்திருக்கும் அக்காலத்து மக்களின் வாழ்வு முறை, நம்பிக்கைகள், கலாச்சாரம், அவர்களின் கோபம், ஆசைகள், வீரம், காதல் என்று பல செய்திகளை முன்வைக்கிறார் ஆசிரியர். மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து, பட்டினி கிடந்தவனின் சாமியும் மழையிலேயே நனைந்தது; வெயிலிலேயே காய்ந்தது; பட்டினியும் கிடந்தது. சாமிக்குப் படைக்கப்பட்ட உணவுகள், இம்மக்களின் அன்றாடப் பசி தீர்க்கும் பொருட்களாகவே இருந்திருக்கின்றன. சாமிகளின் உருவங்கள், பெரிய கலை வேலைப்பாடுகள் இன்றி கைக்குக் கிடைத்த பொருளகளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மாட்டுச்சாணத்தின் மேல் நான்கைந்து அருகம்புல்லை வைத்து உருவாக்கப்பட்டு விடுகிறது ஒரு தற்காலிக சாமி. இந்த வழக்கம் தமிழகக் கிராமங்களில் இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.

தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள் செய்ததாகச் சொல்லப்படுகிற அதிசயங்கள், பிற்காலச் சேர்க்கைகளாகக் கொள்ளப்படலாம். கதைகளுக்கு சுவாரஸ்யம் கூட்டும் பொருட்டும் இணைக்கப்பட்டிருக்கலாம்.

பிற்சேர்க்கையாக தான் மெற்கொண்ட களப்பணிகள் குறித்தும், குறுஞ்சாமிகளின் கதைகள் தேடியலைந்த கதையையும் எழுதி இருக்கிறார் கழனியூரன். சுமார் ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் படித்து முடித்துவிடக்கூடிய ஒரு கதையை தெரிந்து கொள்ள இவர் பட்டிருக்கும் வேதனைகள், இவர் கொடுத்திருக்கும் உழைப்பு, இவர் செலவிட்டிருக்கும் நேரம், நிச்சயமாக பெரும் மரியாதைக்கு உரியவை. கற்பனையில் உதித்துவிடக்கூடிய கதைகளைக் காட்டிலும் உயிரோட்டமும், வாழ்க்கையும் கலந்திருக்கும் இக்கதைகள் அடுத்தத் தலைமுறைக்கு நம் வேர்கள் குறித்தான ஒரு அறிமுகப் பதிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

-சேரல்

குறுஞ்சாமிகளின் கதைகள்-21

முத்துவீர பகடை

வேப்பிலாங்குளம்ங்கிற ஒர் ஊர்ல முத்துவீர பகடைன்னு ஒருத்தன் இருந்தான் அவன் பொண்டாட்டி பேரு பூவுடையா அவளுக்கு அழகான ஒரு ஆம்பளப் புள்ளை பேரு சின்னத்தம்பி.
வளர்ந்து வாலிபமானதும் சின்னத்தம்பி வாட்ட சாட்டமா உருண்டு திரண்டுட்டான் வெளியூர் அண்ணாவிமார்களிடம் போய் கம்பு சுத்தறது வஸ்தாரி பிடிக்கிறதன்னு சகல வீர வெளையாட்டுக்களையும் கத்துக்கிட்டான்.

நாங்குனேரியில மாணிக்க வாசபிள்ளைன்னு ஒரு பண்ணையார் வளர்த்து வந்த குதிரைக்கு மதம் பிடிச்சிட்டு பிள்ளைவாளைப் பார்த்தாலே ரொம்ப மிரண்டது அது விறக்வும் அவருக்கு மனசில்லை அதனால இந்த குதிரையை யார் அடக்கி வசத்துக் கொண்டு வாராங்களோ அவங்களுக்குப் பத்துப் பொன்காசு பரிசாகக் கொடுக்கிறேன்னு அறிவிச்சாரு.
அந்தச் சேதி சுத்துப்பட்டி எல்லாம் பரவிச்சு சின்னத்தம்பியோட சேக்காளிமாருக சின்னத்தம்பி நீ நினைச்சா நாங்குனேரி பிள்ளைவாளோட குதிரையை அடக்கிடலாம்னு சொல்லி அவனை உசுப்பேதினாங்க இவனும் போனான்.

நேர குதிர லாயத்துக்குப் போய் குதிரையையே கொஞ்ச நேரம் கண்ணால உத்துப் பார்த்தான்.குதிரையும் சின்னத்தம்பியைக் கண் எடுக்காம பார்த்துச்சு இப்படிக் கொஞ்ச நேரம் கண்ணால பார்த்து வசியம் செஞ்சி குதிரையை தன் வசத்துக்குக் கொண்டு வந்தான் அப்புறம் குதிரய அவுத்துட்டு வந்து குதிர மேல ஏறி சவாரி செஞ்சபடியே அந்த ஊர மூணு வளையம் சுத்தி வந்தான்.
அடங்காத குதிரயை அடக்கிய சின்னத்தம்பியோட வீரத்தப் பாராட்டி நாங்கோரி நாட்டாமை பத்துப் பொன்காசுகள் சின்னத்தம்பியிடம் கொடுத்து அவனைப் பாராட்டினார் சின்னத்தம்பியோட புகழ் சுத்து வட்டாரமெல்லாம் பரவிட்டு
சேதி மகாராஜா காது வரைக்கும் போயிட்டு ஒடனே அவரு சின்னத்தம்பியக் கூப்பிட்டு வள்ளியூர் காட்டுல அழிமானம் செய்யுற காட்டு வெலங்குக கொட்டத்தை ஒன்னாலதான் அடக்க முடியும். அப்படி அடக்குனா ஒனக்குச் சனமானம் காத்துக்கிட்டு இருக்குன்னுன்னார்.

சரின்னு சொல்லி புறப்பட்ட சின்னத்தம்பி அவனோட சேக்காளிமாருகளோட வள்ளியூர் காட்டுக்கு வெட்டருவா வேல் வீச்சுக்கம்போட போயி காட்டு மிருகங்கள வேட்டையாடினான் அப்புறம் அதுக ஊருக்குள்ளேயே எறங்கல வள்ளியூர்க்காரங்க நிம்மதியா வாழ்ந்தாங்க சந்தோஷப்பட்டாங்க சின்னத்தம்பியைப் பாராட்டினாங்க.
சின்னத்தம்பி காட்டு வெலங்குகளை வேட்டையாட வெள்ளியூர் காட்டுல தங்கி இருந்தபோது சோனாங்ச்சிங்கிற கன்னிப் பெண் அழகுல மயங்கிட்டான் சோனாச்சியும் சின்னத்தம்பியோட ஆணழகப் பார்த்து மயங்கிட்டா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்க ஆரமிச்சாங்க.

சின்னத்தம்பி காட்டு விலங்குகல வேட்டையாடியதால மகாராஜா கூப்பிட்டு சின்னத்தம்பிக்கும் அவனோட சேக்காளிகளுக்கும் சன்மானங்க கொடுத்து கெளரவிச்சாரு அத்தோட அரண்மனைத் தளபதியா நெயமிச்சாரு.
தனது வீரதீரத்தால அரண்மனைத் தளபதியாகிவிட்டானே சின்னத்தம்பின்னு மேப்பட்டறையைச் சேர்ந்த சிலர் பொறாமைப் பட்டாங்க சின்னத்தம்பிய எப்படியாவது கொன்னுடனும்னு காத்துக்கிடக்க ஆரமிச்சாங்க அதனால அவன் எங்க போறான் எங்க வரான்னு கண் காணிச்சாங்க.
ஒரு நா சின்னத்தம்பி முக்கூடல் பக்கத்துல இருக்க பாப்பாகுடிக்கு ஒரு ஜோலியாப் புறப்பட்டு போனான் அவன் மட்டும் தன்னந்தனியா காட்டு வழியா நடந்து வந்துகிட்டு இருந்தான் சின்னத்தம்பிக்கு துணையா ஒரு காவ நாயி கூட போச்சு அவனைக் கொல்றத்துக்கு நாலு பேர் தொடர்ந்து வந்துகிட்டே இருந்தாங்க.

முக்கூடல் பக்கத்துல இருக்குற பேய் பாறை ஒடையை ஒட்டிய ஒரு புஞ்சையில மாடன்னு ஒரு சம்சாரி உழுதுகிட்டு இருந்தான் அவன் கலப்பை கொழுவுல ஒரு கிடாரம் தட்டுப்பட்டுச்சு அப்ப மாடன்கூட அவனோட மச்சினனுமிருந்தான்.
புதையல் பானையைப் பார்த்த மாடனோட மச்சினன் மச்சான் புதயலைத் தொடாதே ரத்தப் பலி கொடுத்த பெறகுதான் புதயலை எடுக்கனும்னான் மாடனும் சரின்னு சொல்லிட்டு உழுறத நிறுத்திட்டான்.
உழுறத எடையில நிறுதிட்டு வாரவங்களப் பார்த்த சின்னத் தம்பியோட எதிரிங்க என்ன ஏதுன்னு விசாரிச்சாங்க மாடனும் புதையல் விசையத்தை சொன்னான் உடனே வழிப்போக்கா வந்தவங்க தூரத்தில போகிற சின்னத்தமிபியைக் காமிச்சு அவனை மாதிரி வாட்டசாட்டமான கன்னி கழியாத எளவட்டத்துப் பொலி கொடுத்தாத்தான் புதையலை எடுக்க முடியுமுன்னு சொன்னாங்க.

சரின்னு போன மாடனும் அவன் மச்சினனும் சின்னத்தம்பிக்கிட்ட போய் ஜயாவுக்கு எந்த ஊரு இப்ப எங்க போறீங்கன்னு பக்குவமா விசாரிக்கிற மாதிரி பேச்சிக் கொடுத்தாங்க அப்படியே பதனி குடிச்சிட்டு போங்களேன்னுக் கூப்பிட்டாங்க.
அவனும் வந்தான் பதனியில மயக்க மருந்த கலந்து ஊத்திக் கொடுத்தான் மாடன் சின்னத் தம்பி ஒலப்பட்டையில வாய் வச்சு பதனியக் குடிக்க போறபோது அவங்கிட்ட இருந்த காவல் நாய் சின்னத்தம்பியை பொறாண்டுச்சு ஆனா நாய் எதேச்சயா பொறாண்டுதுன்னு நினச்ச சின்னத்தம்பி பசியும் தாகமும் ரொம்ப இருந்ததால பட்டையில இருந்த பதனி முழுவதையும் மடக் மடக்குன்னு குடிச்சிட்டான் உடனே மயக்கமாகி விழுந்துட்டான் அப்புறம் சின்னதம்பியை குண்டுகட்டாக கட்டித் தூக்கிட்டுப் போய் ஒரு புதர் மறைவுல போட்டுட்டாங்க.

நடுச்சாம வேளவரக் காத்திருந்து சின்னதம்பியை தூக்கிட்டுப்போய் பொதையல் இருக்கிற இடத்துல போட்டு ஒரே வெட்டா வெட்டி அவனப் புதையலுக்கு நரபலியா கொடுத்துட்டாங்க. நரபலி கொடுத்த பெறகு கலப்பக்கொழு தட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்தா அது ஒரு பெரிய செப்பு பானை இருந்துச்சு அந்தப் பானையில தங்கமும் இல்ல வைரமும் இல்ல சின்னத் தம்பியை நரபலி கொடுக்கச் சொன்னவங்க புதையல் பானையில் ஒண்ணும் இல்லன்னு தெரிஞ்சதும் சிட்டாப் பறந்துட்டாங்க.
மாடனும் அவன் மச்சினனும் ராவோட ராவா அந்த இடத்துலயே சின்னத்தம்பிய புதையல் தேடி வெட்டிய குழிக்குள்ளையே போட்டு மூடிட்டாங்க நடந்த நடப்ப பார்த்த காவல் நாயி சின்னத்தம்பியின் காதலி சோனாச்சிகிட்ட சேலையை பிடிச்சி இழுத்துகிட்டு வந்து சின்ன தம்பி பொலிக் கொடுத்த இடத்தைக் காட்டுச்சி தன் காதலன் செத்துட்டான்னதும் சோனாச்சியும் பக்கத்துல ஒரு மரத்துல தூக்குப்போட்டு செத்துட்டா.

சின்னத்தம்பி கொன்னவங்களக் கண்டுபிடிச்சி மகாராஜா தண்டிச்சாரு சின்னத்தம்பிய அடக்கம் செஞ்ச இடத்துல ஒரு கோயிலையும் கட்டி வச்சாருன்னு சின்னத் தம்பியோட சோகக் கதையைச் சொன்னாரு பனையன்குறிச்சியச் சேர்ந்த பெரிய கருப்பன்

குறுஞ்சாமிகளின் கதைகள்-20

 நல்ல தங்காள்


தென் தமிழக மக்கள் இன்றும் நினைவில் வைத்து போற்றி வழிபடும் குறும்சாமிகளில் ஒன்று நல்லதங்காள் நல்ல தங்காள் என்ற நங்கை வறுமையின் குறியீடாக துயரத்தின் அடையாளமாக இன்றும் எங்கள் பகுதி மக்களால் சுட்டி காட்டப்படுகிறாள்.
வாழ்ந்துகெட்டு மிகுந்த வறுமை நிலைக்கு ஆளாகிவிட்ட பெண்ணைப் பார்த்து எங்கள் பகுதியில் அட பாதவத்தி மகளே நல்ல தங்காள் மாதிரி ஆயிட்டியே என்று புலம்புகிறார்கள்.

நல்ல தங்காளின் சோகத்தை நாடறிந்த கதைதான் ஏற்கனவே நல்ல தங்காள் கும்பிப்பாடல் என்ற சிறுநூல் ஒன்று நல்ல தங்காளின் வரலாற்றை பாடலாக பதிவு செய்துள்ளது நல்லதங்காள் கதைப்பாடல் ஒன்றும் மலிவு விலை பதிப்பாக வெளி வந்துள்ளது குறுஞ்சாமிகளை வரிசைபடுத்தும் போது நாம் நல்லதங்காளை விட்டுவிட முடியாது அதே போல் அவளின் அண்ணன் நல்லதம்பியும் ஒரு குறுஞ்சாமியாக விளங்குகிறான் அவனுடைய வரலாறும் அதே கதை பாடலில் சேர்ந்துள்ளது நல்ல தங்காளுக்கும் அவன் அண்ணன் நல்ல தம்பிக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அர்ச்சனாபுரம் என்ற ஊரில் கோயில் உள்ளது அக்கோயிலின் நல்லதங்காள் சிலையும் நல்லதம்பி சிலையும் உள்ளது அர்ச்சுனாநதி பாய்வதால் இவ்வூர் அச்சனாபுரம் என்று அழைக்கப்படுகிறது.

வத்தராயிப்பு என்ற பெரூரின் அருகில் இச்சிற்றூர் உள்ளது கிருஷ்ணன் கோயில் என்ற ஊரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அர்ச்சனாபுரம் உள்ளது சுற்றிலும் நான்கு புறதும் வயலால் சூழப்பட்ட நிலப்பகுதியின் நடுவில் பசுமையான சூழலில் நல்ல தங்காளுக்கு இவ்வூர் மக்கள் கோயில் கட்டி வழிபடுகின்றனர்.
அக்கோயிலில் நல்ல தங்காளுக்கு மட்டுமின்றி அவள் கிணற்றில் போற்றுக் கொன்ற ஏழு குழந்தைகளுக்கும் ஒரே இடத்தில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன நல்லதங்காள் விழுந்து இறந்த கிணறு என்று அப்பகுதிமக்களால் நம்மப்படும் கிணறு ஒன்றும் இடிந்த நிலையிலும் நீர் நிறைந்து காணப்படுகின்றன.

அர்ச்சானாபுரத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை (தேவர்)சேர்ந்த மக்கள் மட்டுமே இன்றும் வசிக்கின்றார்கள் மற்ற ஜாதியையோ மதத்தையோ சேர்ந்தவர்கள் அவ்வூருக்கு குடி போனால் அம்மா என்று வழங்கப்படும் நல்லதங்காள் என்ற குறுஞ்சாமி புதிதாக அவ்வூரில் குடியேறுகின்றவர்களை தொந்தரவு செய்து விரட்டி விடுவாள் என்ற வினோதமன நம்பிக்கையும் அப்பகுதி மக்களிடையே நிலவுகிறது.
இனி நல்லதங்காளின் கதையைப் பார்ப்போம் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்தராயிருப்புதான் நல்லதங்காள் பிறந்த ஊர் இவளுக்கு ஒரு அண்ணன் இருந்தான் அவன் பெயர் நல்லதம்பி
மிகுந்த செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நல்லதங்காள் சின்ன வயதிலேயே தாய் தந்தையை இழந்துவிடுகிறாள் அவளின் அண்ணன் நல்லதம்பிதான் நல்லதங்காளை வளர்த்து ஆளாக்குகிறான்.
உரிய வயதும் வந்தது நல்லதங்காளை மானாமதுரையை சேர்ந்த காசிராஜன் என்பவனுக்கு மணமுடித்து கொடுக்கிறான் அண்ணன் நல்லதம்பி.

காசிராஜனும் ஒரளவுக்கு வசதி வாய்ப்பான குடும்பத்தை சேர்ந்தவன்தான் நல்லதங்காளின் அண்ணனும் தங்கைக்கு செய்ய வேண்டிய சீர் வரிசைகளை எல்லாம் முறையாக செய்கிறான்.
தங்கைக்கு திருமணன் முடிந்த பிறகு நல்லதம்பி அதே ஊரைச் சேர்ந்த மூளியலங்காரி என்பவளையும் திருமணம் செய்து கொள்கிறான் மூளியலங்காரி பிறவியிலேயே மிக கொடூரமான குணம் படைத்தவளாக திகழ்கிறாள் யாருக்கும் எதையும் ஈயாத கஞ்சப் பிசுநாரியாக இருக்கிறாள்.
வந்து வாய்த்தவள் தீய குணம் கொண்டவள் என்று தெரிந்தும் தொட்டு தாலிகட்டி விட்ட பாவத்திற்காக மூளியலங்காரியிடம் சேர்ந்து குடும்பம் நடத்துகிறான் நல்லதம்பி நல்லதம்பி நல்லதங்காள் மூளியலங்காரி போன்ற பெயர்களே அவர்களின் குணங்களை காட்டுவதாக உள்ளது.

காலம் செல்கிறது நல்லதங்காள் ஏழு பிள்ளைகளை வரிசையாக பெற்றெடுக்கின்றாள் காசிராஜனின் கவனகுறைவினாலும் ஊதாரித்தனத்தினாலும் அதிகமாக பிள்ளைகள் பிறந்தாலும் அவன் தன் சொத்து சுகங்களை விற்று குடும்பம் நடத்துகின்றான்.
இந்த நேரத்தில் மிக கடுமையான பஞ்சம் வேற வருகிறது எனவே விவசாயத்தில் இருந்து எந்தவிதமான வருமானமும் வரவில்லை காசிராஜனும் நல்லதங்காளும் வறுமையின் பிடிக்குள் சிக்குகின்றார்கள் ஏழு பிள்ளைகளையும் பசியோடு வைத்துக் கொண்டு இனி இந்த ஊரில் வாழ முடியாது என்ற நிலை வந்ததும் தன் அண்ணனின் உதவியை நாடலாம் என்று நினைக்கிறாள் நல்லதங்காள்.

அவன் கணவன் காசிராஜனும் ஊரில் வாழும் உன் அண்ணனிடம் சென்று ஏதாவது உதவிகள் பெற்று வா என்று சொல்லி நல்லதங்காளையும் ஏழு பிள்ளைகளையும் அவள் அண்ண்ன் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறான்.
நல்லதங்காள் தான் பெற்ற ஏழு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு தன் அண்ணனின் ஊரான வத்தராயிருப்புக்கு மானா மதுரையில் இருந்து நடந்தே வருகிறாள்.
பல நாட்கள் பசியோடும் பட்டினியோடும் நல்லதங்காள் தன் பிள்ளைகளுடன் வருவதை ஊரின் எல்லையில் பார்த்த ஒரு பெண் மூளியலங்காரியிடம் போய் உன் நாத்தனார் தன் ஏழு பிள்ளைகளையும் கூட்டுகொண்டு உன் வீட்டை பார்த்து வருகிறாள் என்று சொன்னாள்.
உடனே மூளியலங்காரி தன் கழுத்திலு காதிலும் மூக்கிலும் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழற்றி ஒரு இடத்தில் புதைத்து வைத்து விட்டு தானும் வறுமையில் வாழ்வதைபோன்று தோற்றம் கொண்டாள் செழுமையின் அடையாளமாக தெரியும் பொருட்களை எல்லாம் மாற்றி வைத்தாள்.

நல்லதங்காள் மூளியலங்காரி வீட்டிற்கும் சென்றதும் வா என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை இங்கு ஏன் வந்தாய் என்பதுபோல மூச்சியைஉம்மென்று வைத்துகொண்டு தலையை ஒரு வெட்டு வெட்டினாள்.
அண்ணிகாரியின் முகத்தை பார்த்ததுமே நான் ஏன் இங்கு வந்தேன் என்று நினைத்தாள் நல்லதங்காள் என்றாலும் தான் கொண்ட வறுமையின் காரணமாக அண்ணியின் மூளியலங்காரி தன்னை அவமதித்தையும் பொருட்படுத்தாமல் அண்ணி நானும் என் பிள்ளைகளும் சாப்பிட்டு ரொம்ப நாட்களாகி விட்டது வயிற்று பசி தாங்க முடியவில்லை முதலில் என் பிள்ளைகளின் பசியமத்தங்கள் என்றால் கொஞ்சுகிற குரலில்.

மூளியலங்காரி காட்டிற்கு சென்றிருக்கும் நம் கணவர் வந்தால் தன் தங்கையும் தங்கை பிள்ளைகளையும் பார்த்து பரிதாபபட்டு நம் விட்டில் இருக்கும் செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிவிடுவார் எனவே நாத்துனரான நல்லதங்காளை இங்கிருந்து விரட்டிவிட வேண்டும் என்று நினைத்து காச்சி குடிக்க ஒரு மண் சட்டியும் விறகு எரிக்க ஒரு பச்சை வாழை இழையும் கொடுத்து இப்போதைக்கு என்னிடம் உள்ளது இதுதான் உன் அண்ணன் வெளீயூருக்கு போயிருக்கிறார் வருவதற்கு நாளாகும் இங்கு எங்கள் வீட்டிலும் வறுமைதான் எவனே நான் கொடுத்ததை வாங்கி கொண்டு நீ இப்பவே இங்கிருந்து புறப்படு என்றாள்.
ஏற்கனவே மூளியலங்காரியான தன் அண்ணியை பற்றி நல்ல தங்காளுக்கு தெரியும் எனவே அவளிடம் பேசியோ வாதாடியோ பிரோஜனம் இல்லை என்று நினைத்த நல்லதங்காள் தன் விதியை நினைத்து நொந்து கொண்டு பசியோடு இருக்கும் தன் பிள்ளைகளை அழைத்து கொண்டு அண்ணியார் கொடுத்த ஒட்டை சட்டியையும் பச்ச வாழை மட்டைகளையும் நனைந்த கோப்பையையும் எடுத்து கொண்டு அங்கிருந்து புறபட்டு கால் போன போக்கில் நடந்து ஒரு காட்டு பகுதியை அடைந்தாள்.
அங்கு மரத்தடியில் மூன்று கல்லை கூட்டி அதன் மேல் ஒட்டை சட்டியை வைத்து நான் பதாபத்தினியாக இருந்தால் இந்த ஒட்டை சட்டி ஒழுகாமல் இருக்கட்டும் என்று சொல்லி ஒட்டை சட்டியில் தண்ணிர் ஊற்றினாள் ஒட்டை சட்டியில் ஊற்றியட் தண்ணிர் ஒழுகவில்லை.

அதன் பிறகு அடுப்பில் பச்சை வாழை மட்டையை வைத்து நான் பதாபத்தினியாக இருந்தால் இந்த பச்சை வாழை மட்டையில் தீப்பிடிக்கட்டும் என்றால் நல்லதங்காளின் வாக்கு பலித்தது பச்சை மட்டையில் தீப்பிடித்து எரிந்தது அதன் பிறகு நான் பதாபத்தினியாக இருந்தால் இந்த கேப்பை காய்ந்து மாவாகவும் ஆகட்டும் என்றால் நனைந்த கேள்வரகு கேப்பை ஆகியது.
பசியோடு இருக்கும் தன் முழந்தைகளுக்கு அந்த கேப்பைகளியை பங்கு வைத்து கொடுத்த் பசியமர்த்தி காட்டுவழியே நடத்தி கூட்டி கொண்டு போன நல்லதங்காள் தான் புகுந்த வீட்டிலும் வறுமை சூழ்ந்துவிட்டது பிறந்த விட்டிலும் ஆதரவு இல்லை
இனிமேலும் இந்த பூமியில் நாம் வாழ்வதில் அர்த்தம் இல்லை நம் பிள்ளைகளையும் வறுமையோடு பிச்சை எடுத்து வாழ்வதற்கு இந்த பூமியில் அவர்களை விட்டு செல்ல கூடாது என்று நினைத்த நல்லதங்கால் சற்று தொலைவில் இருந்த கிணற்றீல் நீச்சல் தெரியாத தன் ஏழு பிள்ளைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு விட்டு தானும் கிணற்றில் விழுந்து உயிரை விட்டாள்.

ஒட்டை பானையில் உலை வைத்து பச்சை வாழை மட்டையைஎரிய வைத்து தன் தெய்வீக தன்மையை மெய்பித்துவிட்டு இறந்து விட்ட் நல்லதங்காளும் அவளின் ஏழு பிள்ளைகளும் இன்று சிறு தெய்விகங்களாக வணங்கபடுகின்றன.
நல்லதங்காள் கிணற்றில் விழுந்து முன்புதான் உடுத்தியிருந்த பச்சைநிறச் சேலையை அவிழ்த்து கிணற்றின் பக்கத்தில் வைத்துவிட்டு அதன் மேல்தன் கழுத்தில் கிடந்த தாலி கொடியையும் கழற்றி போட்டு விட்டுதான் கிணற்றிற்குள் விழுந்து தானும் இறந்தாளி இறக்கும் முன்பு பச்சை நிற சேலையும் தாலியும் அண்ணன் கைக்கு போ சேர வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள் கிணற்றிகுள் குதித்து தற்கொலை செய்துகொண்டாள் என்று நம்பபடுகிறது.
அதன்படி அந்த பச்சை நிற சேலையும் நல்லதங்காளின் தாலிகொடியும் அவன் அண்ணனின் கைக்கு சென்றது அதனால் தான் நடந்த்தெல்லாம் உண்மை என்று நம்புகிறான்.

அன்று நல்ல தங்காள் அனுப்பி வைத்த பச்சை சேலையை அண்ணன் நல்லதம்பி தன் தங்கை நல்லதங்காளின் உடம்பில் போர்த்தி அடக்கம் செய்தான் என்கிறது நல்லதங்காள் கதைபாடல்.

அண்ணன் தங்கை பாசத்தின் அடையாளமாக நல்லதங்காள் நல்லதம்பி உறவு இன்றும் கிராமத்து மக்களால் போற்றபடுகிறது
நல்லதங்காள் இறந்த ஆண்டு ஈஸ்வர ஆண்டும் என்றும் 60ஆண்டுகளுக்கு பின்பு ஈஸ்வர ஆண்டு வரும் இன்றும் நம்புகிறவர்கள் நல்லதங்காளுக்கு அவள் அண்ணன் நல்லதம்பிக்கும் இடையேஉள்ள பச்சை சேலையின் உறவை பின்பற்றிதான் இந்த ஈஸ்வர ஆண்டான 1998 ம் ஆண்டு அண்ணன்மார்கள் தங்கை மார்களுக்கு பச்சை சேலை எடுத்துக் கொடுத்தார்கள்

குறுஞ்சாமிகளின் கதைகள்-19

 பொன்னிறத்து அம்மன்


கொலையில் உதித்த தெய்வங்களின் வரிசையில்தான் பொன்னிறத்து அம்மன் என்ற சிறு தெய்வமும் வருகிறது.வாழவேண்டிய ஒரு இளம்பெண் அநியாயமாக பிறரின் சூழ்ச்சியால் அல்லது கொடுமதியால் கொலை செய்யப்படும்போது அப்பெண்ணின் பிரிவை சொந்தபந்தங்களும் உற்றார் உறவினர்களும் தெய்வநிலைக்கு கொண்டு சென்று வணங்க தொடங்கி விடுகின்றனர்.அப்படிப்பட்ட சிறு தெய்வமான பொன்னிறத்து அம்மன் என்ற குறுஞ்சாமியின் சோகக் கதையை இனி பாப்போம்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடையம் என்ற ஊரில் செல்வச் செழிப்பான ஒரு குடும்பத்தில் பிறந்தநாள் பொன்னிறத்தாள் பெயருக்கு ஏற்ற மாதிரியே அவள் பொன் நிறத்தில் இருந்தாள் அவளுக்கு ஏழு அண்ணன்மார்கள் இருந்தார்கள் இவள் எட்டாவதாக பிறந்த பெண் குழந்தை.
ஏழு அண்ணன்மார்களுக்கும் ஒரே தங்கை என்பதால் ஏழு அண்ணன்மார்களும் ஒத்தகு தங்கையான பொன்னிறத்தாள் மேல் பாச மழை பொழிந்தார்கள் இப்படி வளர்ந்த பொன்னிறத்தாள் நாளாவட்டத்தில் வாலிபப் பருவத்தை அடைந்தாள்.
கன்னிப் பொண்ணான தன் தங்கையை அண்ணமார்கள் ஏழு பேரும் கண்ணைப் போல் காத்தார்கள் கலயாண வயது வந்ததும் பக்கத்து ஊரில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த இரணசூரப்பெருமாள் என்பவனுக்கு முறைப்படி கட்டிக் கொடுத்தார்கள் ஏழு அண்ணன்மார்களும் தங்கைக்கு தேவையான சீர் செணத்திகளும் செய்து தந்தார்கள்.
இரணச்சூரப் பெருமாளும் பேருக்கு ஏற்றமாதிரியே வீராதி வீரனாக சூராதி சூரனாக திகழந்தான் என்றாலும் தன் மனைவியான பொன்னிறத் தாளைப்போல தாங்கிக் கொண்டு காலங் கழித்தான் கல்யாணமான மறுமாதமே பொன்னிறத்தாள் கர்ப்பமுற்றாள் ஏழாவது மாதமே நிறைமாத சூலியான தன் செல்ல தங்கச்சியை பேறுகாலத்திற்காக தங்கள் வீட்டிற்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க.
தாய் வீட்டுல பொன்னிறத்தாள் தன் தோழிப் பெண்களுடன் சிரிச்சிப் பேசி விளையாடிக்கிட்டு சந்தோஷமாக இருந்தா ஒரு நாள் சாயங்கால நேரத்துல தோழிப் பிள்ளைகள் எல்லாம் ஒண்ணு சேர்ந்து ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கிற பொய்கைக்கு குளிக்கப்போனாங்க.
பொன்னிறத்தாளும் தோழிப் பெண்களுடன் பொய்கையில் நீராடப் புறப்பட்டாள் ஆனால் அவள் விட்டில் உள்ளவர்கள் எல்லாரும் நேரம் பொழுது சாஞ்சிருச்சி பொய்கையோ ஊரை விட்டு வெகு தூரத்தில் இருக்கு நீயோ நிறைமாதக் சூலியாக வேறு இருக்கிறாய் பொய்கைக்கு பக்கத்துல காட்டாளம்மன் கோயில் வேற இருக்கு புள்ள தாச்சியா இருக்க உண்ண காத்துக் கருப்பு அடிச்சிடும் அதனால உன் தோழி நீ உன் தோழிப் பெண்களுடன் குளிக்க போக வேண்டாம் என்று சொல்லி தடுத்தாங்க.
ஆனால் பொன்னிறத்தாள் யார் சொல்லையும் கேட்கவில்லை நான இன்னிக்கு பொய்கையில் நீராடித் தீருவேன் என்று முரண்டுபிடித்தாள் அழுதாள் தங்கை அழுவதைப் பார்த்து மனமிரங்கிய அண்ணன்மார்கள் ஏழு பேரும் நீ விரும்பினா போய் நீராடிட்டி வா ஆனால் ரொம்ப ஜாக்கிரதையாப் போயிட்டு பத்திரமா விடு திரும்பணும் என்று புத்திச்சொல்லி தங்கச்சியை தோழிமார்களுடன் நீராட செல்ல அனுமதிச்சாங்க.
தோழிப்பெண்களுடன் பொன்னிறத்தாள் பொய்கையில் இறங்கி நீராடிக்கொண்டிருக்கும் போது எங்கிருந்தோ வந்த சூறைக்காத்து விசிச்சி காத்தை தொடர்ந்து மழை கொட்டோன்னு கொட்டுச்சி இடி சடசடன்னு இடித்தது மின்னலும் கண்ணைப்பறிக்கும் படியா வெட்டிச்சி பொய்கையில குளிச்சிகிட்டு இருந்த பெண் பிள்ளைகள் குளித்தது போதும்னு நினைச்சி கரைஏறி தங்கள் தங்கள் துணி மணிகளை கையில் எடுத்துகிட்டு அவசர அவசரமா அந்த இடத்தை விட்டு கிளம்பி ஊரைப் பார்த்து நடக்க ஆரம்பிச்சிட்டாங்க.
தோழிப்பெண்கள் எல்லாரும் அவரவர் உயிரைக் காப்பதிலேயே கவனமாக இருந்தார்கள் தவிர பொன்னிறத்தாளை பற்றி பற்றி அப்போது கவலைப்படவில்லை இளவட்டபிள்ளைகல் அத்தனைப்பேரும் வேகமாக ஊரைப்பார்த்து நடந்தார்கள் அவர்களில் ஒருத்தருக்கும் பிள்ளைத்தாச்சியான பொன்னிறத்தாளை பிற்றிய நினைப்பு இல்லை நிறைமாத சூலியாக இருந்ததாள் பொன்னிநிறத்தாளால் வேகமாக பொய்கையின் கரையை அடையமுடியவில்லை தத்தி புத்தி பொய்கையின் கரையை அடைந்து ஏறிட்டுப் பார்த்தாள் தோழிப்பெண்கள் ஒருத்தரையும் காணவில்லை.
மழை மேகம் சூழ்ந்ததால் இருள் கவிழ்ந்துவிட்டது மழையும் சோ வென்று பெய்தது பொன்னிறத்தாளுக்கு என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியவில்லை என்றாலும் இடியோடும் மழையோடும் கால்போன போக்கில் நடக்க ஆரமித்தாள் இருட்டுக்குள்ளும் மழைக்குள்ளும் திசை தெரியாததால் ஊருக்கு செல்லும் ஒத்தையடிப் பாதை விட்டுவிடு காட்டுக்கு செல்லும் பாதையில் நடக்க ஆரமித்தாள்.
திடீரன்று மழை பெய்ததால் இடி இடித்ததால் பதைத்து போன பொன்னிறத்தாளின் அண்ணன்மார்கள் ஈருயிர்க்காரியான தாய ஒரு உயிர் தாயின் வயிற்றில் உள்ள பிள்ளை ஒரு உயிர் ஆக ஈருயிர் தங்கைச்சியை தேடி அவளுடன் சென்ற தோழி பெண்கள் விட்டில் விசாரித்தார்கள்.
தோழிப்பெண்கள் அனைவரும் நாங்கள் பார்க்கவில்லை பொன்னிறத்தாளை என்று கை விரித்தார்கள் அண்ணன்மார்கள் ஏழுபேரும் இடியோடும் மழையோடும் தங்கச்சியை தேடி பொய்கைக்கு போனார்கள் இருளோ குகையாக இருந்தது மழையோ விடாது பெய்தது அண்ணன்மார்கள் அழுதபடியே தங்கச்சியை தேடி அலைந்தார்கள்.
பொன்னிறத்தாளோ இருட்டில் வழி தெரியாமல் நடுக்காட்டை நோக்கி மழையில் நனைந்து நடுங்கியபடியே சென்றாள் காலும் கையும் மனசும் சோர்ந்ததால் ஒரு ஆலுமரத்தின் அடியில் போய் ஒண்டினாள் அண்ணன்மார்கள் சொன்ன சொல்லைக் கேளாமல் பொய்கையில் நீராட வந்து இப்பட் காட்டுக்குள்ள மழையில் நனைகிறோமே என நினைத்து பொன்னிறத்தாளுக்கு கண்களில் கண்ணிர் பெருகியது.
நேரம் செல்ல செல்ல அணணன்மார்கள் ஏழு பேரும் தங்கை இனி நமக்கு கிடைப்பாள் என்ற நம்பிக்கையை இழந்தார்கள் மழை ஈரத்தில் கால் வழுக்கி பொய்கையில் விழுந்ததால் அடிப்பட்டுக் கிடப்பாளோ என்று நினைத்து அவர்களும் அழுதார்கள்.
மழை பெய்யாவிட்டாலும் தீப்பந்தத்தை எடுத்துகிட்டு வந்து தேடலாம் ,மழையும் விடாமல் பெய்தது இருட்டோ கொய் என்று இருந்தது ஒரு வேளை இன்னேரம் எங்க சுத்தியாவது தட்டுண்டு தடுமாறி விடிபோய் சேர்ந்திருப்பாளோ என்று நினைத்து அண்ணன்மார்கள் ஏழு பேரும் வீடு வந்து பார்த்தனர் அங்கும் தங்கை வராதது கண்டு இனி என்ன செய்ய ஏது செய்ய என்று அண்ணன்மார்கள் கை பிசைந்து நின்னாங்க.
நடுகாட்டில் ஆலமரத்தின் தூரில் ஒண்டியபடியே உக்கார்ந்து விட்டால் பொன்னிறத்தாள் மழை ஒரு மாதிரி நடுச்சாம வேளையில் ஒய்ந்தது அவளுக்கு இருட்டில் மழை வெள்ளத்தில் திக்கும் தெரியவில்லை திசையும் தெரியவில்லை இனி இந்த இடத்தில் இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க கூடாது நடக்கதுநடக்கட்டும் இனிநம்மை கடவுள்தான் காப்பாத்தணும் எப்படியாவது பல்லைக்கடித்துக்கொண்டு ராப்பொழுதை இங்கே கழிப்போம் விடிந்ததும் வீடு போய் சேருவோம் என மனதிற்குள் திட்டம் போட்ட பொன்னிறத்தாள் அப்படியே அந்த ஆலமரத்தின் அடியில் ஈரத்துணியுடன் ஒண்டியபடியே இருந்தாள்.
அன்று நிறைந்த அமாவாசை வேறு அமாவாசை ராத்திரிகாக காத்திருந்த நாலைந்து திருடர்கள் மழை வெறித்ததும் காட்டுவழியே வந்தாங்க அமாவாசை அன்னைக்கு ஏதாவது ஒரு உசுப்பிராணியை பலி கொடுத்து காட்டாளம்மன் கோயிலுக்கு பக்கத்துல இருக்கிற புதையல எடுக்கணும்கிற தீட்டத்தோட வந்துகிட்டு இருந்தாங்க திருடர்களில் ஒருத்தன் தோளில் ஒரு சூலோட்டை சுமந்துகிட்டு வந்தான் சூலாட்டை அமாவாசை அன்னைக்கு நடுச்சாமத்துல பலி கொடுத்து புதையலை எடுக்கணும்கிற அந்த திருடர்களின் திட்டம் திருடர்கள் காட்டு வழியாக வரும்போது ஈனசுரத்தில் ஒரு பெண் முனங்கும் சத்தம் கேட்டது அது மோகின் பேயின் சத்தமாக இருக்குமோ என்று நினைத்து பயந்தார்கள் திருடர்கள் கூர்ந்து கவனித்த பிறகு ஆலமரத்தடியில் ஒரு பெண் பம்மிகொண்டு இருப்பது அந்த இருட்டிலும் துலம்பாக தெரிந்தது.காரணம் பொன்னிறத்தம்மாளின் பொன் போன்ற நிறம் இருளிலும் ஜொலித்தது.
திருடர்களில் ஒருத்தன் பொன்னிறத்தாளின் கிட்டபோய் பார்த்து போது தான் நிறைமாத சூலி அவள் என்ற விபரம் புரிந்தது அந்த இருட்டிலும் பளிச்சென்று அவளின் பொன் நிறம் அவள் இருக்கும் இடத்தைக் காட்டி கொடுத்தது.
புதையல் எடுக்கச் சூலாட்டைப் பலி கொடுக்க வேண்டும் என்று நினைத்து வந்த திருடர்களுடன் ஒரு மாந்திரீகனும் இருந்தான் அவனின் மூளை குரோதமாய் வேலை செய்தது சூலாட்டிற்கு பதில் நிறை மாத கர்ப்பிணியான அப்பெண்னை பலி கொடுத்தால் புதையலைக் காத்து நிற்கும் வாதை(பூதம்)மகிழ்ச்சியுடன் ஊட்டை (நரபலியை)ஏற்றுக்கொண்டு புதையலை தந்துவிடும் என்று ஒரு கெட்ட யோசனையை சொன்னான்.
புதையல் ஆசையில் இருந்த மற்றதிருடர்களும் நாம தேடிப்போகாம முகலட்சணமான நிறைமாத சூலி பெண் கையில் மாட்டி இருக்கிறாள் எனவே அவளையே சூலாட்டிற்கு பதில் பொலிப்போட்டு கொடுத்துவிடலாம் என்று முடிவுக்கு வந்தார்கள்.
தன்னை மறந்த நிலையில் மயங்கியபடி மழையில் நனைந்து குளிரில் நடுங்கியபடி துணிகள் எல்லாம் தாறுமாறாக விலகிய நிலையில் கிடந்த பொன்னிறத்தாளின் ஜொலிப்பான தேகம் திருடர்களுடன் நின்ற பூசாரியின் காம உணர்ச்சியைக் கிளரியது.
திருடர்களில் ஒருத்தன் பொன்னிறத்தாளின் அருகில் போய் அவளைத் தட்டி எழுப்பி அம்மா தாயே நீ யார்?ஏன் இந்த அர்த்த ராத்திரியில் நடுக்காட்டில் இந்த இடத்தில் ஈரச்சேலையுடன் உக்கார்ந்திருக்கிறாய் என்று கேட்டான்.
மயங்கிய நிலையில் கண்ணை மூடிக்கிடந்த பொன்னிறத்தாள் மயக்கம் தெளிந்து லேசாகக் கண் விழித்துப் பார்த்தாள் அடர்த்தியான அந்த இருட்டில் தன் முன்னால் நாலைந்து மனித உருவங்கள் நிற்பது மங்கலாக தெரிந்தது அவள் கண்களுக்கு.
நட்ட நடு நிசி நடுக்காடு அமாவாசை இருட்டு தன்னந்தனியாக நனைந்த சூலாடு போன்ற நாம் எதிரில் நாலைந்து முரடர்கள் அவர்களில் சிலர் கையில் அருவாள் கத்து போன்ற ஆயுதங்கள் இன்னும் ஒருத்தன் கையில் உடுக்கை போன்ற இசைக்கருவி இன்னொருவன் கையில் தோளில் சூல் அடு பக்கத்தில் காட்டம்மாள் கோவில்.
இத்தகைய சூழ்நிலையில் என்ன நடக்கும் என்பதை எத்தனை பாட்டிகளிடம் எத்தனை நாள் கதை கதையாக கேட்டிருக்கிறாள் பொன்னிறத்தாள் எனவே இனி என்னென்ன வீபரிதம் நடக்கும் என்பதை தன் மனத்திரையில் திரைப்பிம்பமாக ஒட்டிப் பார்த்த பொன்னிறத்தாள் இனி நம்மகதி அதோ கதிதான் என்று நினைத்தவள் மயக்கமுற்று ஈரத்தரையில் சாய்ந்தாள்
திருடர்களில் ஒருத்தன் மயக்கமாகி தரையில் சாய்ந்த பொன்னிறத்தாளின் நாசியின் மேல் தன் கையை வைத்து அவளுக்கு உயிர் இருக்கிறதா?என்று பார்த்தான் லேசான மூச்சுக்காற்றின் உஸ்ணம் அவன் விரலில் பட்டது திருடன் மற்றவர்களை பார்த்து அவள் நம்மை பார்த்து மயங்கித்தான் தரையில் விழுந்து கிடக்கிறாள் ஆனால் அவள் உயிர் இருக்கிறது என்றான்.
அப்படியானால் சூலாட்டை இறக்கி தரையில் விட்டு விட்டு இந்த பெண்ணை தூக்கி கொண்டு சென்று விடுவோம் புதையல் இருக்கும் இடத்திற்கு என்றான் திருடர்களில் ஒருத்தன்.
பூசாரி சூலாடும் இருக்கட்டும் இவளையும் தூக்கி வாருங்கள் என்றான் பூசாரியின் பக்கத்தில் நின்ற திருடர்களில் ரெண்டு பேரில் பொன்னிறத்தாளின் தலையை ஒருத்தனும் காலை ஒருத்தனும் பிடித்து தூக்கி மூன்றாவதாக நின்ற திருடன் அவள் உடம்பின் நடுப்பகுதியை பிடித்து கொள்ள மூவருக்கும் சேர்ந்து பொன்னிறத்தாளை செந்தூக்காக தூக்கிகொண்டு புதையல் இருக்கும் இடத்திற்கு சென்றார்கள்.
பூசாரி சொன்ன இடத்தில் அவளைக் கிடத்தினார்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி பக்கத்து மரத்தில் இருந்து கத்ச்ச(நேரான)சில கம்புகளை வெட்டிக்கொண்டு வந்து குழிதோண்டி நட்டி தங்கள் கையோடு கொண்டு வந்திருந்த கயிற்றின் உதவியால் கம்பு கழுக்கைகளை கட்டி அவசரகதியாக ஒரு பரணை உருவாக்கினார்கள்.
பொன்னிறத்தாள் நனைந்த வாழைத்தடையாக மயங்கிய நிலையிலேயே கிடந்தாள் பூசாரியின் ஆழ் நெஞ்சில் காம நெருப்பு கனன்று கொண்டே இருந்தது தன் எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமான அருகில் நின்ற திருடர்களின் தலைவன் போன்றவனின் காதிற்கு குசு குசு ஏதோ சொன்னான் பூசாரி.
உடனே திருடர்களின் தலைவன் கோபமுற்று உமக்கேன் புத்தி இப்படி போகிறது நாம செய்ய போகிற காரியமோ பஞ்சமாபாதகம் ஏதோ பணத்தாசையால் அப்படிச் செய்கிறோம் அத்தோடு நீர் சொல்கிற காரியத்தையும் செய்தால் ஏழேழ் ஜென்மத்திற்கும் நமக்கு குடிக்க கஞ்சும் கிடைக்காது என்று பூசாரியைப் பார்த்து சொன்னான்.
எனவே பூசாரி இந்த திருட்டு பெயல்களை இங்கிருந்து இப்போதைக்கு விலக்க வேண்டும் என்று நினைத்து உடன் நின்ற திருடர்களைப் பார்த்து நீங்கள் அவளை நிர்வாணமாக்கி பரண்மேல் கிடத்தி விட்டு பக்கத்து காட்டில் உள்ள மூங்கில் புதருக்கு சென்று சில மூங்கில் காம்புகளை வெட்டுக்கொண்டு வாருங்கள் அந்த மூங்கில் காம்புகளில் தோதான ஒரு மூங்கில் கம்பில்தான் உழக்கு(முகத்தல் அளவுக்கு உரியது)செய்து புதையலில் கிடைக்கும் பொண்ணை ஆளுக்கு இவ்வளவு என்று அளந்து பங்கு வைக்க வேண்டும் என்றான்.
பூசாரியின் மனதில் இருக்கும் காமக்கறுப்பு பற்றி தெரிந்து கொண்ட திருடர்களின் தலைவன் புதையலில் இருந்து கிடைக்கும் பொன்னைப் பங்கு வைக்கிற வேலையை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்வோம் வாங்காத மாட்டிற்கு பீச்சாத பாலுக்கும் பொண்டாட்டியும் புருசனும் சண்டை போட்ட கதையாக நாம் இப்ப கிடைக்க இருக்கிற புதையலை அளக்கிறதைப் பற்றி கவலைப்பட வேண்டாம் இப்ப முதலில் நீர் இந்த பெண்ணை அல்லது அந்த சூலாட்டை பலி கொடுத்து புதையலை எடுக்கிற வழியை பாரு நாங்கள் யாரும் புதையலைக் காணாமல் இங்கிருந்து நகரமாட்டோம் நாங்கள் எல்லோரும் காட்டிற்குள் மூங்கில் வெட்டச் சென்ற பின் நீர் சூலியை பலி கொடுத்து கிடக்கும் புதையலை எல்லாம் எடுத்துகொண்டு ஒடி விடலாம் என்று பார்க்கீராக்கும் என்றான்.
பூசாரி இந்த திருட்டு பெயல்களிடம் நம்ம பச்சா பலிக்காது என்பதை புரிந்துகொண்டு அடுத்து மளமளவென்னு பூஜை செய்த் புதையலை எடுப்பதற்காக ஏற்பாடுகளை செய்தான் திருடர்களின் தலைவன் பூசாரியைப் பார்த்து நாம ஏற்கனவே திட்டம் போட்டிருந்த படி இந்த சூலாட்டை பலி கொடுப்போம் பாவம் யார் பெத்த பிள்ளையோ என்ன பாவம் செய்தாளோ இப்படி நடுக்காட்டில் வந்து நம்மிடம் மாட்டி கொண்டாள் சூலாட்டை பலியிட்ட பிறகும் புதையல் கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு இந்த பெண்ணை பலியிடுவோம் பெண் பாவம் பொல்லாதது அதிலும் ஈருயிருக்காரி இந்த பெண்ணை பார்க்கவே பாவமா இருக்கிறது என்றான்.
பூசாரி எனகென்ன நீங்கிள் செய்கிறபடி சூலாட்டை பலி கொடுப்போம் அதில் புதையல் கிடைக்கவில்லை என்றால் அதன் பிறகு இந்த நிறைமாத சூலிபெண்ணை பொலி கொடுப்போம் என்று ஒப்புக்கொண்டான்.
பூசாரிக்கு கையாளாக கையில் உடுக்குடன் வந்திருந்தவன் மளமளவென்னு காரியத்தில் இற்ங்கினான் சூலாட்டை பரண் மேல் தூக்கு போட்டு அதன் நான்கு கால்களையும் நான்கு திருடர்களை நாலாப்பக்கமும் விரித்துபிடிக்க சொல்லி விட்டு கையில் இருந்த உடுக்கையை அடித்து தன் கரகரத்த குரலில் பாட்டொன்றைப் பாடினான்.
அர்த்த ராத்திரியில் இலை குலுங்காத அந்த ஜாமத்தில் பூசாரியின் கையால் த்ட்டிய உடுக்கையின் சத்தமும் அவனது முரட்டு குரலும் காடுகரை எங்கும் மோதி எதிரொலித்தது உடுக்கை சத்தம் கேட்டு பொன்னிறத்தாள் தன் கண்களை விழித்து பார்த்தாள் அந்த இருட்டிலும் நடப்பதெல்லாம் நிழலாக அவளுக்கு தெரிந்தது அவளை அறியாமளையே அவளின் மூச்சு நின்று விடுமோ என்று நினைத்தாள் பொன்னிறத்தாள்.
பூசாரி ஒரு சூரிக்கத்தியை கையில் வைத்துக்கொண்டு சூலாட்டின் நெஞ்சில் குத்தினான் சூலாடு மா மா என்று உயிர் போகும் வேளையில் அளறியது அந்த காட்டையே ஒரு உலுக்கு உலுக்கியது பூசாரி சூலாட்டின் நெஞ்சில் குத்தியை கத்தியை ரத்த வெள்ளத்தோடு கீழே இறங்கி சூலாட்டின் நெஞ்சை வகுந்து ரெண்டாகப் பிளந்தான்.
மரண விரைப்பில் சூலாடு தன் கால்களை உதைத்தது திருடர்கள் நால்வரும் திக்கிற்கு ஒருவராக நின்று அந்த அந்த சூலாட்டின் காலகளை உதைய விடாமல் பிடித்துக்கொண்டார்கள் கொடூரமான அந்த காட்சியை பார்த்த பொன்னிறத்தாள் வீல் என்று கத்தினாள்.
பூசாரி திருடர்களின் தலைவனைப் பார்த்து ஏய் அவள் மயக்கம் தெளுஞ்சி கண் முழிச்சிட்டா இந்த மை இருட்டுக்குள்ள அவள் ஏதாவது ஒரு புதருக்குள்ள போய் நுழைஞ்சிகிட்டா நாம அவளை தேடிக் கண்டுபிடிக்க முடியாது அதனால முதல்ல அவளின் புறங்கையையும் காலையும் ரெண்டு கயிற்று துண்டுகளால் கட்டிப் போடுங்க என்றான்.
பூசாரி சொல்கிறதை இந்த நேரத்தில் கேட்கவில்லை என்றால் பூஜை செய்கிறதில் ஏதாவது குறை வைத்துவிடுவான் பிறகு புதையல் கிடைக்காமல் போய்விடும் என்று நினைத்த திருடர்களின் தலைவன் அந்த பெண்ணின் மேல் இரக்கப்பட்டு முதலில் அவள் சத்தம் போடாமல் இருக்க ஒரு துண்டுத்துணியை அவள் வாயில் திணித்து விட்டு தன் சேக்காளி ஒருவனின் தோளில் கிடந்த துண்டு ஒன்றை எடுத்து அப்பெண்ணின் கைகளையும் முன்பக்கமாகவே (பூசாரி சொன்னதுபோல் அவள் கைகளை பின்னுக்கு இழுத்து கட்டாமல்)கட்டினான்.
சூலாட்டின் நெஞ்சைக் கீறிய பூசாரிக் சூலாட்டின் நெஞ்சில் இருந்த ஈரக்கொலையை தாமரைகாய்(நூரையீரல் இதையம்)போன்ற பகுதிகளை தனியே அறுத்து எடுத்து பரணியில் போட்டான் சூலாட்டின் கர்ப்பபையில் முக்கால்வாசி விளைந்த நிலையில் இருந்த ஆட்டுக்குட்டியை உயிரோடு பரணியில் எடுத்துப்போட்டு ஏதேதோ புரியாத பாஷைகளை உச்சரித்தான்.
பூசாரியின் கையாள் உக்கிரமாக உடுக்கையையும் அடித்தான் ஆனால் புதையல் பூமியை விட்டு வெளியே வரவில்லை பூசாரி திருடர்களின் தலைவனைப் பார்த்துநான்தான் முதலிலேயே சொன்னேனே நிறைமாத சூலியை கண்ணால் பார்த்த பூதங்கள் இந்த சூலாட்டுப் பொலிக்கெல்லாம் மனம் இரங்காது என்று இனி அவளை பொலி கொடுத்தால் தான் புதையல் கிளம்பும் என்று கறாராகச் சொன்னான்.
மற்ற திருடர்கள் வந்ததே வந்து விட்டோம் பரணும் கட்டியச்சி குறித்த நேரம் போவதற்குள் இவளை புதையல் காக்கும் பூதத்திற்கு பலி கொடுத்து புதையலை எடுத்துகிட்டு ஒடிடுவோம் என்று ஒருசேர குரலில் ஒருமித்துச் சொன்னார்கள்.
இனியும் இந்த பெண்ணை காப்பாற்ற முடியாது என்ற திருடர்களின் தலைவன் அப்ப சரி உங்கள் இஸ்டம் போல் செய்யுங்கள் என்று சொல்லி விட்டான்.
பூசாரி மற்ற திருடர்களைப் பார்த்து முதலில் அவள் உடுத்தியிருக்கும் சேலையை அவிழ்த்துவிடுங்கள் சட்டையையும் கழற்றி விடுங்கள் வாயில் இருக்கும் துணி அப்படியே இருக்கட்டும் இல்லை என்றால் காப்பாடு கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிவிடுவாள் சட்டையை பாவாடையை கழற்றி அவளின் கை கால் கட்டுகள் இடைஞ்சலாக இருந்தால் அக்கட்டுகளை அவிழ்த்துவிட்டு அவள் சேலை சட்டைகளை அப்புறப்படுத்துங்கள் என்று உத்தரவிட்டான் முரடர்களான திருடர்கள் பூசாரி சொன்னபடியே நிறைமாத சூலிப் பெண்ணான பொன்னிறத்தாளை முழு நிர்வாணமாக்கினார்கள் நிர்வாணமான பொன்னிறத்தில் இருந்ததால் அந்த மை இருட்டில் அவளின் முழு மேனியும் தகதகவென்று ஜொலிப்பதை போலிருந்தது.
முழு நிர்வாணமான அவளைப் பார்த்ததும் பூசாரியின் ஆழ் மனதில் கனன்று கொண்டிருந்த காமகினி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
அவளை தூக்கி முன்பு சூலாட்டை பரணியில் கிடத்தியது போல் இவளை பரணில் கிடத்தி அவளின் கை கால் கட்டுகளை அவிழ்த்து ரெண்டு காலை ரெண்டு பேரும் ரெண்டுகையை ரெண்டு பேருமாக திசைக்கு ஒருத்தராக நின்று பிடித்துக்கொள்ளுங்கள் என்று உத்தரவிட்டான் பூசாரி.
தடியர்களான திருடர்களும் பூசாரி சொன்னபடியே செய்தார்கள் பூசாரியின் கையாள் உடுக்கையை கையில் எடுத்து அடிக்க தொடங்கினார் நடக்க இருக்கும் விபரீதத்தை அறிந்த பொன்னிறத்தாள் தன்னால் இயன்ற மட்டும் கை கால்களை உதறமுயன்றாள் ம் முடியவில்லை முரடர்கள் அவள் கை கால்களை உதறவிடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்.
பூசாரி கையில் சூரிக்கத்தியுடன் பரண்மேல் ஏறினான் நிர்வாணமான பொன்னிறத்தில் ஜொலிப்புடன் பரண்மேல் படுத்து கிடக்கும் பொன்னிறத்தாளின் அழகை காம இச்சையுடன் பார்த்து ரசித்தபடியே அவளின் உடம்பின் உச்சி முதல் முதல் உள்ளங்கால் வரை ஏதோ மந்திரத்திஅ உச்சரித்தபடியே தன் ரெண்டு கையாலும் தடவினான் மூன்று பிறை பக்கத்தில் கிடந்த சூரிக்கத்தியை தன் வலது கையில் எடுத்துகொண்டு நிறைமாத சூலிப்பெண்ணான பொன்னிறத்தாளின் நெஞ்சில் குத்த ஒங்கினான்.
அப்போது எதிர்பாராத விதமாக பரண்மேல் உறுமியபடி ஒரு புலிக்குட்டி பூசாரியின் முதுகில் பாய்ந்தது செத்தாண்டா என்று சொல்லியபடியே நிலைகுழைந்து பரணில் இருந்த தரையில் உருண்டு விழுந்தான் புலிக்குட்டி இப்போது அவன் நெஞ்சில் பாய்ந்து ஏறியது சற்றுமுன் புதையல் ஆசையால் ஒரு சூலாட்டின் நெஞ்சை வகுந்த பூசாரியின் நெஞ்சை இப்போது இப்போது தன் பூரிய நகங்களால் பிளந்தது.
சூழ்நிலையின் விபரீதத்தை புரிந்துகொண்ட திருடர்கள் அனைவரும் தலை பிழைத்தால் தம்பிரான் புண்ணியம் என்று நினைத்து திசைக்கு ஒருவராக ஒடத் தொடங்கினார்கள் ஒடத்தொடங்கிய ஒவ்வொருவரையும் காட்டுபுலிகள் துரத்தி அவர்கள்மேல் பாய்ந்து கொன்றன.
சற்று நேரம் கழித்து இன்னும் தனக்கு உயிர் இருப்பதை நினைத்து ஆச்சரியபட்டு பொன்னிறத்தாள் தான் நிர்வாணமாக கிடப்பதை உணர்ந்து வெக்கபட்டாள் தன் தலைவிதியை நினைத்து நொந்து அழுதாள் பரணியில் இருந்து நிர்வாணமாக இறங்கிய பொன்னிறத்தாள் நம்மை பிடித்திருந்த் தடியர்களை காணோமே எங்கே?என்று நினைத்து இந்த இடத்தில் இனியும் இருந்தால் அந்த முரடர்கள் வந்து மீண்டும் நம்மை பிடித்து விடக்கூடும் என்று நினைத்து தன் வயிற்றை தாங்கி தன் கைகளால் பிடித்துக் கொண்டு நிர்வாணமாக அந்த் அத்தானக் காட்டிற்குள் அர்த்தராத்திரியில் உயிரக் கையில் பிடித்துகொண்டு ஒட்டமும் நடையுமாக கால் போன போக்கில் ஒடினான்.
விதிவிட்ட வழியில் ஒடியவள் தன்னையறியாமல் இருட்டில் ஒரு பாங்கிணற்றில் விழுந்துவிட்டாள் பிலி வாயில் இருந்து தப்பித்து சிங்கத்தின் காலால் அடிபட்ட கதையாக பூசாரியிடம் இருந்து அதிஸ்டவசமாக உயிர் பிழைத்த பொன்னிற்றத்தாள் பாங்கிணற்றில் விழுந்து தன் உயிரை விட்டு விட்டாள் அவளோடு சேர்ந்து அவள் வயிற்றில் இருந்த சிசுவின் உயிரும் போய்விட்டது.
மறுநாள் நெடுவ தன் தங்கையை தேடி அலைந்த அண்ணன்மார்கள் ஒருவனிடம் ஆடு மாடு மேய்கிற பிள்ளைகள் இன்னமாதிரி பாங்கிணற்றுக்குள் ஒரு பெண் விழுந்து செத்து கிடக்கிறாள் என்று தாக்கல் சொல்ல அவன் மற்ற சகோதர்களிடம் சொல்ல நிர்வாணமாக கிடந்த பொன்னிறத்தாளை பட்டுச்சேலை கொண்டு போர்த்தி கிணற்றில் இருந்து தூக்கி எடுத்துவந்து தங்களுக்குக் சொந்தமான காட்டில் தரையில் நல்லடக்கம் செய்தார்கள்.
அங்கேயே ஒரு கோயிலும் கட்டி அக்கோயிலுக்கு பொன்னிறத்தாள் கோயில் என்று பெயரும் சூட்டி அப்பெண்ணை காபந்துபண்ண முடியாமல் சாக விட்ட பாவம்தீர ஆண்டுதோறும் அவளைக் கும்பிட்டு தன் குடும்பம் செழிக்க அருள்தரும்படி பொன்னிறத்தாளை சாமியாக்கி வேண்டுகிறார்கள் என்று பொன்னிறத்தாள் என்ற குறுஞ்சாமியின் கதையை சொல்லி முடித்தார் பனையன்குறிஞ்சி என்ற ஊரைச் சேர்ந்த சொள்ளமுத்து என்ற தகவலாளர்!

குறுஞ்சாமிகளின் கதைகள்-18

 பொன் காத்த ஐயனார்

பல குறுஞ்சாமிகள் ஜாதிகளின் அடிப்படையிலும் தொழில் சார்ந்த குழுக்களின் அடிப்படையிலும் உள்ளன.அததகைய குறுஞ்சாமிகளுக்குப் பின்னால் சில கதைகளும் இருக்கின்றன.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள இடைகால் வழுதூர் என்ற ஊர் அந்த ஊரில் உள்ள ஒரு குருஞ்சாமியின் பெயர் பொன் காத்த ஐயனார் என்பது இந்த சாமிக்குத் தென் மாவட்டங்கள் எங்கும் பிடிமண் கோயில்கள் உள்ளன.
அம்பாசமுத்திரம் வட்டத்தில் உள்ள இடைகால் என்ற ஊரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்ற தகவலாளரிடம் கேட்ட போது பொன் காத்த ஐயனாரின் பூர்வீகக்கதையை சொன்னார்.
கடையத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஆழ்வார் குறிச்சியில் கட்டிக்கொடுத்திருந்தது புதுப்பொண்ணும் மாப்பிள்ளையும் மகிழ்ச்சியாக விருந்துண்டு சந்தோஷமாக பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தனர் பெண் வீட்டில் முதலில் ஒருவார காலம் தடபுடலாக விருந்து கொடுத்தார்கள்.
அதன் பிறகு சில நாட்கள் மாப்பிள்ளை வீட்டில் தடபுடலாக தம்பதியர்களுக்கு விருந்து கொடுத்தார்கள் அதன் பின் பெண்ணின் நெருங்கிய சொந்தக்காரர்களும் மாப்பிள்ளையின் மிக நெருங்கிய சொந்தக்காரர்களும் தத்தமது ஊருக்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்தார்கள்.
இப்படியாக ஒருமாத காலம் விருந்தாக கழிந்தது புது மணத் தம்பதிகளுக்கு விருந்து சாப்பிட்டு சாப்பிட்டு மாப்பிள்ளைக்கு விருந்து சாப்பாட்டின் பேரில் ஒரு வெறுப்பே வந்து விட்டது வேலை என்று பார்த்து நாற்பது நாளைக்கு மேல் ஆகின்றது இப்படியே விருந்து என்று அலைந்தால் தன் தொழில் மறந்து போகும் என்று புது மாப்பிள்ளையின் தகப்பனார் சத்தம் போட்டார்,
புது மாப்பிள்ளைக்கு இப்படி வேலை ஜோலி இல்லாமல் வீடு வீடாய் போய் விருந்து சாப்பிட பிடிக்கவில்லை எனவே விருந்து சாப்பிட்டது போதும் என்ற முடிவுக்கு வந்தனர் அந்தப் புதுமணத் தம்பதியினர்.
அப்போது பெண்ணின் சித்தி மகள் வந்து வலுக்கட்டாயமாக தன் விட்டிற்க்கு மட்டும் வந்து மதியம் ஒரு வேளை மட்டும் விருந்து சாப்பிட்டு செல்லுமாறு வற்புறுத்தி அழைத்தாள் அந்த அழைப்பை புதுமணத் தம்பதியர்களால் தட்ட முடியவில்லை எனவே அப்பெண்ணுடன் மறுநாள் காலையில் விருந்து சாப்பிடச் சென்றனர் புதுமணத் தம்பதியினர்.
விருந்து கொடுத்தவர்கள் வழக்கமாக உற்சாகத்துடன் விருந்து பரிமாறினார்கள் புதுமணத் தம்பதியினர் மதிய விருந்தை ரசித்து ருசித்து சாப்பிட்டார்கள் மத்தியானப் சாப்பாட்டிற்கு பிறகு புதுமணத் தம்பதியினர் சற்று ஒஉவெடுத்துக்கொண்டு மாலையில் ஊரைப்பார்த்துக் கிளம்பினார்கள்.
விருந்து கொடுத்தவர்கள் இன்று ராத்திரிப் பொழுது மட்டும் எங்கள் வீட்டில் தங்கி விட்டு நாளை காலையில் புறப்பட்டு உங்கள் ஊருக்கு செல்லுங்கள் என்று சொன்னார்கள் ஆனால் புதுமாப்பிள்ளைக் கேட்கவில்லை நான் இப்பவே என் விட்டிற்கு செல்ல வேண்டும் என்று ஒத்தக் காலில் நின்றார்.
விருந்து கொடுத்தவர்கள் அப்படியானால் துணைக்கு எங்கள் வீட்டில் இருந்து யாராவது உங்களுடன் வருகிறோம் புதுப்பெண் கழுத்து நிறைய தங்க நகை போட்டு இருக்கிறாள் நீங்கள் இங்கிருந்து உங்கள் ஊருக்கு காட்டுப் பாதை வழியாக ஒத்தடியத் தடத்தில் தான் செல்ல வேண்டும் அந்தக் காட்டுப் பாதையில் கள்ளர் பயம் உண்டு என்று கூறினார்கள்.
ஆனால் புதுமாப்பிள்ளை அவர்கள் சொன்னதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளவில்லை தான் நினைத்த மூப்பில் பிடிவாதமாக நாங்கள் இப்போதே எங்கள் ஊருக்கு புறப்படுகிறோம் பொழுது இருட்டுவதற்குள் எப்படியும் விறு விறு என்று நடந்து எங்கள் ஊருக்கு போய்விடுவோம் நான் ஆம்பிளைதானே நீங்கள் யாரும் துணைக்கு வரவேண்டாம் என்று ரொம்பக் கராராகச் சொல்லி விட்டார்.
அதற்குமேல் புதுமாப்பிள்ளையைக் கட்டாயப்படுத்தி தங்க வைக்க விருந்து கொடுத்த வீட்டுகாரர்கள் விரும்பவில்லை.அப்ப சரி உஙக் இஸ்டம் போயிட்டு வாங்க என்று விடைக் கொடுத்து அனுப்பி விட்டார்கள்
வெயிலின் கடுமையை தணிந்ததும் சாயங்காலம் சுமார் நாலு மணி வாக்கில் புதுமாப்பிள்ளையும் புதுப்பொண்ணும் தங்கள் ஊருக்கு புறப்பட்டார்கள் அந்தக் காலத்தில் காரேது?ரெயிலேது?நடந்து தானே ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு போகணும் வசதி வாய்ப்பி உள்ளவர்கள் வில் வண்டியில் போவார்கள் ராஜாங்க உத்தியோகஸ்தர்கள் குதிரை வண்டியில் போவார்கள்.
புதுபொண்ணும் மாப்பிள்ளையும் சாதாரண குடிமக்கள்தானே எனவே அவர்கள் நடந்தே சென்றார்கள் ரெண்டு மூன்று ஊர் கடந்து தான் மாப்பிள்ளையின் ஊர் இருந்தது இருட்டும் முன்பு தன் ஊருக்குப் போய் விட வேண்டும் என்ற நினைப்பில் பொண்டாட்டியும் புருசனும் காலை எட்டிப் போட்டு விறு விறுன்னு நடந்தார்கள்.
காட்டு வழியில் வழுதூரின் எல்லைக்கு செல்லும்போது பொழுது மயங்கிவிட்டது இருள் பரவ தொடங்கிவிட்டது என்றாலும் பொண்டாட்டியும் புருசனும் ஒருத்தர் கையை ஒருத்தர் புடித்துக் கொண்டு நடந்தார்கள்.
அப்போது காட்டின் நடுப்பாதையில் மரத்தின் மேல் இருந்து ஒரு முரடன் அவர்கள் முன்னாள் குதித்தான் அவர்கள் கையில் நீளமான பட்டாக்கத்தி ஒன்று இருந்தது.
புதுமணத்தம்பதியர்களை பார்த்து ஏய் ரெண்டு பேரும் ஆடாம அசையாம நில்லுங்க என்றான் தார் கரத்த குரலில் இருட்டில் தாடியும் அந்த முரடனின் மீசையும் பம்பைத் தலையும் அவனைக் கொடுரமானவனாக காட்டியது.
அப்போது தான் புதுப்பெண் நினைத்தாள் விருந்து கொடுத்தவர்கள் சொன்னதைக் கேளாமல் விராப்பாக கிளம்பி வந்தது தப்பாக போச்சே என்று.
விருந்து கொடுத்தவர்களிடம் வீராப்பாக பேசிய புது மாப்பிள்ளைக்கு பட்டாக்கத்தியைப் பார்த்ததும் இப்ப சப்த நாடியும் ஒடுங்கி விட்டது வேர்த்து வேர்த்துக் கொட்டியது ஆக வலிய வந்து நேரங்கெட்ட நேரத்துல எசக்குபிசக்கா மாட்டிக்கிட்டோமே இனி என்ன செய்ய கடவுள்தான் இனி நம்மைக் காப்பாத்தணும் நாம் மட்டும் தனியே என்றால் இந்த முரடனுடன் போராடிப் பார்க்கலாம் இப்ப நம்ம கூட புதுப்பெண்ணாக பொண்டாட்டியும் இருக்கிறாள் முதலில் அவளின் மானத்தைக் காப்பாத்தணும் பிறகு அவள் கழுத்து நிறைய போட்டிருக்கின்ற நகையை காப்பாத்தணும் இப்ப என்ன செய்ய எப்படிச் சமாளிக்க என்று நினைத்து கை பிசைந்து நிற்க்கும்போது தான் அந்த அதிசயம் நடந்தது.
தற்செயலாக வழிப்போக்கனாக அந்த இடத்திற்கு வந்தார் ஒரு ஒங்கல் தாங்கலான மனிதர் அவர் ஆள் பார்க்க கட்டுமுட்டுமாக இருந்தார் அவருக்கு சுமார் நாற்பது வயது இருக்கும் கையில் ஒரு விச்சருவாளும் வைத்திருந்தார் தலையில் ஒரு துண்டை தலைப்பாகையாக கட்டியிருந்தார் புதுநிறமான அவரின் உருண்ட திரண்ட மார்பின் மேல் பலவீரத் தழம்புகள் இருந்தன.
வந்த வழிப்போக்கர் அங்கு என்ன நடக்கிற்து என்பதை ஒரு நொடியில் புரிஞ்சிக்கிட்டார் நேரே அந்த முரடனின் எதிரில் போய் நின்று கொண்டு தன் வலது கையால் வீச்சருவாளை ஒங்கியபடியே புதுமணத்தம்பதியர்களை பார்த்து பிள்ளைகளா நீங்க ஒடிப்போயிருங்க நான் இவனைக் கவனிச்சிக்கிருதேன் என்று சொன்னவர் தன் இடது கையால் போய் விடுங்கள் போய் விடுங்கள் என்பது போன்று கைக் கர்ணம்(சைகை)வேறு காட்டினார்.
புதுமாப்பிள்ளை ஏதோ அந்தக் கடவுள்தான் இந்தப் புண்ணியவாளனை அனுப்பி இருக்கிறார் இனி இந்த இடத்தில் ஒரு நிமிஷம் கூட நிக்கப்படாது தலை பிழைத்தது தம்பிரான் புண்ணியம் என்று நினைத்து தன் பொண்டாட்டியின் இடது கையை தன் வலது கையால் பிடித்து இழுத்துகொண்டு ஒரே ஒட்டமாக ஒத்தையடி பாதையில் கண் மண் தெரியாமல் ஒடினான்.
கையில் பட்டாக்கத்தியுடன் நின்ற கள்ளாளிப் பெயலுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது கோபாவேசத்துடன் அந்த வழிப்போக்கனை பார்த்தான் வெண்ணை திரண்டு வரும் போது தாழி உடைந்த கதையாக தத்தர நேரட்த்தில் இந்த வழிப்போக்கன் வந்து நம்காரியத்தை கெடுத்துட்டானே என்று நினைத்த கள்ளாளிப் பெயல் பட்டாக்கத்தியால் வழிப்போக்கனை கொல்வதற்கு பாய்ந்தான்.
வழிப்போக்கனோ தன்னைக் காத்துக்கொள்வதற்காக கள்ளாளிப் பெயலைக்கொல்வதற்கு தன் கையிலிருந்த வீச்சருவாளை வீசியபடியே முன்னேறினான்.ஆளில்லாத நடுகாட்டிற்குள் வழிப்போக்கனும் கள்ளாளிபெயலும் தத்தம் கையில் இருந்த ஆயுதங்களால் உக்கிரமாக மோதிக்கொண்டார்கள்.
ஒருவரை ஒருவர் தற்காத்துக்கொள்ளவும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய முயன்றதால் அந்த இடத்தில் பெரியதொரு தாக்குதல் நடந்தது.விலக்கிவிடவும் தடுக்கவும் யாரும் இல்லாததால் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டு காயபட்டார்கள் பலம் கொண்ட மட்டும் மோதிக்கொண்டார்கள் இருவருமே வில்லால கண்டனாக இருந்தனர் ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைத்தவனாகத் தெரியவில்லை.
இருவரும் மேலும் மாறி மாறி வெட்டும் குத்தும் விழுந்தது இருவர் உடம்பிலிருந்தும் ரத்தம் ஒழுகியது என்றாலும் ஒருவருக்கு ஒருவர்பின் வாங்காமல் நீயா? நானா? என்று பார்த்து விடுவது என்ற கோதாவின் சண்டையிட்டார்கள் எனவே ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்த தாக்கி அந்த இடத்திலேயே செத்து மடிந்தார்கள்
தன் ஊருக்குள் போன புதுமாப்பிள்ளை விடிந்ததும் விடியாததுமாக நடந்த நடப்பை அக்கம் பக்கத்துக்காரர்களுக்கு சொல்லி அவர்களில் சிலரைகூப்பிட்டுகிட்டு காட்டில் கள்ளன் வழி மறித்த அந்த இடத்திற்க்கு சென்றான் அங்கே வெட்டுக்காயங்களுடன் ரெத்தம் சிந்திய படி ரெண்டு பிணங்கள் கிடப்பதை கண்டு நாம் வந்தபிறகு அங்க என்ன நடந்திருக்கும் ஏது நடந்திருக்கும் என்பதை ஒருவாறு யூகித்துக் கொண்டான் புதுமாப்பிள்ளை.

ஒரு பெண்ணின் மானத்தையும் அவளின் நகையையும் காப்பதற்காக தன் இன்னுயிரை துறந்து பிணமாகி விட்ட அந்த மனிதனுக்கு அந்த ஊர் அவனின் பெயர் என்ன?வண்ணம்(சாதி)என்ன?மதம் என்ன?என்று எதுவும் தெரியாவிட்டாலும் அந்த மனிதனின் விரத்தையும் தியாகத்தையும் மதித்து அம்மனிதனின் பிணத்தை நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தான் புதுமாப்பிள்ளை.

ஊருக்கு சென்று இன்னும் சிலரை அழைத்துகொண்டு வந்த அந்த வழிப்போக்கன் பிணமாக கிடந்த அதே இடத்தில் அவனை நல்லடக்கம் செய்து அந்த இடத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டு வைத்தார்கள்.
வழிப்போக்கனோடு மோதி சண்டையிட்டு தன் உயிரை விட்டு விட்ட அந்த கள்ளாளி பெயலையும் மனிதாபிமானத்துடன் அதே இடத்தில் சற்று தொலைவில் அடக்கம் செய்தார்கள் வழிப்போக்கனாக வந்து அநியாயத்தை எதிர்த்துப்போராடி ஒரு பெண்ணின் மானத்தையும் அவள் கழுத்தில் கிடந்த நகைகலையும் காப்பதற்காக தன் உயிரையே தியாகம் செய்த அந்த வீர மறவனுக்கு அப்பகுதி மக்கள் ஒரு கோயிலை கட்டி சிலையும் செய்து வைத்து வழிபடுகின்றனர்.
அந்த குறுஞ்சாமியின் பெயர்தான் பொன்காத்த ஐயனார் என்பது அன்று ஒரு பெண்ணைக்காத்தது போல் அந்தக் குறுஞ்சாமி என்றும் நம் குலப் பெண்களை காக்கும் என்ற நம்பிக்கையில் வழுதூர் பகுதி மக்கள் அக்குறுஞ்சாமிக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் கொடை கொடுத்து வழிபட்டு வருகின்றார்கள்