கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-7

 நீலி


பழையனூர்னு ஒரு ஊரு.அந்த ஊர்ல வேலவன் பட்டர்னு ஒருத்தரு வாழ்ந்துகிட்டு இருந்தாரு கோயில்காரியங்களப் பார்த்துக்கறதுதான் அவரு வேலை பட்டருக்குப் பரம்பரையாகவே ஏகப்பட்ட சொத்து சுகங்கள் இருந்துச்சு பொண்டாட்டியோட சந்தோஷமாக குடும்பம் நடத்தி நிம்மதியா வாழ்ந்துகிட்டு இருந்தார்.
அந்த ஊர்ல ஒரு தாசி இருந்தா அவ பேரு சிவகாமி பேராசை பிடிச்சவ அவ வாலிபமா இருக்கும்போது பலதன வந்தர்களைக் கைக்குள்ள போட்டிருந்தா அவ வயித்துல பிறந்த பெண் பிள்ளை லெட்சுமி பேருக்கு ஏத்தாப் போல மாகாலெட்சுமியாட்டம் அழகா இருப்பா அவளுக்கு இப்படி வாழறது பிடிக்கல யாரையாவது காதலிச்சிக் கல்யாணம் பண்ணிகிட்டு பிள்ளைகுட்டிகள் பெத்துக்கிட்டு கெளரவமா வாழணும்னு ஆசைப்பட்டா.
சிவாகாமிதாசியோ தன் மகளோட அழகை வச்சிக் கொள்ளை கொள்ளையாகச் சம்பாத்தியம் செய்யணும்னு நினைச்சா
இந்தச் சமயத்துலதான் வீட்டுல ஏதோ சடவுன்னு சொல்லி வேலவன் பட்டர் ஒருநாள் சிவகாமிதாசி வீட்டுப் படிக்கட்டுல காலை வச்சார் சிவகாமிதாசி வேலவன் பட்டரை வரவேற்று உபசரித்து அவரைத் தன் மகளுக்கு அறிமுகப்படுத்தினாள்.
தாசி மகள் வீடு தேடி வந்த ஆம்பளையை வராதேன்னு சொல்ல முடியுமா?அதனால அருந்தப் பாலுல் சாப்பிடப் பண்ட பலகாரங்களும் தரிக்கத் தாம்புலமும் கொடுத்தாள்.
பட்டரை வளைச்சிபோட்டு அவரிடம் இருக்கும் செல்வங்களையெல்லாம் கறந்துறணும்னு நெனச்சா தாய்க் கிழவி.
தாசி மகள் பட்டரிடம் அன்போடு பழகினாள் பட்டருக்கும் தாசி மகளின் அன்பும் ஆதரவும் பிடிச்சிருந்திச்சு
லெட்சுமியை நாம மட்டும்தான் வச்சிக்கிடணும் அன்னிய ஆம்பளை யாரும் அவளைத் தொடக்கூடாதுன்னு நினைச்சார் பட்டர் அதை தாய் கிழவியிடமும் சொன்னார்.
சிவகாமி இதுதான் பட்டரின் பொன் பொருளை எல்லாம் கறக்க நல்ல தருணம்னு நினைச்சி அவர்ட்ட சம்மதம் சொன்னாள்.
தாசி மகளுக்கு இப்ப ரெட்டை சந்தோஷமாகப் போச்சி பட்டரோடேயே இருந்து காலத்தை கழிச்சிரலாம்னு நினைச்சா ஆனா தாய்க் கிழவி தன் மகளின் அழகைக் காட்டி பணம் நகை நட்டு பண்டம் பாத்திரம் வேணும்னு நச்சரிச்சா.
தாசி மகள் மேல கொண்ட மோகத்தால பட்டர் தன்னிடம் உள்ள பொன் பொருளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகக் கொண்டு வந்து தாசி வீட்டுல கொடுத்துட்டார் கடைசியில கோயில் நகையையும் களவாண்டு வந்து தாய்க் கிழவியிடம் கொடுத்தாரு பேராசை பிடிச்ச அவ இன்னும் கொண்டா கொண்டான்னு ஆலாப் பறந்தா ஆன மகள் தாயிடம் அவரிடம் உள்ள செல்வத்தை எல்லாம் கொண்டாந்து நம்மகிட்ட கொடுத்துட்டாரு நீ ஏன் இன்னும் இப்படி காசு பணம்னு பேயா அலையிற?அன்புன்னா என்னான்னு உனக்குத் தெரியாதா?ன்னு கேட்டுச் சண்டை போட்டாள்.
தன் மகள் தன்னைப் போல இல்லை பட்டரிடம் பாசம் வைக்கிறாள் இது எதிர்காலத்துக்கு நல்லதில்லை அத்தோட பட்டரிடம் இனி கறப்பதற்க்கு இனி ஏதுமில்லைன்னு நினைச்ச தாய்க்கிழவி விட்டுக்கு வந்த பட்டரிடம் இனிமேல் நீ இங்கே வரக்கூடாது ன்னாள்.
பட்டர் வீட்ல பொன் பொருளையெல்லாம் தாசி வீட்ல கொண்டு போய்க் கொடுத்துட்டியேன்னு சண்டைப்போட்டாள் அவர் பொண்டாட்டிக்காரி
நிம்மதி இழந்து பட்டர் ஊரை விட்டே கிளம்பி காட்டு வழியா நடக்க ஆரமிச்சார்.
தாசி மகள் பட்டரைப் பிரிஞ்சி வாழமுடியாதுன்னு நினைச்சா தன் தாயி செஞ்சது கொஞ்சமும் நியாயமாப்படலை அவளுக்கு தன்னிடம் உள்ள நகை நட்டுகளையெல்லாம் மடியில கட்டிகிட்டு பட்டரைத் தேடி ஊரை விட்டுக் கிளம்பிக் காட்டுக்குப் போனாள்.
காட்டுல வச்சி பட்டரைச் சந்திச்சா அழுது கண்ணீர் விட்டா தான் மடியில் கட்டிக்கொண்டு வந்த நகைகளை எல்லாம் காட்டி நானும் உங்களோட வாரேன் நாம வேறு எங்காவது ஒரு ஊருக்குப் போயி தாலி கட்டிக்கிட்டு பொண்டாட்டி புருசனா வாழலாம்னு சொன்னா.
பட்டர் தாசி மகளை ஏமாத்தி அவளிடம் உள்ள நகைகளைக் கைப்பத்தணும்னு நினைச்சார் அதனால அவளை அணைத்துக் கோஞ்சிக் குலாவினார் அவளும் மனம் மகிழ்ந்து அவர் மடியில் படுத்துத் தூங்கினாள்.
அவ நல்லா கண்ணசந்து உறங்கும்போது மடியில் இருந்துஇ இறக்கித் தரையில் கெடத்திட்டுப் பக்கத்தில் கிடந்த ஒரு பெரிய கல்லைத் தூக்கி அவ தலையில போட்டுக் கொன்னுட்டார்.
லெட்சுமி அந்த இடத்துலேயே துடிதுடிச்சி செத்துட்டா பிறகு அவ மடியில் இருந்த நகை நட்டுகளை எல்லாம் எடுத்துக்கிட்டு புறப்படும்போது அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்துச்சி பக்கத்துல இருந்த ஒரு கிணத்துக்குள்ள இறங்கினாரு தண்ணீர் குடிக்க அந்தக் கிணத்துப் படிக்கட்டுல காலை வச்சி இறங்கும்போது ஒரு படிக்கட்டு பொந்துல இருந்த பாம்பு பட்டரைக் கொத்திட்டு உடனே பட்டர் நிலை தடுமாறி கிணத்துக்குள்ளே விழுந்து செத்துட்டார்.
ஆடு மாடு மேய்க்கக் காட்டுக்கு வந்த பிள்ளைகள் தாசி மகளும் பட்டரும் தனித்தனியே செத்துக்கிடக்கறதைப் பார்த்து ஊருக்குள்ள போயி சேதி சொன்னாங்க
தாய்க் கிழவி தன் மகள் முகமளிஞ்சி செத்துக் கிடந்ததைப் பார்த்துட்டு அந்த இடத்துலயே தன் நாக்கைப் பிடிங்கிச் செத்துட்டா
பட்டரின் பொண்டாட்டிக்காரி கெணத்துல பிணமா மிதக்கும் தன் புருசனோட சடலத்தைப் பார்த்து அவளும் அதே கிணத்துக்குள்ளே பாஞ்சு செத்துட்டா இப்படி பட்டர் குடும்பமும் தாசி குடும்பமும் அழிஞ்சிப் போச்சி
தாசி குலத்துல பிறந்தாலும் ஒருத்தனோடவே வாழ்ந்து அவனாலேயே கொல்லப்பட்டதால மக்கள் லெட்சுமியை நீலின்னு தெய்வமாக கும்பிடுறாங்கன்னு கதையைச் சொன்னார் தென்காசி ஜோதிடர் மாடசாமி.
பின் குறிப்பு:
நீலி என்ற தெய்வமாக ஒரு பிறப்பில் வாழ்ந்தவள் தன்னைக் கொன்ற பட்டரைப் பழிவாங்க மறு பிறப்பில் இசக்கியாகப் பிறக்கிறாள்

No comments: