கழனியூரன் என்கிற எம்.எஸ்.அப்துல்காதர் ஒரு கவிஞர், எழுத்தாளர், இலக்கிய ஆர்வலர் என்பதை எல்லாம்விடச் சிறந்த மனிதர்; நல்லநண்பர்.எப்போது எங்கே பார்த்தாலும், அன்றலர்ந்த தாமரை மலரைப்போன்ற அவரது முகமலர்ந்த சிரிப்புக்கு, ஈடு இணை கிடையாது.கழனியூரன், கி.இராஜநாராயணனின் அத்யந்த சீடர். கி.இரா.வின் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்புகளுக்கு உதவியாக இருந்த பெருமைக்குரியவர்.தனது எழுத்துக்கு மெருகேற்றி, ஒரு தனித்துவமான படைப்பாளியாக மாற்றியதில் கி.இரா.வின் பங்கு மிக அதிகம் என்று கருதும் கழனியூரன், புதுக்கவிதை, சிறுகதை, நாவல்கள் என்பதிலிருந்து விடுபட்டு, நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பதில் இப்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
திரு.வைத்தியநாதன்
,
ஆசிரியர்: தினமணி

Tuesday, July 23, 2013

மறைவாய் சொன்ன கதைகள் 10

தவளையும் பாம்பும்

வேசி ஒருத்தி தினமும் ஒரு குளத்தில் குளிக்கப் போவா. அந்தக் குளத்துல தவளைக நிறைய்ய இருந்தது.

தவளைக நிறைய்ய இருந்ததுனால அதுகளைப் பிடிச்சித் தின்ன பாம்புகளும் நிறைய்ய வந்தது. பாம்புக வந்து தவளைகளை பிடிச்சித் திங்க ஆரம்பிச்சதும் தவளைகளுக்கு ரொம்ப பயமாப் போச்சி. அதுகளுக்கு என்ன செய்யிறதுன்னுட்டுத் தெரியல. எங்கன போயி ஒளியறதுன்னுட்டுந் தெரியல. அதுகளோட நிலமை ரொம்பப் பரிதாபமா ஆயிட்டது.

இவ தலைக்கு சீய்க்கா போட்டுத் தேச்சிக் குளிக்க, தண்ணிக்குள்ள முங்குன ஒரு படிக்கட்டுல வசமா உக்கார்ந்துகிட்டு கண்ணுல சீய்க்க விழுந்துராம இருக்க கண்ண மூடிக்கிட்டு தலையைத் தேய்ச்சிக்கிட்டிருக்கா.

அந்த சமயத்துல ஒரு தண்ணிப் பாம்பு ஒரு தவளைய விடேன் தொடேன்னு முடுக்கிட்டு வருது. கடோசியா தவளைக்குத் தப்பிக்க ஒரு வழியுந் தெரியல.

இவ கால அகட்டி உக்காந்து தலெ குளிச்சிட்டிருந்தாளா, அது பாட்டுக்குப் போயி இருந்துக்கிட்டது. பாம்புக்குப் பார்வை தவளை மேல. அதனால தவளையங் காங்கலங்கவும் அது திரும்பி போயிட்டது. தவளைக்கு இப்பதாம் உயிரு வந்தது. இம்புட்டுப் பாதுகாப்பா, குளிருக்கு அடக்கமா ஒரு இடம் கிடைக்கும்னு அது கனவுலயும் நெனக்கல.

சரி. இதுலயே இப்படியே இருப்போம்னு இருந்துக்கிட்டது. அந்தத் தவளையப் பிடிக்க அதெ வெரட்டிக்கிட்டு வந்த பாம்புக்கு ஒரு சந்தேகம் வந்துட்டது. அதுக்குள்ள இந்தத் தவள எங்கிட்டுப் போயிருக்க முடியும்ன்னுட்டு.

ஒரு வேள இதுக்குள்ள இருக்கலாமோன்னு தலைய நுழைச்சிப் பாத்தது.உசாரா இருந்த தவளை இத எதிர்பார்த்து இருந்ததால இன்னும் உள்ளுக்குப் போயி வசமான இடத்துல பதுங்கியிருந்துக்கிட்டது. உள்ள நுழைஞ்சி பாத்த பாம்புக்கு ஒரே இருட்டா இருந்ததுனால ஒண்ணுந் தெரியல. அதனால தலைய வெளிய இழுத்துக்கிட்டு வேற தவளையப் பாப்பம்னு போயிட்டது.

பாம்பு போயிட்டதுன்னு உறுதியாத் தெரிந்த பிறகு தவளை மெள்ள வெளியே வந்துட்டது.

உயிரு தப்பியதை நினைத்து அதுக்கு ஒரே புல்லரிப்பு நிறைந்த தாங்க முடியாத மகிழ்ச்சி.

இந்த மகிழ்ச்சியை தனது சேக்காளித்தவளையிடம் போய்ச் சொன்னது. நடந்ததை அப்பிடியே சொல்லி, பாம்பு உள்ளே வந்து தேடியதையும் தன்னைப் பிடிக்க முடியலைன்னு சொல்லிவிட்டு-

ஹ..! அந்த இடம்; ரொம்ப அருமையான இடம் ஒளிய. நீயும் அதப் போய்ப் பாக்கணும். பாத்து வச்சிக்கிட்டா பாம்புக வெறட்டும்போது போயிப் பதுங்கிக்கலாம்னு சொன்னதும் இந்தப் பயித்தியாரத் தவளை உள்ளே போயிப் பாக்கிறதுக்கும் அவ குளிச்சி எழுந்திருக்கிறதுக்கும் சரிய்யாக இருந்தது.

அடடா உள்ள மாட்டிக்கிட்டமே. சரி. நாளைக்கு இந்நேரந்தாம் வெளியே வர முடியும்னு கம்முனு பதுங்கி இருந்துக்கிட்டது.

அதேபோல மறுநா அவ அந்த குளத்துக்கு தலை குளிக்க வந்து தண்ணீர்ப் படியில உக்காந்து தலெயெத் தேச்சிக் குளிச்ச போது தவளை தப்பிச்சேன் பிழைச்சேன்னு பாஞ்சி வெளியே வந்திட்டது. சேக்காளித்தவளெ என்னடா இவம் போனவனெக் காங்கலயே; பாம்புதாம் முழுங்கிருச்சோன்னு கவலையா இருந்த சமயம்; இது அதெத்தேடி வந்தது சிரிச்சுக்கிட்டே.
என்னப்பா என்ன ஆச்சி; எப்பிடி இருந்ததுன்னு மற்ற தவளை கேக்க…

அய்யோ! அதெ ஏங் கேக்கெபோ; ஒரு பாம்பா ரெண்டு பாம்பா எத்தென பாம்புங்கிற; விதவிதமா வருதப்போவ்! நானும் பாத்ததுலயும் பாத்தேன்; இப்படிப் பாம்புகளைப் பாத்ததில்லப்ப, வார சனியன் எட்டிப் பாத்துட்டு, இல்லேன்னு தெரிஞ்சதும் போக வேண்டியதுதானே. ரொம்ப சந்தேகம் பிடிச்ச பாம்புகப்பா. மாறி மாறி மாறி மாறி வந்து வந்து பாக்குதுங்கெ.

நா அம்புடுவேனா. எவ்ளோ எடம்கிற. நம்ம குளத்துத் தவளயெல்லாம் போயி இருந்துக்கிறலாம். அப்பேர்க்கொத்த பெரிய இடம் அது என்று பெருமை பீத்திக்கொண்டது அந்த தவளை. அப்படியா சங்கதி. நா நாளைக்குப் போயி பாத்துட்டு வந்துரணும். அதெ என்று சொல்லிக் கொண்டது மற்ற தவளை

No comments: