கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-15

 மந்திரமூர்த்தி

அந்தக் காலத்துல திருநெல்வேலி சீமை சேந்திமங்கலத்துல செம்பரன்னு ஒருத்தன் இருந்தான்.அவனுக்கு ஏகப்பட்ட சொத்து நிலம் எல்லாம் இருந்திச்சு நாலு ஜோடி உழவு மாடுகளை வச்சிருந்தான் வெள்ளாம விளைச்சலும் அவன் ராசிக்கு நல்லா விளைஞ்சது இவனும் பலருக்கும் தலைவன் மாதிரிச் செயல்பட்டு வந்தான்.அந்த ஊர்ல துணி துவைச்சிக் கொடுக்க யாரும் இல்லாததால இவன்கிட்ட வந்து மக்கள் முறையிட்டாங்க இவனும் நீலம் பேச்சிகின்றபுதுமணத் தம்பதியை துணி வெளுக்கிற வேலைக்கு வச்சான் அவுகளுக்கு ரெண்டு கழுதையும் வாங்கிக் கொடுத்தான்.
பேச்சி குழந்தை உண்டாகி அழகான் ஒர் ஆம்பளைப் பிள்ளையை பெத்தெடுத்தாள் வாசமுத்துன்னு பேரு வச்சாங்க.
பேச்சியின் அண்ணான மாடன் மந்திரிகன்னு சுத்துபட்டி கள்ல பேர் வாங்கி இருந்தான்.செம்பரனுகுக் கல்யாணமாகி ரொமபக் காலமாகியும் பேர் சொல்ல பிள்ளை பிறக்கலை அவன் பொண்டாட்டி பேரு செம்பகவள்ளி அவளும் ரொம்ப சோர்ந்து போய் இருந்தா வேண்டாத தெய்வம் இல்ல சிலர் மாடனைப் பத்தி சொல்லி அவன்கிட்ட குறி கேக்கச் சொன்னாங்க.
செம்பரன் தன் குறையை மாடனிடம் சொன்னான்.மாடன் மாந்திரீகம் தெரிஞ்சவன் சில கணக்குகளை(மந்திரங்களை)சொல்லிக் கொடுத்தான் செம்பரனுக்கு அதுபடியே அவனும் செய்ய செண்பக வள்ளி கருத்தரிச்சா அழகான பொண்ணு பொறந்துச்சி சோணமுத்துன்னு பேர் வச்சி வளர்த்து வந்தாங்க.
அவளும் வளர்ந்து ஆளாக நீலன் மகன் வாசமுத்துவும் வளர்ந்து ஆளானான் வாசுமுத்து பெத்தவங்ககூடச் சேர்ந்து துணி வெளுக்கப் போனான் ஒருநாள் மாடன் ஊரான தாழகுடிக்கு போய் மாந்தீரிகம் படிக்கணும்கிற தன்னோட ஆசையை தாய்மாமன் மாடனிடம் சொன்னான்.மாடனும் தன் தங்கை மகன்ங்கிறதுல்ல வாசமுத்து தனக்குத் தெரிந்த மந்திர தந்திர வித்தைகளையெல்லாம் ஒளிமறைவு இல்லாமல் சொல்லிக் கொடுத்தான் மாடனுக்கு ஒரு மகன் இருந்தாள் பேரு சாந்தி அவளும் வளர்ந்து வாலிபமாகி இருந்தாள்.அவள் தன் அத்தை மகனான வாச முத்துவைக் காதலிச்சா இவனும் சம்மதிக்க வாசமுத்துவுக்கும் சாந்திக்கும் கல்யாணம் நடந்துச்சி.
வாசமுத்துக்கு ஒரு சேக்காளி (நண்பன்)இருந்தான் அவன் பனை ஏறி பதனி இறக்கி விக்கறவன் வாசமுத்துக்கு தேவைப்படும் போது பதனிக் கலயத்தில் சுண்ணாம்பு தடவாமல் தனிக் கல்லை இறக்கி கொடுப்பான்.
வாசமுத்து கள் குடித்த மயக்கத்தில் ஒரு நாள் தான் மாந்தீரிகம் கற்று வந்திருக்கிற விவரத்தை சேக்காளிகிட்ட சொன்னான்.உடனே சேக்காளி எப்படியாவது வாசமுத்துகிட்டேருந்து மாந்தீரிக வித்தையை தான் கத்துகிடணும்னு நினைச்சி வாசமுத்துக்கு இஷ்டம் போல தனிக் கள்ளை அவன் கேட்கும்போதெல்லாம் ஊத்திகிகொடுத்தான்.
இது இப்படிப்போக ஒருநாள் செம்பரன் வீட்டுக்கு வாசமுத்து அழுக்குத் துணி எடுக்கபோனான் வீட்டில் யாரும் இல்லை செம்பரனோட மகள் சோணமுத்து மட்டும் தனியே இருந்தாள் வாசமுத்துவை நேருக்கு நேருக்கு நேராப் பார்த்ததும் முதல் பார்வையிலேயே மனசைப் பறிகொடுத்தா சோணமுத்து வாசமுத்துவும் அவள் மேல் மையம் கொண்டான்.
மாந்தீரிகம் படித்த வாசமுத்து எளிதாக அவளை வசப்படுத்திட்டான் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புனாங்க.
சோணமுத்து படுத்து கிடக்கும் இடத்துக்கு நடுசாமம்போல் எலி ரூபம் கொண்டு வாசமுத்து போய் அவளை கூடிக்கிட்டு இருந்தான் ஊர் உலகத்துக்கு தெரியாம அவங்க பழகிக்கிட்டு இருந்தாங்க.
ஒருநாள் குடிபோதையில் வாசமுத்து வாய் தவறி தன் சேக்காளிகிட்ட தான் சோணமுத்துவிடம் ரகசியமாக பழகுவதைச் சொல்லி விட்டான்.
வாசமுத்துவிடம் எப்படியாவது மாந்தீரிக வித்தைகளைப் படிச்சிரணும்னு நினைச்ச சேக்காளி குடிபோதையில் இருந்த வாசமுத்திடம் நீ எனக்கு மாந்தீரிக வித்தைகலை சொல்லி கொடு இல்லைன்னா செம்பரன்கிட்ட நீ அவன் மகளுடன் தொடுப்பு வச்சிருகன்னு சொல்லிடுவேன்னு மிரட்டினான்.
வேற வழியில்லாம வாசமுத்து குடி போதையில் மாந்தீரிக வித்தைகளை அறைகுறையாக சொல்லிக் கொடுத்தான் மாந்திரிக வித்தைகளை சேக்காளி வாசமுத்துவை எப்படியாவது காலி பண்ணணும்னு நினைச்சான்.
அதுக்கு தகுந்த சந்தர்ப்பமும் வந்துச்சு ஒருநாள் செம்பரன் வாசமுத்துவோட சேக்காளிகிட்ட குடிக்க வந்தான் இதுதான் சமயம்னு நினைச்ச சேக்காளி உன்மக சோணமுத்து வாசமுத்துங்கிறவனுக்கு தொடுப்பா இருக்கான்னு போட்டுக் கொடுத்தான்.
செம்பரன் பெருங் கோபத்தோட வீடு போனான் சேதி தெரிஞ்ச சோணமுத்து யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு மலங்காட்டுக்குப் போயிட்டான்
செம்பரன் ஒரு பெரிய கூட்டத்தோட மாந்திரீகம் வாசமுத்துவை தேடி அலைஞ்சான் வாசமுத்து தன் மாந்திரீக சக்தியால் சோணமுத்து இருக்கும் இடத்தைக் கண்டுபிடிச்சி அவளோட சேர்ந்து மலங்காட்டுக்குள்ள இருந்தான்.
சேக்காளி தான் கற்ற அரைகுறை மாந்தீரிகத்தால் வாசமுத்துவும் சோணமுத்துவும் மறைஞ்சி இருக்கிற இடத்தைக் கண்டுபிடிச்சி செம்பரன்கிட்ட சொல்லிட்டான்.
வாசமுத்து மாந்திரீகத்தால் தப்பி ஒடி விடுவான் என்பதால் நடுச்சாமம்போல ஒரு கூட்டமா மலங்காட்டுக்குபோய் வாசமுத்தையும் சோணமுத்தையும் வளைச்சிப்பிடிச்சி அந்த இடத்துலையே அவங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டாங்க.
தன் புருஷன் கொல்லபட்ட சேதியை அறிஞ்ச சாந்தியும் உடன் கட்டை ஏறி தன் உயிரை விட்டுட்டா மந்திரம் கற்றாலும் கள் குடியால் நம்பிக்கை மோசத்தால் உயிரை விட்ட வாசமுத்தைத்தான் மக்கள் மந்திரமூர்த்தி என்று சாமியாகக் கும்பிடுறாங்கன்னு கதையைசொல்லி முடித்தார் பொன்னன்

No comments: