கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Friday, June 6, 2014

கூழாங்கற்கள்

எழுத்தாளர் வல்லிக்கண்ணன் சொன்ன கரிசல் கதைகளை கழனியூரன் தொகுத்த சுவையான கதைப் புத்தமொன்று இருக்கிறது, செவக்காட்டுக் கதைகள் என்று.. அதில் திருநெல்வேலிஎன்ற பெயர் எப்படி வந்ததென்ற கதை சுவையானது..
நெல்லயப்பரின் கோயில் நமக்குத் தெரியுமல்லவா? அந்தக் கோவில் சிறிய கோயிலாக இருக்கும் போது நடந்த கதையிது. அந்த கோயிலின் குருக்கள் சிறந்த சிவ பக்தர். தினமும் நெல்லை காயப்போட்டு புடைத்து அரிசியாக்கி நைவேத்தியமாக படைப்பாராம் சாமிக்கு. ஒருநாள் இப்படித் தான் தன் வீட்டிலிருந்த சாமிக்கு அளவாக இருந்த எல்லா நெல்லையும் கொட்டி (வறுமையைப் பாருங்கள்) காய வைத்துவிட்டு குளத்தில் குளிக்கச் சென்று விட்டாராம். மழைக்கான எந்த அறிகுறியும் இல்லாத போதும், மின்னல் வெட்டிக் கொண்டு மழை வலுவாக பெய்ய ஆரம்பித்து விட்டதாம், அய்யோ என்றாகிவிட்டது குருக்களுக்கு. நம்மிடம் இருந்த நெல் எல்லாவற்றையும் காய வைத்து விட்டு வந்தோமெ? மழையில் நனைந்து விட்டால், எப்படி புடைத்து அரிசியாக்குவது?’ என்று நினைத்துக் கொண்டே, மழையைப் பொருட்படுத்தாமல், ஓடியோடி வந்தாராம். வந்தவருக்கும் ஒரே ஆச்சர்யம். தான் நெல் கொட்டி வைத்திருந்த பகுதியை தவிர மற்ற எல்லா இடங்களிலும் நனைந்திருந்ததாம். இதி நிச்சயம் கடவுள் விளையாட்டு தான் என்று உணர்ந்து கொண்ட போது ஊரே கூடிவிட்டது இந்த அற்புததைப் பார்க்க.. குருக்கள் அந்த நெல்லை, மூட்டையாக கட்டி பொக்கிஸமாக வைத்துக் கொண்டார். ஊர் மக்கள் இறைவனுக்கு தங்கள் வீட்டிலிருந்து நெல்லை கொண்டு வந்து கொட்டிக் கொட்டி கொடுத்தனராம். நெல்லுக்கு வேலியமைத்தாற் போல இருந்து நெல்லை நனையாமல் காப்பாற்றியதால், அந்த பகுதிக்கு திருநெல்வேலிஎன்று பெயர் அமைந்து விட்டதாம். இறைவனும் நெல்லையப்பர் என்று அழைப்படலானார்.
இந்தக் கதையைப் படித்தவுடன், பார்க்கும் படிக்கும் எல்லா ஊர்ப் பெயர்களுக்கும் காரணப் பெயர் இருக்கக் கூடும்.அதை அறிந்து கொள்ளவேண்டுமென்ற ஆவல் கூடுகிறது. கூடவே சிவனார் மேல் இருக்கும் பக்தியும்.

http://maattru.com

கிராமியம் மழை சார்ந்த பழமொழிகள்

மழைதான் வாழ்வின் ஆதாரம். மனித வாழ்வில், இந்தக் காலத்தில் தண்ணீர், ஆகாரத்தை அடுத்த இடத்தை வகிக்கிறது. மழையின் தேவையை, மழையின் சிறப்பை மக்கள் காலங்காலமாக உணர்ந்துதான் இருக்கின்றனர்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர், கடவுள் வாழ்த்துப் பாடிய பிறகு, வான் சிறப்பைத்தான் பாடினார். கடவுள் வாழ்த்தையும், வான் சிறப்பையும் சேர்த்து அதைத் திருக்குறளுக்கான பாயிரம் என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றார்கள்.

இளங்கோ அடிகள், தன் சிலப்பதிகார காவியத்தில், கடவுள் வாழ்த்துப் பாடாமல் மாமழை போற்றதும்! மாமழை போற்றுதும் என்று இயற்கையைப் போற்றித்தான் பாடியுள்ளார்.

செவ்வியல் இலக்கியங்கள் இப்படிச் சிறப்புற பதிவு செய்த மழையைப் பற்றிக் கிராமத்து மக்கள் தங்கள் பேச்சு மொழிகளில், பழமொழிகளில், வாழ்வியல் அனுபவத்தில் எப்படி எல்லாம் பதிவு செய்துள்ளனர் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் கூற விரும்புகிறேன்.

மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்த கிராமத்து மக்கள், மாரி அல்லது காரியம் இல்லை என்று கூறுகின்றார்கள். மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது. முதலில் மனிதன் இயற்கையின் ஒரு கூரான மழையை வணங்கியுள்ளான் என்பதை நாம் எண்ணிப் பார்க்க இடமுள்ளது.

மழையை நம்பி வாழ்கின்ற சம்சாரிகளுக்குத்தான் மழையின் அருமையும் பெருமையும் தெரியும். மழையை மட்டும் நம்பி பயிர் செய்து வாழும் மக்களுக்கு மாதம் மும்மாரி மழை பெய்தால் யோகம்தான்.

சாதாரணத் தாவரங்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு பத மழை பெய்தால் போதும் எந்த நீர் நிலைகளில் இருந்தும் நீர் பாய்ச்ச வேண்டிய தேவை இருக்காது. இந்த உண்மையைத் தான் மாதம் மும்மாரி என்ற தொடர் விளக்குகிறது.

அந்தக் காலத்தில் ராஜாக்கள் நம் நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா..? என்றுதான் முதலில் மந்திரிகளிடம் கேட்பார்களாம். மாதம் மும்மாரிப் பொழிகிறது ராஜா என்று பதில் கூறிவிட்டால் ராஜாவுக்கு நிம்மதி வந்து விடுமாம். மழை பெய்து செழித்து வெள்ளாமை விளைச்சல் வந்து விட்டால் போதும் மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள் என்ற உண்மையைத்தான் இச்செய்திகள் பதிவு செய்துள்ளன.

மழையைப் பற்றியே நிறைய பழமொழிகளை மக்கள் கூறுகின்றார்கள். மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? என்று கேட்கிறது ஒரு பழமொழி. கருக்கொண்ட மேகம் எப்போது எங்கு இறங்கிப் பெய்யும்? என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்த கிராமத்து மக்கள், மழை எப்போது, எந்த அளவு பெய்யும் என்பதைக் கணிக்க முற்பட்டுத் தோற்றுப் போனபின் இந்தப் பழமொழியை உருவாக்கி இருக்கின்றார்கள். மழையைப் போலவே கருவுற்ற பெண்ணும் எப்போது பிரசவிப்பாள் என்பதைக் கணித்துக் கூற முடியாது என்பதை உணர்ந்த கிராமத்து மக்கள் உண்டாக்கிய பழமொழிதான் மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? என்பதாகும்.

கோடை காலத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அப்போது கடுமையான மின்னலும் மின்னும். ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும்.; கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள்.

கோடைகாலத்தில் அந்தி நேரத்தில் மழை பெய்யத் தொடங்கினால் அந்தக் காலத்தில் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்திருக்கின்றது. அந்தி மழை அழுதாலும் விடாது! என்ற தொடர், கோடை காலத்தின் இரவு நேரத் தொடர் மழையைக் குறிக்கிறது.

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே,

சேற்று நன்கு சேற்றில் ........

ஏற்றடிக்குதே..

கேணி நீர் படுசொறித் தவளை

கூப்பிடுகுதே! என்ற நாட்டுப் புறப்பாடல் மழை வருவதற்கான அறிகுறிகளைப் பற்றிப் பேசுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து மேகம் திரண்டு வருவதை எங்கள் பகுதி மக்கள் மேகம் கொம்பில் முறுக்குகிறது என்று கூறுவார்கள். குளிர்ந்த தென்றல் காற்று சுற்றிச் சுற்றி வீசினால் மழை வரும் என்று நாட்டுப்புறத்து மக்கள் கணித்திருக்கிறார்கள்.

எறும்புகள், பள்ளமாக உள்ள இடத்தில் இருந்து தன் உணவுகளைத் தூக்கிக் கொண்டு மேடான இடத்திற்குச் சாரை சாரையாகச் சென்றால், விரைவில் மழை வரும் என்று கூறுகிறார்கள். எறும்புகளுக்கு மழையின் வருகையைப் பற்றிய முன் அறிவிப்புகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

நிலநடுக்கம் ஏற்பட இருப்பதைச் சில பறவைகளும் , நாய் போன்ற விலங்குகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

நண்டு மேடான இடத்திற்கு இடம் பெயர்வது தவளை சத்தம் போடுவது போன்றவை. மழை வரும் என்பதற்கான முன் அறிவிப்பாக கிராமத்து மக்கள் கருதி இருக்கிறார்கள். தவளைகள் போடும் சத்தத்தை கிராமத்து மக்கள் தவளை, உடைக்கட்டா... தவக்கட்டா... என்று மழை கூறுவதாகக் கற்பனை செய்து கூறுகின்றார்கள். அதாவது வயல் வரப்புகள் எல்லாம் உடைத்துவிடும் அளவோடு மழை பெய்யப் போகிறது என்று தவளை ஆளுடம் சொல்வதாகக் கூறுகிறார்கள்.

கோடை காலத்தில் ஈசான மூலையில் மின்னல் மின்னினால், விரைவில் நல்ல மழை பெய்யும் என்று கிராமத்துப் பெரியவர்கள் கூறுகின்றார்கள். ஈசானத்துல மழை கால் ஊன்றி இறங்கிப் பெய்ய ஆரம்பித்தால் ஈசானத்தில் இறங்குன மழை இருந்து பெய்யும் என்று கூறுகின்றார்கள்.

கார்த்திகை மாதம் பெய்யும் கனமழை கார்த்...... திருநாளுடன் நின்றுவிடும் என்று கூறுகின்றார்கள். கார்த்திகைத் திருநாள் அன்று கார்த்திகை தீபம் ஏற்றினால், மழை வெறித்துவிடும் என்று கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். விளக்கிட்டபின் மழை கிழக்கிட்டுப் போகும் என்று ஒரு பழமொழி கூறுகின்றார்கள். விளக்கு என்பது கார்த்திகை விளக்கு அதாவது கார்த்திகை தீபம் என்று பொருள் கொள்ளலாம். கிழக்கிட்டு என்றால் மெலிந்து அதாவது குறைந்து போகும் என்று பொருள் கொள்ளலாம். கார்த்திகையின் பின் பகுதியில் மழை வெறித்துப் பொசுங்கலிகத்தூவும். அதைக் கெப்பேரி என்ற வட்டார வழக்குன சொல்லில் எங்கள் பகுதியில் கூறுகிறார்கள். கெப்பேரி முடிந்ததும் மார்கழி மாதம் பனி பெய்ய ஆரம்பித்துவிடும்.

புரட்டாசியில் நாற்றுப் பரவினால் ஐப்பசி, கார்த்திகை மாத மழையால் யார் நன்றாக நீர் பாய்ந்து செழிந்து வளரும். மார்கழி மாதப் பனியில் கதிர் தலை காய்ந்து விளையும். தை மாதம் கதிர் அறுத்துப் பொங்கலிடுவார்கள்.

எவ்வளவு வெயில் என்றாலும் அலைந்து திரிகிற மக்கள் மழையில நனைய மாட்டார்கள். ஆயிரம் வரவைத் தாங்களிடம் ஒரு பாராட்டைத் தாங்க முடியுமா? ஆயிரம் வெயிலைத் தாங்கலாம். தலை ஒரு மழையைத் தாங்குமா..? என்று கேட்கிறார்கள் கிராமத்து மக்கள் பாராட்டைத் தாங்க முடியாது என்று கூறுகிறார்கள். அதற்குச் சான்றாக மழையையும், வெயிலையும் கூறியுள்ளார்கள்.

இன்றைக்கு நாகரிக மனிதனால் ஒரு வசவைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், அவனால் ஆயிரம் புகழைத் தாங்கிக் கொள்ள முடிகிறது. இதுதான் கிராமத்தானும், நகரத்தானுக்கும் உள்ள வித்தியாசமாகும்.

மழை முகம் பாராத பயிரும்; தாய் முகம் பாராத பிள்ளையும் ஒன்று என்று கூறுகிறது ஒரு பழமொழி. மழைக்கு முகம் உண்டு என்று கூறும் கிராமத்து மக்களின் ரசனை அனுபவிக்கத் தகுந்ததாகும். மழை கால் ஊன்றி விட்டது என்ற வாக்கியத்தில் மழைக்கு கால் இருப்பதாகக் கூறி இருக்கும் கற்பனையும் ரசனையானதாகும். பனிக் கண் திறந்தால் மழைக் கண் அடைக்கும் என்று கூறுகிறது ஒரு பழமொழி. மழைக்கு கண் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மழையை ஒரு உயிருள்ள உருவமாகப் பார்த்துப் போற்றிய கிராமத்து மக்களின் அன்பை என்ன சொல்ல...

ரொம்பக் காலமாக மழையே பெய்யவில்லை என்றால் கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் கிராமத்து மக்களிடம் உள்ளது.

தொடர்ந்து தேவைக்கு அதிகமாக மழை பெய்து கொண்டே இருந்தால் தீப்பந்தங்களில் தீப்பற்ற வைத்துக் காட்டி...... மழை நின்று விடும் என்ற நம்பிக்கையும் கிராமத்து மக்களிடம் உள்ளது.

கழனியூரன்

நன்றி: குமுதம்

செவக்காட்டு சொல்கதைகள் -1

’அந்திமழை’ மின் இதழின் வாசகர்களுக்கு.. வணக்கம். கி.ராஜநாராயணன் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கதைசொல்லிகளிடம் இருந்து நூற்று கணக்கான நாட்டுப்புறக் கதைகளை சேகரித்துள்ளேன். அக்கதைகள் கி.ராவின் பெயரிலும் பின்னர் என் பெயரிலும் பல இதழ்களில் பிரசுரமாகியுள்ளன.

நான் களப்பணி செய்து சேகரித்த கதைகளில் இன்னும் எந்த இதழிலும் பிரசுரமாகாத சில கதைகளை’அந்திமழை’ மின் இதழ் மூலம் உங்களின் வாசக பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இத்தொடரில் பிரசுரமாக இருக்கின்ற ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு சுவையுடையதாக இருக்கும். தாத்தாவின் மடியில், பாட்டியின் அருகில் அமர்ந்து கதை கேட்க  ‘லவிக்காத’ (விதியற்ற) இன்றைய தலைமுறையினர்க்கு இக்கதைகள் புதியதொரு வாசிப்பனுபவத்தைத் தரும் என்று நம்புகிறேன்.

இக்கதைகளைப் படிக்கும் போது உங்களின் மனக் கண் முன் உங்களின் பூர்வீக கிராமம் தோன்றினால் அதுவே என் வெற்றி என்று கருதுகிறேன். இனி கதைகள்.......

. பூவின் அழகைப் பூட்டி வைக்க முடியாது

”மூத்த தாரத்திற்குப் பிறந்த பிள்ளைகளை இளையதாரம் கொடுமைப் படுத்துவாள் “ என்ற கருத்தை வலியுறுத்தும் எத்தனையோ நாட்டுப்புறக் கதைகள் புழக்கத்தில் உள்ளன. அப்படிபட்ட கதைகளில் இது புதுமாதிரியான கதையாக இருக்கிறது “ என்று சொன்ன சுப்புத்தாத்தா கதை கேட்கக் கூடியிருந்த மக்களைப்பார்த்து தன் நரைத்த மீசையைத் தடவிக் கொண்டே கதை சொல்ல ஆரம்பித்தார்.
ஒரு ஊர்ல ஒரு பண்ணையார் இருந்தார், அவருக்கு கல்யாணமாச்சி, காலா காலத்துல அவர் பொண்டாட்டிகாரி அழகான ஒரு ஆம்பளப் பிள்ளையையும் பெத்தெடுத்தா, பையனும் வளர்ந்து இளம் பிராயத்தை அடைந்தான். அப்ப பார்த்து பண்ணையாரின் மனைவி திடிரென்று மாரடைப்பு வந்து இறந்துட்டா.
பண்ணையாரிடம் சொத்து சுகம் அதிகம் இருந்ததால், உமக்கும் ஒரு துணை வேண்டாமா? என்று சொந்தக்காரர்கள் கேட்டு , மறு வருசமே , ஒரு பெண்ணைப் பார்த்துக் கட்டி வைத்தார்கள் . இளைய குடியாள் , மூத்த குடியாளின் பிள்ளையைக் கண்ணில் கண்ட போதெல்லாம் கரித்துக் கொட்டினார். அந்தப் பையனை எதிரியைப் போல பாவித்தாள்.
“மனம் போல் வாழ்வு” என்று சொல்வார்களே அது போல , இளையாளுக்கு வயிற்றில் கரு தங்களை, தன் வயிற்றில் ஒரு பிள்ளை பிறக்கலியே ! தன் புருசனின் சொத்து எல்லாம் மூத்த குடியாளின் மகனுக்கு போயிருமே! என்று நினைத்து, கரு, கருன்னு நெஞ்சு எரிச்சலோடு அலைந்தாள்,
ஏழெட்டு  வருசமாகியும் , இளையாள் வயிற்றில் ஒரு புழு , பூச்சி கூட தங்கல , அக்கம்பக்கத்து பெண்களெல்லாம் “ அவள் ஒரு மலடி” என்று பேச ஆரம்பித்து விட்டார்கள். “
மூத்த குடியாள் மகன் வளர்ந்து வாலிப வயசை அடைந்து விட்டான். பண்ணையாரும் தன் மகனுக்கு காலா காலத்தில் ஒரு கால்கட்டைப் போட்டிரனும் என்று நினைத்து , பெண் பார்க்க ஆரம்பித்தார். பண்ணையாருக்கு ஏகப்பட்ட வசதி வாய்ப்புகள் இருந்ததால், அவரின் அந்த ஒரு மகனுக்கு பெண் கொடுக்க நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு முன் வந்தார்கள்,
பண்ணையார் நாலு ஊருக்குப் போய் அலைந்து திரிந்து அழகான ஒரு பெண்ணைப் பார்த்து தன் மகனுக்கு பேசி முடித்தார். பெண் பார்க்க தன் இளைய மனைவியையும் , கூட்டிக்கிட்டுதான் போயிருந்தார். மூத்தாள் மகனுக்கு இவ்வளவு அழகான பெண்ணா? என்று வயிறு எரிந்தது. இளையாளுக்கு ஏதாவது ஒரு குறை சொல்லி இந்தப்பெண்ணை மூத்தாள் மகன் கட்ட விடாமல் செய்யவேண்டும் என்று தன் கணவரிடம் ஏதேதோ சொல்லிப்பார்த்தாள் , பண்ணையார் இந்த விசயத்தில் தன் மனைவியின் சொல்லைக் கேட்கவில்லை. பிறகு என்ன செய்ய மூத்தாள் மகன் தாலி கட்டினாலும் பெண் நம் வீட்டுக்கு தானே மருமகளாக வருவாள் , அப்போது வைத்து கொள்ளலாம் வரிசையை. என்று மனதிற்கு நினைத்து கொண்டு பண்ணையாரிடம் சரி , இந்த பெண்ணே நம் பையனுக்கு இருக்கட்டும் என்று உதடளவில் சொன்னாள்.
அந்தக் காலத்தில் பெண் பார்க்கும் படலம் எல்லாம் கிடையாது, அப்படியே சிற் சில இடங்களில் நடந்தாலும் , மாப்பிள்ளையின் தந்தையாரும் , தாயாரும், பெண்ணைப் பார்த்து சம்மதம் சொன்னால் போதும் , பெற்றோர்கள் பார்த்து முடித்த பெண்ணின் கழுத்தில் அந்த காலத்து மாப்பிள்ளைகள் மறுபேச்சுப் பேசாமல் தாலியை கட்டினார்கள்.
பண்ணையார் மகன் விசயத்திலும் பெண்ணை , மாப்பிள்ளையின், தந்தையும் , தாயும் நேரில் பார்த்ததோடு சரி. மாப்பிள்ளை பெண்ணை நேரில் பார்க்கவில்லை, இந்த விசயத்தை தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு , பண்ணையாரின் மனைவி ஒரு சதித் திட்டத்தை தீட்டினாள்.

பண்ணையாருக்குத் தெரியாமல், பண்ணையார் காடுகரைகளை சுற்றிப் பார்க்கச் சென்ற சமயத்தில், தன் தோழி ஒருத்தியின் மூலமாக ஒரு ஓவியனைத் தன் வீட்டிற்கு வரவளைத்தாள் , “ அவலட்சணமான  முகமுடைய ஒரு இளம் பெண்ணின் படத்தை தைல வண்ண ஓவியமாக வரைந்து கொடு , நான் உனக்கு வேண்டிய மட்டும் பணம் கொடுக்கிறேன். “ என்றாள் ஓவியனிடம் இளையாள்.

ஓவியனுக்கு , பண்ணையார் மனைவியின் வேண்டுதல் அதிசயமாகப் பட்டது , எல்லோரும் அழகான பெண்ணின் படத்தைதான் ஓவியமாக வரைய சொல்லி விலை கொடுத்து வாங்குவார்கள். இவள் அவலெட்சணமான பெண்ணின் படத்தை வரைந்து கேட்கிறாளே ! இதில் ஏதோ சூது இருக்கிறது என்று நினைத்தாலும் கைநிறைய பணம் கிடைக்கிறதே என்று நினைத்து அவலெட்சணமான ஒரு பெண்ணின் படத்தை வரைந்து அதை இளையாளின் தோழியிடம் கொடுத்தான் , அவளும் , ஓவியன் கேட்ட பணத்தை பண்ணையாரின் மனைவியிடம் இருந்து வாங்கி வந்து ஓவியனிடம் கொடுத்தாள் .

பண்ணையார் முன் போலவே , காடு கரைகளைச் சுற்றிப்பார்க்க சென்ற போது , மூத்தாளின் மகனை பிரியமாக அழைத்து “அப்பா, உன் தந்தை உனக்கு மிகவும் அவலெட்சணமான பெண்ணையே பேசி முடித்திருக்கிறார் . நான் அந்தப்பெண் வேண்டாம் என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னேன் . அவர் என் பேச்சைக் கேட்டகவில்லை. பெண் வீட்டார் ஏராளமாக நகை நட்டு போடுகிறார்கள் என்பதால் அந்தப்பெண்ணையே என் மருமகளாக்கிக் கொள்கிறேன் என்று சொல்லி வெற்றிலையும் மாற்றி உறுதி செய்து விட்டார்.. இனி நீ சொன்னாலும் அவர் கேட்கமாட்டார், உன் தந்தையின் பிடிவாத குணம்தான் உனக்கு தெரியுமே , எனவே நீயும் , இனி அந்தப் பெண் விசயத்தில் மறு பேச்சுப் பேசாதே . அந்தப் பெண்ணின் கழுத்தில் உன் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக தாலியை கட்டிவிடு, ஆனால் தாலிகட்டும் போது கூட உன் மனைவியின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்காதே தாலி கட்டிய பின்னும் நீ அவளை தொட்டு பேசாதே , அவளுடன் சேர்ந்து வாழாதே , இப்படியே ஒரு வருசப் பாட்டுக்கு இரு , அந்தப்பெண் வாழாமல் இருப்பதை விட தன் தாய் வீட்டுக்கே செல்லலாம் என்று சென்றுவிடுவாள் , அதன் பின் நானே உனக்கு ஒரு அழகான பெண்ணாப்பார்த்து கட்டி வைக்கிறேன் . உன் தந்தை உனக்கு பார்த்திருக்கிற பெண் இவள் தான் , அவளின் படத்தை யாருக்கும் தெரியாமல் அவர்கள் வீட்டில் இருந்தே நான் உனக்காக எடுத்து வந்திருக்கிறேன் “ என்று நய வஞ்சமாகப் பேசி , மாப்பிள்ளையின் நெஞ்சில் நஞ்சை விதைத்து ஓவியனிடம் வரைந்து வாங்கிய அவலெட்சணமான பெண்ணின் ஓவியத்தையும் அவனிடம் காட்டினாள் .
“ தாய் இல்லாத போது , தாய்க்குத் தாயாய் இருந்து நம் சிற்றன்னை நமக்கு நன்மை செய்கிறாள் போலும் “ என்று நினைத்து ஏமாந்த மூத்தாள் மகன் நெஞ்சில் அந்த பெண்ணின் ஓவியம் , மனச்சுவரில் வரைந்த சித்திரம் போல் நின்று நிலை பெற்று விட்டது.

உரிய காலம் வந்தது , திட்டமிட்டபடி மூத்தாள் மகனுக்கு கல்யாணமும் நடந்தது , ஆனால் கூனியின் போதனையில் மனம் திரிந்த கை கேயி போல , பண்ணையார் மகன் , தன் மனைவியை , ஏறிட்டும் பார்க்கவில்லை, எதிர்த்தும்  விழிக்கவில்லை.

தொட்டுத்தாலி கட்டியதோடு சரி , அதன் பின் சித்திக்காரியிடம் தான் சாப்பாடு வாங்கி சாப்பிட்டான், கட்டிய மனைவியின் கட்டழகைப் பார்த்து ரசிக்காமல் கண் இருந்தும் குருடன் போல் வாழ்ந்தான்.

புதுப்பெண் பார்த்தாள் , தன் கணவன் தன்னை ஏறெடுத்தும் பார்க்காமல் , பாராமுகமாக இருப்பதை நினைத்து இதில் ஏதோ சூட்சி  இருக்கிறது என்று நினைத்தாள்.
ஒரு நாள் தன் கணவனிடம் , என்னை என் தாயாரின் வீட்டில் கொண்டு போய் விட்டு விடுங்கள் என்றாள். மாப்பிள்ளைகாரனும் ‘சரி ‘ என்றான் , இளையாள் நாம் போட்ட திட்டம் நிறைவேறப் போகிறது என்று நினைத்து சந்தோஷப்பட்டு புதுமாப்பிள்ளையிடம் அவள் விருப்பப் படியே அவளை அவள் தாய் வீட்டில் கொண்டு போய் ஒப்படைத்து விட்டு வா என்றாள்.

புதுமாப்பிள்ளை , புதுப்பெண்ணை ஒரு வில் வண்டியில் அழைத்துக்கொண்டு சென்றான் , புதுப்பெண் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருந்தாள் , ஒரு வண்டு அவள் தலையில் இருக்கும் மல்லிகைப் பூக்களை கடித்துக் குதறியது , வண்டின் செயலைப்பார்த்த புதுப்பெண் ,

“ பூ மணம் நுகரத் தெரியாத
புகல் வண்டே – என்
புருஷனைப் போல் நீயும்
முட வண்டோ …? “ என்று ராகம் போட்டுப் பாடினாள்

மனைவியின் பாட்டைக் கேட்ட புருஷக் காரனுக்கு தன்னையறியாமல் கோவம் மூக்கிற்கு மேல் வந்து விட்டதுஎனவே சித்தாத்தாள் சொல்லிக் கொடுத்ததை எல்லாம் மறந்து , அனிச்சையாதன் மனைவியை அடிக்க கையை ஓங்கிய படியே அவள் முகத்தை முதன் முதலாக ஏறிட்டுப் பார்த்தான்.

அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை , பதினாலாம் பக்கத்து பெளர்ணமி நிலவு போல் ஜொலி ஜொலி என்று ஜொலித்துக்கொண்டு இருந்தது அவள் முகம்.

பார்க்க பதினாராயிரம் கண் வேண்டும்என்பது போன்ற அழகியை மனைவியாகப் பெற்றும் இத்தனை நாளும் ஏறெடுத்தும் பார்க்காமல் , பாவியாக வாழ்ந்துவிட்டோமோ , சித்திக்காரிதான் பொய் சொல்லி நம் மனதை மாற்றி இருக்கிறாள் . இனிமேல் சித்திக்காரியின் முகத்திலேயே விழிக்க கூடாது என்று நினைத்து தன் மனைவியை அடிக்க ஓங்கிய கையில் அணைத்து முத்தமிட்டு கொஞ்சிய படி , வில் வண்டி ஓட்டும் வேலைக்காரனிடம் விரைவாக வண்டியை ஓட்டு , என்றான் .மாமியார் வீட்டுக்கு போன மாப்பிள்ளை அங்கேயே தன் மனைவியுடன் சந்தோசமாக வாழ ஆரம்பித்தான் , சித்தியின் வீட்டை மறந்தே விட்டான்
- See more at: http://andhimazhai.com/news/view/sevakkaadu1.html#sthash.PDgxN7Os.dpuf

Friday, May 16, 2014

நனவிடைத் தோய்தல் - 2

எங்கு பயணம் புறப்படுவதாக இருந்தாலும் தி.க.சியின் முன்னேற்பாடுகள் என்னை மலைக்கவைக்கும் முதலில் பயணம் செய்யவேண்டிய டிக்கெட்டை ஒரு கவரில் போட்டு அந்த கவரின் மேல், வண்டி எண், வண்டி திருநெல்வேலியில் இருந்து புறப்படும்நேரம், போன்ற விவரங்களை குறித்து விடுவார். அதை பணம் கொண்டு செல்லும் பையில் வைத்துவிடுவார். பயணத்தின் போது என்னென்ன பொருள்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தாளில் பட்டியல் எழுதுவார். ’ சேவிங் பிளேடில் இருந்து,சோப்பு வரை தேவையான பொருள்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில்  இடம்பெற்றிருக்கும், சேவிங் பிளேடின் கவர் மீது கூட அதை முதலில் உபயோகித்த தேதியை குறித்துவிடுவார்.
பயணம் புறப்படும் முன்பு பட்டியலில் உள்ளபடி பொருள்கள் எல்லாம் இருக்கிறதா? என்று ஒன்றிற்கு இரண்டு முறை சரிபார்க்கச் சொல்வார். தி.க.சி எங்கு சென்றாலும் அவரின் பணப்பை என்னிடம் தான் இருக்கும் , நான் தான் எல்லாச் செலவுகளையும்செய்வேன் , பையைத் தரும்போது முதலில் அதில் எவ்வளவு பணம் இருந்தது , எவ்வளவு செலவாயிற்று , மீதம் எவ்வளவு இருந்தது என்று மட்டும் கணக்கு பார்க்கமாட்டார்.
ஈரோடு சென்று  அதிகாலையில் புகை வண்டியில் இருந்து இறங்கியதும் அவரை வரவேற்க திரு. ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் ரயில் நிலையத்திற்கே வந்திருந்தார், தி.க.சி அவரிடம் “நான் அறைக்குச் சென்று சற்று ஓய்வெடுத்து விட்டு , காலைகடன்களை முடித்து சிற்றுண்டியையும் அருந்திவிட்டுத் தயாராக இருக்கிறேன். முதலில் நான் தந்தை பெரியாரின் நினைவிடத்திற்குச் செல்லவேண்டும் அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்றார்.
பலமுறை ‘ ஹார்ட் அட்டாக் ‘கால் பாதிக்கப்பட்ட எண்பது வயதைக் கடந்த தோழரை பத்திரமாக மீண்டும் திருநெல்வேலிக்கு கொண்டு சேர்க்க வேண்டுமே என்ற கவலையால் என் நெஞ்சு ’திக், திக்’ என்று அடித்துக் கொண்டிருக்கும்.
பொதுவாழ்வில் ஈடுபாடு கொண்டிருக்கும் பலருடன் நான் பழகி இருக்கிறேன். அவர்கள் சொல்வதற்கும் , செய்வதற்கும் இடையே மிகுந்த வேறுபாடு இருக்கும் படிப்பது ராமாயணம்? இடிப்பது பெருமாள் கோயில் என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்கிறவர்களுக்குமத்தியில் தி.க.சி சொல்லுக்கும் செயலுக்கும் இடையே அதிக இடைவெளி இல்லாமல் வாழ்ந்து காட்டினார்.
“உபதேஷம் பண்ணுகிறவன் அது ஊருக்கு தானடா நமக்கு இல்லே! என்று வாழாதவர் தி.க.சி. எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் அவர்களின் மூத்த மகன் கலப்பு திருமணம் செய்து கொண்ட போது தி.க.சி   தோப்பிலாருக்கு சமாதானம் கூறினார். அதைவரவேற்றுப்பேசி , தோப்பிலாரைத் தேற்றினார்.
தி.க.சியின் மகள் வழிப் பேத்தி அதே போல் கலப்பு திருமணம் செய்து கொள்ள விரும்பிய போது அதை தி.க.சி வரவேற்றார். தானே முன் நின்று அத்திருமணத்தை நடத்தி வைத்தார்.
அதே சமயம் தனிமனித சுதந்திரத்தையும் , சக மனிதர்களின் உணர்வுகளையும் மதித்தார், தி.க.சி நாத்திகர் என்பது உலகறிந்த உண்மை . ஆனால் தன் மனைவியின் பக்தி உணர்வை அவர் மதித்தார். அம்மாவின் பூஜை, புனஸ்காரங்களுக்கு அவர் தடையாகஇருந்ததே இல்லை.
அம்மா அவர்கள் நெற்றியில் எப்போதும் திருநீரும் , குங்குமமும் துலங்கும். தி.க.சி என்றும் தன் நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டதே இல்லை. தன் மனைவி இறந்த போது நடைபெற்ற மதச் சடங்குகளில் கூட தி.க.சி கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்குடும்பத்தாரும், பிள்ளைகளும் மத ஆச்சாரப்படி தன் மனைவிக்கு செய்யும் சடங்குகளைத் தடுத்து நிறுத்தவில்லை.
அம்மா அவர்களுக்கு மிகவும் முடியாமல் ஆகி படுத்த படுக்கையாக கிடந்த போது தி.க.சியே இளம் சூட்டில் வென்னீர் வைத்து அவர்களின் உடம்பை , ஈரத்துணியால் துடைத்து எடுத்து துணியும் மாற்றினார், அத்தோடு அம்மாவின் நெற்றியில் அவரேதிருநீறும் பூசினார். குங்குமப் பொட்டும் வைத்தார். அப்போது நானும் அருகில் இருந்தேன்.
நான் “ ஏன் நீங்கள் திருநீறு பூசி விடுகிறீர்கள் ? “ என்று கேட்கவில்லை. ஆனாலும் நான் பார்த்த பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட  தி.க.சியே “ நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டால் குங்குமம் வைத்து கொண்டால் அவள் மகிழ்ச்சியாக இருப்பாள். அது அவள் நம்பிக்கை சார்ந்த விஷயம் , அவளின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். அவளின் சுதந்திரத்தில் நான் ஆதிக்கம் செலுத்த விரும்பவில்லை! என்று கூறினார். ’இது முரண்பாடல்ல!’ என்பதை அப்போது நான் புரிந்து கொண்டேன். வெளிப்படையாக பார்க்கும் போது “தி.க.சி. எப்போதும் படிப்பது, பேசுவது, எழுதுவது என்றே வாழ்ந்தார். தன் மனைவியை கூட பராமரிக்கவில்லை என்பதை போல தோன்றும். தி.க.சி. யின் நடவடிக்கைகளைப் பார்த்து நான் கூட அப்படி நினைத்ததுண்டு. ஒரு முறை அதிகாலை சுமார் 7.00 மணி அளவில் தி.க.சி. யின் அன்பகத்திற்கு செல்ல வேண்டிய நிலை வந்தது. நான் எப்போது தி.க.சி. யின் வீட்டிற்குச் சென்றாலும் முதலில் அம்மாவை தான் பார்ப்பேன் அதன் பின் தான் தி.க.சி. யை சென்று பார்ப்பேன். அம்மாவை போய் பார்த்த போது அவர்கள் படுத்திருந்த கட்டிலை விட்டே எழுந்திருக்கவில்லை. காய்ச்சலால் முனங்கி கொண்டிருந்தார்கள். தி.க.சி. தனக்கான அறையில் தான் படுத்திருப்பார். அம்மாவைப் பார்த்து விட்டு தி.க.சி. யை அவரின் அறைக்குச் சென்று பார்த்தேன். அவர் அன்றைய தினமணி நாளிதழைப் படித்து கொண்டிருந்தார். என்னை கண்டதும் ‘வாங்க கழனி’ என்ன அதிகாலையிலேயே வந்து விட்டீங்க!” என்று கேட்டார். நான் வேறு ஒரு சொந்த வேலையாக திருநெல்வேலி வந்தேன். அப்படியே உங்களையும் பார்த்து விட்டு போகலாமே! என்று வந்தேன், என்றவன் ‘அம்மா அவர்களைப் பார்த்தீர்களா? காச்சலால் முனங்கிக் கொண்டிருக்கிறார்களே! என்றேன்.
அப்பொழுது தி.க.சி. சொன்ன வாசகம் என்னை தூக்கி வாரிப் போட்டது. ”அப்படியா அதானே இன்னும் அவள் காப்பிக் கொண்டு வந்துத் தரக் காணோமே! என்று பார்த்தேன்’ என்றவர் தான் படித்துக் கொண்டிருந்த நாளிதழைக் கீழே வைத்து விட்டு அம்மாவைப் போய் பார்த்தார். அதன் பிறகு முதலில் ஒரு மாத்திரையைக் கொடுத்தார். பிறகு நானும் தி.க.சி. யும் அம்மாவை ஆட்டோவில் மருத்துவமனைக்கு கூட்டிக் கொண்டு சென்றோம். இந்த லட்சணத்தில் தான் தி.க.சி. தன் மனைவியை கவனித்தார் என்று இந்தச் சம்பவத்தை வைத்து யாரும் தவறாக எடை போட்டு விடக் கூடாது. அம்மா அவர்கள் தன் கடைசி காலத்தில் படுத்த படுக்கையாக கிடந்தபோது ஒரு தாய் தன் பிள்ளைக்கு பணிவிடைகள் செய்வதைப்போல ஒரு மகன் தன் தாய்க்கு பணிவிடைகள் செய்வதைப் போல தி.க.சி தன் மனைவிக்கு பணிவிடைகள் செய்தார். அம்மா தானே சாப்பிட முடியாத நிலை வந்தபோது தி.க.சி யே அம்மாவுக்கு ஊட்டிவிட்டார். அம்மாவை ஈரத்துணியால் துடைப்பது ஏன் அவர்களுக்கு ’பெட் பேன்’ வைத்து அவர்களின் மலத்தைக் கூட எடுத்து சுத்தம் செய்தார். எந்தக் கணவனும் தன் மனைவிக்கு செய்ய முன்வராத பல காரியங்களை முகம் சுழிக்காமல் செய்தார் . தி.க.சி தன் மனைவி மேல் வைத்திருந்த அன்பை , பாசத்தை அப்போது தான் நான் நேரடியாக பார்த்து உருகினேன் . ஒவ்வொருவரும் தன் மனைவியிடம் உள்ள பாசத்தை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்துவார்கள். தி.க.சி அதில் தனி ரகமாக திகழ்ந்தார். அவர் வரட்டுத்தனமான கம்யூனிஸ்ட் அல்ல.! நெகிழ்ச்சிகரமான மனிதாபிமானி.
சிறுகதைகள் , குறுநாவல்கள் , நாவல்கள் , புதுக்கவிதைகள் என்று இன்றைய இலக்கியத்தின் வடிவங்களில் தி.க.சிக்கு மிகுந்த பரிச்சயம் உண்டு என்பது அனைவரும் அறிந்த செய்திதான். ஆனால் தி.க.சிக்கு மரபின் இலக்கியங்கள் மீதும் பரிச்சயமும், ஈடுபாடும் இருந்தது என்பது என்னைப் போல அவரிடம் மிக நெருங்கிப் பழகிய சிலருக்குத்தான் தெரியும்.
கம்பனின் பாடல்களுக்கும் , சிலப்பதிகார பாடல்களுக்கும் , திருக்குறளுக்கும் தி.க.சி அபாரமாக விளக்கம் கூறுவார் . ஏன் தொல்காப்பிய சூத்திரங்களுக்கும் , நன்னூல் நூற்பாக்களுக்கும் கூட விளக்கம் கூறுவார்.
பாரதியாரின் கவிதைகள் மீதும் , பாவேந்தரின் கவிதைகள் மீதும் தி.க.சிக்கு ஒரு மோகமே இருந்தது என்று சொல்லலாம் . அந்த அளவிற்கு எப்போதும் பாரதியாரின் கவிதைகள் குறித்தும் பாவேந்தரின் கவிதைகள் குறித்தும் பேசி மகிழ்ந்தார்.
என் குருநாதர் என்று வல்லிக் கண்ணனை எப்போதும் மறக்காமல் குறிப்பிட்டுக் கொண்டே இருந்தார். வல்லிக்கண்ணன் அவர்கள் ஒரு முறை திருநெல்வேலி வந்து சுமார் 10 நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது தி.க.சி என்னை அழைத்து கழனி ,” என் குருநாதர் வல்லிக்கண்ணனை உங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போய் 1 வாரம் வைத்து கொள்ளுங்கள் என்றார். வல்லிக்கண்ணனும் அதற்கு உடன் பட்டதால் நான் வ.க வை என் வீட்டிற்கு (கழுநீர் குளத்திற்கு ) அழைத்துக் கொண்டு சென்றேன், வ.கவுக்காக நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சைவ சமயலுக்கு மாறிவிடுங்கள் என்ற வேண்டுகோளை வைத்து வ.கவை என்னுடன் அனுப்பி வைத்தார். அதேபோல திரு ராஜகுமாரன் அவர்கள் தி.க.சி பற்றிய ஆவணப்படம் எடுக்க முன் வந்த போது அவரையும் அவருடன் வந்திருந்த புகைப்பட கலைஞரையும் தி.க.சி என் வீட்டிற்கே அனுப்பி வைத்தார்.
ராஜகுமாரன் இரண்டு , மூன்று முறை திட்டமிட்டும் வரமுடியாமல் போய்விட்டது கடைசியில் அவர் கேமராமேனுடன் வந்தபோது தி.க.சிக்கு உடல் நலமில்லை அன்று அவருக்கு 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தது என்றாலும் “ என்னை நம்பி வந்த கலைஞனை ஏமாற்றத்துடன் அனுப்ப எனக்கு மனமில்லை” என்று கூறி தி.க.சி அன்று காலை முதல் மாலை வரை  21 E, சுடலைமாடன் தெரு என்ற ஆவணப்பட படப்பிடிப்பிற்கு மிகுந்த உற்சாகத்துடன் ஒத்துழைத்தார்.  அவர் படித்த ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, கல்லூரி என்று பல இடங்களுக்கு காய்ச்சலுடன் ஆட்டோவில் பயணித்து படப்பிடிப்பிற்கு உதவினார்.
சகமனிதர்களின் சிரமத்தை , கஷ்டத்தை தி.க.சி எப்போதும் உணர்ந்திருந்தார். எண்பதைக் கடந்துவிட்ட தள்ளாத வயதிலும் “ ஏன் தி.க.சி திருநெல்வேலி டவுனில்   உள்ள தன் பூர்வீக வீட்டில் தனியே குடியிருக்கிறார்? என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்ததைப் போலவே என் மனதிலும் எழுந்ததுண்டு.
திருநெல்வேலி பாளையங்கோட்டையிலேயே மகன் வண்ணதாசன் வீடும், மகள் சாந்தாவின் வீடும் இருந்தது. ஆனால் “இனி தன்னால் தனியே இயங்க முடியாது என்ற நிலைவரும் வரை தி.க.சி தனியாகவே வாழ்ந்தார்.
“ஏன் இப்படி தனியே கிடந்து கஸ்டப்படுகிறீர்கள்  மகன் வீட்டிற்குப் போய் வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டுக் கொண்டு அங்கேயே இருக்கலாமே ? என்று நானே ஒரு முறை தி.க.சியிடம் கேட்டேன்.
அதற்கு தி.க.சி,  ” கல்யாணி , ஒரு கலைஞன் அவன் தனிமையை விரும்புகின்றவன் . அவன் ஒரு வரியை எழுத என்ன பாடுபடுகிறான் என்பது எனக்குத் தான் தெரியும் . அவனது தனிமை , அவனது சந்தோஷம். நான் சந்தை மனிதன் , அவனுக்கு இரைச்சலே ஆகாது, என்னைப்பார்க்க என் நண்பர்களும் , தோழர்களும், வந்து கொண்டே இருப்பார்கள் , அதில் அவர்களுக்கும் சந்தோஷம் , எனக்கும் மகிழ்ச்சி , “ஈத்து உவக்கும் இன்பம் போல , ஒன்றைக் கொடுப்பதால் , கொடுத்தவனுக்கும் மகிழ்ச்சி, அதை பெற்றுக் கொள்கிறவனுக்கும் இன்பம் .
கல்யாணி என்ற கலைஞனின் ஏகாந்தத்தை கெடுத்துவிட கூடாது , அதே சமயம் என் வீடு , என் உலகம் என்பதையும் நான் இழந்து விடக்கூடாது.
அவன் உலகத்திற்குள் நான் புக முடியாது , அதேபோல என் உலகத்திற்குள் அவன் வரமாட்டான். என் தனிமை எனக்கு, அவன் தனிமை அவனுக்கு என்பதை நானும் அவனும் புரிந்து வைத்திருக்கிறோம், நான் தனியே இருக்கிறேன் என்று என்றும் நான் உணர்ந்ததே இல்லை. நான் எப்போதும் என் நண்பர்களோடும் , தோழர்களோடும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றே நம்புகிறேன் .”என்னை என் பிள்ளைகள் புரிந்து கொண்டு என் போக்கில் என்னை வாழவிட்டதே நான் செய்த பாக்கியம் “ என்று நீண்ட உரையை நிகழ்த்தினார். அதன் பிறகு நான் தி.க.சியிடம் அந்த பேச்சையே எடுப்பதில்லை.
இன்று புதிதாய் பிறந்தோம் என்று பாரதி கூறுவது போல தி.க.சி ஒவ்வொரு நாளும் நிகழும் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு , தன்னைப் புதுப்பித்துக்கொண்டு முன்னைப் பழமைக்கும் பழமையாய், பின்னை புதுமைக்கும் புதுமையாய் வாழ்ந்துகாட்டினார்.
‘கலை இலக்கியம்’ அரசியல் என்ற இரட்டைக்குதிரைகள் பூட்டிய வண்டியில் தி.க.சி பயணம் செய்தாலும் , எங்கும் அவரின் வண்டி சறுக்க வில்லை ,  குடைசாயவும் இல்லை, ஏனென்றால் தி.க.சி என்ற சாரதி அக்குதிரைகளின் லகான்களை மிக லாவகமாக பிடித்துக்கொண்டு பயணம் செய்தார்.
தன் உடன் பிறந்த சகோதரன் இறந்த போதும் , தன் வாழ்க்கை துணைவியார் இறந்தபோதும் , தான் பெற்ற மூத்த மகன் இறந்த போதும் தி.க.சி துவண்டார். அவர்களைப் பிரிந்த வருத்தத்தில் வாடினார், ஆனால் யாழ்ப்பாணத்தில் முள்ளிவாய்க்காலில் பிரபாகரன் இறந்து விட்டார் என்ற செய்தியைக் கேட்டு தி.க.சி.  துடிதுடித்தார்.  அன்று முழுவதும் அவர் யாரோடும் பேசவில்லை , சாப்பிடவும் இல்லை இது தான் தி.க.சி.

வாழை இலையின் பின்புறம் கருவேல முள் கவிதை

விதைகள், சிறுகதைகள், நாட்டுப்புறக் கதைகள் என்று பன்முக ஆளுமைகொண்ட, தன்னுடைய ஊர் பெயரிலேயே 'கழனியூரன்’ என்ற புனைபெயரை உருவாக்கிக்கொண்ட எழுத்தாளர் சேக் அப்துல்காதர், தன் சொந்த ஊரான கழுநீர்குளம் குறித்து இங்கே பேசுகிறார்.
'ஊரைச் சுற்றி கழனி(வயல்)களும் குளங்களும் சூழ்ந்துள்ளதால் கழுநீர்குளம் என்று பெயர் பெற்றது. ஒருகாலத்தில் ஊர்க் குளத்தில் செங்கழுநீர்ப் பூக்கள் பூத்துக் குலுங்கியதால் இந்தப் பெயர் பெற்றதாகச் சொல்வார்கள். அன்னப் பறவை என்ற பறவை இனமே அழிந்ததைப்போல, இன்று செங்கழுநீர்ப் பூக்களும் அழிந்துவிட்டன. எங்கள் கிராமத்தின் எல்லைக்கு உட்பட்ட ஊர் அத்தியூத்து. அங்கு இன்றும் வசித்து வருகிறார் முன்னாள் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் முனைவர் சா.வே.சுப்பிரமணியன். எனவே, தமிழ் உணர்வுக்கு எள்ளளவும் பஞ்சம் இல்லை. சா.வே.சு. தன் வீட்டு மாடியில் பெரிய நூலகம் ஒன்றை அமைத்து உள்ளார். இந்த நூலகத்தைப் பயன்படுத்த வருபவர்கள், நூலகத்தை ஒட்டிய அறைகளில் இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். விரும்பினால், சா.வே.சு. ஐயா வீட்டிலேயே உண்டு, உறைந்து, தமிழ்ப் பயிலலாம்.
மண்தான் கழுநீர் குளத்துக்கும் மக்களுக்கும் எல்லாமுமாக இருக்கிறது. மண்ணைக் கிண்டித்தான் வாழ்கிறார்கள்... வயிறு வளர்க்கிறார்கள். உழைப்பு என்ற ஒற்றைச் சொல்தான் கழுநீர்குளத்து மக்களின் உயிர்ப்புச் சொல். ஐப்பசி, கார்த்திகை இரண்டு மாதங்களும் நெல் நடவுக் காலம். திருக்கார்த்திகை பண்டிகை நாளுக்கு மறுநாள் 'முடக் கார்த்திகை’ நாள் என்று சொல்கிறார்கள். இடைவிடாது உழைக்கும் மக்கள், முடக் கார்த்திகை நாள் அன்று மட்டும் ஓய்வு எடுப்பார்கள். கோடி ரூபாய் கொடுத்தாலும் வயலில் இறங்கி நெல் நடவு செய்ய மாட்டார்கள்.

எங்கள் வீட்டில் இருந்து இரண்டு தெரு அடுத்து உள்ள மறவா நடுநிலைப்பள்ளியில் நான் படித்தேன். பின் வீரகேரளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு மாறினேன். அதற்கு இரண்டு மைல் தூரம் நடந்தே செல்ல வேண்டும். இரு பக்கமும் வயல். நடுப் பாதையில் வீசும் தென்றலை சுவாசித்துக்கொண்டே  நானும் என் நண்பர்களும் நடந்து செல்வோம். பள்ளி விடுமுறை நாட்களில் எங்களுக்குச் சொந்தமான புன்செய் நிலத்தில் வயல் வேலைகள் செய்வேன். நாற்று நடவு முதல் அறுவடை வரை எல்லாம் அத்துப்படி எனக்கு. எங்கள் புன்செய் நிலத்தின் தலைமாட்டில் ஆற்றங்கரை ஓரத்தில் இருக்கிறது பெரிய ஆலமரம். புத்தனுக்குப் போதிமரம் போல, எனக்கு இந்த ஆலமரம். இந்த ஆல மரத்தடியில் திறந்தவெளி தர்கா உள்ளது. அந்தப் பகுதி வழியே போகிறவர்கள், வருகிறவர்கள் என, எல்லா சமய மக்களும் இந்த தர்காவில் வேண்டிக் கொள்வார்கள். மரக் கிளைகளில் அமர்ந்து தான் பாடப் புத்தகங்களைப் படிப்பேன். கவிதை எழுதத் தோணும்.
போது கையில் பேனா இருக்காது. வாழை இலையின் பின்புறம் கருவேல மரத்து முள்ளைவைத்துக் கீறிக் கவிதைகள் எழுதி இருக்கிறேன். வயலில் வேலை செய்து முடித்து, மதிய உணவுக்காகத் தக்காளி, வெங்காயம், மிளகாயைத் தோட்டத்திலேயே பறித்து மண் பானையில் போட்டு அடுப்புத் தீயே ஏற்றாமல் உப்பு மட்டும் சேர்த்துக் குழம்புவைப்போம். அதன் சுவையே தனி. அறுவடை முடிய இரவு நேரம் ஆகிவிட்டால் வயலிலேயே நெற்கதிர்களுக்குக் காவலாகக் கையில் கம்புடன் கொட்டக் கொட்ட நிலவொளியில் விழித்திருப்போம். களத்து மேடே எங்களுக்குத் தலையணை. இரவு முழுவதும் வேலை ஆட்கள் நிறையக் கதைகளைச் சொல்வர். கி.ராஜநாராயணன் தன் துணைவியரோடு இவ்வூருக்கு வருகை புரிந்து இருக்கிறார். மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன், ரசிகமணி டி.கே.சி. அவர்களின் பேரன் தீப.நடராஜன், தோப்பில் முகமது மீரான் எனப் பல இமயம் தொட்ட எழுத்தாளர்களின் பாதம் பட்ட ஊர் இது.
என் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பலரும் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. நான் படித்தது, பணி செய்வது என எல்லாமே இந்தக் கிராமம்தான். ஆணி அடித்ததைப் போல் எங்கும் இடம்பெயராத ஓர் எழுத்தாளன் நான். சில எழுத்தாளர்கள் பணி நிமித்தம் மற்றும் பல காரணங்களால் வேறு ஊருக்கு இடம்பெயரும் நிலை கிட்டும். ஆனால், பிறந்ததில் இருந்தே சொந்த ஊருடனும் சொந்த ஊர் மக்களுடன் வாழும் பேறு பெற்றவன் நான்!''

நன்றி - விகடன்

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=14757

நனவிடைத் தோய்தல்-1

தி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

நண்பனாய் , தோழனாய் மட்டுமல்லாமல் தி.க.சி என்னை தன் பிள்ளைகளில் ஒருவனைப்போல் நடத்தினார் , இன்னும் சொல்லப்போனால் தான் பெற்ற மக்களோடு பகிர்ந்து கொள்ள முடியாத பல விசயங்களை என்னிடம் மனம் திறந்து விவாதித்தார், பகிர்ந்து கொண்டார்.
நானும் மிக இயல்பாய் ஒரு தொண்டனாய் , சேவகனாய், அவரின் வளர்ப்புப் பிள்ளைபோல அவர் வீட்டில் வலம் வந்தேன். தி.க.சி அவர்களின் வாழ்க்கைத் துணைவியார் அவர்களையும் நான் அம்மா என்றே அழைப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன்.அம்மா அவர்களும் என்னை தான் பெற்ற மகனைப் போலவே நடத்தினார், தி.க.சியுடன் பழகிய மற்ற நண்பர்களின் , தோழர்களின்  உறவு தி.க.சியின் அறையோடு முடிந்துவிடும், ஆனால் நான் ‘கல்மிசம் இல்லாமல் அம்மா அவர்களுடனும் பழகியதால் நான் தி.க.சி வீட்டின் சமையல் அறையில் இருந்து புழக்கடை வரை சகஜமாக உலாவினேன் . அம்மா அவர்களும் எந்த தயக்கமும் இல்லாமல் என்னை வேலை ஏவுவார்கள் , பலசரக்கு கடைக்கு செல்வது, காய்கறிகள் வாங்கி வருவது போன்ற வேலைகளைக் கூட நானும் தயக்கமின்றி செய்து வந்தேன். அம்மா அவர்களின் உலகம் வேறு , அம்மா வீட்டு மனுஷி , தி.க.சி நாட்டு மனுஷன் , வீட்டின் தேவைக்கு வேண்டிய பணத்தை செலவுக்கு அம்மா அவர்களிடம் தி.க.சி கொடுத்து விடுவார். அதில் எவ்வளவு செலவாயிற்று , மீதம் இருக்கிறதா? பற்றாக்குறையா? என்று கேட்கவே மாட்டார். தி.க.சி குடும்பச் செலவுக்கு என்று கொடுக்கும் பணத்திலும் அம்மா ‘சிறுவாடு சேர்த்து கைப் பணம் வைத்திருப்பார்.
அம்மா அவர்கள் நாள் , நட்சத்திரம் ,கிழமை எல்லாம் பார்ப்பார், கெதி இருக்கும் வரை அம்மாவே கையால் சமைத்தார், பூஜை , புனஸ்காரம் என்று பக்திமயமாக இருப்பார் , நெற்றி நிறைய குங்குமம் , திருநீரும் எப்போதும் துவங்கும் பண்டிகை நாட்களில் பட்டுபுடவை உடுத்திக் கொள்வார்.
தி.க.சி அம்மாவின் இந்த மாதிரியான ஆச்சார விசயங்களில் தலையிடவே மாட்டார், அதே போல அம்மா அவர்களும் தி.க.சியின் எழுத்து படிப்பு பேச்சு போன்ற விஷயங்களில் தலையிடவே மாட்டார். எனவே இருவரும் அவரவர் உலகத்தில் மிகச்சுதந்திரமாக மன நிறைவுடன் வாழ்ந்தார்கள்.
அம்மா கோயில் குளம் என்று வெளியே கிளம்பினாலும் எங்கள் இருவருக்கும் சமைத்து வைத்து விட்டுதான் செல்வார். தி.க.சி சொல்லச் சொல்ல கட்டுரையை நான் எழுதுவேன்.
தி.க.சியுடன் பணி செய்வது பெரிய பாராத்தியம் (கஷ்டம்) ஒரு கட்டுரை (அதாவது கையெழுத்தில் சுமார் 10 பக்கங்கள் ) எழுத 1 நாள் ஆகிவிடும், டிக்டேட் செய்யும் போதே இடையில் யாராவது அவரைப் பார்க்க வந்து விடுவார்கள். உடனே தி.க.சி டிக்டேட் செய்வதை நிறுத்திவிட்டு தன்னை காண வந்திருக்கும் நண்பருடன் பேசத் துவங்கிவிடுவார். பிறகு நண்பர் விடைபெற்றுச் சென்ற பிறகுதான் டிக்டேட்  செய்வதைத் தொடர்வார். வந்திருக்கும் நண்பருக்கோ என் நிலைமை புரியாது , தி.க.சி.யும் நான் ஒரு கட்டுரையை டிக்டேட் செய்துகொண்டிருக்கிறேன் எனவே இன்னொரு நாள் வாருங்கள் சகவாசமாகப் பேசலாம் என்று சொல்லமாட்டார். “எப்ப எழுதி முடித்து விட்டு எப்ப வீட்டிற்கு கிளம்ப என்று நான் மனதிற்குள் நினைத்துக் கொண்டிருப்பேன் , ஆனால் தி.க.சி வந்திருக்கும் நண்பரிடம் , லேசில் பேச்சை முறித்து கொள்ள மாட்டார், பேச்சு தான் அவரின் உயிர் மூச்சாக இருந்தது , நண்பர் அவராக விடைபெற்றுச் சென்ற பின் நான் பைய (மெதுவாக) தி.க.சியிடம்  “வந்தவரிடம் நான் ஒரு கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன் பிறகு வாருங்கள் அல்லது இன்னொரு நாள் வாருங்கள் என்று சொல்ல வேண்டியதுதானே ! என்று கேட்பேன் .
அதற்கு தி.க.சி பாவம் அவர் வெகுதூரத்தில் இருந்து என்னை பார்த்து பேசுவதற்காக வந்திருக்கிறார் , அவருக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்காமல் இருந்தால் அவர் மனம் என்ன பாடு படும் ? என்று என்னைப்பார்த்து கேட்பார், நான் வேறு வழியில்லாமல் அதுவும் சரிதான் என்பேன்.
கட்டுரையில் ஒரு பக்கம் தான் டிக்டேட் செய்து இருப்பார் , அதற்குள் அவருக்கு ஏதாவது போன் கால் வந்துவிடும், பிறகு எழுதியதை திரும்ப படித்துகாட்ட வேண்டும் , அதன் பின் தான் கட்டுரையின் டிக்டேசன் தொடரும்.
எழுதிக்கொண்டிருக்கும் போதே ஏதாவது ஒரு தகவலை கட்டுரையில் சொல்ல வேண்டிவந்தால் உடனே கட்டுரையை அப்படியே நிறுத்திவிட்டு அந்தத் தகவல் உள்ள புத்தகத்தை தேட ஆரம்பித்து விடுவார். அந்த புத்தகம் அவர் வீட்டு புத்தக குவியல்களுக்கு இடையே எங்காது ஒழிந்து கொண்டிருக்கும் , எத்தனை நாழியானாலும் அந்த புத்தகத்தை தேடி எடுத்து கட்டுரையில் சொல்லபோகும் தகவல் சரிதானா என்பதை உறுதி செய்தபிறகுதான் கட்டுரையை தொடர்வார். மிகுந்த பொருமையுடன் தான் தி.க.சியுடன் பணி செய்ய வேண்டும். கட்டுரை கேட்ட பத்திரிக்கைக்காரரோ போனுக்கு மேல் போன் செய்து கொண்டிருப்பார். காலை 11.30மணி ஆகிவிட்டால் வாங்க வெளியே போய் ஒரு டீ குடித்துவிட்டு மேற்கொண்டு கட்டுரையை தொடரலாம் என்பார்.
அவர் வழக்கமாக டீ குடிக்கும் டீக்கடைக்கு அருகில் தான் பொன்னையன் அவர்களின் பத்திரிக்கை கடை , டீ குடித்து முடித்ததும் பத்திரிக்கை கடைக்கு சென்று விடுவார். அங்கு புதிதாக வந்திருக்கும் மாத, வார இதழ்களை நோட்டமிட்டு அதில் தேவையான இதழ்களை வாங்கிவிட்டு கடையை விட்டு வெளியே வர 1மணி நேரமாகும்.
மீண்டும் கட்டுரை ஓரிருபக்கங்கள் நகரும் , அதற்குள் உணவுக்கு முன் போட வேண்டிய மாத்திரையை போடுவார். வானொலி செய்தி ஒலிபரப்பாகும் நேரம் வந்துவிட்டால் அவ்வளவுதான் கட்டுரை அந்தரத்தில் தொங்கும் , செய்தி கேட்டுவிட்டுத் தான் பிறகு கட்டுரையை தொடர்வார், பத்திரிக்கைகள் படித்தும் , வானொலி கேட்டும் நாட்டு நடப்புகளை , அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்வதில்  தி.க.சி அளவு கடந்த பிரியம் கொண்டிருந்தார்.
வாழ்நாளின் இறுதி கட்டத்தில் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்த போதும் அவர் தானாக எதையும் படிக்க முடியாது என்ற நிலை வந்தபோதும், சரவணன் என்ற இளைஞர் மூலம், தினசரி பத்திரிக்கைச் செய்திகளை அவரைப் படித்து வந்து நாட்டு நடப்புகளை சொல்லச் சொல்லி கேட்டுக்கொண்டார்.
கப்பலோட்டிய தமிழர், ’வ.உ.சி’ அவர்கள் மரணப்படுக்கையில் இருந்த போதும் தன் மகளை பாரதியாரின் பாடல்களை படிக்கச்சொல்லிக் கேட்டபடியே உயிரை விட்டார்.
‘ சாகும் போதும் தமிழ் சொல்லிச் சாகவேண்டும்’ என்று ஆசைப்பட்டார் பாவேந்தர்.  பத்திரிகைச் செய்திகளை கேட்டபடியே தன் இறுதி மூச்சை விட்டார். தி.க.சி.
மதிய உணவு வேளை வந்தால், அம்மா வீட்டில் இல்லையென்றால் தி.க.சி யே எனக்கு உணவு பரிமாறுவார், எனக்கு அம்மாவின் சமையலறையில் எங்கு நெய் இருக்கும் , எங்கு சமைத்த கெட்டிப் பருப்பு இருக்கும் , எங்கு உப்பு இருக்கும் , தயிர் எங்கு இருக்கும் என்று எல்லா விபரமும் தெரியும், ஆக நான் கூட்டு குழம்பு எல்லாம் எடுத்து வைக்க நாங்கள் இருவரும் சேர்ந்தே தான் சாப்பிடுவோம்.
தி.க.சி க்கு நெய் ஆகாது , அவர் பொறித்த வத்தல் வடாகம் எல்லாம் சாப்பிட கூடாது என்றாலும் அம்மா எனக்காக அப்பளம், வத்தல், வடாக வகைகள் எல்லாம் பொறித்து தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிடுவார். அம்மா வெளியே போகும் போது, கழனி , ‘ இன்ன இடத்தில் வத்தல் வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் ‘ சாப்பிடும் போது நீ மட்டும் அதை எடுத்து சாப்பிடு, அய்யாவிற்கு கொடுத்துவிடாதே ! ‘ என்று மறக்காமல் சொல்லிவிட்டு செல்வார்கள், அம்மா போன பிறகு தி.க.சி சாப்பிடும் போது  சின்னக் குழந்தை போல் ‘கழனி  ’அப்பளம், வத்தல், வடாகம் எல்லாம் பொறித்து வைத்திருக்கிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார்களே முதலில் அதை எடுங்கள் ’  என்பார்.
” எண்ணையில் பொறித்ததை  சாப்பிடக் கூடாது! என்று டாக்டர் சொல்லியிருக்கிறாரே! “ என்று  நான் கூறினால் எண்ணையில் பொறித்ததை சாப்பிடக்கூடாது  தான். இன்று ஒரு நாள் மட்டும் அம்மா இல்லாத நேரத்தில் சாப்பிட்டுக் கொள்கிறேன், அதற்கென்றே ஒரு மாத்திரை இருக்கு, அதை சாப்பிட்ட பிறகு போட்டுக் கொள்ளலாம்! என்பார். அப்போது எனக்கு ஒரு குழந்தையின் குறும்புத்தனம் தான் நினைவுக்கு வரும். பிறகு என்ன செய்ய ரெண்டு பேரும் சேர்ந்து வத்தல் , வடாகங்களை காலி செய்வோம், சாப்பாடு முடிந்ததும் நாற்காலியில் உக்கார்ந்து சற்று நேரம் ஓய்வெடுப்பார். பிறகு “கழனி நீர் இளவட்டப்பிள்ளை உமக்குத் தூக்கம் வராது, நான் வயசாளி சிறிது நேரம் கட்டையைச் சாத்துகிறேன்,(தூங்குகிறேன்) என்பார். தி.க.சி தூங்கச் சென்றதும் நான் அங்கு கிடக்கும் சிற்றிதழ்களில் எனக்குப் பிடித்தமானதைப் படிக்கத் துவங்குவேன். மாலை 3.30 மணி அளவில் தூக்கம் முடிந்து கண் விழித்ததும் முகம் கழுவி, புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தேநீர் அருந்தச் சென்று வருவோம். அதற்குள் மாலை நாளிதழ்கள் வந்திருக்கும் , அவற்றை ஒரு நோட்டம் விட்டுவிட்டு மீண்டும் கட்டுரையைத் தொடர 4. மணி ஆகும் , கட்டுரையை முதலில் இருந்து படித்துக் காட்ட வேண்டும், பிறகு தான் ’ டிக்டேஷன்’ தொடரும் , ஒன்றிரண்டு பக்கம் கட்டுரை நகரும் , அதற்குள் நண்பர்கள் யாராவது அவரைப் பார்த்து பேச வந்துவிடுவார்கள். நண்பர்கள் போனபிறகுதான் கட்டுரை தொடரும். நண்பர்கள் போன பிறகு கட்டுரையை மீண்டும் முதலில் இருந்து படித்து காட்டவேண்டும் , ஆக தி.க.சியின் கட்டுரை எனக்கு மனப்பாடமாகிவிடும். மாலை 6.30 மணி ஆகிவிட்டால் மாநிலச்செய்திகள் கேட்டுவிட்டுதான் மறுவேளை , செய்திகள் கேட்டபிறகு மீண்டும் கட்டுரை தொடரும், கட்டுரையை எழுதிமுடிக்கவும் இரவுச் சாப்பாட்டிற்குச் செல்லவும் நேரம் சரியாக இருக்கும். இப்படிதான் தி.க.சியின் கட்டுரைகள் பலவற்றை அவர் சொல்லச்சொல்ல நான் எழுதியிருக்கிறேன் . கட்டுரையில் சொல்லப்படுகின்ற தகவல்கள் உண்மையில், சரியாய் இருக்க வேண்டும் என்பதில் தி.க.சி மிகவும் கவனமாக இருந்தார். தி.க.சியோடு பயணம் செய்து நான் பெற்ற அனுபவங்கள் இன்றும் எனக்கு உதவியாக இருக்கிறது, உதாரணமாக ஈரோடு சென்று மக்கள் சிந்தனைப்பேரவை தி.க.சிக்கு விருது கொடுக்கும் நிகழ்ச்சியில் நாங்கள் கலந்து கொண்டதை சொல்லலாம்.

தி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. - See more at: http://andhimazhai.com/news/view/thi-kasi-29-04-2014.html#sthash.LiMlof5T.dpuf
நனவிடைத் தோய்தல்

- See more at: http://andhimazhai.com/news/view/thi-kasi-29-04-2014.html#sthash.LiMlof5T.dpufதி.க.சி அவர்களோடு அவரின் இறுதிக்காலத்தில் சுமார் கால்நூற்றாண்டு காலம் மிக நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

- See more at: http://andhimazhai.com/news/view/thi-kasi-29-04-2014.html#sthash.LiMlof5T.dpuf