கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Sunday, July 28, 2013

வல்லிக்கண்ணன் வரலாறு

முன்னுரை

மண்ணில் வாழ்கின்ற மக்களில் சிலர் மட்டும் வரலாறாக வாழ்ந்து காட்டுகிறார்கள்.  சிலர் வரலாற்றில் இடம் பிடிக்கிறார்கள்.  அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் வல்லிக்கண்ணன்.
தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு தனி தடம் பதித்தவர் வல்லிக்கண்ணன்.  வாழ்கின்ற காலமெல்லாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் தமிழ் இலக்கியம் பற்றியே பேசியும் எழுதியும் vaaவாழ்ந்தவர்.  சுமார் 17 வயதில் பிடித்த பேனாவை தன் உயிர் பிரியும் வரை அவர் கீழே வைக்கவே இல்லை.  அவர் வாழ்ந்த நாட்களில் எழுதாத நாளெல்லாம் “எதையோ இழந்த நாள்” என்று வாழ்ந்தார்.
பேச்சாலும், எழுத்தாலும், செயல்பாடுகளாலும் தமிழ் இலக்கியதிற்கு நாளும் தொண்டு செய்த நற்றமிழ் அறிஞர் அவர்.  ilஇலக்கியத்தின் எல்லா வகைமைகளிலும் சுவடு பதித்தவர்.  கவிதை, சிறுகதை, நாவல், திறனாய்வு, வரலாறு, நாடகம் என்று அனைத்து வகைமைகளிலும் எழுதிக் குவித்தவர் வல்லிக்கண்ணன்.
தன் வாழ்வையே ஒரு இலக்கிய வேள்வியாக ஏற்றுக்கொண்டார்.  படிப்பதிலும் எழுதுவதிலும் அளவில்லாத ஆர்வம் கொண்டு அதற்காகவே தன் இல்வாழ்வையே தத்தம் செய்து கொண்ட தியாக தீபம் அவர்.
பணத்திற்கும் பதவிக்கும் ஏன் புகழுக்கும் கூட மயங்காதவர்; விலை போகாதவர்.  தன் வீடு, தன் பெண்டு, தன் பிள்ளை என்று கூட வாழாதவர்.  தனக்கென்று வாழ்வில் எந்த சொத்து சுகத்தையும் சேர்த்து வைக்காமல் வாழ்ந்து மறைந்த தியாகி வல்லிக்கண்ணன்.
மரபான தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் ஒரு சேர புலமை பெற்றவர். “இப்படி தமிழ் இலக்கியத்திற்காகவே ஒரு மனிதன் வாழ முடியுமா?” என்று வாழ்ந்து காட்டியவர்.
இளைஞர்களின் படைப்புக்களைத் தேடிப்படிப்பிடித்துப் படித்து அவர்களுக்கு உடனுக்குடன் கடிதங்கள் எழுதி உற்சாகப் படுத்தியவர்.  தான் வாழ்கின்ற காலத்தில் மூன்று தலைமுறை எழுத்தாளர்களுடன் தொடர்பும், நட்பும் வைத்திருந்த சாதனையாளர்.
மிக, மிக எளிமையாக வாழ்ந்து காட்டியவர்.  ஆடம்பரம் என்ற சொல்லையே தன் வாழ்நாளில் அறிந்திராதவர். உருவத்தால் மிகவும் மெலிந்தவர்.  ஆனால் நெஞ்சுறுதியில் மிகவும் உயர்ந்தவர்.  தாழ்ந்த குரலில் பேசினாலும் வாழ்வில் யார்க்கும் தலை வணங்காதவர்.
இலக்கியப் பணி ஒன்றையே தன் வாழ்வுப் பணியாக கொண்டு வாழ்ந்து காட்டியவர்.  தன் படைப்புகளை சந்தையில் விலை பேசி விற்க விரும்பாதவர்.  ஆனால் ஒரு தேனீயைப் போல சுழன்று சுழன்று சுறுசுறுப்பாக தமிழ் இலக்கியத்திற்காக உழைத்தவர்.
நண்பர்களை மதிப்பதிலும், இளைஞர்களை உற்சாகப்படுத்துவதிலும் இவருக்கு இணை இவரே!  காலங்காலமாய் ஊற்றெடுத்துப் பொங்கிப் பிரவாகமாக வரும் அனைத்து தளத்தின் சிற்றிதழ்களையும் அலுக்காமல் சலிக்காமல் படித்து அப்பத்திரிகைகளைப் பற்றிய தனது அபிப்ராயங்களை உடனுக்குடன் பதிவு செய்த பண்பாளர்.
அனேக எழுத்தாளர்களுக்கு வல்லிக்கண்ணன் தன் வாயால் பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளார்.  வண்ணநிலவனுக்கும் வண்ணதாசனுக்கும் பெயர் சூட்டியவர் இவரே.
பல எழுத்தாளர்களுக்கு எப்படி இலக்கியம் படைக்க வேண்டும் என்று அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தவர்.  ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து தன் இலக்கியப் பிள்ளைகளுக்கு தமிழ் சுவையை ஊட்டியவர்.  ஒரு தந்தையின் இடத்தில் இருந்து தன் இலக்கியக் குழந்தைகளை தட்டிக் கொடுத்து வளர்த்தெடுத்தவர்.  ஒரு அண்ணனைப் போல பாசத்தோடும் தன் இலக்கியத் தம்பிகளின் விரல் பிடித்து நடை பழக்கியவர்.
இப்படி எண்ணற்ற புகழுக்குச் சொந்தக்காரரான வல்லிக்கண்ணன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் வாய்ப்புக் கிடைத்ததை நான் ஒரு பேராகக் கருதுகிறேன்.  இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சாகித்திய அகதெமி நிறுவனத்திற்கு நன்றி கூறுகிறேன்.  எப்போதும் என்னை உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கும் திறனாய்வுத் தென்றல் ஐயா தி.க.சி அவர்களுக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.பிறப்பும் இளமையும்:

வல்லிக்கண்ணன் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி வட்டம் திசையன்விளை என்ற கிராமத்தில் 12-11-1920 அன்று பிறந்தார்.  இவரது தந்தையார் ரா.மு. சுப்ரமணிய பிள்ளை.  தாயார் மகமாயி அம்மாள்.  நடுத்தரமான சைவ வேளாளர் மரபைச் சார்ந்தவர்.  இவர் பிறந்த உடன் இவருக்குப் பெற்றோர்கள் கோபாலகிருஷ்ணன் என்று தான் பெயர் சூடினார்கள்.  ஆனால் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கும் போது இவர் பெயரை கிருஷ்ணசுவாமி என்று இவர் தந்தை பதிவு செய்து விடுகிறார்.  வல்லிக்கண்ணன் என்பது இவரின் புனைப்பெயரே!  இவரது தந்தையார் உப்பளங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளராகப் பணியாற்றினார்.  வல்லிக்கண்ணனின் பத்தாவது வயதில் அவர் தந்தை இறந்து விட்டதால் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார்.
வல்லிக்கண்ணன் பிறந்த ஊர் திசையின்விளைதான் என்றாலும் அவரது பூர்வீகம் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ராஜவல்லிபுரம் ஆகும்.  முதன் முதலில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற பேச்சாற்றல் மிக்க பேரறிஞரும், தமிழ் எழுத்தாளரும், பேராசிரியருமான ரா.பி. சேதுப்பிள்ளை பிறந்த ஊரும் இதே ராஜவில்லிபுரம்தான்.
இவருக்கு உடன் பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்களும் ஒரு தம்பியும்.  இவர், இவரின் தாய்க்கு மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார்.  தந்தையார் உப்பளங்களை ஆய்வு செய்யும் ஆய்வாளராக அரசு பணியில் இருந்thaததால், ஊர், ஊராக மாறுதலாகிச் செல்லும் நிலையில் இருந்தார்.  ஒரு வயது வரை திசையின்விளையில் வாழ்ந்தவர்.  இரண்டாவது வயதில் தூத்துக்குடியிலும் மூன்றாவது வயதில் ஒட்டப்பிடாரத்திலும் நான்காவது வயதில் கோவில்பட்டியிலும் வசிக்க நேர்ந்தது.
ஐந்தாவது வயதில் கோவில்பட்டியில் உள்ள ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இவரின் கல்விப் பயிற்சி தொடங்குகிறது.  சில மாதங்கள் மட்டுமே, அங்குள்ள அண்ணாவியிடம் எழுத்துப் பயிற்சி பெற்றுக் கொள்கிறார்.  பிறகு அருகில் இருந்த ஒரு துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப் படுகிறார்.
1926 முதல் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள பெருங்குளம் என்ற ஊரில் இரண்டு, மூன்றாம் வகுப்பு கல்வியைக் கற்கிறார்.  இந்தப் பெருங்குளம் தான் எழுத்தாளர் அ. மாதவய்யா பிறந்த ஊராகும்.  நான்காம் வகுப்பை திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர் நிலைப் பள்ளியில் முடிக்கிறார்.  ஐந்தாம் வகுப்பு முதல் பள்ளி இறுதித் தேர்வு (S.S.L.C.) முடிய பாளையங்கோட்டை தூய சவேரியர் உயர் நிலைப் பள்ளியில் பயில்கிறார்.
1936-ல் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு சொந்த ஊரான ராஜவல்லிபுரத்திற்கு திரும்புகிறார்.  அங்கு தன் தாயாருடன் சுமார் இருபது மாதங்கள் தங்குகிறார்.
சிறுபத்திரிக்கைகளுடனான அறிமுகம் இவருக்குச் சிறு வயது முதலே கிடைத்து விடுகிறது.  நான்காம் வகுப்பு படிக்கும் போதே பரலி.சு.நெல்லையப்பரின் ‘லோபகாரி’ என்ற சிற்றிதழும் ‘ஒற்றுமை’ என்ற மாதப் பத்திரிகையும் அண்டை வீட்டுக்காரர்களால் இவருக்குப் படிக்கக் கிடைக்கிறது.
‘தமிழ்நாடு’ நாளிதழுக்கு அவரின் தந்தையார் சந்தா கட்டியிருந்ததால் அப்பத்திரிக்கை அவர் வீட்டிற்கே தபாலில் வந்து விடுகிறது.  எனவே தமிழ்நாடு என்ற தினசரியையும் இவர் சிறுவயது முதலே படிக்க ஆரம்பிக்கின்றார்.  சேலம் வரதராஜநாயுடு சென்னையிலிருந்து நடத்திய பத்திரிக்கையாகும் அது.
சங்கு சுப்பிரமணியம் என்பவர் நடத்திய ‘சுதந்திர சங்கு’ என்ற பத்திரிகையை வ.க.வின் மூத்த சகோதரர் வாடிக்கையாக வாங்குவதால் அவ்விதழும் அவருக்கு வாசிக்கக் கிடைத்தது.  டி.எஸ்.சொக்கலிங்கம் என்பவர் நடத்திய காந்தி இதழும், ஜெயபாரதி, மணிக்கொடி முதலிய சிற்றிதழ்களும் அன்றைய காலக்கட்டத்தில் ‘காலணா, அரையணா’ (இருபதுகளில் புழக்கத்தில் இருந்த நாணயங்கள்) விலைக்கு கிடைத்தன.
இத்தகைய சிற்றிதழ்களும் அவரின் சகோதரர்கள் மூலமும் பக்கத்து வீட்டுக்காரர்களின் மூலமும் அவருக்கு எளிதாகப் படிக்கக் கிடைத்ததால் சிறு வயது முதலே ‘வ.க.’வுக்கு சிற்றிதழ்களின் வாசிப்பு வசப்பட்டு விடுகிறது.
சிறுவயது முதலே துணிக்கடை மறியல், அன்னிய துணி எரிப்பு போன்ற சத்தியாகிரகப் போரட்டங்களை நேரில் காணும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.  திருநெல்வேலியில் சத்தியமூர்த்தி, சோமயாஜுலு, திரிகூட சுந்தரம் பிள்ளை போன்ற சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் பேசும் பேச்சுக்களைக் கேட்க்கும் சந்தர்ப்பமும் சிறு வயதிலேயே அவருக்குக் கிடைத்தது.
சுதந்திர போராட்ட காலத்தில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்களில் முதலில் மகாகவி பாரதியாரின் சுதந்திரப் பாடல்களைப் பாடுவார்கள்.  அதே போல சுதந்திரப் போராட்ட ஊர்வலங்களிலும் பாரதியாரின் பாடல்களை உணர்ச்சி பூர்வமாகப் பாடிக்கொண்டு செல்வார்கள்.  அப்பாடல்களை சிறு வயது முதலே கேட்டதால் பாரதியாரின் பாடல்கள் மீது இவருக்கு ஒரு பற்றுதல் உண்டாகிறது.
எம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர் என்பவர் எழுதி வெளியிட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறு, தேசத் தலைவர்களின் சரித்திரம் போன்றவை மிகக் குறைந்த விலையில் மலிவுப் பதிப்பாக, மாணவர்களுக்கும் கிடத்தன.  அவற்றையும் ஓரணா, அரையணா கொடுத்து இவர் வாங்கிப் படிக்கலானார்.  மாணவப் பருவத்திலேயே இவர் வாழ்ந்த சூழல் இவரை சிற்றிதழ்களின் காதலனாக்குகிறது.  இந்த அனுபவங்களின் அடிப்படையில் தான் இவர் பிற்காலத்தில் ‘வீடும் வெளியும்’ என்ற நாவலை எழுதுகிறார்.
இவரின் பக்கத்து வீட்டுக்காரரான ரங்கூன் பிள்ளை என்பவர் ஆனந்த விகடன் இதழ்களை ஆரம்பம் முதல் வருட வாரியாகப் ‘பைண்ட்’ செய்து வைத்திருக்கிறார். அவைகள் எல்லாம் எட்டாம் வகுப்பு படிக்கும் போதே இவருக்கு மிகச் சுலபமாகப் படிக்கக் கிடைக்கிறது.  அத்தோடு புதிய ஆனந்த விகடன் இதழ்களும் உடனுக்குடன் இவருக்குப் படிக்கக் கிடைக்கிறது.
இதுதவிர வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு.கோதைநாயகி அம்மாள், ஜே.ஆர்.ரங்கராஜு ஆகியோரின் நாவல்களும் ரங்கூன் பிள்ளையின் உதவியால் இவருக்கு வாசிக்கக் கிடைக்கிறது.
இவரின் சகோதரர் கல்யாணசுந்தரம் பாளையங்கோட்டை முனிசிபல் நூலகத்தில் இருந்து சில நாவல்களை எடுத்து வந்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் ராச்சாப்பட்டிற்குப் பிறகும் உரக்கப் படிக்க அதை அவரின் நண்பர் குழாம் சுற்றி அமர்ந்து கேட்டு ரசிக்கும்.  அந்த நண்பர்கள் குழாத்தில் இவரும் போய் அமர்ந்து நாவல் வாசிப்பைக் கேட்டு ரசிப்பார்.
அந்தக் காலத்தில் கல்தூண் மீது சதுரவடிவ கண்ணாடிக் கூண்டுக்குள், முனிசிபாலிட்டி ஆள் ஒருவன் வந்து கருக்கல் நேரத்தில் ஒரு மண்ணெண்ணை விளக்கைப் பொருத்தி வைத்து விட்டுச் செல்வான்.  ஊர் ஒடுங்கிய பிறகு, ‘நாவல் வாசிப்பு நண்பர்கள்’ அவ்விளக்கை எடுத்து வந்து அதன் வெளிச்சத்தில் நாவல் வாசிப்பை நடத்துவதும் உண்டு.  அரசாங்க விளக்கின் வெளிச்சத்தின் நாவல் வாசிப்பில், ஜே.ஆர்.ரங்கராஜூ எழுதிய ‘ராஜம்மாள்’ தனசிங் என்பவர் எழுதிய கருங்குயில் குன்றத்துக் கொலை, ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி மற்றும் எஸ்.எஸ்.அருணகிரிநாதர் எழுதிய ‘மோகன சுந்தரம்’ என்ற நாவலும் இடம் பெறுவதுண்டு.  சில நேரம் ‘பிரசண்ட விகடன்’ என்ற மாதம் இரு இதழையும் அங்கு வாசிப்பார்கள்.
உயர் நிலைப் பள்ளியில் காலடி எடுத்து வைத்த பிறகு, இவரின் வாசிப்புத் தளம் விரிவடைகிறது.  மை மேகசீன், மேரி மேகசின் போன்ற ஆங்கிலப் பத்திரிக்கைகளும், பள்ளி நூலகத்திலேயே இவருக்குப் படிக்கக் கிடைக்கிறது.  படிக்கிற காலத்தில் ஐந்தாம் வகுப்பு முதலே ‘நன் மாணக்கன்’ என்பதற்கான பரிசுகளை இவருக்குக் கொடுத்தார்கள்.  அப்பரிசுகளும் புத்தகங்களாகவே இருந்தன.
அந்தக் காலத்தில் பெற்றோர்கள் ஆண் பிள்ளைகளுக்கும் பெண் குழந்தைகளைப் போல நீளமாக தலை முடி வளர்த்தார்கள். அதில் தலை வாரி பூச்சூட்டியும் மகிழ்ந்தார்கள்.  வல்லிக்கண்ணனும் எட்டாவது வகுப்பு படிக்கும் வரை நீளமான தலை முடியுடன் தான் பள்ளிக்கூடம் சென்று வந்தார்.  எட்டாம் வகுப்பில் சேர்ந்த பிறகுதான் அவர் தன் தலைமுடியை வெட்டி கிராப் வைத்துக் கொண்டார்.
அந்தக் காலத்தில் பொழுது போக்கிற்கு மக்கள், நாடகம் பார்க்கச் சென்றார்கள்.  சென்னையைச் சேர்ந்த கன்னையா கம்பெனி திருநெல்வேலிக்கு வந்து அடிக்கடி பகவத் கீதை போன்ற பக்தி நாடகங்களை நடத்தியது.  கேரளாவில் இருந்து ‘ஒயிட்வே’ என்ற சர்கஸ் கம்பெனிக்காரர்களும் அடிக்கடி பாளையங்கோட்டை வந்து ‘டேரா’ போட்டு சர்கஸ் காட்சிகளை நடத்தினார்கள்.  1932-ல் பாளை மேட்டுத் திடல்  மைதானத்திற்கு ஒரு ஆகாய விமானம் வந்து தரையிறங்கியது.  அதன் உரிமையாளர் அதைக் காட்சிப் பொருளாக்கி அதை வெளியே நின்று பார்ப்பதற்கும் விமானத்தின் உள்ளே சென்று பார்ப்பதற்கும் என்று தனித் தனியே கட்டணங்களை வசூலித்தார்.  மாணவர்களும், பொதுமக்களும் திரளாகக் கூடி அவ்விமானத்தைக் கண்டு களித்தார்கள்.  இத்தகைய கேளிக்கைகளிலும் இவரின் மனம் ஈடுபட்டது.  கிராமஃபோன் பெட்டிகள் புழக்கத்தில் இருந்த காலம் அது.  அப்பெட்டிகளில் இருந்து வரும் பாட்டுகளிலும் ‘வ.க.’வின் மனம் லயித்தது.  பேசாப் படங்கள் என்ற வசனமில்லாத ஊமைப் படங்கள் திருநெல்வேலியில் உள்ள பேலஸ்டிவேல்ஸ் தியேட்டரில் திரையிடப் பட்டது.  அத்தகைய ஊமைப்படங்களையும் பார்த்து ரசித்தார் வ.க.
நான்காவது வகுப்பு படிக்கும் போதே சிறு பத்திரிகைகளைப் படிக்கத் தொடங்கியதால் அதில் உள்ள கதைகளைப் போல நாமும் எழுத வேண்டும் என்று ‘வ.க.’ நினத்து கதைகளை எழுத ஆரம்பித்தார்.
பள்ளி இறுதி வகுப்பு வரை படித்து விட்டு ராஜவல்லிபுரத்தில் தாயாரோடு இருந்த காலக்கட்டத்தில் சக்தி சங்கர் என்ற வாசகரிடமிருந்து மணிக்கொடி இதழ்களின் பையிண்டு வால்யூம்களை வாங்கிப் படிக்கலானார்.  அதில் பிரசுரமாகியிருந்த புதுமைப் பித்தன் கதைகள் “யாத்ரா மார்க்கம்” பகுதியில் வெளி வந்த இலக்கிய சர்ச்சைகள் நா.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், பி.எஸ்.ராமையா, மௌனி முதலியவர்களின் கதைகள் இவரைப் பெரிதும் கவர்ந்தன.  இத்தகைய கதைகளைப் போல தாமும் எழுத வேண்டும் என்று நினைத்து ‘வ.க.’வும் சிறுகதைகள் silaசிலவற்றை எழுதத் தொடங்கினார்.  அக்கதைகளை உடனே பத்திரிக்கைகளுக்கு எப்படி அனுப்ப வேண்டும் என்ற ‘வழிமுறைகள்’ எதுவும் அவருக்குத் தெரியவில்லை.  என்றாலும் தான் எழுதிய கதைகளை ஒரு சில வாசகர்கள் முன்பாவது வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  எனவே ‘இதய ஒலி’ என்ற பெயரில் தானே ஒரு கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினார்.  அதை மாத இதழாகவும் கொண்டு வந்தார்.  அந்தப் பத்திரிகையின் பக்கங்களை நிரப்புவதற்காக தானே கதைகள், கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள் என்று அனைத்தையும் எழுதினார்.  இப்படித்தான் ‘வ.க’வின் எழுத்துப் பணியும், பத்திரிக்கைப் பணியும் ஒருசேர இவரின் பதினாராவது வயதிலேயே துவங்குகிறது.  அன்றிலிருந்து படிப்பதும் எழுதுவதுமே இவரின் வாழ்க்கையாகிறது.

அரசுப் பணியாற்றிய அனுபவம்:

பள்ளி இறுதித் தேர்வை முடித்து விட்டு ஒரு வருடம் ஒன்பது மாதம் வீட்டில் எழுதுவதும் படிப்பதுமாக இருந்தவர்க்கு இராமநாதபுரம் மாவட்டம், பரமகுடியில் விவசாய டிமான்ஸ்ட்ரேட்டர் ஆஃபீசில் ஸ்டோர்கீப்பர் என்ற அரசுப் பணியில் சேர்ந்தார்.  வீட்டை விட்டு, தாயையும் சகோதரர்களையும் பிரிந்து முதன் முதலாக தனியாக வாழத் தலைபட்டது இங்கே தான். அருகில் உள்ள ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டு ஆபீசிலேயே தங்கிக் கொள்கிறார்.  மாலை நேரதில் அருகில் உள்ள டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்து டைப்ரைட்டிங்கும் கற்றுக் கொள்கிறார்.
ஓய்வான நேரத்தைப் படிப்பதிலும் எழுதுவதிலும் செலவு செய்கிறார்.  நவசக்தி, லோகசக்தி, பாரதசக்தி போன்ற இதழ்களில் 1939-ல் இவரின் எழுத்துக்கள் அச்சில் வெளிவருகின்றன.  அப்போதுதான் வல்லிக்கண்ணன் என்ற புனைப்பெயரை தனக்குச் சூட்டிக்கொள்கிறார்.  அன்றிலிருந்து இவரின் படைப்புக்கள் ‘வல்லிக்கண்ணன்’ என்ற பெயரிலேயே பிரசுரமாகத் தொடங்கின.
பரமகுடியில் அரசுப்பணி புரிந்த காலக்கட்டத்தில் டைப்ரைட்டிங்கில் ‘லோயர்’ தேர்வு எழுதித் தேர்ச்சி பெறுகிறார்.  அத்தோடு இந்தி மொழியையும் கற்றுக் கொள்கிறார்.  இந்தி மொழிக் கதைகளைப் படித்துப் புரிந்து கொள்கிற, மொழிப்பெயர்க்கிற அளவுக்கு இந்தி மொழியிலும் பாண்டித்தியம் பெறுகிறார்.
சென்னையிலிருந்து சக்திதாசன் சுப்பிரமணியன் என்ற பத்திரிக்கையாளர் ஒருவர் பரமக்குடி வந்து வல்லிக்கண்ணனுடன் இரண்டு நாட்கள் தங்குகிறார்.  அவர் திரு.வி.கல்யாண சுந்தரனார் நடத்தி வந்த ‘நவசக்தி’ என்ற வார இதழின் உதவி ஆசிரியராகவும் ம.கி.திருவேங்கடம் என்பவர் நடத்தி வந்த லோக சக்தி, பாரத சக்தி என்ற இதழ்களின் ஆசிரியர் குழுவிலும் பணியற்றிக் கொண்டிருந்தார்.  அப்பத்திரிக்கைகளின் வளர்ச்சிக்காகவும், சந்தா சேர்க்கவும், தமிழகம் எங்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தவர், பரமக்குடிக்கும் வருகிறார்.  வல்லிக்கண்ணனின், எழுத்துக்களைப் படித்துப் பார்த்து விட்டு, அவரின் இலக்கிய ஆர்வத்தையும் தெரிந்து கொண்டு, “நீங்கள் இருக்க வேண்டிய இடம் அரசு அலுவலகம் அல்ல.  சென்னையில் உள்ள ஏதாவது ஒரு பத்திரிக்கை அலுவலகமாகும்.  இப்போது ‘வட்டத் துவாரத்தில் சதுரமுளை’ போல பொருத்தமற்ற இடத்தில் உட்கார்ந்து பணி செய்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கூறி வல்லிக்கண்ணனின் மனதில் பத்திரிக்கையாளன் என்ற விதையை முதன் முதலில் ஊன்றி விடுகிறார்.  நாளாவட்டத்தில் அந்த விதை முளைத்து வளர்ந்து விருட்சமாகிவிடுகிறது.
1941-ல் பரமகுடியில் இருந்து மாற்றலாகி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் என்ற ஊருக்கு வருகிறார்.
ஸ்ரீவைகுண்டம் வந்த பிறகும் இவர் வழக்கம் போல் கதைகளையும் கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்.  அரசுப் பணியில் இருந்து கொண்டு கதைகளை எழுதி பத்திரிக்கைகளுக்கு அனுப்பக்கூடாது என்று அவரின் மேலதிகாரி வல்லிகண்ணனை எச்சரிக்கிறார்.  ஆனால் வல்லிக்கண்ணன் தொடர்ந்து பத்திரிக்கைகளுக்கு தன் படைப்புகளை எழுதி அனுப்புகிறார்.
வல்லிகண்ணனின் பிடிவாத குணத்தைக் கண்ட அவரின் மேலதிகாரி, ‘இவர் சுதந்திர போரட்டத்தை ஆதரித்து கட்டுரைகள் எழுதுவதாக மேலிடத்திற்கு புகார் செய்கிறார்.  மேலிடத்திலிருந்து இவருக்கு விளக்கம் கேட்டுக் கடிதம் வருகிறது.  ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு வருடம் ஏழு மாதங்கள் அரசு பணி புரிந்த பிறகு, மேலதிகாரியின் தொல்லைகள் தாங்க முடியாதலால் அரசுப் பணியை ராஜினாமா செய்கிறார்.
அவர் அரசுப் பணியைத் துறந்தது அவரின் தாயார் உட்பட அவரின் உறவினர்கள் அனைவருக்கும் பிடிக்கவில்லை.  என்றாலும் அவரின் சிறிய சகோதரர் கோமதி நாயகம் மட்டும் “சரி உன் இஷ்டம் போல் எழுத்துத் துறையில் ஈடுபட்டு முன்னேறு” என்று ஆறுதல் கூறினார்.


எழுத்துப் பணி;

  வல்லிக்கண்ணனின் சகோதரர்கள் இருவரும் திருநெல்வேலி டவுனில் தாயருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்கள்.  ஒருவர் ஒரு மருந்துக் கடையிலும் இன்னொருவர் முனிசிபல் பஸ் நிலையத்தில் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார்.  இவரும் தன் தாயாருடன் வசித்தனர்.
கைவசம் இருந்த அரசுப் பணியையும் ராஜினாமா செய்துவிட்டதால் எழுதுவது, படிப்பது என்றே நாட்களைக் கழித்தார்.  “பழையக் குருடி கதவைத் திறடி” என்ற பழமொழிக்கு ஏற்ப மீண்டும் ‘இதய ஒலி’ என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தயாரித்தார்.  பத்திரிக்கையின் பக்கங்களை நிரப்ப அவரே, “நையாண்டி பாரதி, கோர நாதன், மிவாஸ்கி,  சொனா முனா, பிள்ளையார்” என்று பல புதிய புனைப் பெயர்களைத் தனக்குத் தானே சூட்டிக் கொண்டு கதை, கட்டுரை, கவிதை என்று எழுதிக் குவித்தார்.
இக்கால கட்டத்தில் ‘நவசக்தி’யில் மாதம் தோறும் இவரின் சிறுகதை வெளிவந்தது. கலைமகள் இதழிலும் அவ்வப்போது சில சிறுகதைகள் பிரசுரமாயின.  புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, க.நா.சுப்பிரமணியம், ந.சிதம்பரசுப்பிரமணியன் போன்ற பிரபல மணிக்கொடி எழுத்தாளர்களின் கதைகள் அக்கால கலைமகளில் வெளியாயின.  அத்தோடு, வல்லிக்கண்ணனின் கதைகளும் கலைமகளில் பிரசுரமானதால், தேர்ந்த இலக்கிய வாசகர்களின் கவனத்தையும் ‘வ.க.’ பெற்றார்.
1941-ல் திருநெல்வேலியில் ‘நெல்லை வாலிபர்கள் சங்கம்’ என்ற அமைப்பை ஆரம்பித்தார்.  அதில் தி.க.சிவசங்கரன் (‘இன்றைக்கு மூத்த எழுத்தாளர், இலக்கிய விமர்சகர்’) போன்றவர்கள் உறுப்பினராக இருந்தார்கள்.  அதே கால கட்டத்தில் தொ.மு.சி.ரகுநாதன் “மணி அரசுக் கழகம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி திருநெல்வேலியில் நடத்திக் கொண்டிருந்தார்.  அக்கழகத்தின் மூலம் ‘மணி அரசு’ என்ற கையெழுத்து இதழும் வெளிவந்து கொண்டிருந்தது.
‘வ.க.’ நடத்திய வாலிபர் சங்க ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப் பிள்ளை கலந்து கொண்டார்.  விழாவின் அழைப்பிதழில் இடம் பெற்றிருந்த ‘பேச்செல்லாம் தமிழினிலே பேசுங்கள்; ஏசுவதெல்லாம் தமிழினிலே ஏசுங்கள்’ என்ற ‘வ.க’வின் வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இலக்கிய அன்பர்களால் அன்போடு ‘டி.கே.சி.’ என்று அழைக்கப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியார் திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள வண்ணார பேட்டையில் வசித்து வந்தார்.  டி.கே.சி. யின் ‘இதய ஒலி’ என்ற நூல் வெளியாகி இருந்த தருணம் அது. வ.க.வும் தி.க.சிவசங்கரனும் டி.கே.சி.யை சந்தித்து இலக்கியம் குறித்துப் பேசி மகிழ்கின்றனர்.
வ.க.வின் படைப்புக்கள் பலவும் தொடர்ந்து சென்னையில் இருந்து வெளிவந்த “நவசக்தி, பாரத சக்தி”, கோவையில் இருந்து வெளிவந்த “சினிமா உலகம்” புதுக்கோட்டையில் இருந்து வெளிவந்த ‘திருமகள் அணிகலம்’, திருச்சியில் இருந்து வெளிவந்த ‘கலா மோகினி’ போன்ற இதழ்களில் பிரசுரமாயின.  அவைகள் அனைத்தும் சிறு பத்திரிக்கைகள் என்பதால், அவைகள் படைப்புகளுக்கு என்று சன்மானம் எதையும் அனுப்பவில்லை.  ஆன்ந்த விகடன் பத்திரிக்கையில் வெளியான “புன்னகையும் புது நிலவும்” என்ற சிறுகதைக்காக அப்பத்திரிக்கை பதின்மூன்று ரூபாய் எட்டணா சன்மானம் அனுப்பியது.  இதுவே எழுத்துத்துறையில் இவர் பெற்ற முதல் சன்மானமாகும்.  அதன்பின் காரைக்குடியில் இருந்து வெளிவந்த ‘இந்திரா’ என்ற மாத இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவர் எழுதிய ‘தெருக்கூத்து’ என்ற சிறுகதை முதல் பரிசைப்பெறுகிறது.  அப்பத்திரிக்கை பரிசுத் தொகையாக நூறு ரூபாயை அனுப்பி வைக்கிறது.  எழுத்துத் துறையில் ‘வ.க.’ பெற்ற முதல் பரிசுத் தொகை இதுவாகும்.
“கிடைத்த சர்க்கார் வேலையை விட்டு, விட்டு, இப்படி வீட்டில் இருந்து கொண்டு, கதைகள், கட்டுரைகள், என்று எழுதிக் கொண்டிருக்கிறானே” என்று இவரின் தாயார் உட்பட உறவினர்கள் பலரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.
திருநெல்வேலியில் இருந்து கொண்டு சுமார் ஒரு வருட காலமாகப் படிப்பது எழுதுவது என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருந்த வ.க. “ஏதாவது ஒரு பத்திரிக்கையில் சேர்ந்து பணி புரியலாமே!” என்று நினைத்து பத்திரிக்கை உலக நண்பர்களுக்கு கடிதங்களை எழுதுகிறார்.  ஆனால் ஒருவரிடமிருந்தும் ஆதரவான பதில் இல்லை! எனவே, “நாம் இனியும் வீட்டில் அம்மாவுக்குப் பாரமாக இருக்கக் கூடாது எங்காவது சென்று ஏதேனும் ஒரு பத்திரிக்கையில் சேர்ந்து விட வேண்டும்” என்று மனதளவில் முடிவெடுக்கிறார்.

நடைபயண அனுபவங்கள்:

“புகழ் பெற்ற ஆங்கில நாவலாசிரியரான ஆலிவர் கோல்ட் ஸ்மித் நடந்தே ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தார்.  ரஷ்ய எழுத்தாளரான மாக்சிம் கார்க்கி நடந்து, நடந்தே ரஷ்யாவின் நீள, அகலங்களைக் கண்டறிந்தார்.  இத்தாலிய சர்வாதிகாரியான முசோலினி பையில் மூன்றே மூன்று இத்தாலிய காசுகளோடு தொலைவில் இருந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு நடந்தே இத்தாலியின் தலை நகரை அடந்தான்” என்றெல்லாம் வரலாற்றில் வரும் நிகழ்வுகளைப் படித்திருந்த வல்லிகண்ணனும், ‘அவர்களைப் போல நடந்து சென்றே தனக்கென ஒரு பத்திரிக்கைத்துறை வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும்’ என்று தன் மனதளவில் முடிவெடுக்கிறார்.
1942, மே 24-ம் நாள் இரவு வீட்டிலும் வெளீயிலும் யாருக்கும் தெரியாமலும் யாரிடமும் தெரிவிக்காமலும் ஒரு துணிப் பையில் தன் எஸ்.எஸ்.எல்.சி. சான்றிதழ், ஒரு பேனா, சில பேப்பர்கள், இரண்டு சட்டைகள், இரண்டு வேட்டிகள், ஒரு துண்டு இவற்றோடு, பசி வந்தால் சாப்பிடுவதற்கு என்று ஒரு பொட்டலம் நிறைய அவல் முதலியவற்றைச் சேகரித்து ஒரு பையில் யாருக்கும் தெரியாமல் மறைவான ஒரு இடத்தில் வைத்துக் கொள்கிறார்.
வீட்டில் அம்மா உட்பட்டவர்கள் தன்னைக் காணோமே என்று கவலைப் பட்டுத் தேடி அலையக் கூடாது என்பதற்காக ‘நான் வேலை தேடி வெளியூர் செல்கிறேன்’ என்ற விபரத்தை ஒரு கடிதத்தில் எழுதி, அக்கடிதத்தை வீட்டில் உள்ளவர்கள் கண்ணில் படும் படியான ஒரு இடத்தில் வைத்து விட்டுத் தூங்கினார்.
மறுநாள் அதிகாலையில் எழுந்து மறைத்து வைத்திருந்த துணிப்பையை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு நடக்கத் தொடங்குகிறார்.  நடந்தே சென்னைக்குச் சென்று விட வேண்டும் என்ற வெறியோடு மதுரை ரோட்டில் நடக்கத் துவங்குகிறார்.  சிறிது தூரம் சென்றதும் ஒரு குளம் வருகிறது.  அக்குளத்தின் அருகிலேயே காலைக் கடனைக் கழித்து விட்டு, அக்குளத்திலேயே பல் துலக்கி, குளித்து விட்டு, சிறிது அவலையும் காலை உணவாகச் சாப்பிட்டுக் கொண்டு நடை பயணத்தைத் தொடர்கிறார்.
சாலையின் இரு மருங்கிலும் மருத மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்ததால் சாலையில் நிழல் பரவி இருந்தது.  எனவே, மத்தியான நேரத்து வெயிலின் கடுமை வரும் வரை சாலை ஓரமாய் நடக்கிறார்.  இடையில் தண்ணீர் கிடைக்கும் இடங்களில் தாகம் தீர தண்ணீரும் குடித்துக் கொள்கிறார்.  நண்பகல் நேரம் ஒரு மரத்தடியில் படுத்து ஓய்வு eduththeduththuk koNduஎடுத்துக் கொண்டு பின் வெயிலின் தாக்கம் குறைந்த பிற்பகல் நேரத்தில் மீண்டும் சாலை ஓரமாய் நடக்கத் தொடங்குகிறார்.
இப்படியே கால் வலியும் களைப்பும் வந்த போது மரத்தடியில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டு சாலை ஓரமாகவே, மதுரையை நோக்கி நடக்கிறார்.  இப்படியே நடந்து நடந்து மூன்றாவது நாள் மதுரைக்கு அருகில் உள்ள திருப்பரங்குன்றத்தை அடைகிறார்.  அங்குள்ள குளத்தில் மக்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இவரும் குளத்தில் இறங்கி குளித்து விட்டு மீண்டும் நடந்து மதுரை நகருக்கு ஒரு மைல் வெளியே உள்ள ஒரு கட்டிடத்தை அடைகிறார்.  அது ஒரு அரசு பயிற்சிப் பள்ளியாகும்.  அங்கு, ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த உறவினர் ஒருவர் பயின்று வருவது இவரின் நினைவுக்கு வருகிறது.  எனவே அவரைச் சந்தித்து அவரிடம் சிறிது பணத்தைக் கடனாகப் பெற்றுக் கொண்டு, மதுரையில் இருந்து ரயில் மார்க்கமாக காரைக்குடி சென்று விடலாம் என்று அவர் மனம் கணக்குப் போடுகிறது.  ஏனெனில் அதற்கு மேல் நடக்க முடியாது என்கிற அளவுக்கு அவரின் கால்கள் வீங்கிப் புண்ணாகி விடுகிறது.
அந்த உறவினரின் பெயர் கோபால். இவருக்கு நண்பரும் கூட.  இவர் நினைத்தது போலவே அவர் பயிற்சிப் பள்ளிக்கு் போகும் நேரத்தில் அவரைச் சந்தித்து விபரம் கூறுகின்றார்.  கோபாலும் நிலைமையைப் புரிந்து கொண்டு ‘வ.க’விடம் சிறிது பணத்தைக் கொடுத்து, “முதலில் சாப்பிட்டு விட்டு வந்து இங்கு ஒரு கட்டிடத்தின் வராண்டாவில் ஓய்வெடுங்கள்.  நான் வகுப்பு முடித்து வருகிறேன்” என்று சொல்லி விட்டுச் சென்று விடுகிறார்.  சாப்பிட்டு மூன்று நாளாகி இருந்ததால் வ.க.வும் கோபாலின் யோசனைப்படியே, அவரிடமிருந்து பணத்தை வாங்கி காலைச் சிற்றுண்டியை ஒரு ஹோட்டலுக்குச் சென்று வயிறாரச் சாப்பிட்டு விட்டு வந்து மீண்டும் அந்தப் பயிற்சிப் பள்ளியின் கட்டிட வராந்தா ஒன்றில் படுத்துக் கொள்கிறார்.
மதிய உணவுக்கான இடைவேளை நேரத்தில் ‘வ.க’ படுத்திருக்கும் இடத்திற்கு வந்து அவரின் கால்கள் வீங்கி இருப்பதைக் கவனித்து, “நீங்கள் இன்றைக்கு எங்கும் செல்ல வேண்டாம்.  என்னுடன் விடுதிக்கு வந்து மதிய உணவைச் சாப்பிட்டு விட்டு விடுதியின் அறையிலேயே படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.  நாளைக்கு நீங்கள் காரைக்குடி செல்லலாம்” என்கிறார்.  நண்பரின் யோசனையை ஏற்று அன்று முழுவதும் அந்த விடுதியின் அறையிலேயே படுத்து ஓய்வெடுக்கிறார்.  எனவே அவரின் கால் வீக்கம் குறைகிறது.
மறுநாள் காலையில் நண்பனுடன் சேர்ந்து குளித்து துணி மாற்றிக் கொண்டு சாப்பிட்டு விட்டு, அவர் கொடுக்கும் பணத்தையும் வாங்கிக் கொண்டு, அங்கிருந்து நடந்தே மதுரை ரெயில்வே ஸ்டேசனை அடைகிறார்.  அங்கு காரைக்குடி செல்லும் ரெயில் வரும் வரைக் காத்திருந்து அதில் ஏறி கரைக்குடி செல்கிறார்.
‘நடந்தே சென்னை செல்ல வேண்டும்’ என்ற ‘வ.க.’வின் கனவு அவரின் உடல் நிலை காரணமாக மதுரையுடன் நிறைவடைகிறது.
பிற்காலத்தில் சினிமா இயக்குனராகிப் புகழ் பெற்ற ப.நீலகண்டன் தான் அன்று காரைக்குடியில் இருந்து வெளிவந்த ‘இந்திரா’ என்ற மாத இதழின் ஆசிரியராக இருந்தார்.  இதழின் வெளியீட்டாளராக பழனியப்ப செட்டியார் இருந்தார்.
‘வ.க.’ இந்திரா பத்திரிக்கை அலுவலகத்திற்குச் சென்ற போது அங்கு ப.நீலகண்டனுடன், மணிக்கொடியில் சிறுகதைகள் எழுதிப் புகழ்பெற்ற ஆர்.சண்முகசுந்தரமும், இந்திரா பத்திரிக்கையின் உதவி ஆசிரியரான கோ.த.சண்முகசுந்தரமும் இருக்கிறார்கள்.  அவர்களிடம் ‘வ.க.’ தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தன் பயண நோக்கத்தைத் தெரிவிக்கிறார்.
‘வ.க.’ வீட்டை விட்டுக் கிளம்பிய அன்று அவரைக்காணாமல் அவரின் தாயார் கலங்குகிறார்.  தற்செயலாக ‘வ.க.’ எழுதி வைத்து விட்டு வந்த கடிதம் அவர் சகோதரர் கோமதி நாயத்தின் கண்ணில் பட்டிருக்கிறது.  உடனே அவர், ‘இவன் பத்திரிக்கைகளில் பணிபுரியும் நோக்கத்தில்தான் சென்றுள்ளான் என்பதைப் புரிந்து கொண்டு, தன் வீட்டில் உள்ள பத்திரிக்கைகளின் முகவரிக்கெல்லாம் “இன்ன மாதிரி என் தம்பி பத்திரிக்கையில் பணி புரியும் நோக்கத்தில் வீட்டில் கூட சொல்லாமல் புறப்பட்டு வந்து விட்டான்.  அவன் கையில் காக்காசு கூட கிடையாது.  எனவே அவன் அங்கு வந்தால் அவனை ஆதரித்து அவனுக்கு வேலை கொடுங்கள்.  இல்லை என்றால் அவனை வேறு ஏதாவது பத்திரிக்கைக்கு அனுப்பி வையுங்கள் அதுவும் முடியதென்றால் அவனை திருநெல்வேலிக்கே அனுப்பி உதவுங்கள்.  பணத்தேவைக்கு என் முகவரிக்கு கடிதம் எழுதுங்கள் நான் மணியார்டர் மூலம் உடனே அனுப்பி வைக்கிறேன்” என்ற நீதியில் கடிதங்களை எழுதி இருக்கிறார்.  ‘வ.க’ கரைக்குடி வந்து சேரும் முன்பே ‘வ.க.’வின் சகோதரர் எழுதிய கடிதம் காரைக்குடியில் உள்ள ‘இந்திரா’ பத்திரிக்கை அலுவலகத்தை வந்து சேர்ந்திருந்தது.  எனவே, ‘வ.க.’ ஒன்றும் சொல்லாமலேயே அவரின் mummmmmnilaநிலமை அங்கிருந்தவர்களுக்குப் புரிந்து விடுகிறது.
அது யுத்த காலம், காகிதங்களுக்கும் கடும் கிராக்கி, அத்தோடு பத்திரிக்கைகளின் விற்பனையும் மந்தமாக இருந்தது.  ப.நீலகண்டன் “இப்போதைக்கு இந்திரா பத்திரிக்கைக்கு ஆள் தேவையில்லை!  ஏற்கனவே இருக்கிற ஆட்களையே கழற்றி விட்டு விடலாமா” என்ற நிலமைதான் இருக்கிறது.  எனவே இதே ஊரில் உள்ள ‘சக்தி’ மாத இதழின் அலுவலகம் சென்று கேட்டுப் பாருங்கள்” என்று சொல்லி துணைக்கு ஆர்.சண்முகசுந்தரத்தையும் அனுப்பி வைக்கிறார்.  பிற்காலத்தில் “நாகம்மா வா” என்ற நாவலை எழுதிப் புகழ் பெற்ற எழுத்தாளர் ஆர்.சண்முக சுந்தரம் தான் அவர்.
‘சக்தி’ பத்திரிக்கையின் ஆசிரியராக வை.கோவிந்தன் இருந்தார்.  உதவி ஆசிரியராக ‘தி.ஜ.ர.’ என்று அழைக்கப் படும் தி.ஜ.ரங்கநாதன் இருந்தார்.  சக்தி பத்திரிக்கையும் அப்போது தள்ளாட்டத்தில் தான் இருந்தது.  எனவே அங்கும் வேலை காலி இல்லை ‘வ.க’வின் சகோதரர் எழுதிய கடிதம் சக்தி பத்திரிக்கைக்கு வந்திருந்தது.  எனவே, தி.ஜ.ரா., வ.க.வின் சகோதரர் கோமதி நாயகத்திற்கு வ.க. “இங்கு வந்திருந்த விபரத்தையும், இங்கு பத்திரிக்கைத் துறையில் வேலை காலியில்லை எனவே அவரை திருநெல்வேலிக்கே திரும்ப அனுப்பி விடுகிறோம், அது வரை அவர் இங்கே தங்கி இருப்பார்.  அவரின் வழிச்செலவுக்குத் தேவையான பணத்தை அவர் பெயருக்கு ‘சக்தி’ காரியாலய முகவரிக்கே அனுப்புங்கள்” என்று கடிதம் எழுதுகிறார்.
சக்தியில் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வீரவநல்லூர்க்காரர், சுந்தரம் என்பவர் விற்பனைப் பிரிவில் பணி புரிந்து வந்தார்.  அவர் காரைக்குடிக்கு அருகில் உள்ள நேமத்தான்பட்டியில் பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்து கொண்டிருக்கும் வீ.தி.சொக்கலிங்கம் என்பவருடன் வ.க.வை தங்க வைய்த்தார்.  வீ.தி.சொக்கலிங்கம் என்பவருக்கும் இலக்கியத்தில் ஈடுபாடு இருந்தது.  அவரும் வீரவநல்லூரைச் சேர்ந்தவர்தான்.
ஒரு வாரம் கழிந்து திருநெல்வேலியில் இருந்து ‘வ.க.’ பெயருக்கு மணியார்டர் வருகிறது.  அது வரை நேமத்தான்பட்டியில் உள்ள ஆசிரியருடன் தங்கிக் கொண்டு படிப்பது, எழுதுவது என்று பொழுதைக் கழிக்கிறார்.
மணியார்டர் மூலம் பணம் கைக்கு கிடைத்த பிறகு, அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு, திருநெல்வேலிக்கு பஸ்ஸில் செல்கிறார்.  “போன மச்சான் திரும்பி வந்தான் பூ மணக்க...” என்ற கதையாக தோல்வியுடன் வ.க. திநெல்வேலி திரும்பினாலும், சொல்லாமல் பிரியாமல் சென்ற மகன், “நலமாக வீடு தேடி வந்து விட்டானே!” என்று அவரின் தாய் அகமகிழ்கிறார்.
பத்திரிக்கைப் பணி
   
             இதுவரை ஏற்பட்ட அனுபவத்தில் இருந்து, “நாம் தேடிப் போய் வேலைத் தாருங்கள் என்று கேட்கக் கூடாது.  அவர்களாக அழைத்தால் தான் போக வேண்டும்” என்ற முடிவுக்கு வந்தார்.  ‘வ.க.’ தனக்குத் தெரிந்த பத்திரிக்கைகளுக்கெல்லாம் வேலை கேட்டுக் கடிதம் எழுதினார்.
புதுக்கோட்டையில் இருந்து வெளிவரும் ‘திருமகள்’ என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ரா.சி.சிதம்பரம் என்பவர் உடனே புறப்பட்டு வந்து பணியில் சேருமாறு கடிதம் எழுதினார்.  எனவே ‘வ.க.’ 1943 – ஜனவரி மாதக் கடைசியில் புதுக்கோட்டை போய்ச்  சேருகிறார்.
ரா.சி.சிதம்பரம் ‘வ.க’வை அன்போடு வரவேற்று அவரை ‘திருமகள்’ பத்திரிக்கை அலுவலகத்தின் மாடியில் காலியாக இருந்த ஒரு அறையில் தங்கிக் கொள்ளச் சொல்கிறார்.  சாப்பாட்டிற்கும் அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்கிறார். இராம .மருதப்பச் செட்டியார் என்பவர் தான் பத்திரிக்கையின் உரிமையாளராக இருந்தார்.  பத்திரிக்கை சம்மந்தமான வேலைகளை ஒவ்வொன்றாய் சொல்லிக் கொடுத்தார்.  குறிப்பாக அச்சுக் கோர்த்து வந்த பிரதிகளில் உள்ள பிழைகளை எவ்வாறு நீக்குவது (புரூஃப் பார்ப்பது) என்று கற்றுக் கொடுக்கிறார்.  மாலை நேரத்தில் உலாவச் செல்லும் போது ‘வ.க’வையும் உடன் அழைத்துச் செல்கிறார்.  இலக்கியம் குறித்து இரண்டு பேரும் பேசி மகிழ்கிறார்கள்.
ஒரு மாதம் கழிந்த பிறகு ஒரு நாள் இரவு வெகு நேரத்திற்குப் பிறகு ரெட்டியார் பத்திரிக்கை அலுவலக மாடிக்கு வந்து ‘என்னைத் தேடி யாராவது ஒரு பெண் இங்கு வந்தாளா?’ என்று வ.க.விடம் கேட்கிறார்.
வ.க. ‘இல்லை’ என்று பதில் சொல்கிறார்.  அதற்குள் அந்தப் பெண்ணும் அங்கு வந்து சேர்கிறார்.  தூக்கலான மேக்கப் அவர் குடும்பப் பாங்கான பெண்ணில்லை என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது.  அந்தப் பெண்ணைக் கண்டதும் ரெட்டியார் அவளுடன் சென்று விடுகிறார்.
“புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள கோகர்ணம் என்ற ஊரில் தாசிகள் சில பேர் வசிக்கிறார்கள்” என்று பேச்சோடு பேச்சாக ஒரு நாள் ரா.சி.சிதம்பரம் சொல்லி வைத்தது ‘வ.க.’வுக்கு நினைவுக்கு வருகிறது.
செட்டியார் போன பிறகு சிறிது நேரம் கழித்து ஒரு ஆள் வந்து “‘ஆச்சி’ உங்களைக் கூப்பிடுகிறார்” எங்கிறான்.  செட்டிநாட்டில், செட்டியார்களின் மனைவியை ‘ஆச்சி’ என்று அழைப்பது வழக்கம்.  இதெல்லாம் ‘வ.க.’வுக்கு அப்போது தெரியாது.  வ.க. எதுவும் புரியாமல் கூப்பிட்டவர் பின்னால் போகிறார்.
ஆபீசுக்கு சற்று தொலைவில் நிற்கும்பெண் செட்டியாரின் மனைவி என்று அவரை அழைத்துக் கொண்டு சென்ற வேலைக்காரன் சொல்கிறான்.
வ.க.ஆச்சியின் அருகில் சென்றதும் அப்பெண், மிரட்டுகிற தொனியில், “சற்று நேரத்திற்கு முன் செட்டியார் இங்கு வந்தாரா? அவரைத் தேடிக் கொண்டு யாராவது ஒரு பெண் வந்தாளா?” என்று கேட்டுத் துளைத்தெடுக்கிறாள்
வ.க. வெள்ளந்தியாக நடந்ததை நடந்த படி ஆச்சியிடம் ஒளிவுமறைவின்றி கூறிவிடுகிறார்.
மறுநாள் செட்டியாரின் வீட்டில் பெரிய பூகம்பமே வெடித்து விடுகிறது.  “செட்டியார் கோவலனைப் போல, அவர் விஷயத்தில் நீர் கண்டும் கணாதது போல் இருந்து கொள்ள வேண்டியது தானே!  ஆச்சியிடம் ஏன் உள்ளதைச் சொன்னீர்?” என்று மறுநாள் ர.சி.சிதம்பரமும் வருத்தப் படுகிறார்.
‘வ.க.’வின் நிலமை தர்ம சங்கடமாகி விடுகிறது.  ஆச்சியின் பெயரில் தான் சொத்து சுகம், வங்கிக் கணக்கு எல்லாம் இருக்கிறது.  செட்டியார் வெறும் வெத்து வேட்டு தான்.  இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ஆச்சி பணம் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார்.
செட்டியார் பத்திரிக்கை நஷ்டத்தில் ஓடுகிறது என்று கணக்குக் காட்டி ஆச்சியிடம் இருந்து பணத்தை வாங்கி சின்ன வீட்டு செட்டப்புக்கு கொடுத்து வந்திருக்கிறார்.  இப்போது வெள்ளந்தியான ‘வ.க.’வின் கூற்றால் செட்டியாரின் ‘சாயம்’ வெளுத்து விட்டது.  இடையில் அகப்பட்ட ‘திருமகள்’ பத்திரிக்கை தள்ளாட ஆரம்பித்து விட்டது.  நாளாவட்டத்தில் , திருமகளில் வேலை பார்த்த அனைவரும் வேறு வேலை தேடிக் கொண்டு வெளியூர் செல்ல வேண்டிய நிலை வந்து விட்டது.
ஒரு நாள் வி.ரா.ராஜகோபாலன் என்பவர் புதுக்கோட்டைக்கு வந்து ‘வ.க.’வுடன் தங்கினார்.  திருமகள் பத்திரிக்கையின் நிலமையைப் பற்றி விசாரித்தார்.  அவரிடம் ‘வ.க.’ வும் உள்ள நிலமையை உள்ள படி கூறினார்.
வி.ரா.ராஜகோபாலன், “கோவையில் இருந்து வெளிவரும் ‘சினிமா உலகம்’ என்ற பத்திரிக்கையை பி.எஸ்.செட்டியார் என்பவர் நட்ததுகிறார்.  நான் அவருக்கு உங்கள் நிலமையை விளக்கிக் கடிதம் எழுதுகிறேன்.  அவரே உங்களுக்கு கடிதம் எழுதி வரச்சொல்வார்.  அதன் பின் நீங்கள் இங்கிருந்து சென்றால் போதும்” என்று சொல்கிறார்.  சொன்னபடியே சினிமா உலகம் பி.எஸ்.செட்டியாருக்கு கடிதமும் எழுதுகிறார்.
பி.எஸ்.செட்டியார் எழுதிய கடிதத்தை மறுநாள் இராம. மருதப்ப செட்டியாரிடம் காட்டி “நான் கோவை செல்ல ஆசைப் படுகிறேன்” என்கிறார் வ.க.
மருதப்பச்செட்டியாரும் வ.க.வுக்கு கைச்செலவுக்குப் பணம் கொடுத்து, வழியனுப்பிவைக்கிறார்.  ‘வ.க.’ புதுக்கோட்டையில் இருந்து புறப்பட்டு கோவை செல்கிறார்.  கோவையில் வெரைட்டி ஹால் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்.  அவ்வீட்டின் அறையே ‘சினிமா உலகம்’ பத்திரிக்கை அலுவலகமாக்ச் செயல்பட்டது.  பி.எஸ். செட்டியார் வ.க.வை வரவேற்று பத்திரிக்கை அலுவலகமாகச் செயல்படும் அறையிலேயே தங்கிக் கொள்ளச் சொல்கிறார்.  சாப்பாடிற்கு அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பாடு செய்கிறார்.
ஆரம்பத்தில் சென்னையில் இருந்து தான் ‘சினிமா உலகம்’ என்ற பத்திரிக்கை வெளிவந்தது.  ‘பிலிம் இந்தியா’ என்ற ஆங்கிலப் பத்திரிக்கையைப் பார்த்து அதைப் போலவே தமிழில் இப்பத்திரிக்கையை பி.எஸ்.செட்டியார் நடத்தினார்.  இவரின் உண்மையான பெயர் பக்கிரிசாமி என்பதாகும்.  சென்னையில் ஒரு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தவர்.  பத்திரிக்கைத் தொழிலின்பால் உள்ள மோகத்தால், தான் பார்த்து வந்த ஆசிரியப் பணியை ராஜினாமா செய்துவிட்டு, இப்பத்திரிக்கையைத் தொடங்கி நடத்தி வந்தார்.  இப்பத்திரிக்கை சென்னையில் இருந்து வெளிவந்த போது அதன் வளர்ச்சிக்காக, புகழ் பெற்ற வசனகர்த்தாவான இளங்கோவன், கவி.க.அ.து. யோகியார், பாரதிதாசன் போன்றோர் உழைத்துள்ளார்கள்.
கோவையிலும், சென்னையைப் போல பல சினிமா கம்பெனிகள் செயல்பட்டு வந்ததால் தான் பி.எஸ்.செட்டியார் ‘சினிமா உலக’ப் பத்திரிக்கை அலுவலகத்தை சென்னையிலிருந்து கோவைக்கு மாற்றியிருந்தார்.
வல்லிக்கண்ணனின் அயராத உழைப்பையும், ஈடுபாட்டையும் பார்த்த பி.எஸ்.செட்டியார் ‘சினிமா உலகம்’ பத்திரிக்கையில் ‘ஆசிரியர்: பி.எஸ்.செட்டியார், உதவி ஆசிரியர்: வல்லிக்கண்ணன்’ என்று பிரசுரம் செய்தார்.
தபால் பார்ப்பது, புரூஃப் திருத்துவது, பத்திரிக்கைகளை அனுப்புவது ‘மேட்டர்’களை எழுதுவது என்று அத்தனை வேலைகளையும் தலை மேல் இழுத்துப் போட்டுக் கொண்டு ‘சினிமா உலகம்’ பத்திரிக்கைக்காக அயராது உழைத்தார் வல்லிக்கண்ணன் என்றாலும், மாதச் சம்பளம் என்று நிர்ணயித்து சம்பளம் எதுவும் வல்லிக்கண்ணனுக்கு செட்டியார் கொடுக்கவில்லை.  ‘வ.க.’ கேட்ட போதெல்லாம் அவ்வப்போது கைச்செலவுக்குப் பணம் கொடுத்தார்.
அக்காலக்கட்டத்தில் தான் டி.கே.எஸ்.சகோதர்களின் நாடக சபை பாலக்காட்டில் முகாமிட்டு நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தது.  டி.கே.எஸ். சகோதர்களை பேட்டிகாண வல்லிக்கண்ணனை பி.எஸ்.செட்டியார் பாலக்காட்டிற்கு அனுப்பினார்.  வல்லிக்கண்ணன் டி.கே.எஸ்.சகோதர்களைப் பேட்டி கண்டார்.  அன்று முதல் டி.கே.சண்முகத்திற்கு வல்லிக்கண்ணனை மிகவும் பிடித்துப் போயிற்று.
மார் ஒன்பது மாதங்கள் கோவையில் தங்கி இருந்தார் ‘வ.க’.  ‘சினிமா உலகம்’ சினிமா சம்பந்தப்பட்ட பத்திரிக்கை என்பதால், ‘வ.க.’ வின் மனம் அதில் வெகுவாக ஈடுபடவில்லை என்றாலும், யாரும் குறை சொல்ல முடியாதபடி உழைத்தார்.
சென்னை சென்று ஏதாவது ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் பணியாற்ற வேண்டும் என்று அவர் மனம் எண்ணியது.
பி.எஸ்.செட்டியாரும், அவரின் குடும்பத்தாரும் ‘வ.க.’ விடம் மிகவும் அன்போடு பழகினார்கள்.  எனவே பி.எஸ்.செட்டியாரிடம் நேரடியாக தான் சென்னை செல்ல விரும்புவதை சொல்ல ‘வ.க.’வுக்கு மனம் வரவில்லை.  என்றாலும் சென்னை செல்ல மனம் ஏங்கியது.  எனவே தன் மன நிலையை விளக்கி ஒரு கடிதத்தை எழுதி செட்டியாரிடம் கொடுத்தார் வ.க.
கடிதத்தைப் படித்தாலும் கடின உழைப்பாளியான சம்பளம் வாங்காத ஊழியரான ‘வ.க.’வை இழக்க செட்டியாரின் மனம் இடம் தரவில்லை.  எனவே, ‘அடுத்த மாதம் போங்கள்’ என்று ஆறுதல் மொழி கூறி வைத்தார்.
எனவே வேறு வழியில்லாமல் ‘வ.க.’, ‘நான் என் தாயாரைப் பார்த்து பத்து மாதங்களுக்கு மேலாகிறது.  அவரைப் பார்க்க ஆசையாக இருக்கிறது’ என்று கூறி திருநெல்வேலிக்குப் போகப் போவதாகச் சொன்னார்.  இதற்கு மேல் இவரைத் தடுத்து நிறுத்த முடியாது என்று நினைத்த செட்டியார் ‘வ.க.’வை அனுப்பி விட்டார்.
‘வ.க.’ கோவையிலிருந்து புறப்பட்டு நேரே ரெயில்வே ஸ்டேசன் வந்து சென்னைக்குச் சென்று விட்டார்.  1943- டிசம்பரில் நவசக்தியில் சேர்ந்தார்.  வ.ரா.(வ.ராமஸ்வாமி) நவசக்தியில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்த காலக்கட்டம் அது.  அப்போது சென்னையில் ரோடு நடுவில் இரும்புத் தண்டவாளங்கள் பதிக்கப்பட்டு இருந்தன.  அதில் டிராம் வண்டிகள் ரயில் பெட்டி போல சென்றன.  அதில் ஏறி மக்கள் பயணம் செய்து வந்தார்கள்.  ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வல்லிக்கண்ணன் டிராம் வண்டியிலும் பஸ்ஸிலும் பயணம் செய்து சென்னை மாநகரின் பல பகுதிகளையும் சுற்றிப் பார்த்தார்.  திருலோக சீதாராமன் என்பவர் ‘வ.க.’வை சில எழுத்தாளர்களின் வீட்டிற்கும் அழைத்துச் சென்று ‘வ.க.’வை அறிமுகப்படுத்தி வைத்தார்.  நாரணதுரைக் கண்ணன், கி.வா.ஜகந்நாதன், கா.ஸ்ரீ.ஸ்ரீனிவாஸாச்சார்யா பேராசிரியர் கே.சுவாமிநாதன், அ.கி.ஜெயராமன், சிதம்பரசுப்பிரமணியன், பா.ரா. புதுமைப்பித்தன் போன்ற எழுத்தாளர்களை நேரில் சந்தித்து உரையாடுகின்ற வாய்ப்பு ‘வ.க.’வுக்கு முதன் முதலில் இப்படித்தான் கிடைத்தது.
சென்னையில் உள்ள யுனிவர்சிட்டி லைபிரரி ‘வ.க.’வின் வாசிப்பு தாகத்தைத் தீர்த்து வைத்தது.
இந்நிலையில் நாடக நடிகர் டி.கே.சண்முகத்திடமிருந்து முதலாவது நாடகக் கலை மாநாட்டுக்குக்கான அழைப்பிதழும், “தாங்கள் நேரில் வந்து என்னைச் சந்தியுங்கள், உங்களிடம் தனியாகப் பேச வேண்டும்” என்ற கடிதமும் வந்தது.
மாநாட்டில் கலந்து கொள்ள ‘வ.க.’ ஈரோடு சென்றார்.  நாடகக் கலை விழா மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.  மாநாட்டிற்கு பொருளாதார மேதை ஆர்.கே.சண்முகம் செட்டியார், தலைமை வகித்தார்.  சி.என்.அண்ணா துரை, என்.எஸ்.கிருஷ்ணன் முதலியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மாநாட்டில் நாடகக்கலையை வளர்க்க ‘நாடகம்’ என்றொரு இதழை நடத்துவது என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
“‘நாடகம்’ என்ற இதழின் ஆசிரியர் பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று நடிகர் டி.கே.சண்முகம் ‘வ.க.’வை கேட்டுக்கொண்டார்.  ஆனால் டி.கே.எஸ்.ஸின் அந்த வேண்டுகோளை ‘வ.க.’ ஏற்க மறுத்து விட்டார்.  அதனால் ‘நாடகம்’ என்ற இதழ் துவங்கும் எண்ணம் முளையிலேயே கருகியது.

துறையூரில் வாழ்ந்த அனுபவம்:

  ஈரோட்டில் இருந்து சென்னை வந்த ‘வ.க.’வை அ.வெ.ர.கி. செட்டியார் சந்தித்து “துறையூரில் இருந்து வெளிவரும் கிராம ஊழியன் பத்திரிக்கையில் பணிபுரிய வாருங்கள்” என்று அழைத்தார்.  ‘வ.க.’வும் கிராம ஊழியனில் பணிபுரிய விரும்பினார்.  எனவே நவசக்தியின் ஆசிரியர் சக்திதாசனிடம் விடைபெற்றுக் கொண்டு ‘வ.க.’ 1944 – பிப்ரவரி இறுதியில் துறையூர் சென்றார்.
திருச்சிராப்பள்ளியில் இருந்து 28 மைல் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் துறையூர் ‘சாவடி’ போன்ற நீளமான ஓட்டுக் கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த அச்சகத்தில் ‘கிராம ஊழியன்’ என்ற பத்திரிக்கை அச்சிடப் பட்டது.  பத்திரிக்கை பெயருக்கு ஏற்ற படி கிராமத்தில் இருந்து வெளிவந்தது.  இங்கு தான் ‘வ.க.’வுக்கு மாதம் ரூபாய் 25 சம்பளம் என்று பேசி ஊதியம் வழங்கப் படுகிறது.  அத்தோடு நியமன உத்தரவும் தரப்பட்டது.
அ.வெ.ர.கி.செட்டியாரும், திருலோகசீத்தாராமும் பத்திரிக்கையின் நிர்வாக விஷயங்களைக் கவனித்துக் கொண்டார்கள்.  கு.பா.ராஜகோபாலன், தி. ஜானகிராமன், கரிச்சான்குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், கி.ரா.கோபாலன் போன்ற கும்பகோணத்து எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், படைப்புகள் வந்தன.  கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த கோபுலு, ஸாரதி போன்றவர்கள் பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த படைப்புகளுக்குப் பொருத்தமான ஓவியங்களை வரைந்து கொடுத்தார்கள்.  ‘கு.ப.ரா.’, நா.பிச்சமூர்த்தி என்ற இலக்கிய இரட்டையர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அப்போது தான் ‘வ.க.’வுக்குக் கிடைத்தது.  சிட்டி, பெ.கோ.சுந்தர்ராஜன் போன்ற எழுத்தாளர்களின் நட்பும் அவருக்கு இங்கே கிடைத்தது.  ‘தி.ஜா’வின் முதல் நாவலான ‘அமிர்தம்’ கிராம ஊழியனில் தான் தொடராக வெளி வந்தது
. ‘நையாண்டி பாரதி’ என்ற புதிய புனைப்பெயரில் ‘வ.க.’ சமூக விமர்சனம் சார்ந்த கட்டுரைகளைத் தொடர்ந்து கிராம ஊழியனில் எழுதினார்.  ‘பாரதிதாசனின் உவமை நயம்’ என்று வ.க. கிராம ஊழியனில் ஒரு தொடர்கட்டுரை எழுதினார்.  பாவேந்தரே அக்கட்டுரைகளைப் படிக்கிறார்.  ஒரு முறை ‘வ.க.’ வை நேரில் சந்தித்த போது பாவேந்தர் “பார்க்க சின்னப் பையன் மாதிரி இருக்கிறே! நீயா இக்கட்டுரைகளை எழுதினாய்?” என்று ஆச்சிரியத்துடன் வினவுகிறார்.  அத்தோடு, “கட்டுரை எழுதுவதோடு நிறுத்திக்கொள், உன் போட்டோவை பத்திரிக்கையில் வெளியிடாதே!” என்று ஆலோசனையும் கூறுகிறார்.
‘இலங்கையில் வாழ்ந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை வாங்கி கிராம ஊழியனில் பிரசுரிக்க வேண்டும்’ என்று நினைத்த ’வ.க.’ இலங்கை எழுத்தாளர்களுக்கு கடிதம் எழுதுகிறார்.  அப்போதைய இலங்கையின் முன்னோடி தமிழ் எழுத்தாளர்களான சி.வைத்தியலிங்கம், இலங்கையர்கோன், சம்பந்தன் போன்றோர் சிறுகதைகளையும் சோ.தியாகராசா, ச.அம்பிகைபாலன் போன்றவர்கள் கட்டுரைகளையும் அனுப்புகிறார்கள்.  அவைகளை ‘வ.க.’ கிராம ஊழியனில் தொடர்ந்து பிரசுரம் செய்கிறார்.  தமிழ் நாட்டில் உள்ள வாசகர்கள் இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகளத் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பை இதன் மூலம் ‘வ.க.’ ஏற்படுத்திக்கொடுத்தார்.
கிராம ஊழியன் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த திருலோகசீத்தாராம், அதிலிருந்து விலகி திருச்சியில் இருந்து புதிதாக வெளிவர இருக்கும் ‘சிவாஜி’ என்ற வார இதழில் சேர்கிறார்.  எனவே கிராம ஊழியன் இதழின் ஆசிரியர் பொறுப்பை ‘வ.க.’ ஏற்றுக் கொள்கிறார்.
‘வ.க.’ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு, கிராம ஊழியனில் ராசிபுரம் தனுஷ்கோடி. தி.க.சிவசங்கரன் என்ற தி.க.சி.சிட்டி, சுப.நாராயணன், கு.ப.ரங்காச்சாரி (பராங்குசம்) போன்றோர் புதிதாக இதில் எழுத ஆரம்பித்தார்கள்.  ‘வ.க.’வும் பாரதியாரின் கவிதைகளை மையமாகக் கொண்டு “பாரதி அடிச் சுவட்டில்...” என்ற கட்டுரைத் தொடரை எழுதினார்.  அவைகள் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது.
ebfh; b.Nf.rz;Kfk; t.f. kPJ kpFe;j md;G nfhz!bUe;jhh;. mth; ehlfq;fs; elj;Jk; NghJ mijg; ghh;j;J fpuhk Copah;fs; me;ehlfk; gw;wp vOJkhW Nfl;Lf;nfhள்th;. ‘t.f.’Tk; topr; nryTf;F gzKk; mDg;gp tpLthh;. ,g;gb t.f. Tk; b.Nf.v]!. rNfhjuh;fspd; gy ehlfq;fisg; ghh;j;J mitfSf;F fpuhk Copadpy; fl;Liufis vOjpdhh;. mf;fl;LiufSk; thrfh;fspd; kj;jpapy; kpFe;j வரNtw;gpid ngw;wd.
mr;R ,jo;fspd; Mrphpah; nghWg;ig Vw;Wf; nfhz!l gpwFk; ‘,ja xyp’ vd;w ifnaOj;Jg; gj;jphpf;ifiaAk; t.f. njhlh;e;J elj;jpf; nfhz!bUe;jhh;.
1946-y; =uq;fj;jpy; ifnaOj;Jg; gj;jpupf;ifapd; khehL eilngw;wJ. mk;khehl;bd; tuNtw;Gf; FOj; jiytuhf t.f. nray;gl;lhh;. ,ja xyp cl;gl 50f;Fk; Nkw;gl;l rpw;wpjo;fs; fz!fhl;rpapy; itf;fg;gl;ld. mk;khehl;by; e.gpr;r%h;j;jp> rpl;bRe;juuh[d;> rp.R.nry;yg;gh Nghd;w Gfo;ngw;w vOj;jhsh;fs; vy;yhk; fye;J nfhz!L ciuahw;wpdhh;fs;. ,k;khehl;ilg; gw;wp nrd;idapypUe;J ntsptUk; gj;jphpf;iffSk; nra;jpfis ntspapl;L ,r;rpw;wpjo; khehl;ilg; ngUikg;gLj;jpd.
ez;gh;fSf;F fbjk; vOJk; gof;fj;ijAk; t.f. iftpltpy;iy. thq;Ffpw rk;gsj;jpy; ghjpia jghy; cறைfSk;> jghy;jiyfSk;> mQ;ry; ml;ilfSk; thq;Ftjw;Nf nryT nra;jhh;.
E}y; ntspaPLகள்:
1944 - y; ‘my;iyad;]!” vd;w Gj;jf epWtdj;jpy; gjpide;J rpWfijfisf; nfhLj;J mitfis ‘gl;lhRf;fl;L” vd;w jiyg;பிy; E}yhf ntspaplr; nrhd;dhh;.  Mdhy; me;E}y; ntsptuNt ,y;iy. gpd; ‘ghuj khjh gpuRuk;” vd;w Gj;jf ntspaPl;L epWtdj;jpy; 12 rpWfijfisf; nfhLj;J mij ‘mizahtpsf;F” vd;w jiyg;gpy; Gj;jfkhf ntspapl Ntz!bdhh;. mJTk; ntsptutpy;iy.
Nfhitapy; rpdpkh cyfk; gj;jpupf;ifapy; gzpahw;wpf; nfhz!bUe;j v]!.gp. fpU\;zd; vd;gtUk; yhz;lhpf; filf;fhuh; xUtUk; Nrh;e;J $l;lhf xU Gj;jf ntspaPl;L epWtdj;ijj; Jtq;Ffpwhhகள்;. mthகள்;jhd; Kjd;Kjypy; ‘t.f.”tpd; 12 rpWjijfs; mlq;fpa njhFg;ig ‘fy;ahzp Kjypa fijfs;” vd;w ngahpy; 1944-y; E}yhff; nfhz!L tUfpwhh;கள்.
jpUney;Ntypiar; Nrh;e;j v]!.rpjk;guk; vd;gth; ‘ftpf;Fapy; epiyak;” vd;w ngahpy; xU Gj;jf epiyaj;ij Muk;gpj;jhh;. 1945-y; mth; ‘t.f.”tpd; rpWfijj; njhFg;G E}iy “ehl;baf;fhhp” vd;w ngahpy; ntspapl;lhh;.
%d;whtJ Gj;jfkhf ‘ghujpjhrd; ctik eak;”> Ky;iy Kj;ijahtpd; fkyh gpuRuk; ntspaPl;lhf te;jJ.
ieahz;b ghujp vd;w Gidg; ngahpy; ‘t.f.” vOjpa ‘FQ;rhyhL” vd;w ehtiy rhe;jp epiyak; ntspapl;lJ.
njhlh;e;J ‘t.f.” vOjpa ‘Nfhapy;fis %Lq;fs;” vd;w rpwpa E}iy rhe;jp epiyak; ntspapl;lJ. 15 ehl;fspy; vl;lzh tpiyAs;s me;E}ypd; Mapuk; gpujpfSk; tpw;Wj; jPh;j;jd. 2-k; gjpg;ghfg; Nghl;l mLj;j Mapuk; gpujpfSk; tpw;Wj; jPh;j;jd. ,t;thW mr;rpW E}ypd; gy Mapuk; gpujpfs; tpw;gidahapd.
vhpkiy gjpg;gfj;jpw;fhf ‘rpdpkhtpy; flTs;” vd;w rpW E}iy vOjpf; nfhLj;jhh;. me;E}Yk; gy gjpg;Gfisf; fz!ld.
jpiuAyf mDgtk;
xUKiw ‘t.f.” Nfhit nrd;w NghJ mtiu jpiug;gl ,af;Fdh; V.v]!.V.rhkp re;jpj;jhh;. mg;NghJ [{gplh; gpf;rh;]! vd;w jpiug;gl jahhpg;G epWtdk; ‘gpy;fzk;”; vd;w jpiug;glj;ijj; jauhpf;Fk; vz!zj;jpy; ,Ue;jJ. ‘gpy;fzk;” vd;w Guhz fij Vw;fdNt ehlfkhfTk; ebf;fg;gl;lJ.
V.]!.V.rhkp ‘t.f.’tplk; gpy;fzk; jpiug;glj;jpw;F ePq;fs; கதை, வசனம் vOJq;fs;> cq;fSf;F fzprkhd xU njhifia rd;khdkhfj; jUfpNwd;. Mdhy; jpiug;glj;jpy; jpiuf;fij> trdk;> ,af;fk; vd;W vd; ngah;jhd; fhl;lg;gLk;” vd;whh;. ‘t.f.”tpd; kdk; ,e;j epge;jidia Vw;f kWj;jJ. vdNt me;jj; jpiug;glj;jpw;F ‘வ.க.’ வசனம் எழுதவில்லை!  ‘வ.க.’விற்கு “சினிமாவுக்கு எழுதி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், பேரும் புகழும் சம்பாதிக்க வேண்டும்” என்ற எண்ணமெல்லாம் இல்லை.  அவர் மனம் இலக்கியத் துறையில் சாதனை படைக்கவே விரும்பியது.
‘கிராம ஊழியன்’ இதழ் நின்றுவிட்ட பிறகும், ‘வ.க.’ பல மாத காலம் துறையூரிலேயே இருந்தார்.  ஆரவாரவமற்ற அந்த கிராமத்து வாழ்க்கை அவருக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
‘கிராம ஊழியன்’ பத்திரிக்கை நின்று விட்ட பிறகும் ‘வ.க.’ துறையூரிலேயே இருப்பதைக் கேள்விப்பட்டு எம்.கே.டி.சுப்பிரமணியன் என்பவர் ‘வ.க.’வுக்கு “சென்னைக்கு வாருங்கள், ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கலாம்” என்று அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.
எம்.கே.டி.சுப்பிரமணியன் திராவிட இயக்கச் சிந்தனையாளர் ‘வ.க.’ கோரநாதன் என்ற பெயரில் எழுதிய கட்டுரைகளைப் படித்து விட்டு அவரை ஆசிரியராகக் கொண்டு ‘தீப்பொறி’ என்ற பெயரில் மாதம் இரு முறை வரும் பத்திரிக்கை ஒன்றை நடத்த ஆசைப்பட்டார்.  ‘வ.க.’வும் அவரின் விருப்பத்தை ஏற்று ‘தீப்பொறி’ இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்க சென்னை வந்தார்.
‘தீப்பொறி’ இதழும் திட்டமிட்ட படி ஆரம்பிக்கப்பட்டது.  ஆனால் பத்தாவது இதழுடன் ‘தீப்பொறி’ அணைந்து விட்டது.  பத்திரிக்கை ஆசிரியர் பணி நின்றாலும் ‘வ.க.’ சிறுகதைகளை எழுதிக் கொண்டிருந்தார்.  அவைகள் பரவலாக பத்திரிக்கைகளில் பிரசுரமாகிக் கொண்டிருந்தன.
1948-ன் இறுதியில் தி.க.சிவசங்கரன் (தி.க.சி) திருநெல்வேலி தாம்ஸ்கோ வங்கியில் இருந்து மாறுதலாகி சென்னை வந்தார்.  அவரும் அருகில் சில காலம் ‘வ.க.’வுடன் தங்குகிறார்.  அக்கால கட்டத்தில் ‘சினிமா உலகம்’ மீண்டும் ‘வ.க.’வை அழைக்கிறது.
“பாலாஜி பிக்சர்சார் தயாரிக்கவிருந்த லைலா மஜ்னு என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுத வேண்டும்” என்று கணபதி ஐயர் என்பவர் மிகவும் வற்புறுத்தியதால், அந்த நாட்களில் பத்திரிக்கை வேலை எதுவும் இல்லாததால் ‘வ.க.’வும் அரைகுறை மனதுடன் அப்படத்திற்கு வசனம் எழுத ஒப்புக் கொள்கிறார்.
ஒப்புக்கொண்ட படியே ‘வ.க.’ சில காட்சிகளுக்கு மட்டும் வசனம் எழுதிக் கொடுத்தார்.  அதற்காக சன்மானமும் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள்.  படத்தில் வசனம்: வல்லிகண்ணன் என்று விளம்பரப் படுத்தி இருந்தார்கள்.
அதன் பிறகும் சில சினிமாப் படங்களுக்கு வசனம் எழுதும் வாய்ப்பு ‘வ.க.’வுக்கு வருகிறது.  அதனால் அப்படங்களுக்கு ‘வ.க.’ வசனம் எழுதிக் கொடுக்க முன்வரவில்லை.

சென்னையில் ‘வ.க.’

          சென்னையிலேயே அமைதியான ஒரு இடத்திற்கு குடிபோக வேண்டும் என்று ‘வ.க.’வும் அவர் சகோதரரும் நினத்தார்கள்.  அவர்களின் எண்ணம்  ஈடேரும் விதத்தில் கிருஷ்ணாம் பேட்டை E டிப்போத் தெருவில் ஒரு தோட்ட வீடு கிடைத்தது.  அந்த பத்தாம் எண் வீட்டில் சுமார் 15 ஆண்டுகள் ‘வ.க.’ குடியிருந்தார்.  அந்த 10-ம் நம்பர் வீட்டிற்கு பெயர் பெற்ற எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், இளைய எழுத்தாளர்கள் என்று பலரும் வந்து சென்றிருக்கிறார்கள்.
1950, 1951 ஆகிய இரண்டாண்டுகள் ‘ஹனுமன்’ இதழில் பணியாற்றினார்.  ‘செவ்வானம்’, ‘அடுத்த வீட்டுக்காரி’ என்ற தொடர்கதைகளை ‘ஹனுமனில்’ எழுதினார்.  ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தமிழ் முரசு’ என்ற இதழுக்கும் கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார்.
வாத்தியார் நடராஜர் என்பவர் ஒரு நாடகம் நடத்த விரும்பினார்.  அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ‘விடியுமா?’ என்ற நாடகத்தை ‘வ.க.’ எழுதிக்கொடுத்தார்.  நாடக அரங்கேற்றத்திற்கு பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் க.அன்பழகன் தலைமை வகிக்க, அந்நாளைய பிரபல திரைப்பட இயக்குநர் கே.சுப்பிரமணியம் என்பவர் வாழ்த்திப் பேசியிருக்கிறார்.
சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் ‘தமிழ் முரசு’ உட்பட பல பத்திக்கைகள் ‘வ.க.’வை அழைத்தன.  ஆனால் அவ்வழைப்புகளை எல்லாம் ஏற்காமல் ‘வ.க.’ வீட்டில் இருந்து கொண்டு, எழுதுவது, படிப்பது என்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அப்போது மீண்டும் திரைப்பட இயக்குநர் ப.நீலகண்டன் மூலமாக திரைப்படத்திற்கு வசனம் எழுதும் ஒரு வாய்ப்பு ‘வ.க.’வைத் தேடி வருகிறது.  அதையும் ‘வ.க.’ தட்டிக்கழித்து விடுகிறார்.
1951-ல் ‘ஹனுமன்’ வார இதழில் இவர் தொடராக எழுதிய கதை துறையூர் எரிமலைப் பதிப்பகம் வாயிலாக நாவலாக வெளிவந்தது.

1954-ல் கயிலைப் பதிப்பகம் வாயிலாக இவர் எழுதிய சிறுகதைகள் ‘வல்லிக்கண்ணன் கதைகள்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.
சரஸ்வதி, தாமரை போன்ற இதழ்கள் தொடர்ந்து ‘வ.க.’வின் கதைகளையும், கட்டுரைகளையும் பிரசுரித்து வந்தன.
1556-ல் டால்ஸ்டாய் கதைகள் சிலவற்றை தமிழாக்கம் செய்தார்.  அக்கதைகள் அலையன்ஸ் பப்ளிகேஷன்ஸ் மூலமாக புத்தகமாக வெளிவந்தது.  மார்சிம் கார்க்கியின் “டேல்ஸ் ஆப் இத்தாலி” என்ற தொகுப்பிலிருந்து சில கதைகளை மொழிபெயர்த்தார்.  அவைகள் வெண்புறா வெளியீடாகப் பிரசுரம் பெற்றது.
இவர் மொழி பெயர்த்த கார்க்கியின் கட்டுரைகள் 1957-ல் புத்தகமாக வெளிவந்தது.  கார்க்கியின் கதைகள் சிலவற்றையும் ‘வ.க.’ மொழி பெயர்த்தார்.  அவை ‘சின்னஞ்சிறு பெண்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது.
ராபர்ட் ரூஆர்க் எழுதிய ‘ஓல்ட் மேன் அன்ட் தி பாய்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தை ‘தாத்தாவும் பேரனும்’ என்ற தலைப்பில் மொழி பெயர்த்தார்.  இப்படி ‘வ.க.’ மொழிபெயர்ப்புத் துறையிலும் கால் பதித்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார்.
சி.சு.செல்லப்பாவின் எழுத்துப் பிரசுரம் வாயிலாக ‘வ.க.’வின் ‘ஆண் சிங்கம்’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்படுகிறது.  ‘அமர வேதனை’ என்ற ‘வ.க.’வின் கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றும் எழுத்துப் பிரசுரம் மூலமே வெளிவருகிறது.
பிற்காலத்தில் சாகித்திய அகாதெமி விருது பெற்ற புதுக்கவிதையின் ‘தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலும் எழுத்துப் பிரசுரம் மூலமே வெளியிடப் பட்டது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
1965-ல் ‘சரஸ்வதி’ இதழில் ‘உதிரிப் பூக்கள்’ என்ற தலைப்பில் இவர் எழுதிய கட்டுரைகள் கலைஞன் பதிப்பகம் மூலமாக ‘முத்துக் குளிப்பு’ என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டது.
1966-ல் சிவாஜி வார இதழில் ‘வ.க.’ ‘மூடுபனி’ என்ற தலைப்பில் எழுதிய தொடர்கதை, “வசந்தம் மலர்ந்தது” என்ற பெயரில் கலைஞன் பதிப்பகம் மூலமாக நாவலாக வெளியிடப்படுகிறது.
1967-ல் ‘காவேரி பதிப்பகம்’ ‘வ.க.’வின் ‘வீடும் வெளியும்’ என்ற நாவலை பிரசுரம் செய்தது.  இது ‘செங்கோல்’ என்ற பத்திரிக்கையில் தொடர்கதையாக வெளிவந்ததாகும்.
‘ஹனுமன்’ என்ற வார இதழில் பிரசுரமான ‘அடுத்த வீட்டுக்காரி’ என்ற இவரின் தொடர்கதை ‘சகுந்தலை’ என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.


பிறந்த மண்ணைத் தேடி...

                       ‘வ.க.’ சென்னையில் வசித்தாலும் ஆண்டு தோறும் தன் சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் சுமார் மூன்று மாதங்கள் தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.  எனவே இவரின் நண்பர்கள் “‘வ.க.’ விக்கிரமாதித்யன் நாடாறு மாதம் காடாறு மாதம் வசிதத்தைப் போல சென்னையிலும் ராஜவல்லிபுரத்திலுமாக வசிக்கிறார்” என்று கேலி பேசுவதுண்டு.
ராஜவல்லிபுரத்தின் அருகில் ஓடுகிற தாமிரபரணி ஆRறும், அதன் சூழலில் நிலவுகிற அமைதியும் அழகும் இவருக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தன.  காலையிலும் மாலையிலும் தனிமையில் ஆற்றுக்குப் போய் குளித்துவிட்டு அங்கேயே மர நிழலில் அமர்ந்து பொழுது போக்குவது என்பது இனிய அனுபவங்களாக அமைந்தது.
ராஜவல்லிபுரத்தில் அவர்களுக்குச் சொந்தமாகப் பெரிய வீடு இருந்தது.  அங்கு ‘வ.க.’வின் அம்மாவும் மூத்த சகோதரர் கலியாணசுந்தரமும் வசித்து வந்தார்கள்.  மூத்த சகோதரருக்கு ஒரே ஒரு மகள் மட்டும் இருந்தாள்.  சகோதரர் மனைவி இளம் வயதிலேயே இறந்து விட்டாள்.  ‘வ.க.’ சின்ன வயதில் இருந்தே ‘திருமணம் செய்து கொள்ள வேண்டாம்’ என்று முடிவெடுத்து விட்டார்.  எனவே 1963-ல் இவரின் மூத்த சகோதரர் கோமதிநாயகம் தன் நாற்பத்தைந்தாவது வயதில் மறுமணம் செய்து கொள்கிறார்.
1972 முதல் தாயாரின் உடல் நலம் கருதி ராஜவல்லிபுரத்தில் வசிக்கத் தொடங்கினார்.  ஒரு காலத்தில் வளமாக இருந்த குடும்பத்தில் வறுமை வந்து சூழத் தொடங்கியது.  தாயாரின் மருத்துவச் செலவு, அண்ணன்மார்களின் குடும்பச் செலவு என்று செலவுகள் அதிகரிததால், ராஜவல்லிபுரத்தில் இருந்த அவர்களின் வயல், தோட்டம் முதிலியவற்றை சிறிது சிறிதாக விற்க வேண்டியதாயிற்று.  1973-ல் ‘வ.க.’வின் தாயார் இறந்து போகிறார்.  தொடர்ந்து 1974-ல் ‘வ.க.’வின் மூத்த சகோதரர் இறந்து விடுகிறார்.  எனவே 1972- முதல் வ.க. இரண்டாண்டுகள் ராஜவல்லிபுரத்திலேயே வசிக்கிறார்.
இந்தக் கால கட்டத்தில் தான், திருநெல்வேலி மற்றும் சுற்று வட்டரத்தில் வசித்து வந்த இலக்கிய இளவல்களான வண்ணதாசன், வண்ணநிலவன், நம்பிராஜன், கலாப்பிரியா போன்றவர்களும் கி.ராஜநாராயணன் (கி.ரா) தீப.நடராஜன் (ரசிகமணி டி.கே.சியின் பேரன்) ராஜபாளையத்தைச் சேர்ந்த த.பி.செல்வம், கொ.ச.பலராமன், சுப.கோ.நராயணசாமி, கோ.மா.கோதண்டம் தஞ்சையை சேர்ந்த பிரகாஷ் போன்றோர் அடிக்கடி ராஜவல்லிபுரம் வந்து ‘வ.க.’வுடன் உறவாடி விட்டுச் சென்றார்கள்.
‘வ.க.’வின் தாயார் உயிரோடு இருக்கும் போதே வீட்டு வேலைகளைச் செய்ய என்று ஒரு மூதாட்டி வ.க.வின் வீட்டில் இருந்தாள்.  வ.க.வின் தாயார் இறந்த பிறகும் அந்தம்மாவே வ.க.வுக்குச் சமையல் செய்து கொடுத்து வீட்டு வேலைகளையும் செய்து வந்தார்.
ராஜவல்லிபுரத்திலும் படிப்பது, எழுதுவது என்றே ‘வ.க.’ பொழுதைக் கழித்தார்.  தன்னைத் தேடி வரும் இலக்கிய தாகம் கொண்ட இளவல்களிடம் எப்படி எழுதுவது, என்னென்ன நூல்களைப் படிப்பது என்று அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார்.
தனக்கு வருகின்ற புத்தகங்களை அதுவும், புதிய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை உடனுக்குடன் படித்து அப்புத்தகத்தில் உள்ள நிறை குறைகளைப் பற்றியும் உடனுக்குடன் கடிதங்களை எழுதி அவர்களை உற்சாகப் படுத்தினார்.

No comments: