கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Tuesday, July 23, 2013

மறைவாய் சொன்ன கதைகள் 7

இருதலைமணியன்

ஆண்பிள்ளை ஒருத்தனுக்கு ரெண்டு ‘இது’ இருந்தது. பிறவியிலேயே அவனுக்கு இப்படி அமைஞ்சிருந்த்து. ரொம்ப அபூர்வந்தான் இது.

அஞ்சிதலை நாகம் ஏழுதலை நாகம் இப்பிடி இருக்கது போல அபூர்வமா இப்படி கோடியில ஒருத்தனுக்கு அமையுமோ என்னவோ

இன்னொரு அதிசயம், அவனுக்கு இப்பிடி இருந்ததுனாலயோ என்னவோ ரெண்டு ஆள் பலமும் வீரியமும் இருந்த்து.
ஒருத்தரு சொன்னாரு ‘இருக்கும். ரெண்டு ‘இது’ இருந்தா ரெண்டாள் பலம் இருக்கத்தானே செய்யும்! அவரு சொன்னது ஏடாசியா நெசமான்னு தெரியலன்னாலும் எல்லாரும் சிரிச்சாங்க.

இப்பிடி இருந்ததுனால அவனுக்கு ‘இருதலைமணியன்’னு பட்டப் பேரு ஏற்பட்டுப்போச்சு!


எல்லோரும் அவனெ ரொம்ப கேலி பண்ணுனதுனால அவம் ஊரெ வுட்டே காணாம போய்ட்டாம். ரொம்ப தூர ஊர்ல போயி, யாரும் முகந்தெரியாத இடத்துல போயி வேல செஞ்சி பிழைக்கிறதுன்னு ஆயிட்டது.
அங்கே யாருக்கும் இது தெரியாம இருக்கும்படியா பாத்துக்கிட்டாம்.
பய வளந்து இளவட்டு ஆனாம். பாக்கவும் லெட்சணமா இருந்தாம்.

இப்பிடி இருக்கையில, அவனும் மனுசம்தானே, அவனுக்கு பொம்பளை ஆசை வந்தது.
வராதா பின்ன என்று கூட்டத்துல ஒருத்தர் சொன்னார்.
வேல செஞ்சி சம்பாதிச்ச பணத்துல கொஞ்சம் மிச்சம் வச்சி, ஒரு நா ‘தேவிடியாக்குடி’ போனாம்.

அங்கே ஒருத்தி பாத்துக்கிட்டா அத.
அவளுக்கு இது அதிசயமா இருந்தது. வித்தியாசமா இருந்தது. அதனால அவ அவன வெளியவிடாம ராத்திரிபூரா தங்கிட்டயே வச்சிக்கிட்டா.

காலையில ஆத்துக்கு அவ குளிக்கப்போன எடத்துல தனக்கு வேண்டப்பட்ட சிநேகிதக்காரிக்கிட்ட இதெ சொல்லிச் சொல்லி சந்தோசப்பட்டா.
சிநேகிதக்காரிக்கும் இப்படியாப்பட்ட காரியங்கள்ள ரொம்ப பிரியம். அதனால அவ, நா இப்பவே ஓங்கூட வர்றேம். நானும் அதெப் பாக்கேண்டாமான்னு புறப்பட்டுட்டா.

அவ அத பாத்து அனுபவிச்சுட்டு அவளோட சேத்திக்காரி நாலு பேரு கிட்ட சொன்னா.
ஆக இப்பிடி இந்த ரகசியம் தீயாப் பரவி இந்த விசயத்துல ரொம்ப பிரியமான பொம்பளைகளுக்கெல்லாம் தெரிஞ்சி, பயலுக்கு ஒரே கிறுக்கு ஆயிட்டுது.
இருக்காதா பின்னே என்றார் ஒருத்தர்.
இப்பல்லாம் அவன் வேலைக்கே போறதில்ல

அவனோட ‘சங்கதி’ விஷயம் அந்த நாட்டோட அரண்மன அந்தப்புரத்துக்குள்ளேயும் போயிட்டு. மகாராணிக்கு ரொம்ப வேண்டப்பட்ட ஒரு சேடிப் பொண்ணு பாத்து வந்து சொல்லிட்டா.
இப்ப மகாராணிக்கும் அதெப் பாக்கணும்னு ஆயிட்டது.
அந்த சேடிப்பொண்ணு மூலமாவே மகாராணி அவனுக்கு ரகசியமா தாக்கல் சொல்லி அனுப்பிச்சா.

அவம் பதறிப் போயிட்டாம். இதேதுடா சங்கட்டம். வம்புல போயி மாட்டுவம் போலுக்கேன்னு நெனச்சி அவகிட்ட ஏத்தா நீ என்னமோ ஆசெப்பட்ட வந்தே போனேன்னு இருக்காம இதெப் போயி அரண்மனையில மகாராணியிட்ட பத்த வெச்சிட்டயெ. அப்படியாப்பட்ட இடத்துக்கெல்லாம் நாம போவலாமா?

அதுக பேன் எடுத்தாலும் எடுக்கும், காத அத்தாலும் அத்துருமே. என்னால முடியாது ஆத்தா. நா வர மாட்டேன்னாம்.

நீ ஒண்ணும் பயப்படவேண்டாம். மகாராணிக்கு இதுல எல்லாம் பிரியம் சாஸ்த்தி. ஒன்னெ ‘பொன்னுங்கண்ணுமா’ வச்சிக்கிடுவா. சும்மா வா; அங்கே வந்துட்டே ராசாக்கணக்கா இருக்கலாம்னா.

ஏத்தா என்னே ஆளவிடுன்னு சொல்லிப்பாத்தாம்.

இந்தா பாரு இது மகாராணியோட ஆக்கின. நீ வல்லேன்னா இப்ப ஒந்தலைக்கு கத்திதாம் காத்துக்கிட்டிருக்கு. தப்பிக்க முடியாது பாத்துக்க.
அங்க வந்து இருக்க ஒனக்கு என்ன கொள்ள. நல்..லா தின்னுட்டு பொலிகாள போல இருக்க வலிக்கா உனக்கு? மரியாதையா எந்திரிச்சி எம் பொறத்தால வான்னா.

நல்லா ரோசிச்சுப் பாத்தாம். இங்க இப்பிடி அரையுங் கொறையுமா தின்னுக்கிட்டு இந்த முண்டெக கூட லோலுப்பட்டுக்கிட்டு இருக்கத விட அங்கென போயி ராசாக்கணக்க இருக்கலாம்னு தோணிச்சி. சரீன்னுட்டாம்.
பொண்ணு வேசம் போட்டு ராத்திரியோட ராத்திரியா சேடிப்பொண்ணு கூடவே ராணியோட அந்தப்புரம் போயிச் சேந்தாம்.

அப்ப ராசா நகரத்துல இல்ல. வேட்டையாடப் போயிருந்தாரு. வேட்டையாடப் போனா அங்க கொஞ்ச நா தங்கி இருந்துட்டுதாம் வருவாரு. அதனால இங்க இவம்பாடு வேட்டையா இருந்திச்சி.
சாதாரண விசயமா இருந்தா பரவா இல்லாம இருக்கும். இது அதிசயமான விசயமாச்சே. எப்பிடியோ பொட்டைச்சிக மத்தீயில கிசுகிசுப்பாயி இது இன்னொரு ராணிக்குத் தெரிஞ்சு போச்சி. அவளும் ராசாவுக்குப் பிரியமான ஒரு மகாராணிதாம்.

அவ மாத்திரம் என்ன.. நான் பாக்கேண்டாமான்னு கேட்டனுப்பிச்சா
இது நாம்பாத்துக் கொண்டாந்தது. நா வச்சிருக்கேம். ஒனக்கென்ன? வேணும்னா நீ பாத்து ஒண்ணெ கொண்டாந்து வச்சிக்கயேம்னா
அது என்ன அம்புட்டு லேசாக் கிடச்சிருமா. அதெ எப்பிடிக் கண்டு புடிக்கது!

அதென்னமோ எனக்குத் தெரியாது. எனக்கு வேணும். அது எப்பிடித்தாம் இருக்குதுன்னு நாம் பாக்கணும்னு சொல்லி அனுப்பிச்சா அந்த இன்னொரு ராணி.

இப்பிடியே இவுகளுக்குள்ள ஒரு ‘எசலிப்பு’ ஏற்பட்டு, ராசா வேட்டையிலிருந்து திரும்புறதுக்கு முன்னாடி அவரு காது வரைக்கும் போயிட்டுது சண்டை. ராசாவுக்கு கோவமான கோவமில்ல’. அண்ட கடாரம் முட்டிப் போச்சி

‘தாயோளிது’ ஏம் அரமனைக்குள்ளாற வந்து அப்பிடி ஒரு பய வந்து இருக்க அவனுக்கு என்ன ரெண்டு ‘இதா’ இருக்குன்னு கேட்டாரு.

ஆமா ராசா…அப்பிடித்தாம் கேள்வி; அவனுக்கு ரெண்டுதாம் இருக்கும்னாங்க.

சே..இது மோசக் கேடுல்லா வந்து சேந்திருக்கு. அவனப் புடுச்சி அப்பிடியே அதும்மேல யானைய விட்டு மிதிக்க வச்சிக் கொன்னுப்புடுங்கன்னு ஆக்கின அனுப்பிச்சிட்டாரு.

இது எப்பிடியோ மகாராணிக்கு வேண்டியவன் ஒருத்தன் அங்கிருந்து ரகசியமாச் சொல்லி அனுப்பிச்சி ‘இருதலைமணியனை’ தப்பி ஓடி போகச் சொல்லிட்டா ராணி.

பயல் எங்கே போனானோ தெரியல. தல மறைவாயிட்டாம். ஏதோ வேலை செஞ்சி பொழக்க முடிஞ்சதே தவிர, முந்திய மாதிரி பொம்பளைகிட்ட போயி ‘நல்லாப் பொல்லா’ இருக்க முடியல; இருந்தாத்தாம் தெரிஞ்சி போகுமே.

ராசா முரசு அறஞ்சி தேசம் பூராவும் அறிவிச்சிட்டாரு. இன்ன இன்ன மாதிரி அடயாளம் உள்ள இளந்தாரிப்பயல புடுச்சி யாரு தர்றாங்களோ அவர்களுக்கு பதினாயிரம் களஞ்சிப் பொன் தர்றதாக!

வேலை செய்ய மாச்சப் பட்டவெனெல்லாம் மந்தை,சந்தை,வெளிக்கிருக்குத இடம் இப்பிடி எவனுக்கு ரெண்டு இது இருக்குன்னு தேடிக்கிட்டு அலையுதாங்க.
சும்மாவா பதினாயிரங்களஞ்சி பொன்னுல்லா!

இந்தப்பய யாரு கண்ணுலயும் காங்காம அலைஞ்சி திரிஞ்சதுல உடம்பு பூரா முடி காடா வளந்து போச்சு. ஒரு நா நாசுவம் கிட்ட போயி ‘ஏடே எனக்கு உடம்பு சவரம் பண்ணனும். நா ஆத்துல இந்த மரத்துக்குக் கீழ இருக்கேம். வந்து செஞ்சயனா ஒனக்கு ஒரு களஞ்சிப் பொன்னு தருவேம்னு சொல்ல நாசுவனும் சரி போங்க வர்றேம்னாம்.

இவம் போயி மரத்து எணல்ல மறைவான இடம் பாத்து  மணல்ல ‘ஒண்ணைப்’ பொதச்சு வச்சி உக்காந்துக்கிட்டு இருந்தாம் கண்டுபிடிச்சிரக்கூடாதேன்னு. நாசுவன் கிண்ணத்துல தண்ணி எடுத்துக்கிட்டு வந்து எதுர்க்க மணல்ல உக்காந்துக்கிட்டு தண்ணிய விட்டு நல்ல இவன தேச்சிவிட்டாம்.

பயலுக்கு ‘பாத்து’ ரொம்ப நாளாச்சி. அதுலயும் வேத்து மனுசன் கைப்பட்டதும் தேச்சதும் சேந்து, மணலுக்குள்ள தெரியாம இருக்க பொதச்சு வச்சிருந்த்து 'படார்'னு வேகமா எந்திரிச்சதுல நாசுவம் கண்ணுல மணலு விழ, அவம் சத்தம் போட்டு ‘யப்பா…நீதானா அது’ன்னு கேட்டுட்டாம்.

பிடிச்சானே ஓட்டம்.

யய்யா எனக்கு கண்ணுல மண்ணு விழுந்தாலும் குத்தமில்ல. பதினாயிரங் களஞ்சி பொன்னு வேண்டாம். அந்த ஒத்த களஞ்சி பொன்னாவது குடுத்துட்டு போரும்னு இவம் பொறத்தாலயே ஓட, அங்க ஆத்துல குளிச்சிட்டு வேட்டியக் காயப் போட்டுட்டு இருந்தவங்கள்லாம் என்ன ஏதுன்னு கேக்க…

‘அய்யோ போகுதே பதினாயிரங் களஞ்சிப் பொன்னு போகுதேன்னு’ இவம் கூப்பாடு போட, அங்கே ஒரே அவக்காடு ஆயிட்டு.

‘பெறகென்ன…போனவம் போனவந்தாம்’

ராசா அவனத் தேடிட்டிருக்காம். ராணியும் தேடிட்டிருக்கா.
பாத்தாச் சொல்லுங்க. பதினாயிரம் களஞ்சியம் பொன்னு கெடக்கும்

No comments: