கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-9

 சிவஞான வெளியப்பர்


வறுவன் சீனம்னு ஊரு அங்க ஒரு ராசா இருந்தாரு அவரு தன்னோட அரண்மனைத் துணி தொவைக்க ஒரு வண்ணான ஏற்பாடு செஞ்சிருந்தாரு அந்த வண்ணான எல்லோரும் ராச வண்ணானுதான் சொல்லுவாங்க கல்யாணமாகி ரொம்ப காலமாகியும் புள்ள்குட்டி இல்லாததால அவரு கோயில் குளம்னு அலைஞ்சுகிட்டேயிருந்தாரு.
ஒரு நாளு ஆத்துல துணி தொவைச்சிக்கிட்டியிருக்கும்போது ஆத்தோரமிருந்த மரத்தடியில் ஒரு பச்சைபுள்ள அழுகுற சத்தம் சத்தத்தக் கேட்டு ராசா வண்ணானும் அவரு பொண்டாட்டியும் ஒடிப்போய் பார்த்தா கண்ணுக்குஎட்டின தொலைவு வரைக்கும் ஈங் குஞ்சைக்கூட காணலை .துணியில சுத்தி சாமியாட்டம் ஒரு கொழந்தை ரொம்ப நாளா குழந்தை இல்லாம கோயில் குளம்னு சுத்தினத்துக்கு கடவுளா கொடுத்த புள்ளைன்னு சொல்லி ராச வண்ணானோட பொண்டாட்டி கொழந்தைய வீட்டுக்கு தூக்கிட்டு வந்துட்டா புள்ளகலி தீர்க்க கிடச்ச புள்ள இல்லியா பொன்னப்போல பூவப்போல புள்ளய பொத்திப் பொத்தி வளர்த்தாக ராச வண்ணானும் அவரு பொண்டாட்டியும்.
இந்த புள்ளைக்கு நாலு வயசான போது ராணிக்கு தேவலோகத்து ரம்பா மாதிரி ஒரு பொண் கொழந்த பொறந்துச்சு இவங்க ரெண்டு பேரும் வளர்ந்து எளவட்ட பிள்ளையானாங்க.
அப்ப ஒரு நாளு ராச வண்ணானுக்கு சொகமில்ல அரண்மனைக்கு துணி எடுக்க போக ஆளில்லை ராச வண்ணான் தம் பையனைப் போக சொன்னாரு பையனும் போனாரு அங்க போனவரு துணி எடுக்கும் போது ராசா மகள எப்படியோ பார்த்துட்டான் அந்தப் பொண்ணும் இவனப் பாத்திருச்சு.
பார்த்த நிமிஷத்துல ரெண்டு எள வட்டத்துக்குள்ளேயும் என்னமோ ஆயிருச்சு அதுக்கப்புறம் சும்மா இருக்க விடுமா மனசு அடுக்கடி அரண்மனைக்கு துணி எடுக்கவும் திரும்பக் கொடுக்கவும் போக ஆரமிச்சான் ராச வண்ணானோட புள்ள
அந்தப் பொண்ணு மட்டும் எப்படி சும்மா இருக்கும்?ஒரு நாள் ரொம்ப தைரியமா வந்து நீ என்னயக் கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டுச்சி பொண்ணே கேட்டதுக்கப்புறம் வீரம் வந்து இவனும் சரின்னு ரொம்ப வேகமாச் சொல்லிட்டான் சொன்னவன் ஒரு நாள் பார்த்து பூக்கெட்டிப் பண்டாரம் மாதிரி வேசமெல்லாம் கட்டி அரண்மனைக்கு போயி அரண்மனை நந்தவனம் வழியா ராசா மகளக் கூட்டிக்கிட்டு போயிட்டான்.
ரொம்ப நேரம் கழிச்சிதுதான் ராசாவுக்குத் சேதி தெரிஞ்சது சேதி செரிஞ்சு கொந்தளிச்சுப் போன ராசா உடனே அங்கிருந்த வீரங்கிட்ட அந்த ஒரு காலியையும் வண்ணான் மகனையும் எங்கிருந்தாலும் கண்டுபிடிச்சுக் கொன்னு போடுங்கன்னு உத்தரவு போட்டாரு இந்த விரன்களும் அவங்க ரெண்டு பேரையும் நாலா திக்கிலும் தேடுனாங்க.
இந்த ராசா வண்ணான் காதலியை மேலநீலித நல்லூருல ஆளுசரத்துக்கு வளர்ந்து நின்ன நாணல் புல்லுக்குள்ள ஒளிச்சு வச்சிட்டு பக்கத்துல இருந்த குருக்கள் பட்டிக்கு சாப்பிடறத்துக்கு ஏதாவது வாங்கிட்டு வரன்னு போயிட்டான் அப்ப அங்க தேடிஅலைஞ்சுகிட்டிருந்த வீரங்க நாணல் பொதருகுள்ள இருந்த ராசா மகளோட சேலத்துணியப் பார்த்துட்டாங்க சரி பொதருக்குள்ள ரெண்டு பேரும் தான் இருப்பாங்கன்னு நெனச்சிகிட்டு பாவிங்க பொதருக்கு தீவச்சுட்டாங்க நாணால் பொதரு எரியறதப் பார்த்த வண்ணான் மகன் அலறி அடிச்சிகிட்டு அவள எப்படியாவது காப்பாத்தணும்னு ஒடோடி வந்தான் ஆனா இந்த அரண்மனை வீரங்க அவங்கிட்ட சண்டைபோட ஆரமிச்சாங்கதெய்வாம்சம் பொருந்துன நம்ம ராசாவண்ணான் மகன் வீரமா சண்டபோட அரண்மன வீரங்க செத்துமடிஞ்சாங்க சின்ன தீக்குட படாம பொண்ணக் காப்பாத்திட்டாரு
அத்தன வீரங்களையும் தோக்கடிச்சுது ராசவண்ணான் மகனில்லை சிவபெருமானோட தெய்வ அம்சமான வெளியப்பர்த்தான் அவரோட வீரமும் தீரமும் தான் அத்தனை வீரங்களையும் மண்ணாக்கிடுச்சின்னு சரியா புரிஞ்சு தெளிஞ்ச ராசா தன் பொண்ணை சிவஞான வெளியப்பருக்கே கல்யாணம் செஞ்சு வைச்சாரு.
வெளியப்பருக்கிட்ட புஷ்கரணிங்கிற ஊரணியோட காவல்சாமி புஷகலிகாம்பிகை தன்னையும் கல்யாணம் செஞ்சுக்கணும்ம்னு கேட்க வெளியப்பரு அவங்களையும் ஆட்கொண்ட அந்தப் பொண்ணோட சாபத்துக்கு விமோசனம் கொடுத்தார் பூரணி புஷ்கராம்பிகை சமேக சிவஞான வெளியப்பராக அருள் செய்யுறார் என்று சிவஞான வெளியப்ப சாஸ்தாவின் வரலாற்றைச் சொன்னார் ஊத்துமலையைச் சார்ந்த எண்பது வயதான வித்வான் தங்கபாண்டியன்.

No comments: