கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-6

 அக்கினிபுத்திரி


இலேசா நெருப்புப் பட்டாலே துடுச்சிப் போய் ஊரையே கூட்டுறோம் ஆனா ஊரே கூடி தீ வச்சும் ஒடம்புல ஒரு சின்ன தீப்புண்ணுக்கூட இல்லாம சமாதியானா ஒருத்தி.
திருநெல்வேலி ஆலங்கொளத்துல மாவளியூத்துன்னு ஒரு சின்ன கிராமம் அந்த ஊரு பண்ணையாரு வீட்டுலமாடு கன்ன பாத்துக்க எளவட்டமா கீழ்ப் பட்டரயச் (ஜாதி)சேர்ந்த ஒருத்தன் வேல பாத்துகிட்டு இருந்தான் அவன் கருப்பா இருந்தாலும் ஆளு அம்சமா கட்டுமுட்டா செஞ்சு வச்ச செலமாதிரி இருந்தான்.அந்த பண்ணையாருக்கு அழகா செக்கச் செவேல்னு ஒரு பொண்ணு இருந்தா.
அந்தக் காலத்துல பொழுது நெலம் கீறத்துக்கு (கோழி கூப்பிடும்)முன்னாடியே கன்னி புள்ளைக எழுந்திருச்சி மாட்டுத்து தொழுவத்துக்கு போய் எளம் மாட்டு சாணி எடுத்து வாசத் தெளிப்பாக பண்ணையாரு மகளும் கொரங்கு இருட்டுல எந்திருச்சி பொறவாச வழியா மாட்டுத் தொழுவத்துக்கு வந்து எள மாட்டுச் சாணி அள்ளிட்டு வந்து வாசத் தெளிப்பா பொறுப்பான இந்தப் புள்ளையோட அம்மா செத்துப் போயிட்டா ரெண்டாந்தாரமா ஒருத்திக் கெட்டிக்கிட்டு வந்தாரு சித்திக்காரி சதா இவகிட்ட கைப்பட்டாக் குத்தம் கால் பட்டாக் குத்தம்னு எசலிப்பு (சண்டை)போட்டுக்கிட்டு இருப்பா.அந்தப் பொண்ணு நெதமும் எளமாட்டுச் சாணி எடுக்க வரதப் பார்த்து இந்த எளந்தாரி அவ விரும்புகிற பசுமாட்டுச் சாணியாப் பார்த்து எடுத்து வச்சி அவகிட்ட கொடுப்பான் இவளுக்கு அவன் மேல ஒரு கண்ணு அவன் காடு கரைக்கு மாடு மேய்க்க போகும்போது அங்க கெடக்கிற பூவும் பழமும் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்து இவ சாணி எடுக்க வரும்போது தருவான் இப்படி சிநேகமா பாசமா பழக ஆரம்பிச்சு நாளா வட்டத்துல இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் நேசிக்க ஆரம்பிச்சாங்க ரெண்டு பேரும் நேசமா பழகுறது பண்ணையில வேல பாக்குற எல்லாத்துக்கும் தெரிஞ்சி போச்சிஒருத்தருக்கு தெரிஞ்சாலே ஊருக்கே தெரிஞ்சமாதி அவ சித்தி காதுக்கு மட்டும் விசயம் போகாமா இருக்குமா?போயிருச்சி ஒடனே சித்தியும் இவளக் கவனிக்க ஆரம்பிச்சா.
ஒருநாள் ரெண்டு பேரும் எசக்கு பிசக்கா இருக்கும் போது சித்திக்காரி கையும் மெய்யுமா பிடிச்சுட்டா இந்த எளந்தாரி சித்திக்காரியத் தள்ளிவிட்டுட்டு ஒடிட்டான் இவந் தள்ளி விட்டதுல அவ கல்லு மேல விழுந்து மண்டை ஒடைந்து களகள வென கொட்டிடுச்சி பண்ணையாரு மகளும் ஆஹா மாட்டிக்கிட்டோமேனு பயந்து பொற வாசல் வழியா ஒடிட்டா.
தலையில் அடிப்பட்டோன இந்தம்மா குய்யோ முறையோன்னு அழுது பண்ணையார்கிட்ட ஒண்ண ஒம்போதா சொல்லிருச்சி பண்ணையாரும் வீட்டு வேலக்காரர்களையும் சொந்தக்காரர்களையும் அனுப்பி அவங்க எங்கிருந்தாலும் கண்டுபிடிச்சி தலையில் எண்ணெய் ஊத்திக் கொளுத்துங்கன்னு கட்டள போட்டாரு கீழ்ப்பட்டரப்பய நம்ம பொண்ணத் தொட்டுட்டானேன்னு பண்ணையாரோட சொந்தக்காரங்க ஊரு காடு கரையெல்லாம் தேடினாங்க.

ஒடிப்போன இந்தப் பொண்ணு ஊருக்கு ஒதுக்கு பொறமா இருந்த வைக்கோலு படப்புல புகுந்து மறைஞ்சுகிட்டா அந்த எளந்தாரி பயந்து ஒடுன வேகத்துல இருட்டு நேரமா வேர இருந்துச்சா கவனிக்காம பாழுங்கெனத்துல விழுந்து செத்துப்போயிட்டான்.

பண்ணையாரு மக அவ வீட்டுல ஆசை ஆசையாய் ஒரு பச்சைக்கிளி வளத்தா ராப்பகலா அது கூடயே இவ பேசி சிரிக்க விளையாடிக்கிட்டு இருப்பா அதற்குப் பால் பழன்னும் கொடுத்து ரொம்ப பாசமா ஒரு புள்ளையாட்டம் வளர்த்தா.
அந்த காலத்து ராசக்களுக்கு மந்திரிக மாதிரி பண்ணையாருக்கு கணக்குபுள்ள நல்ல புத்திசாலி அவரு பண்ணையாரு மகளத் தேடிப்போன ஆளுங்க பூரா வெறுங்கையோட திரும்பி வந்தாங்க அந்த நேரம் பார்த்து கிளி சத்தம் போட்டுச்சி ஒடனே கணக்குப்புள்ளைக்கு ஒரு யோசனை வந்துச்சி இவரு வேலைக்காரங்கிட்ட அந்த கிளி கூட்டத்திறந்து விடுங்க அதுபறந்து போற திக்குலேயே போங்க அது எங்க போயி உக்காருதோ அங்க கண்டிப்பா அவ இருப்பானு சொன்னாரு.
வேலக்காரியும் கிளிக்கூண்ட தெறந்துக்விட்டா கிளி பறந்து போயி ஊருக்கு ஒதுக்குபுறமா இருந்த வைக்கோலு பொடப்புல ஒக்காந்துச்சி உடனே ஒருத்தன் பொடப்புல இருந்த கட்டு வைக்கோல எடுத்தான் அப்ப அந்தப் பொண்ணு தாவாணி முந்தாணை தெரிஞ்சது உடனே இந்த வேலைக்காரன் சுதாரிச்சிகிட்டு சுத்தி நின்னவங்கிட்ட கைக்கர்ணமா(சைகைமூலமா)அவ உள்ளதான் இருக்கானு சொன்னான்.
சேதி தெறிஞ்ச பண்ணையாரம்மா வைக்கோலு படப்புக்கே வந்தா அவகிட்ட வேலைக்காரங்க குசுகுசுன்னு அவ இருக்குறதபத்தி சொன்னாங்க உடனே அந்த சண்டாளி வைக்கோலு படப்புக்கு தீ வைங்கன்னு உத்தரவு போட்டா
தீ வச்ச உடனே தீ மளமளன்னு பரவி பனைமரத்து ஒசரத்துக்கு எரியுது வைக்கோலு படப்புக்குள்ள ஒளிஞ்சிருக்க புள்ள தீயைப்பார்த்ததும் அலறி அடிச்சிக்கிட்டு வெளியே வருவான்னு சித்திக்காரி நெனச்சா ஆனா அந்தப் புள்ளையோ தீயில் நம்ம துணி எரிஞ்சி போயிரும் வெளியே ஆம்பளைங்க எல்லா இருக்காங்களே அரையுங் கொரையுமா துணியில்லாம போக முடியுமா?அப்படி போறத விட தீயில கருகி உசிர விடுறது மேலுன்னு தீர்மானிச்சி வைராக்யமா உள்ளயே உக்காந்திட்டா வைக்கோலு படப்பு எறிஞ்சி சாம்பலாயிருச்சி தீணி வெக்க தணிஞ்சு சாம்பல வெலக்கி பார்த்தா எல்லாரும் என்ன அதிசயம் ஒடம்பு கருகல அப்படியே செலையா உக்காந்திருக்கா ஆனா உசிரு மட்டும் இல்ல.
ந்தக் காட்சியப் பார்த்தோன எல்லாரும் வாயடைச்சி புல்லரிச்சி போயி நின்னாங்க அவளதொட்டு பாக்குற துணிச்சல் கூட யாருக்கும் இல்ல.
கொஞ்ச நேரத்துல இந்த சேதி ஊர் பூரா பரவிருச்சி ஊரு பொன்னுங்க அவனை அம்மா தாயேன்னு கூப்புட்டு பாத்தாங்க பதிலே இல்ல எல்லாரும் அம்மா தாயே அக்கினிபுத்திரின்னு கையெடுத்து குப்பிட்டாங்க அப்போ ஒருத்தி அருளு வந்து ஏல சண்டாலப் பாவிகளா நம்ம கொளவெலக்க வாழணும்னு நெனச்ச மகராசிய நீங்க உங்க கையால கொன்னுட்டீங்களே நீங்க வச்ச தீயில அவ தெய்வமாயிட்டா அந்த பாவம் தீரனும்னா இப்பவே ஒரு கொடம் மஞ்சத்தண்ணிய அவ தலையில ஊத்தி அவ கால்ல விழுந்து மன்னிப்பு கேளுங்க.அக்கினிக்குள்ள உயிரை விட்ட எடத்துல அவள பொதச்சி அடையாளமாக ஒரு ஆலங்கொப்பையும் நட்டு வச்சிருங்க தீ வச்ச கொடுமைக்காக வருஷத்துக்கு ஒரு தடவ இந்த இடத்துல தீ வளர்த்து உங்க பரம்பரைய அதுல எறங்கணும் இந்த அக்னி புத்ரி உங்கள சுடாம காப்பான்னு அருள் வாக்கு சொன்னா
நட்ட ஆலங்கொம்பும் மரமா வளர்ந்திருச்சி கோயிலும் கட்டிட்டாங்க இன்னிக்குத் தீ வளர்த்து அதுகுள்ள எறங்கி உசிரோட முழுசா எந்திருச்சி வராங்க என அக்னிபுத்திரியின் கதையைச் சொன்னாரு அமுதாபுரம் சிவனான்டி

No comments: