கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-11

மாடாத்தி அம்மாள்

வேம்பாளம்பட்டியில பெரியான் சின்னான்னு அண்ணன் தம்பிங்க இருந்தாங்க.அவங்களுக்கு ஒரு கிடை ஆடு இருந்துச்சி அவங்க ஊர்ல ரெண்டு மூணு வருசமா மழை பெய்யல குடிக்க குளிக்கத் தண்ணிக்குட ரொம்பக் கஸ்டமாயிட்டு பிறகு ஆடு மாடுகள் என்ன செய்யும்?
சரி இனிமேலும் நம்ம காட்டுல ஆடுகளை வச்சிக் காப்பாத்த முடியாதுன்னு நினைச்ச கீதாரிங்க மூன்றடைப்பு பக்கத்துல உள்ள மலையான் குளம்ங்கிற ஊருக்கு வந்தாங்க
மலையான்குளத்துல மாறநாடார் மாணிக்க நாடார்னு அண்ணன் தம்பிஙக இருந்தாங்க அவங்களுக்குச் சொந்தமா மலையான் குளத்தை சுத்தி ஏகப்பட்ட நஞ்சைக் காடுகளும் புஞ்சைகளும் இருந்துச்சி நிலத்துல ஆடுகள கட போட அவங்ககிட்ட அனுமதி கேட்டு அங்க கிட போட்டாங்க கீதாரிங்க.
அந்த ஊர்ல மாடத்தி அம்மாளுன்னு ஒருத்தி இருந்தா அவளுக்குக் கல்யாணமாகி புருசக்காரன் சின்ன வயசுலேயே போய்ச் சேர்ந்துட்டான் பிழைப்புக்காக ஒரு செம்மறிக் ஆட்டுக்குட்டியை பிடிச்சி தோட்டம் தொரவுகளுக்கு பத்திக்கிட்டு போய் மேச்சிகிட்டு இருந்தா.
அந்த ஊர்ல ஒவ்வொரு வீட்டலையும் அய்யனார் கோயிலுக்கு ஒரு ஆட்டுக்கிடாயை நேர்ந்து விட்டுக்கோயில் கொடை வரைக்கும் வளர்ப்பாங்க மாடத்தி ஒத்தைக் கிடாயை மட்டும் கை வளர்ப்பா வளர்க்கிறதைப் பார்த்துட்டு அக்கம் பக்கத்து வீடுகள்ல உள்ளவங்களும் ஆளுக்கொரு கிடாயை கொடுத்து வளர்த்து தாயேன்னு சொன்னாங்க.
காசு பணம் கிடைக்குமேன்னு நினைச்சு மாடாத்தியம்மாள் சரின்னாள் கிடைக்காரர்களின் ஆடுகள் ரெண்டு வள்ளம் மூணு வள்ளம் இருக்கும் அத்தனையும் பொட்டை ஆடுகள் இனத்துக்கு ஒண்ணொ இரண்டோ கிடாய்கள்தான் ஆட்டு மந்தையில் கிடந்தன.
மாடத்தி தான் வளர்க்கும் கிடாய்களை மந்தை ஆட்டின் பக்கம் விடாமல் காபந்து பண்ணியே வளர்த்தாள்
மழை காலம் வந்தது கோடை மழை எல்லாப் பக்கமும் பெஞ்சுது காடு கரையெல்லாம் புல் முலைத்தது வேம்பாளம் பட்டியிலும் பூமி செழித்தது அதனால மழையான் குலத்துல இருந்து ஆட்டு மந்தைகளை பத்திகிட்டு சொந்த ஊருக்கே புறப்பட்டாஙக கீதாரிங்க.
ஆட்டு மந்தையை கீதாரிகள் பத்திகிட்டு வரும்போது ஆட்டு மந்தையோடு சேர்ந்து மாடத்தியம்மாள் மேய்க்கும் கிடாய்களும் போயிட்டு இதை மாடத்தியம்மாள் கவனிக்கல
ஆட்டு மந்தையோடு ஏழெட்டு கிடாய்கள் சேர்ந்து வந்ததை கோனார்கள் கவனிச்சும் கண்டுக்காதது மாதிரி உட்டுட்டாங்க.
தூக்கம் கலைஞ்சி மாடத்தியம்மாள் கண் விழிச்சி பார்தாள் கிடாய்கள் ஒண்ணையும் காணலேன்னு அழுதுகிட்டு பக்கத்து புஞ்சைகள்ல ஜோலி பார்த்துகிட்டு இருந்தவங்ககிட்ட கேட்டாள்.
அவங்க நம்ம ஊர்ல ஆட்டுகிடை போட்டிருந்த கீதாரிகள் இன்னிக்கித்தான் ஆட்டு மந்தையை பத்திகிட்டு அவங்க ஊருக்குப் போனாங்க ஒரு வேளை கிடாய்கள் ஆட்டு மன்தையோட போனாலும் போயிருக்கும் நீ போய் அவங்ககிட்ட கேளுன்னாங்க.
ஆட்டு மந்தைகளின் காலடித் தடத்தைப் பார்த்து ஒட்டமும் நடையுமா போனாள் மாடத்தி நேரம் நல்லா இருட்டிட்டு அதுக்கு மேல அவளாலயும் நடக்க முடியலை கீதாரிகள் ஆட்டு மந்தைபோன திசையும் தெரியல அதனால பாதையோரமா இருக்கிற ஒரு காட்டுக் கோயில்ல பசியோட ராவேளையில் சாமியே நீதான் துணைன்னு நினைச்சு தாங்கிகிட்டா.
கீதாரிகள் ரெண்டு பேரும் ராவோட ராவா ஆடுகள் ராத்தங்கும் போதே தப்பி வந்த கிடாய்களின் முடியை வெட்டி கிடாய்களின் அடையாளத்தை மாத்திட்டாங்க.
மறுநாள் காலையில் எந்திரிச்சி ஒரு வழிப்போக்கனிடம் எதுத்தாப்புல ஆட்டு மந்தை ஏதாச்சும் போச்சான்னு கேட்டாள் மாடத்தி வழிப்போக்கம் ஆமான்னு சொல்லி ஆட்டு மந்தை போன வழியையும் காமிச்சான்.
வேகவேகமாக ஒடி மாடத்தி அம்மாள் கீதாரிகளின் ஆட்டு மந்தையை மறித்து ஐயா நான் வளர்க்கும் எழெட்டு கிடாய்களும் அங்க ஆடுகளோடு வந்துச்சான்னு பத பதைச்சுக் கேட்டாள்
கீதாரிகள் ரெண்டு பேரும் இல்லையே உனக்கு சந்தேகம்னா ஆட்டு மந்தைக்குள் போயிப்பாருன்னாங்க
மாடாத்தி அம்மாள் ஆட்டு மந்தைக்குள் போய்ப் பார்த்தாள் அவ வளர்த்த ஆடுகள் அவளுக்கே தெரியாதா அம்புட்டுக் கிடாய்களும் ஆட்டு மந்தைக்குள்ள தான் கிடந்தன கீதாரிகள் பொய் சொல்றாங்கன்னு தெரிஞ்சுபோச்சி.
அங்க ஆட்டு மந்தைக்குள்ள தான் என்னோட கிடாய்கள் கிடக்கும் அதுக அத்தனையும் கோயிலுக்கு நேர்ந்து விட்டது அத்தோடு அது அடுத்தவங்க கிடாய்க இப்ப கிடாய்கள் இல்லாம நான் ஊருக்குள்ள போக முடியாதுன்னு சொல்லி அழுதாள் மாடாத்தியம்மாள்
கீதாரிகள் மனம் இரங்கலை நீ வளர்த்த கிடாய்கள்னா நீ தூர நின்னு கூப்பிடு அதுக உன் பின்னாலயே வந்திரும் அப்படி வந்தா அந்தக் கிடாய்களை நீயே பத்திக்கிட்டுப் போன்னார் பெரியான்.
மாடத்தியம்மாளும் ஆட்டு மந்தைகிட்ட போஉ நின்னு மே மே ன்னு கிடாய்களை கூப்பிட்டு பார்த்தாள்
பொட்டை ஆடுகளின் பின்னாள் அலைந்த கிடாய்கள் மாடத்தியம்மாளின் குரலைக் காதில் வாங்கவே இல்
பிறகு என்ன செய்ய படுபாவிகளா என் கிடாய்களை அடையாளம் மாத்தி ஆட்டோட சேத்துட்டீங்க கோயிலுக்கு சேர்ந்த கிடாய்களை தவித்து மத்த ஆடுகள் அம்புட்டும் நீங்க வீடுபோய்ச்சேருவதர்க்குள் சரஞ்சரமாய் செத்து மடியும் அதுக்கு பிறகாவது கோயில் கிடாய்களை உடமஸ்தங்ககிட்ட ஒப்படைங்க நான் போய் ஏதாவது ஒரு பாழுங்கிணத்துல விழுந்து போய் செத்துப் போறேன்னு சொல்லி சாபம் கொடுத்துட்டு ரெண்டு கை நிறைய மண்ணை அள்ளி வீசிட்டு விறு விறுன்னு நடந்துபோய் ஒரு பாழுங்கிணத்துல விழுந்து உயிரை மாயிச்சிக்கிட்டா.
மாடத்தியம்மாளின் சாபம் பலித்தது கீதாரிகள் தம் சொந்த ஊரான வேப்பாளம்பட்டி போய் சேர்வதற்குள் ஆடுகள் எல்லாம் கொத்து கொத்தாச் செத்து மடிந்தன.ஆனால் மாடத்தியம்மாள் வளர்த்த கிடாய்களுக்கும் மட்டும் எந்தச் சேதாரமும் வரல கீதாரிகள் ரெண்டு பேரும் தப்பை உணர்ந்து மலையான் குளத்துலகொண்டு போய் அந்தக் கிடாய்களை மாற நாடார் மூலமா உடமஸ்தர்களிடம் ஒப்படைத்து மன்னிப்பும் கேட்டு வந்தாங்க அது மட்டுமில்லாம தன் ஆடு குட்டிகளுக்கு காலகாலத்துக்கு எந்தச் சேதாரமும் வரக் கூடாதுன்னு நினைச்சு மாடத்தியம்மளுக்கு கோயில் கட்டிக் கும்பிடுறாங்கன்னு மாடத்தியம்மாளின் கதையைச் சொல்லி முடித்தார் பரும்படியூரைச் சேர்ந்த லெட்சுமணன் என்ற தகவலாளர்

No comments: