கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்ல நண்பர்.
எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.
நெல்லை மாவட்டம் கழுநீர்குளத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.
தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
"ஆரம்பத்தில் கி.இரா.வுக்கு விதவிதமான பல்வேறு நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்துக் கொடுத்தேன். அதனால் எனக்கு நெடிய களப்பணி அனுபவம் கிடைத்தது. சேகரித்த கதைகளை எப்படி எழுத்தில் பதிவு செய்ய வேண்டும் என்ற வித்தையை, ஒரு குழந்தைக்குத் தாய் சொல்லிக் கொடுப்பதைப்போல நேரடியாகவும், மறைமுகமாகவும் கி.இரா. எனக்குக் கற்றுக்கொடுத்தார்'' என்று பதிவு செய்யும் கழனியூரன், இப்போது ஒரு வெறியோடு நாட்டுப்புறவியல் துறையில் ஈடுபடுவதாகக் கூறுகிறார்.
கி.இரா. தந்த உற்சாகத்தில் முதலில் "மறைவாய் சொன்ன கதைகள்" என்கிற தொகுப்பில் ஈடுபட்ட கழனியூரனின் இன்னொரு தொகுப்பு, "மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்".
111 நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புதான் இந்தப் புத்தகம். சில கதைகள் என்னைப்போல கிராமத்து ஆசாமிகளுக்குப் புதிதாக இல்லைதான். ஆனால், அதைக் கழனியூரன் பதிவு செய்திருக்கும் விதம் புதிது.பத்திரிகைகளில் "தெரிந்த பெயர், தெரியாத விவரம்" என்று பிரபலங்களைப் பற்றி எழுதுவார்கள்.
கழனியூரனின் "மண்ணின் கதைகள், மக்களின் கதைகள்" புத்தகம் தெரிந்த கதைகள், ஆனால் சுவாரஸ்யமான புதிய பாணியில் பரிமாறப்பட்ட "அசத்தல்" நாட்டுப்புறக் கதைகள்!
கலாரசிகன்
நன்றி:- தினமணி
Link: https://groups.google.com/forum/#!topic/mintamil/aDRgpAMd_e8%5B1-25-false%5D

No comments:
Post a Comment