கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-5

சேர்மன் சாமி

தாமிரபரணி ஆத்து நெறய தண்ணி வழிஞ்சு ஒடுது. அருணாச்சலம் எப்போதும் போல குளிக்கப்போனாரு இடுப்புல துண்ட கட்டிக்கிட்டு வேட்டிய நெனச்சுக் கல்லுமேல வச்சுட்டு ஆத்துல எறங்கி ஒரு முழுகாச்சி போட்டுட்டு எழுந்து பாக்குறாரு வேட்டியக் காணல!மனுசன்னா இதுக்கு கோவம் படப்படப்பு வரணுமே ஆனா இந்த மனுசனுக்கு கோவமே வரல அவரு கோவப்படுவாருஏசுவார்னு ரொம்ப ஆசையோட பார்த்த அவரோட மொறப்பொண்ணுங்க ஏமாந்துட்டாங்க அவங்களவிட அந்த வேட்டிய மொறப் பொண்ணுங்க சொல்லித் தூக்கிட்டு வந்த சின்னப் பொண்ணு இன்னும் ஏமாந்துருச்சி.
இவரு எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாம இடுப்புல கட்டுண சுண்டோட போய்கிட்டே இருக்காரு அப்ப அவரு எதுத்தாப்புல ஒரு ஜவுளி வியபாரி வந்து ஐயா வேட்டி வேணுங்களான்னுகேட்டு அந்த வியபாரியே ஜவுளி பொட்டலத்த எறக்கி அதிலிருந்து ஒரு கச்ச வேட்டியை எடுத்து கொடுத்துட்டு பணங்கூட வாங்காம போயிட்டாரு.கொஞ்ச நேரத்துல அந்த வியபாரி வந்தாருங்கறத்துக்கான தடமே இல்ல இதையெல்லாம் பாத்துக்கிடேருந்த அவரோட மொறக்காரப்பொண்ணுங்களுக்கு ரொம்ப அதிசயமா போயிருச்சி.
அந்த் ஈர வேட்டியை எடுத்துட்டுப்போன சின்னப்பொண்ணு அத தன் அம்மாகிட்ட கொடுத்து நடந்த எல்லாத்தையும் கதையா சொல்லுச்சி அதக் கேட்டோன பதறிப்போயிட்டா அவ அம்மா ஒட்டமா ஒடி வந்து அருணாச்சலத்துக்கிட்ட ஐயா சின்னப் பொண்ணு தெரியாம அறியாமா செஞ்சுட்டு அவள தயவு செய்து மன்னிச்சிருங்க சாமின்னு கெஞ்சினா அதுக்கு அவரு தையல்(பெண்)எடுத்துப்போன துணி தையலுக்கு (தைப்பதற்கு) கூட ஆகாதேன்னு சிலேடையில் பதில் சொல்லியிருக்காரு இந்தம்மாவும் வீட்டுக்கு வந்து வேட்டிய விரிச்சி பார்த்தா வேட்டி முழுவதும் கண்ணு கண்ணா (ஒட்டை)இருந்திருக்கு சும்மா இருக்குமா மனுஷ வாயி?
இந்த சேதி ஊர் முழுக்க பரவிருச்சி பொம்பளைங்க அவர கையெடுத்து கும்பிட்டாங்க!
தான் வாழ்ந்த காலத்து நெறையா அற்புதங்களை செஞ்சி காட்டுனாரு அருணாச்சலம் அதைப் பார்த்து வியந்த நெல்லை சீம கலெக்டரு சிறுத்தொண்ட நல்லூரு கிராம மூன்சீப்பா அவர நியமிச்சாரு பொறவு அவர ஏரல் பஞ்சாயத்து தலைவரா(சேர்மன்)நியமிச்சாரு சேர்மன் ஆனாலும் ஐயா பூஜை புனஸ்காரம் ஜெபம் விஷக்கடி வைத்யம்ன்னு ஆன்ம விசாரம் எதையும் விடல
மேலபுதுக்குடியில சுடலைப்பேச்சின்னு ஒரு பொண்ணு தீடீர்னு அவளுக்கு ஒடம்பெல்லாம் கருத்தழும்பா திட்டுத் திட்டா ஆயிருச்சி அவ புருஷன் அவள விட்டுட்டு போயிட்டான்
பல வைத்தியர்களுக்கிட்டபோயிம் குணம் ஆகல மனசு நொந்து போயி கெடந்தப்ப சேர்மன் ஐயாவப் கேள்விப்பட்டதும் நெஞ்சு நெறையா நம்பிகையோட அவரப் பார்க்க வந்தா ஐயா அவளுக்கு திருநீறு மந்திருச்சி கொடுத்துட்டு இந்தத் தீர்த்தத்தை தெனமும் குடித்துட்டு வா திருநீற உடம்பெல்லாம் பூசிக்கீட்டே வா அடுத்த மாசம் அமாவாசை அன்னிக்கு நா இருக்குற எடந்தேடி வா மருந்து தாரேன் பூரணமா கொணமாயிருமுன்னு தெய்வம் மாதிரி பதில் சொல்லி அனுப்பினாரு
சுடலப்பேச்சியும் அப்படியே செய்ய கொஞ்சம் கொஞ்சமா தழும்பு கொறைய ஆரமிச்சிருச்சி தீடீருன்னு ஒரு நாள் சேர்மன் ஐயா தன்னோட சேக்காளி(நண்பன்)பால கிருஷ்ணமூர்த்தி நாடாரையும் தம்பி கருத்தபாண்டியையும் கூப்பிட்டு எனக்கு ஆணடவன்கிட்டயிருந்து அழைப்பு வந்துட்டு வர்ற அம்மாவாசை அன்னிக்கு என்னைய அழைச்சிக்கிடுவான் என் உயிர்போன பொறவு என் உடம்பு ஊருக்கு தெக்க தாமிரபரணி ஆத்தங்கரையில இறக்குற பெரிய ஆலமரத்துக்கு அடியில குழிதோண்டி உக்கார்ந்த மாதிரி என்ன வச்சிடு நான் பயன்படுத்துன பொருட்களையும் அங்க வச்சிரு.வானத்துல ஒரு செங்கருடன் மூணு தடவ வட்டம் போடு மூணாவது தடவ போடும்போது அதன் நெழலு எம்மேல படும் அதுக்கு பிறவு மண்ணப் போட்டுக் குழிய மூடிடுங்க அமைதியா அழுத்தம் திருத்தமா சொன்னாரு இப்படிச் சொன்ன போது அவருக்கு வயது இருபத்தெட்டுதான்.
சேர்மன் தன் சாவப் பத்தி சொன்னது தீமாதிரி உரெல்லாம் பரவிருச்சி ஊரே கவைலையோட அமாவாசை எதிர்பாத்திருந்திச்சி அமாவாசையும் வந்துச்சி சேர்மன் வழக்கம் போல எந்திருச்சி ஆத்துல குளிச்சிட்டு வந்து பூஜை புனஸ்காரமெல்லாம் முடிச்சார் வழக்கம் போல சாப்பிட்டுட்டு பஞ்சாயத்து ஆபூஸூக்கு போனாரு.
சரியா பத்தர மணிக்கு வீட்டுக்கு வந்தவரு எல்லார்கிட்டேயும் வரேன்னு சொல்லிட்டு தன்னோட ரூம்ல போயி படுத்துக் கண்ண மூடிக்கிட்டாரு கரெக்டா பகல் பன்னிரண்டு மணிக்கு அவரு உயிர் உடம்புல இல்ல அவரு சொன்ன மாதிரியே அச்சு பெசகாம னடந்துருச்சு இந்த சேதி ஊர் பூரா பரவ அவரு வீட்டு முன்னால மக்க கூட்டம் தெரண்டு நிக்குது.
ஐயா சொன்ன மாதிரியே அவர் சொன்ன எடத்துல முழி வெட்டி அவர உட்கார வெச்சி அவரு பயன்படுத்தின பொருள எல்லாம் போட்டாச்சு என்ன அதிசயம் செங்கருடன் கரெக்டா வந்துருச்சு அவரு சொன்ன மாதிரி மூணு வட்டம் போட்டுச்சு மூணாவது வட்டத்துல கருடன் நெழலு சேர்மன் சாமி மேல விழுந்துருச்சு அதுக்குப்புறம் அவரை நல்லடக்கம் பண்ணினாங்க.
சேர்மன் ஐயா இறந்த சேதி சுடலை பேச்சிக்கு தெரியாது அமாவாச அமாவாசை அன்னிக்கு வரச்சொன்னாருன்னு நெனப்புக்கு வந்தும் போன போன பொறவுதான் தெரிஞ்சது அவறு சமாதியான வெவரம் உடனே அவ அவரு சமாதிக்கு போயி வெள்ளந்தியா ஐயா வாக்கு கொடூத்தீர்களே இப்படி நோய அரையுங் குறையுமா சுகமாக்கிட்டு ஆலமரத்துகடியல போயி உக்காந்துக்கீட்டீங்களேன்னு கெடந்து அழுதா
அப்ப அந்த வழியில வந்தக் கெழவரு அழுதுக்கிட்டு இருந்த சுடலைப்பேச்சியை பார்த்து அழாத தாயி சேர்மன் உசிரோட இல்லாட்டியும் அவரு இடம் தேடிவந்துட்டல்ல உன் நோய் தீர்ந்து ராணியாட்டம் ஆயிருவ அவரு சமாதி மண்ண எடுத்து தீருநீறா பூசிக்கோ தீர்த்தத்துக்கு ஊத்து தோண்டி அதுல வர்ற தண்ணிய எடுத்துட்டுப்போய் இந்த மாதிரி இரண்டு அமாவாசைக்கு வந்துட்டு அவரக் கும்புட்டு போம்மா இந்த மண்ணையும் ஊத்து தண்ணியையும் சேர்மன் நாமத்து சொல்லி பூச உன் நோய் தீரும் சுடைலை பேச்சின்னு சொல்லிட்டு மாயமானாரு
ஆளில்லாத காட்டுல திடீன்னு ஒருத்தரு வந்து தீடீர்னு போயிட்டாருன்னு நெனச்சு அலுவசப்பட்டா(அதிசயப்பட்டா)சுடலைப்பேச்சி கெழவனாரு சொன்ன மாதிரியே செஞ்சா ரெண்டு அமாவாசைக்கு சேர்மன் சாமி கோயிலுக்கு வந்துட்டு போனா என்ன அதிசயம் குஷ்டரோகிய மாதிரு இருந்த பேச்சி கண்ணுல ஒத்திக்குற மாதிரி அழமா வந்துட்டா இவள பிரிஞ்சுப்போன புருஷனும் வந்துட்டான் சந்தோஷத்துல திக்குமுக்காடிப்போன பேச்சி சேர்மன் சாமிய தன் குல தெய்வமா கும்பிட ஆரமிச்சா அவரு அருள் சக்திய கேள்விப்பட்ட சுத்துப்பட்டி மக்கள் என்ன நோயானாலும் இந்த மண்ணையும் ஊத்து நீரையும் எடுத்துட்டு போயி புச ஆரமிச்சாங்க இன்னும் அவர் நினைவா தன் பிள்ளைகளுக்கு சேர்மன் சேர்மக்கனி சேர்மத்துரை சேர்மச்சாமி சேர்மத்தாயின்னு பேரு வைக்குறாங்கன்னு சொல்லு முடிச்சாரு கிடாரக்குளம் அப்பரானந்தன்.

No comments: