கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Monday, August 19, 2013

குறுஞ்சாமிகளின் கதைகள்-14

 கசமாடன்

கயவர் குலப்பட்டணம்னு ஒர் ஊரு இங்க இருந்த மாடப்பரும் மாடத்தியம்மாளும் தங்கலுக்கு ஒரு வாரிசு இல்லையேன்னு ரொம்பக் கவலைப்பட்டு சங்கரன்கோயில் கோமயம்மாள் சன்னதிக்கு போயி ஒரு மண்டலம் வெளக்கு ஏத்துனாங்க.
பத்தாவது மாசம் முத்துப்போல ஒரு ஆம்பளைப் பிள்ளை பொற்ந்தான் அந்த பிள்ளைக்கு சேர்வைக்காரன்னு பேருவச்சி வளர்த்தாங்க மீன் பாம்பு ஆமைன்னு அத்தனை ஜீவ ராசிகளையும் தூண்டில் போட்டு பிடிக்கறதுல மகா நிபுணான இருந்தான் சேர்வை அவன் பேரும் புகழும் சுத்து வட்டாரமெல்லாம் பரவிட்டு கேள்விபட்ட அந்நாட்டு ராசா அவனைத் தன்னோட அரண்மனைக்கு சேவை செய்ய வரும்படிக் கூப்பிட்டு ஆள் அனுப்பினார்.
ஆரம்பத்துல காவல் படைத் தலைவனாகத்தான் சேர்வைக்காரனை ராசா நியமிச்சார் அவனோட காவலில் ஈ எறும்புகூட நுழைய முடியலை அதனால அரண்மனையிலும் அவன் புகழ் பெற்றான்.
அந்த ராசா ஒரு மீன் பிரியர் ராசாவின் மீன் ருசியைத் தெரிஞ்சிகிட்ட சேர்வைக்காரன் தினமும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் விதவிதமான தூண்டில்போட்டு விதவிதமான மீன்களை பிடிச்சிகிட்டு போய் அரண்மனையில் கொடுத்தான் ராசாவும் ஆசை தீர சேர்வைக்காரன் புண்ணியத்தில் வாய்க்கு ருசியா மீன் குழம்பு சாப்பிட்டார்.
சேர்வைக்காரன் பிடிச்ச மீன்களை ராசா விட்டுக்கு கொடுக்கவும் காலியான மீன் தெல்லியை வாங்கவும் அடிக்கடி அரண்மனைக்கு போக வர இருந்தான்.
இப்படியாக இருக்கும்போது ராசா மகள் சுந்தரேஸ்வரி ஒரு நாள் எனக்கு தொட்டியில் போட்டு வளர்க்க செம்மீன்கள் உயிரோட வேணும்னு கேட்டாள்.
உடனே அத்தாளநல்லூர் குளத்துக்குபோய் செம்மீன்களை தூண்டில் போட்டுப் பிடிச்சி அதைக் கண்ணாடி குடுவைக்குள்ள போட்டு வச்சி அதைராசா மகளிடம் கொண்டு போய் கொடுத்தான்
பிறகென்ன ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் காதலிக்க ஆரமிச்சாங்க இந்த சேதி ராணி காதுல விழுந்திச்சு ராணி தன் மகளை தன் அண்ணன் மகனுக்குத்தான் கட்டிக்கொடுக்கணும்னு நினைச்சாள் அதனால சேர்வைக்காரனை தந்திரமாக கொல்லணும்னு திட்டம் போட்டாள்.
அத்தாளநல்லூர்ல ஆதிமூலப் பெருமாள் கோயில் ஒண்ணு இருக்கு அந்தக் கோயில் யானை பக்கத்துல உள்ள தாமிரபரணி ஆத்துல இருந்து தன் தும்பிக்கையில் நீர் உறிஞ்சிக்கிட்டு போயித்தான் தினமும் பெருமாளை அபிஷேகம் செய்யும்
அப்படி ஒருநாள் யானை ஆத்துகுள்ள இறங்கி தண்ணிரை தன் தும்பிக்கையால் உறிஞ்சும் போது ஒரு முதலை யானையோட காலை கவ்வ வந்தது யானை பாகன் சுதாரிச்சி யானையை பின்னுக்கு இழுத்துட்டான் அன்னிக்கி யானை பிழைத்தது மறு பிழப்பு.
யானை பாகன் நடந்த நடப்பை கோயில் குருக்களிடம் சொல்ல கோயில் குருக்களும் ராசாவிடம் போய் சொன்னார் ராசா சேர்வைக்காரனை கூட்டிகிட்டு வரச்சொன்னார் அரண்மனை சேவகர்களும் சேர்வைகாரனை கூட்டிக்கிட்டு வந்தாங்க.
ராசா அத்தாளநல்லூர் ஆத்துல கிடக்குற முதலைகளை நீதான் பிடிச்சிக்கொல்லணும்னு சேர்வைக்காரனிடம் சொன்னார்
ராணி இந்த சமயத்துலசேர்வைக்காரனை ராசாவுக்கு தெரியாம கொன்னுரணும் பழியும் நம்ம மேல வரக்கூடாது அப்பதான் நம்மகள் அவனை மறப்பாள்னு நினைச்சா.
மறுநாள் சேர்வைக்காரனை அரண்மனைக்கு வரவழைச்சா ராணி தன் மகளையே அவனுக்கு விருந்து பரிமாறச் சொன்னா சேர்வைக் காரனுக்கு தரிக்கத் தாம்பூலமும் தட்டுல வச்சி கொடுத்தாள் ராசா மகள்.
அப்ப அவங்க நோக்கத்த ராணி கண்ணால கண்டுகிட்டா ராணி ஒரு நகைப்பொட்டி நிறைய நகைகளைக் கொடுத்து அத்தாள நல்லூர் ஆத்துல உள்ள முதலைகளை நீ எப்படியும் பிடிச்சிருவேன்னு எனக்குத் தெரியும் அதனாலதான் உனக்கு முன்கூட்டியே இந்த நகைகளை பரிசாகத் தரேன் இந்த விஷயம் ராசாவுக்கு தெரியவேண்டாம் நீ ஆத்துக் கரையில் உக்கார்ந்து முதலைகளை பிடிக்கும் போது நான் கொடுத்த இந்த சங்கிலி சரப்புளிகளை எல்லாம் போட்டுகிட்டு வர்ற பெளர்ணமி ராத்திரியில முதலைகளைப் பிடிக்கணும் இது என் உத்தரவுன்னு சொன்னாள்.
சேர்வைக்காரன் ராணியோட சூழ்ச்சி தெரியாம சரின்னு தலையை ஆட்டினான்.
சேர்வைக்காரனை கொலை செய்து நகைகளை கொள்ளையடிக்கணும்னு ராணி தன் அண்ணங்காரனுக்கு ஒர் ஒலை எழுதி ரகசியமா ஆள்கிட்ட அதைக் கொடுத்துவிட்டாள்.
ராணியோட அண்ணன் சேர்வைக்காரனை கொல்ல பத்து ஏவல் ஆட்களை அத்தாள் நல்லூர்க்கு அனுப்பினார்.
அத்தாளநல்லூர் ஆத்தில் கருமூக்கு முதலை செம்மூக்கு முதலை என்று ரெண்டு முதலைகள் கிடந்தன.
நிறைந்த பெளர்ணமி அன்னைக்கு நடுச்சாம வேலையில் அத்தாளநல்லூர் ஆத்துக் கரையில் கழுத்து நிறைய நகைகளை போட்டுகிட்டு உக்கார்ந்து செம்மூக்கு நாய்குட்டியை தூண்டில் முள்ளில் கோர்த்து தூண்டில் கயித்தைக் குளத்துக்குள் போட்டான் சேர்வை
செம்மூக்கு முதலை தூண்டிலில் கிடந்த செம்மூக்கு நாய்க்குட்டியை கவ்வியது உடனே செம்மூக்கு முதலையை பிடித்துக் கரையில் போட்டுக் கொன்றான்.
தக்கத் சமயத்தை பார்த்து காத்துகிட்டிருந்த எதிரிங்க சேர்வைக்காரனை பின்னால் இருந்து முதுகிலும் பக்கவாட்டில் இருந்து விலாவிலும் ஈட்டியால் குத்திச் சாய்ச்சாங்க ரெத்த வெள்ளத்தில் மிதந்த சேர்வைக்காரன் மார்பில் போட்டிருந்த நகை நட்டுகள் சங்கிலி சரப்புகள் எல்லாத்தையும் களவாடிட்டு குத்துயிரும் குலையுயிருமா கிடந்தவனைக் ஆத்துல தூக்கி போட்டுட்டு போயிட்டாங்க.
விடிஞ்ச பிறகுதான் ஊர் மக்களுக்கு சேர்வைக்காரன் செத்துட்டாங்கிற விவரம் தெரிஞ்ச்சி ராசா மகள் மட்டும் தன் தாயின் சூழ்ச்சியை புரிஞ்சிகிட்டா இனியும் நாம உயிரோட இருக்க கூடாதுன்னு நினைச்சி அதே ஆத்துக்கு போய் தன் கால்களில் பெரிய கல்லைக் கட்டிகிட்டு குதிச்சி தன் உயிரை மாஉச்சிக்கிட்டா
ஆத்துல கசத்தில்(ஆழமான இடத்தில்)கிடந்த முதலைகளை பிடிக்கிறத்துக்காக தன் உயிரையே விட்டதால அன்னையில இருந்து சேர்வைக்காரனை மக்கள் கசமாடன்கிற பேர்ல சாமியைக் கும்பிடிறாங்கன்னு கதையை சொல்லி முடித்தார் மேலகரத்தைச் சேர்ந்த ஐயாதுரை

No comments: