பொம்மக்கா திம்மக்கா -கிராமத்து சாமி
மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரள நாட்டு எல்லை மலை உச்சியில இருக்கு பானம் தீர்த்தம்ங்கிற அருவி அந்த அருவில குளிச்சிட்டு அடுத்த் மலையடி வாரத்துல இருக்கிற அகத்தியர் அருவியில குளிக்கறத்துக்காக மலங்காட்டு வழியா நடந்து வந்துகிட்டு இருந்தான் ஒரு எளவட்டம்.
அவன் பேரு முத்துப்பட்டன் மேல் பட்டறையச் சேர்ந்தவனா இருந்தாலும் வீரத்திலும் தீரத்திலும் பெரிய ஆளு
அந்த எளவட்டம் நடந்து வர வழியில ஆத்துக்குள்ள குளிச்சிட்டிருந்த பொம்மக்கா திம்மாங்கிற அழகான பொண்ணுங்களைப் பார்த்தான் அந்தப் பொண்ணுங்களைப் பார்த்ததும் அவங்க மேல தீராத மோகம் வந்துடுச்சி அவங்க ரெண்டு பேரும் காட்டுல மாடு மேய்க்கிற அவங்கப்பா வாலப்பனுக்கு கஞ்சி கொண்டு வந்து கொடுத்துட்டுப்போகிற வழியில் குளிச்சிட்டிருந்தாக.
அத்துவானக் காட்டுல அந்தப் பொண்ணுங்களப் பார்த்து மோகம் கொண்ட முத்துப்பட்டன் அவங்க பின்னாலே போனான்
முத்துப்பட்டன் உங்க ரெண்டு பேருல ஒருத்திய நான் கல்யாணம் செஞ்சிக்கிடணும்ணு நினைக்கேன்னு வெளிப்படையாச் சொன்னான்.
அப்பெண்கள் இந்த கல்யாணம் காட்சி பத்தி எல்லாம் எங்கப்பாக்கிட்டத்தான் பேசிக்கிடணும்ணு சொல்லிட்டு போயிட்டாங்க
தலைமறைவா அந்தப் பொண்ணுங்கல தொடர்ந்து போன முத்துப்பட்டன் வாலப்பன் மாடுக மேய்க்குற எடத்தை தெரிஞ்சிக்கிட்டான்.
அப்பாவுக்குக் கஞ்சி கொடுத்துக்கிட்டு அந்தப் பொண்ணுங்க போன பொறகு முத்துபட்டன் வாலப்பன் பக்கத்துல போய் கும்பிட்டு காட்டு வழியாப் போகும்போது உங்க பொண்ணுங்கல பார்த்தேன் அவங்கள்ல ஒரு பெண்ணை எனக்குக் கல்யாணம் செஞ்சிதாங்கன்னு கேட்டான்.
வாலப்பனும் பதிலுக்கு முத்துப்பட்டனைக் கும்பிட்டு உங்களைப் பார்த்தா உயர்ந்த சாதிப்பிள்ளையாத் தெரியுது நாங்க கீழ் சாதிக்காரங்க உங்களுக்கும் எங்களுக்கும் ஏணி வச்சாலும் எட்டாது அதனால உங்க முடிவை மாத்திக்கங்கன்னு பணிவாச் சொன்னான்.
உடனே முத்துப்பட்டன் ஐயா குலம் கோத்திரம் பத்தியெல்லாம் பேசாதீங்க நா உங்க மகள்களப்பாத்தவுடனேயே அவங்கட்ட என் மனச பறிகொடுத்துட்டேன் இனி வாழந்த உங்க மகள்களோட வாழ்வேன் இல்லைனா இந்தக் காட்டுலையே செத்துப்போயிருவேன்னு சொன்னான்.
முத்துப்பட்டனோட மன உறுதியைப் பார்த்து மனசு மாறின வாலப்பன் சரி நீர் என் விட்டில் ஒரு மாசமாவது தங்கி இங்கு நான் பாக்குற வேலையை எல்லாம் பாக்கணும் எங்கல போல சாக்கை(கோணிப்பை)விரிச்சிப் படுத்து ஒறங்கணும் எங்களப் போல உடை உடுத்தணும் நாங்க சாப்பிடும் சோறைத்தான் சாப்பிடணும் சம்மதிச்சா நான் உமக்கு பொண் தரச் சம்மதிக்கிறேன்னார்.
முத்துப்பட்டன் வாலப்பன் சொன்னத்துக்கெல்லாம் சம்மதிச்சான்
காதலுக்காக முத்துப்பட்டன் மாடு மேய்ச்சி சாக்குல படுத்து தூங்கி அவங்க குடிக்கும் கஞ்சி குடிச்சி ஒரு மாசம் அவங்களோட வாழ்க்கையை வாழ்ந்தான்.
முத்துப்பட்டனோட கடின உழைப்பு மன உறுதி ஒழுக்கம் எல்லாத்தையும் பார்த்து ரொம்ப திருப்தியான வாலப்பன் தம் பொண்ணுங்கல ஒருத்தியை முத்துப்பட்டனுக்கு கட்டிக் கொடுக்க நினைச்சான் ஆனா பொண்ணுங்க ரெண்டு பேருமே முத்துப்பட்டனை கட்டிக்க நெனைச்சாங்க.
அந்த முடிவ அப்பங்காரங்கிட்டவும் முத்துப்பட்டனிடமும் சொன்னாங்க அதுக்கு முத்துப்பட்டன் சம்மதிச்சதால அந்த பொண்ணுங்க ரெண்டு பேரையும் முத்துப்பட்டனுக்கு வாலப்பன் மொறைப்படி ஒரு கோயிலுல வைச்சிக் கல்யாணம் செஞ்சி கொடுத்தான்.
கொஞ்ச காலம் பொம்மாவோடேயும் திம்மாவொடையும் ரொம்ப சந்தோஷமா குடும்பம் நடத்தினான் முத்துப்பட்டன் ஒருநா காலையில வழக்கம் போல மாடுகள பத்திக்கிட்டு மலக்காட்டுக்கு மாடு மேய்க்க போனான் மாடுகளோட காவலுக்கு ரெண்டு நாய்களும் போகும் அதுகளுக்கு பூச்சி காச்சின்னு பேரு சாயங்கால நேரத்துல முத்துப்பட்டன் புல்லாங்குழல் எடுத்து வாசிப்பான் புல்லாங்குழலோட இசை கேட்டதும் மாடுகளெல்லாம் ஒரு எடத்துல கூடும் வழக்கம் போல அன்னைக்கும் மாடுகளப் பத்திக்கிட்டு விட்டுக்கு வரும்போது மாடுகள கொள்ளையடிச்சிட்டு போற கொள்ளைக்காரங்க கையில அருவா கத்தி ஈட்டியோட மாட்டு மந்தைய மறிச்சாங்க.
கையில வேல்கம்பு வச்சிருந்த முத்துப்பட்டன் அந்தக் கொள்ளைக்காரங்கிட்ட சண்டை போட்டு அத்தணை பேரையும் குத்திக் கொன்னுட்டான்.
சண்டபோட்ட களப்புதீர ஆத்துல எறங்கி தண்ணி குடிக்கும்போது தப்பி வந்த கொள்ளைக்காரங்கள்ல ஒருத்தன் பக்கத்துல கிடந்த குத்தீட்டிய எடுத்து முத்துப்பட்டனை குத்திட்டான்.
ஈட்டி குத்தி கிழிச்சிருச்சி எல்லாகொடலும் வெளிய வந்திருச்சி இருந்தாலும் சுதாரிச்சிகிட்டு முத்துப்பட்டன் தன் தலையில கட்டியிருந்த துண்டை அவுத்து வெளியே வந்த கொடலை வயித்து குள்ள தள்ளி துண்டை வைச்சி இடுப்ப கட்டிகிட்டு தன் வயித்துல குத்துயிருக்கிற ஈட்டியை உருவி எடுத்து குத்தியுருமா கொலையுருமா கிடக்கிற அந்தக் கொள்ளைகார பாவி மேல விசீனான் குத்தீட்டி குறி தவறாம பட்டதால கொள்ளையன் அந்த எடத்துலையே உயிரை விட்டான் உடல விட்டு கொடல் வெளியே வந்துட்டதால முத்துப்பட்டனும் ஆத்தங்கரையிலே செத்து விழுந்தான்.
முத்துபட்டன் செத்ததும் காவலுக்கு நின்ன காச்சி நாயும் பூச்சி நாயும் நேர வாலப்பன் வீட்டுக்கு போயி பொம்மக்கா திம்மக்காவோட சேலையை கடிச்சி இழுத்துச்சிபயந்து போன பொம்மக்காவு திம்மக்காவும் நாய்க பின்னாலேயே போனாங்க அன்னக்கிப் பார்த்து வாலப்பனும் இல்ல.
ஆத்தங்கரைக்கு போயி பாத்த பெறகு தான் என்ன நடந்திருக்கு ஏது நடந்திருக்கும்கிற விசயம் அவங்க ரெண்டு பேருக்கும் தெரிஞ்சுது முத்துப்பட்டன் மேல விழுந்து பொம்மக்காவும் திம்மக்காவும் அழுதாக
ரெண்டு பேரும் தன் புருசோனட பிணத்துக்கு கொள்ளி வச்சாங்க எரிகிற அந்த நெருப்புகுள்ள பாஞ்சி தன் புருசனோடவே சேர்ந்து எரிஞ்சாங்க அதை பார்த்த காச்சி நாயும் பூச்சி நாயும் எரிகிற நெருப்புகுள்ள பாய்ஞ்சி உயிரை விட்டிருச்சிங்க
இப்படி முத்துப்பட்டனோட சேர்ந்து பொம்மக்காவும் திம்மக்காவும் காச்சி நாயும் புச்சி நாயும் சாமியாயிட்டாங்கன்னு ரெண்டு சகோதரிகளோட கதையைச் சொல்லி முடிச்சாரு ஆழ்வார் குறிச்சியைச் சேர்ந்த முத்துக்குமார்.

No comments:
Post a Comment