ஸ்ரீஆதிசங்கரர்
நெல்லி மழை
ஸ்ரீஆதிசங்கரர் சோமதேவர் என்பவர் வீட்டின் முன்பாக சென்று “பவதி பிக்ஷாந்தேஹி“ என ஒருமுறை உச்சரித்தார். “இதுவே ஒரு யாசகன் வீடு. இது தெரியாமல் இந்த வீட்டுக்கு யாரோ ஒரு அந்தணர் யாசகம் கேட்டு வந்துள்ளாரே. அவருக்கு யாசகம் தருவதற்கு வீட்டில் ஏதும் இல்லையே….அம்மா இது என்ன சோதனை.?“ என்று தன் குடும்ப வறுமையை நினைத்து அழுதாள் அந்த குடும்பத்தின் தலைவி. மறுபடியும் ஆதிசங்கரர் “பவதி பிக்ஷாந்தேஹி“ என்று குரல் கொடுத்தார். “அடடா… சிவனே நேரில் வந்திருப்பது போல தெய்வீகமாக இவன் இருக்கிறானே. இவனிடம் வீட்டில் ஒன்றும் இல்லை போ என்று எவ்வாறு கூறுவது?. அப்படிச் சொன்னால் அவன் முகம் வாடிவிடுமே. இறைவா ஏன் இந்த கொடுமையான வறுமை.“ என்ற கலங்கி நின்றாள் சோமதேவர் மனைவி. ஆதிசங்கரர் மூன்றாவது முறையாக “பவதி பிக்ஷாந்தேஹி“ என்றார். தண்ணீரில் விழுந்தவன் தப்பி பிழைக்க தெய்வம் மூன்று முறை சந்தர்ப்பம் தரும். அந்த மூன்று சந்தர்ப்பத்தில் தண்ணீரில் விழுந்தவன் தப்பிக்க வழி தேட வேண்டும். நான்காவது சந்தர்ப்பம் கிடையாது – மரணம்தான் முடிவு. அதைபோல இந்த அந்தணச் சிறுவன் “பவதி பிக்ஷாந்தேஹி“ மூன்றுமுறை சொல்லிவிட்டான். நான்காவது முறை சொல்ல மாட்டான். சாபம் விடுவான். இருக்கின்ற வறுமை போததென்று அவன் சாபக் கொடுமை வேறு சுமக்க வேண்டும். வேண்டாம் அந்த நிலை. வீட்டில் எது இருக்கிறதோ அதை கொடுப்போம்.“ என்று அந்த தாய் தேடினாள். அவள் வீட்டில் சாப்பிடும்படி ஏதும் இல்லை. ஒரு காய்ந்த நெல்லிக்கனியை தவிர. அந்த காய்ந்த நெல்லிக்கனியை தயக்கத்துடன் ஆதிசங்கரருக்கு தந்தாள். அதை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட ஸ்ரீஆதிசங்கரர், அந்த தாயின் தயக்கத்தை – அந்த குடும்பத்தின் வறுமை நிலையை உணர்ந்தார். “அம்மா, ஏன் உங்கள் கண்களில் கண்ணீர். நீங்கள் தந்த இந்த நெல்லிக்கனி ஸ்ரீமகாலஷ்மிக்கு உகந்தது. இன்று அட்சயை திருதியை. தூய அன்புடன் நீங்கள் தந்த தானத்தில் நான் மனம் மகிழ்ந்தேன். என்று கூறி, ஸ்ரீ கனகதார ஸ்தோத்திரத்தை பாடி, ஸ்ரீமகாலஷ்மியை அழைத்தார் ஆதிசங்கரர். ஆதிசங்கரரின் அழைப்பை ஏற்று அன்னை ஸ்ரீமகாலஷ்மி வந்தாள். தானம் தந்த அந்த பெண்ணின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையெ பொழிந்தாள்.
ஒருநாள் சங்கரர் ஆற்றுக்குக் குளிக்கச் சென்று கொண்டிருந்தார். அவரைப் புலையன் ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் ஒன்று இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் அவனிடமிருந்து துர்நாற்றம் வீசியது. அவன் மாமிசத்தைச் சாப்பிட்டபடி சங்கரரை நெருங்கினான்.
இதைக் கண்ட சங்கரர், “டேய், விலகிப் போடா!'' என்று எச்சரித்தார். அவன் உடனே, “நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலக வேண்டும்?'' என்று எதிர்க் கேள்வி கேட்டான். அப்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. இதையடுத்து "மனீஷா பஞ்சகம்” என்னும் பாடலைப் பாடினார். அப்போது அங்கு புலையன் வேடத்தில் வந்த சிவபெருமான் காசிவிஸ்வநாதராக மாறிக் காட்சியளித்தார்

No comments:
Post a Comment