கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-12

 மாய மங்கை

சோழ நாட்டை ஆண்ட மன்னன் ஒருவனுக்கு ரொம்ப நாளாப் புள்ளையில்லை நீண்ட காலத்துக்கு பிறகு ராணி ஒரு பொம்பளப் புள்ளையைப் பெத்தெடுத்தா ராசா அரண்மனை சோசியனை வரவழைச்சி பிறந்த பிள்ளைக்கு ஜாதகம் கணிக்கச் சொன்னார்.
சோசியன் புள்ளை பிறந்த லக்னத்தைப் பார்த்துட்டு இந்தப் புள்ளை கோட்டைக்கே ஆகாது நாட்டிலும் வாழாது அதனால காட்டுல கொண்டுபோய் போட்டுடுங்க இந்தப் புள்ளை பேயோட அமசத்துல பிறந்திருக்குன்னு சொன்னார்.
சோசியன் சொன்னதைக் கேட்டுட்டு ராசா ரொம்பக் கவலைப் பட்டார் ராணியிடம் பேசினார் பெத்த மனம் கேக்குமா?சோசியன் கிடக்கான் போக்கத்தப் பய அவன் என்னத்தக் கண்டான்னு சொல்லிட்டு ராணி தான் பெத்த புள்ளையைச் சீராட்டி பாராட்டி வளர்த்தா.
ஒரு நாள் ராணியின் தோழிப் பெண் பிள்ளையின் கன்னத்தில் முத்தமிடப் போனா அப்ப புள்ளையின் வாயில் இருந்து பிண வாடை வர்றதை கவனிச்சா இது என்னடா அலுவசமா இருக்குன்னு நினைச்சி ஒடிப்போய் ராணிகிட்ட விவரம் சொன்னா
ராணி ஒடி வந்து தன் குழந்தையைப் பன்னீரால் குளிப்பாட்டி அத்தர் சந்தனம் முதலிய வாசனைத் திரவியங்களைப் பூசினாள்.
நடுச்சாமம் போல ராணி புள்ளைக்கு பால் கொடுப்போமேன்னு நினைச்சி தொட்டிலில் கிடந்த புள்ளையைத் தூக்க போனால் தொட்டிலில் பிள்ளை இல்லை தொட்டில் காலியாக இருந்துச்சு ராணி இது என்னடா மாயமா இருக்குன்னு நினைச்சி தன் தோழிமார்கிட்ட சொல்லி பிள்ளையைத்தேட சொன்னாள்.
அவுகளும் அரண்மனையிலும் தோட்டம் தொரவுகளிலும் பிள்ளையைத் தேடி பார்த்திட்டு திரும்பினாங்க.
கோழி கூப்பிட்டுப் பார்த்தா பிள்ளை தொட்டிலில் கிடக்கு ராணி பிள்ளையைத் தூக்கப்போனாள் பிள்ளையின் வாயிலிருந்து குப்புன்னு பிணவாடை அடிக்குது ராணி இது பிள்ளை இல்லை பேய்யின்னு தோணிட்டு.
மன்னரிடம் நடந்த அலுவசத்தையெல்லாம் ராணி அப்படியே சொன்னாள் ராசா அரண்மனைச் சேவகர்களைக் கூப்பிட்டு இந்தப் பிள்ளைக்கு தோச சாதகமிருக்கு அதனால யாருக்கும் தெரியாம நடுக்காட்டுல கொண்டு போ விட்டுடுங்கன்னு சொல்லிட்டார் நடுக்காட்டுல அந்தப் பிள்ளை புலிப்பால் குடிச்சி வனப்பேச்சியா வளர்ந்து பெரிய மனுஷியாயிட்டு
காவேரி பூம்பட்டினத்தில் பெரிய வாணிகன் ஒருத்தன் இருந்தான் அவனுக்கு ஒரு ஆம்பளப் பிள்ளை பேரு ஆனந்தன்.
வாணிபம் செய்வதற்காக நாடு விட்டு நாடு செல்ல காட்டு வழியே வந்துகொண்டிருந்தான்.
அவன் தனியஏ வருவதை பார்த்த இசக்கி அழகான பெண்ரூபம் கொண்டாள் வழியில் கரையில் நின்ற ஒரு கள்ளி மரத்தில் கொப்பை ஒடிச்சாள் அந்தக் கள்ளி கொப்பை உடனே ஒரு பெண் குழந்தையாக உருப்பெற்று உயிரும் பெற்றது அதை இடுப்புல இடுக்கிகிட்டு காட்டு வழியே வரும் ஆனந்தனை வழிமறித்து காட்டு வழியே போகும் வணிகனே எனக்குத் தாம்புலம் தரிக்கக் கொஞ்சம் சுண்ணாம்பு தாரும் என்றாள்.
இவன் பயந்து போய் அம்மா தாயே எனக்குத் தாம்புலம் தரிக்கும் பழக்கம் இல்லைன்னான்.
இசக்கி விடுவாளா அத்தானே என்னை மறந்துட்டீங்களா?நான்தான் உன்பொண்டாட்டி இதுதான் உமக்கும் எனக்கும் பிறந்த பிள்ளைன்னு சொல்லி இடுப்பில் இருந்த பிள்ளையைக் காட்டினாள்.
இவனுக்கு நடுக்கம் வந்துட்டு உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் காட்டு வழியில் பெண்கள்தான் தனி வழி நடக்கத் தான் பயப்புடுவாங்க ஆனால் ஆம்புளையான என்னை நடுக்காட்டுல வழிமறிச்சி ஏதேதோ சொல்லிக் கலாட்டா பண்றியே எனக்கு கல்யாணமே நடக்கல அப்புறம் எப்படி பொண்டாட்டி பிள்ளை ன்னு பயந்து நடுங்கியபடியே கேட்டான்.
நீ என்னைக் காதலிச்சு கல்யாணம் பண்ணி எனக்கு ஒரு பிள்ளையும் கொடுத்துட்டு இப்ப நான் கலயாணமே பண்ணலைன்னு சொல்லி தப்பிக்கவா பாக்குற?பக்கத்தில் பலையனூர்னு ஒரு ஊர் இருக்கு வாரும் அந்த ஊர் நாட்டாமையிட்ட போய் ஞாயம் கேட்போம்னு சொல்லிக் கூட்டிகிட்டு வந்தா.
அங்குள்ள ஊர் மடத்தின் முன்னால் நின்னு போவார் வருவோரிடமெல்லாம் தன் வாழ்க்கையைச் சொன்னாள்சேதி ஊர் அம்பலக்காரர் வரை போயிட்டு
ஐயா வாணிபம் செய்றத்துக்கு நாடுவிட்டு நாடு போய்க்கிட்டு இருக்கேன் எனக்கு இன்னமும் கல்யாணமே நடக்கலை இவள் யார்ன்னு எனக்கு தெரியாதுன்னு அழதா குறையாச் சொன்னான் ஆனந்தன்.
மாயமங்கை ஐயா நான் இடுப்பில் இருக்கும் என் பிள்ளை கீழே இறக்கி விடுதேன் இந்தக் கூட்டத்துல யாரை பார்த்து அது அப்பான்னு கூப்பிடுதுன்னு பாருங்க அதுக்குப் பிறகாவது நான் சொலறதை நம்பூங்க சொல்லி தன் இடுப்பில் இருந்த மாயக் குழந்தையை இறக்கித் தரையில் நிப்பாட்டினாள் இசக்கி.
பிள்ளையும் அப்பான்னு சொல்லிகிட்டு ஆனந்தோட கால்கள் ரெண்டையும் கட்டிப் பிடிச்சிக்கிட்டு.
அம்பலக்காரும் மற்ற ஊர் பெரியவர்களும் இந்தக் காட்சியை பார்த்துட்டு இசக்கி சொல்கிறது ஞாயம்தான்னு நினைச்சி இப்ப பொழுது இருட்டிட்டு நாளைக்காலையில் பேசீத் தீர்ப்பு சொல்றோம்னு ஒரு மனதா சொன்னாங்க.
பெரியவர்கள் சொன்னபடியே ராத்திரிக்கு ஊர் மடத்தில் இருவரும் தங்கினர்.
இலை குலுங்கா நடுச்சாம வேளையில் இசக்கி ஆனந்தனை எழுப்பினா படுத்துகிடந்த பிள்ளையை எடுத்து ஒங்கி தரையில அடிச்சா அது கள்ளி கொப்பா ஒடிஞ்சி சிதறிச்சி அதை பார்த்து ஆனந்தன் பயந்து நடுங்கினான் பேய் இசக்கி பழிகாரா சண்டாளா என் தலையில் கல்லை தூக்கி போட்டு கொன்ற பாதகா இப்ப உன்னைஎன்ன செய்றேன்னு பார்னு சொல்லி அவனை மட்ட மல்லாக்கத் தரையில் தூக்கி போட்டு வயிற்றைக் கிழிச்சி மணிக்குடலை போட்டுக்கிட்டு பேயாட்டம் ஆடினா பிறகு அறை கதவை உடைச்சிக்கிட்டு திரும்பவும் நடுக்காட்டுகு போயிட்டா அதுக்கப்புறம் சுண்ணாம்பு கேட்டு தொடர்ந்து அவ அலம்பல்.
இசக்கியின் ஆதாளியைத் தாங்க மாட்டாம மக்கள் முப்பந்தல்ங்கிற ஊர்ல இசைக்கிக்கு நிலையம் போட்டுக் கொடுத்து சிலையும் வச்சி பூஜை புனஷ்காரம் பண்ணி கொடையும் கொடுத்து அவளைத் தெய்வமாக கும்பிட்டு வாராங்க காட்டு வழியே போகிறவர்களுக்கு இசக்கி இப்ப காவல் தெய்வமா இருக்கா.
ஒரு பிறவியில் தன்னை கொன்னவனை மறுபிறவி எடுத்துக் கொன்னு பழி தீர்த்துக்கிட்டதால இசக்கியை உக்ரமான பெண் தெய்வமா மக்கள் கும்புடுறாங்கன்னு இசக்கி கதையைச்க் சொன்னார் சிந்தாமணொ ஊரைச்சேர்ந்த கருப்பன்

No comments: